1.இன்று ரத்ததான நாள்.. மனதில் அன்பும்,உதட்டில் தெம்பும் இருப்போர்க்கு என்றென்றும் முத்த தினம் தான் ;-)
---------------------------------
2. அந்தக்காலத்திலும் சரி, இந்தக்காலத்திலும் சரி தாதாக்கள் கூட சகுனி என்றால் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது # ஜூன் 22 பில்லா 2 ரிலீஸ் நோ
-------------------------
3. உனக்காக உயிரையும் குடுப்பேன் என்பதன் உள் அர்த்தத்தை இதக்காலப்பெண்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்
-----------------------------
4. சாஃப்ட்வேர்ல நான் புலின்னு சொல்றவங்க எல்லாம் புலிமார்க் பனியன் போடற ஆளுங்களோ?
-------------------------
5. ரத்த தானம், முத்த தானம் இரண்டும் நிகழ்கையில் கிறுகிறுப்பாக இருக்கும்
---------------------
6. நான் சின்னப்பையனா இருந்தப்போ ( 2 வருஷம் முன்னால ) ரயில் போகும் திசையில் உள்ள சீட்டில் அமர்ந்தால் தான் சரியான இடத்துக்குப்போவோம்னு நினச்சிருந்தேன்
---------------------
7. முற்போக்குவாதிகள் கூட மாமனார் வீட்டு சீதனத்தை விரும்புகிறார்கள், காரணம் அது கோயில் பிரசாதம் போல , கம்மியா இருந்தாலும் தனி ருசி
----------------------
8. திண்ணையில கிடக்கறவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆகுமாம்.-ரேணுகா # யார் வீட்டுத்திண்ணையிலே கிடக்கனும்?
---------------------------
9. மீந்துபோன பழைய சாதத்தை வெய்யில்ல காய வெச்சு வடகம் ஆக்கி தயிர் சாதத்துக்கு கடிச்சுக்கற தமிழன் தான் ரீ சைக்ளிங்கை உலகிற்கே அறிமுகப்படுத்தியவன்
----------------------------
10. தன் காதலியின் மேல் உதட்டின் மேல் மீசை வரைந்து அழகு பார்க்காத காதலன் நல்ல ரசிகனே அல்ல !
------------------------------
11. தன் தகுதிக்கு மீறிய சம்பளம் பெறும் அதிர்ஷ்டக்காரன் கணிணிவல்லுனன்,குறைந்த வருமானம் பெறும் துரதிர்ஷ்ட சாலி விவசாயி
---------------------------------
12. ரயில்கள் கிராமங்களைக்கடக்கையில் யாருக்கோ டாட்டா காட்டும் சிறுவர்களின் உற்சாகத்தை நான் வேறு எங்கும் கண்டதில்லை
-----------------------------------------
13. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது மகிழ்ச்சி தேவதை நம்மைப்பார்த்து நாசூக்காக சிரிப்பாள்
-------------------------
14, நரக வேதனை பற்றி நகர மனிதர்கள் அறிய முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பில் ரயிலில் பிரயாணம் செய்க
---------------------------
15. ரயில் பிரயாணங்களில் பயண நேரம் 24 மணி நேரங்களைத்தாண்டும்போதுதான் வீட்டுச்சாப்பாட்டின் மகத்துவம் தெரிகிறது
--------------
16. திருப்பதியில் இருந்து திரும்பி வருபவர்கள் லட்டினை யாருக்கு முதலில் தருகிறார்கள் என்பதில் இனிப்பான கவிதை ஒளிந்திருக்கிறது
---------------------
17. கால எந்திரத்தில் பயணிப்பது சாத்தியம் எனில் பெரும்பான்மையோரின் தேர்வு பள்ளிப்பருவ நாட்களே!
---------------------------
18. கொடூரமானவன் கூட தன் குழந்தையுடன் விளையாடும்போது தானும் ஒரு குழந்தை ஆகிறான்
----------------------------
19. தாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை பறை சாற்ற சில நவ நாகரீக யுவதிகள் புறமுதுகு காட்டி செல்கிறார்கள் # பேக் ஓப்பன் JKT
--------------------------------
20. சாகாவரம் வேண்டும் என்று நேரடியாக ஆசைப்படாமல் : சாவதற்குள் தமிழ் ஈழம் வேண்டும் “ என சுற்றி வளைத்து சொல்கிறார் கலைஞர்
----------------------
1 comments:
முதல் முத்தம்..:))
Post a Comment