Tuesday, June 12, 2012

கஷ்டாவதானி டி.ராஜேந்தர் பேட்டி

http://www.kollywoodtoday.net/gallery/actors/t_rajendar/images/trajandar15.jpg 

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, திடீர் அரசியல் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்.  


''ஏன் இந்தத் திடீர் முடிவு?''



''பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது நான்கு மடங்கு. குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு.க. போராடியது வெறும் சடங்கு. காங் கிரஸ் தலைமை எச்சரித்த பிறகு கலைஞர் அடங்கி விட்டார் ஒரே அடங்கு. எங்கே போனது அவரது சங்கே முழங்கு? 'ஈழப் பிரச்னைக்கு எம்.பி-க்கள் எல்லாம் ராஜினாமா செய்வோம்’ என்று சொல்லி ராஜினாமா கடிதங்களை முன்பு கலைஞர் வாங்கிவைத்துக் கொண்டதோடு சரி. ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்யாத கலைஞரா, பெட்ரோலுக்காகப் பதவியைத் துறப்பார்?''


ஆனால், கலைஞரைவிட அம்மா எவ்வளவோ மேல். மண்ணெண்ணெய் அளவைக் குறைத்த போதும், திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியபோதும், மத்திய அரசுக்கு எதிராக உரத்த குரல் கொடுக்கும் ஆற்றல் அம்மா வுக்கு உண்டு. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார். மக்கள் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராடும் அம்மாவின் போராட்ட குணம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். அதனால்தான் அ.தி.மு.க-வை புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆதரிக்கிறேன். கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு புதுக்கோட்டைத் தேர்தலில்தான் அ.தி.மு.க-வை ஆதரிக்கிறோம். இடையில் நடந்த தேர்தல்களில் அவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை.''



''பால், பஸ், மின் கட்டண உயர்வு உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?''



''கட்டண உயர்வுக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித் திருக்கிறேன். ஆனால், இந்த விலை உயர்வுக்கு தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும்தான் காரணம். மின்உற்பத்திக்கான திட்டங்களை முந்தைய தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் போனதால், அதன் பாதிப்புகள் இப்போது அ.தி.மு.க. அரசு மீது விழுந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிதிஉதவி அளித்த மத்திய காங்கிரஸ் அரசு, இப்போது ஏன் பாராமுகம் காட்டுகிறது. நில அபகரிப்புப் புகார்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியைப் போன்று வேறு யாராவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? குறைகள் சில இருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி மக்களுக்கு நல்ல திட்டங் களைத் தருவதைப் பாருங்கள்.''



''கடந்த சட்டசபைத் தேர்தலில் போதிய இடங் களை உங்களுக்கு ஒதுக்காமல், உதாசீனப்படுத்திய ஜெயலிதாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே..?''






''அப்போது அவர் என்னை உதாசீனப்படுத்த வில்லை. விஜயகாந்த் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே அ.தி.மு.க-வோடு நான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், கணிசமான தொகுதிகளை ஒதுக்கித் தர அம்மா சம்மதித்தார். விஜயகாந்த் வந்த சூழ்நிலையில், அங்கே நான் இருக்க முடியாது என்பதால் வெளியேற வேண்டிய நிலை. விஜயகாந்த்தைவிட எங்களுக்கு இடங்கள் குறைவாகக் கிடைக்கும் நிலையில், கூட்டணியில் தொடர விரும்பாமல் வெளியேறினோம். இது நானே எடுத்த முடிவு. மற்றபடி முரண்டு பிடித்து எல்லாம் வெளியேறவில்லை. கௌரவமாகத்தான் நடத்தினார்கள். கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு, அரசின் செயல்பாடுகளைச் சுதந்திரமாக விமர்சிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதாலும் வெளியேற வேண்டிய நிலை உருவானது.''

 http://www.thedipaar.com/pictures/resize_20100921101852.jpg

''புதுக்கோட்டை தேர்தலில்  தி.மு.க. போட்டியிடாதது சரிதானா?''


''திருமங்கலம் தேர்தலில் புதிய ஃபார்முலாவை உருவாக்கிய தி.மு.க., சங்கரன்கோவிலில் டெபாசிட்டைப் பறிகொடுத்ததால், இப்போது நிற்காமல் பின்வாங்கி ஓடியிருக்கிறது. புதுக்கோட்டை யில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? போட்டியிடுவதற்கு என்ன தயக்கம்? தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எதற்காக வேண்டும் இயக்கம்?


 புதுக்கோட்டையில் தே.மு.தி.க. நிற்கிறது. தி.மு.க. நிற்காமல் திக்குமுக்காடி நிற்கிறது. தன்னிடத்தில் விஜயகாந்த் ஆதரவு கேட்பார் என்பது கலைஞரின் எதிர்பார்ப்பு. யாரும் நிற்காதபோது நான் ஏன் கலைஞரிடம் வெளிப்படையாக ஆதரவு கேட்க வேண்டும் என்பது விஜயகாந்த்தின் இறுமாப்பு!''


''புதுக்கோட்டையில் லட்சிய தி.மு.க. போட்டியிடும் என்று பேசப்பட்டதே?''



''புதுக்கோட்டையில் என்னை நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். காரணம் அதில் ஒளிந்திருந்த அரசியல்தான். கலைஞர் அரசியல் சாதுர்யத்தை உருவாக்க நினைத்தார். அதை நான் புரிந்துகொண்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை. 


நான் களத்தில் நின்றிருந்தால், விஜயகாந்த் தி.மு.க-வின் ஆதரவைக் கேட்டிருப்பார். விஜயகாந்த் வந்து தன்னிடம் ஆதரவு கேட்க வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். அந்த விருப்பத்துக்கு நான் வழி ஏற்படுத்தித் தரவில்லை. அதேநேரம், விஜயகாந்த் நேரடியாக கலைஞரிடம் கையேந்தாமல், மனைவியை விட்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார். அதன்மூலம், தி.மு.க-வின் ஓட்டுகள் விழும் என்பது விஜயகாந்த்தின் கணக்கு.''


''உங்களுக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த சரத்குமாரும் விஜயகாந்த்தும் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக் கிறார்கள். நீங்கள் மட்டும்..?''


''விஜயகாந்த்துக்கு அரசியல் தலைவருக்கான நாகரிகம் இருக்கிறதா? இரண்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்கிறோம். அதுகூட அவருக்கு இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்திருப்பதே அம்மாவின் தயவால்தான். 


தனியாக நின்று ஒரு இடத்தில்தானே அவரால் ஜெயிக்க முடிந்தது. டி.ஆரின் துணிச்சல் ஊருக்கே தெரியும். சட்டசபைத் தேர்தலில் ஸீட் வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன். சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக்கூட விரும்பாமல் ராஜினாமா செய்தவன் நான். பதவியை வைத்து எடை போடாதீர்கள். இறைவன் கொடுக்க நினைப்பதை பூமியில் தடுப்பார் எவருமில்லை. இறைவன் கொடுக்க மறுப்பதை பூமியில் கொடுப்பார் எவருமில்லை!''

http://pirabuwin.files.wordpress.com/2009/03/rajender11.jpg?w=600&h=800

நன்றி - விகடன்

1 comments: