Thursday, June 28, 2012

சானியா மிர்சா ஆவேச தாக்குதல் - ஆணாதிக்கவாதம்

http://img.stillgalaxy.com/public/06-24-2011/sania-mirza/sania-mirza-hot-photos-0.jpg 

அதிருப்தியில் இருக்கும் லியாண்டர் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறி அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ), பயஸ் ஆகியோர் மீது கடுமையாகச் சாடியுள்ளார் சானியா மிர்சா.


 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவிலும், சோம்தேவுக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் செவ்வாய்க்கிழமை இரவு வைல்கார்டு (நேரடித்தகுதி) வழங்கியது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்).  இதைத் தொடர்ந்து டென்னிஸ் சங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சானியா, தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:


 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து இந்தியாவின் சார்பில் 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒலிம்பிக் போட்டிக்கான அணி அறிவித்தது முதலே பயஸýடன் இணைந்து விளையாடுவீர்களா என்று நண்பர்கள், உறவினர்கள், சக வீரர், வீராங்கனைகள் குறிப்பாக ஊடகங்கள் என அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர்.

 அப்போதைய சூழ்நிலையில் வைல்டுகார்டு கிடைக்காமல் அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன்.  கலப்பு இரட்டையரில் பயஸýடன் இணைந்து விளையாடுவதற்கு நான் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வேஸ் பயஸ் தொலைக்காட்சிகள் மூலமாக என்னை நிர்பந்தித்தார். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.  அதனால் பயஸ், பூபதி, போபண்ணா, விஷ்ணுவர்தன், சோம்தேவ் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து விளையாடுவேன். ஒருபோதும் விளையாட முடியாது என்று மறுக்கமாட்டேன். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaCT-JGiHBn4IDpNhKQYYU2XkklJ8CIyB3kIRgY096Ky0xa-tiOAvtv18Ns7X-AW1i08lPKO_m0o_kvFFh9K4pVhvne7vnO_7SwdZU_H4K8EENJVx88bmSk5ts_im-sVGSSz6gma980NTE/s1600/Sania+Mirza+Hot+Pics.jpg

  ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதில் பூபதி மிக உறுதியாக உள்ளார். அவருடன் இணைந்து விளையாடினால் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறார். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸýக்கு விட்டுக்கொடுத்து அவர் தியாகம் செய்திருக்கிறார்.  21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்ணாகிய நான், அதிருப்தியில் இருக்கும் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் நான் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறேன். பயஸýடன் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்ட விதமும், வெளியாகியிருக்கும் நேரமும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.  பயஸýடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறிவிட்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக இப்போது நான் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகப்பெரிய அமைப்பான டென்னிஸ் சங்கத்தினால் நான் இழிவுபடுத்தப்பட்டுள்ளேன்.

அதை இங்குள்ள பெண்கள் அமைப்பினர் கண்டிக்க வேண்டும். பயஸ், பூபதிக்கு அடுத்தபடியாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது நபர் நான்.  கடந்த வாரம் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோதும் டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எவ்வித வாழ்த்தும் எனக்கு வரவில்லை. அப்படியிருந்தும் என் மீது டென்னிஸ் சங்கத்தினர் மரியாதை வைத்திருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் இப்போது இழிவுபடுத்தப்பட்டுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 திறமை அடிப்படையில் அணி தேர்வு:  சானியாவுக்கு ஏஐடிஏ பதில்  புது தில்லி, ஜூன் 27: திறமையின் அடிப்படையிலேயே டென்னிஸ் அணி தேர்வு செய்யப்பட்டதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.  சானியாவின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த அணி தேர்வு செய்யப்பட்டது என்றும் ஏஐடிஏ தெரிவித்துள்ளது. அணி தேர்வு விவகாரத்தில் சானியா கடுமையாக சாடியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஏஐடிஏ பொதுச் செயலர் பரத் ஓஸô வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:  திறமையின் அடிப்படையிலேயே கலப்பு இரட்டையரில் சானியா, பயஸ் இருவரையும் விளையாட வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvUhMHe9wHOUHxpEHs4VC0Rw7rjNqoqc8axav6pely2BQtn8ssOVv4lPI-hzjvIrKfMK8uMlZDyO2QN1Of31T6WvY6fGwkDzKpy7UviY_25AyD8P1DR4EMDCE-JIrYT_TP9JOgdsoyr-I/s400/sania.jpg


. தரவரிசையில் லியாண்டர் பயஸ் 7-வது இடத்திலும், சானியா 12-வது இடத்திலும் உள்ளனர். அதனடிப்படையிலேயே கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள 12 முன்னணி அணிகளில் பயஸ்-சானியா அணி 9-வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. 


 சானியாவும், பயஸýம் இணைந்து விளையாடினால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என ஏஐடிஏ நம்புகிறது. இந்திய வீரர்கள் தங்களின் கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டு நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். பொது இடங்களில் ஒருவர் மற்றொருவர் குறித்து குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



THANX - DINAMANI

5 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

Raj said...

இன்னாது இவங்க பேருதான் சானியா மிர்சாவா இவங்க ஆடுரதுக்கு பேரு டெண்னிசா - இது டென்னிஸ் சம்பந்தப்பட்ட பதிவா - சொல்லவே இல்ல.. நான் பாட்டுக்கு படத்த மட்டுமே பார்த்துகிட்டு இருக்கேன்.

”தளிர் சுரேஷ்” said...

இந்திய டென்னிஸ் அமைப்பு சரியில்லை! வீரர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்க தெரியாமல் தப்பு தப்பாக முடிவெடுக்கிறது!

நா.கிருஷ்ண கோபிகா said...

சானியாவின் வார்த்தைகள் சத்தியமானவை.. துணிவானவை.வெற்றிகரமான இணையை பிரிப்பதற்கான காரணங்கள் ஏதும் இருக்க முடியாது.நிகழ்பவை டென்னிஸ் சங்கத்திற்கு மட்டுமல்ல..லியாண்டருக்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதே பெரிதும் வருத்தத்திற்குரியது.

ஆத்மா said...

இது சில வேலை அரசியல் இலாப செயற்பாடாகவும் இருக்கலாம்