1. எங்கே போகனும்?
ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ..
ஹூம், காலைலயேவா?
2. முதல்ல ஒரு ஆஃப் சொல்லு..
எனக்கு அந்த பழக்கமே இல்லையே?
ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு...
3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?
4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?
ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்
5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..
6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?
அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?
7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?
8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?
கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல......
9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,
இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?
10. ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?
11. சின்னப்பையனா இருக்க சொல்ல, சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா, ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?
12. டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?
ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?
டேய்.. அது என் ஆளு..
13.கடசில நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே..
14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?
15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை..
தந்திருந்தா?
மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்.....
16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?
17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்..
ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?
18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?
இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )
19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க..
20. அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..
21. பீச்சில் - குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க..
என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?
அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?
22. அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?
பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு..
சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )
23. டேய்,.. அங்கே என்ன எழுதி வெச்சிருக்கு?
பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?.
டேய்.. அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?
பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே எழுதி வெச்சிருக்கு ? நாங்க தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?
24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?
25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..
26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)
27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?
\
டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது..
28. பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்..
29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?
இருக்காது சார்... நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்... அங்கே வேணா பார்த்திருப்பீங்க..
என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?
பின்னே கொசுவர்த்தி ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?
30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..
ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..
31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?
அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?
32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா..
அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்.. என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?
33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,,
என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே..
34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு..
35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்..
36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?
37. யார்யா இந்த பிச்சைக்காரன்?
யோவ்.. அவர் சாமியார்யா
38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்..
39. என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?
100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?
அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்..
40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்..
இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?
ரோட்ல..
என்னது?
41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?
என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்
42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?
இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு..
43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க.. அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க
44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?
45. இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்..
46. அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
47. ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல..
அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?
48. நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்
49. குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?
50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?
பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?
51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?
பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..
பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி..
அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்..
52. மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே..
53.கட்சியோட மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?
54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்..
55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..
56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க. நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்..
57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி?
58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்
a
டிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/ 06/blog-post_477.html
58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்
a
டிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/
5 comments:
why so late.. ?
Expected yesterday evening 4 pm itself...
ம்....
Great!
வசனங்கள் ஓககே... படம் எதிர்பார்த்த அளவு இல்லையே...
Super !
Post a Comment