Friday, June 01, 2012

சில்லரைப்பையனும், சில் அறை பெண்ணும் சந்தித்தால்;? ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

1.என் பேரை எப்படி சுருக்கி செல்லப்பேர் ஆக்குவாய்?என்றாய்! இறுக்கி அணைத்தால் தான் செல்லம், சுருக்கினால் அது செல்லாப்பேர் என சமாளித்தேன்


---------------------------------


2. உன் பார்வையில் நான் ஒரு சில்லரை, என் பார்வையில் நீ சில் அறை # ஏஸி ரோஸி


---------------------------


3. வீட்டுத்தோட்டத்துல அட்லீஸ்ட் ஒரு நல்ல கிணறாவது இருக்கனும்னு நினைப்பதுதான் WELL வெல் பிளாண்டு ஃபேமிலியா?


-------------------------

4. யர், நீ சிம்கார்டு, நான் செல் ஃபோன். 


ம்க்கும் டூயல் சிம் தானே உன்னுது, யார் அந்த சக்களத்தி? 


----------------------------

5. டியர், உன் செல்  உங்கம்மா கிட்டேதான் இருக்கும்கறே, நான் கால் பண்றப்போ நீ மாட்டிக்க மாட்டியா?


 நோ, உன் பேரை “ பேட்டரிலோ”னு சேவ்டு,நீ கால் பண்ணா சார்ஜ்போடும்பாங்க 


------------------------------------



6. மடமை -பெண்ணியம் - தட்டுப்பாடு-உண்மைக்காதல்



-------------------------------


7. பசங்க நினைப்பு - சாதிக்கனும், சம்பாதிக்கனும்,செட்டிலாகனும்


.பொண்ணுங்க நினப்பு - கரெக்ட் பண்ணனும், கலெக்ட் பண்ணனும்,கழட்டி விடனும் 


---------------------------------------

8. மூப்படைந்தோ,பிணியிலோ நான் கிடையில் கிடக்கும் நாட்களில் கூட உன் இடையில் விழுந்து கிடந்த ஞாபகங்களே மிச்சம் ஆகும் என் கணிக்கிறேன்



-------------------------


9. உன்னுடனான புரிதல்களுடன் என் காதல் வாழ்வு பயணிக்கிறது,என்னுடனான அனுசரிப்புகளுடன் உன் சகிப்புத்தன்மை பயணிக்கிறது



--------------------------------

10. நீ என்னைப்புறக்கணிக்கும் பொழுதுகளில் கூட என் கண்கள் உனக்குத்தெரியாமல் தான் பனிக்கும் # UN KNOWN அழுகை



----------------------



11. உன் கன்னங்களின் மென்மையை என் உதடுகளால் மெச்சினேன் # இச்


----------------------


12. காதலியே!காதலியே!நீ என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் மீனாக மாறி உன் பாதம் கவ்வுவேனே தவிர உனை விட்டு விலகி விட மாட்டேன்



----------------------------

13. நீ வெட்கத்தால் முகம் சிவந்தாய்! காதல் கம்யூனிஸ்ட் ஆனாய்!



-----------------------------

14. காதல் கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் எதிர்ப்பு


-----------------------------

15. செல்லும் இடம் எல்லாம் நீ பாட்டுக்கு சிரிச்சுட்டு வந்துடறே! அதை சேகரிக்க நான் படும் பாடு பெரும்பாடாய் போனதடி!



--------------------------




16. நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழறதுக்குப்பதிலா பலாப்பழம் விழுந்திருந்தா அவர் கதை முடிஞ்சிருக்கும், பிசிக்ஸ் சப்ஜெக்ட் இன்னும் ஈசி ஆகி இருக்கும்


------------------------------

17. அட்டு ஃபிகர் கூட அக்கறையா உக்காந்து பாடத்தை மட்டும் படிச்சவனும்,ஃபிரண்டுக்குத்தெரியாம கட்டிங்க் அடிச்சவனும் நல்லா வாழ்ந்ததா நோ ஹிஸ்டரி


------------------------------

18. சராசரித்தமிழன் - ஜோசியரே, என் ஆயுள் ரேகை என்ன சொல்லுது?


ஆயுள் முழுக்க ஆயில்,பெட்ரோல் டிமாண்ட்லயே அலைவேன்னு சொல்லுது


------------------------------


19. மொட்டை மாடியில் இரவில் உலர்த்தப்பட்ட துணிகளில் பனி இறங்குவது போல் உன் உள்ளத்தில் என் அன்பு  இறங்குகிறது



--------------------------------


20. அத்தான், ஆஃபீஸ் 6 மணிக்குத்தானே முடியுது, ஏன் 5 மணிக்கே ரிட்டர்ன்?



 ஏதோ கோபத்துல டேமேஜர் “கோ டூ ஹெல்”னாரு


--------------------------------------------

கோபிநாத் எங்க பவரோட இன்னொரு முகத்தை பார்க்கனும்னு சொன்னேல்ல பார் அவரோட 12 முகத்தையும் , இது சும்மா சாம்பிள் தான் மெயின் பிச்சரே இனிமே தான் இருக்கு ...

”பால்காப்பின்னா சுகர்.
பப்ளிசிட்டின்னா.....பவர்.”

...See more

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இலக்கம் 7 => அப்படியே எல்லோ...ரையும் சொல்வதாயிருக்கிறது. ஒத்துக்க முடியாது.

சித்தாரா மகேஷ். said...

4வது ஐடியா சூப்பருங்கோ.இதெல்லாம் நமக்கு தோணலயே.ரொம்ப நன்றி சகோதரா.