Saturday, June 30, 2012

சாமுத்திரிகா லட்சணம் - ஒன்லி ஃபார் ஆண்கள்

சாமுத்திரிகா லட்சணம்

..மார்புப்பகுதியில் அதிக முடியிருந்தால் பாலுணர்வு அதிகமாம் .. ஆண்களுக்கு
ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம்
இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து
சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து
கொள்ளுங்களேன்.


 செல்வம் பெருகும்

ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின்
நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக
இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும்
செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில்
ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.


உலகை ஆளும் ஆண்

ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.
கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு
உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி
உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.



அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,
பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய்
அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம்
அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த
காரியம் முடியாது.



நாக்கில் மச்சம்

நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப்
புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும்,
வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.காது மேல் செவி அகலமானால் முன் கோபம்
இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.



அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை
கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல்
கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக்
கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின்
செல்வந்தன் ஆவான். மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும்.
மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும்,
மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.



பாலுணர்வு அதிகம் உண்டு


கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு.
விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால்
அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும்
சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ்
பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம்.
ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு
அதிகம் இருக்குமாம்.


புகழ் கிடைக்கும்

கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின்                                தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால்                                                   நன்மைகள் பெருகும் கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான்.

                                                       பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம்                                                    இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும்                                                     வறுமை வாட்டும்..    
நன்றி - தமிழ் உலகம்

அமெரிக்கத்தமிழ்த்திருவிழாவும்,சித்தோட்டு சிங்கம் சதீஷின் திருமண விழாவும்

a
சித்தோடு சதீஷ் தன் மனைவியுடன், மற்றும் உறவினருடன்








a



மேடையில் 5 பேர், அதுல 4 பேர் பார்வையும் ஒருவர் மேல். யார் அந்த வி ஐ பி?






a


சதீஷ் - சாப்பிட்டுட்டுத்தான் போகனும்.

. மீ - ஆல்ரெடி பந்தில அட்டெண்டென்ஸ் போட்டுட்டூட்டுத்தான் வர்றோம்..


நல்ல நேரம் சதீஷ் - நல்ல நேரம் முடியறதுக்குள்ள ஊருக்குப்போய் போஸ்ட் போடனும்


மிஸஸ் சதீஷ் - இந்த 3 பேரும் உருப்பட வாய்ப்பு கம்மி.. நம்ம வீட்டுக்காரரையாவது திருத்துவோம் ;-)




 a

முஹூர்த்தப்புடவையே 36,000 ரூபாயாம்

 யார் சொன்னது?

 பொண்ணே தான்



a

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.. யார் அந்த பிந்து?




அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012! வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறப்பெய்துவோம்!


Inline image 1
Inline image 2




ரு பிரமுகரை ஊரிலிருந்து அழைத்து விழா எடுப்பதே எத்தனைப் பெரிய காரியம்; எனும்பட்சத்தில் இவ்வளவுப் பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் பிரம்மிப்பையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் தருகிறது. திறனாக எல்லோரும் செயல்பட்டு' எண்ணற்றோர் முன்னிலையில் சாதனைக் குவியலாய்' இனிதே அமைந்து உழைப்பிற்குத் தக்க பெருவெற்றியாய் வரலாற்றில் நிலைத்திருக்கட்டும்.. இவ்விழா!

மிக வாழ்த்தும், தொடர் அறிவிப்பிற்குரிய நன்றிகளும்..

வித்யாசாகர்


நன்றி - தமிழ் உலகம்

தேனிலவு - சுஜாதா - கிளு கிளு சிறுகதை

http://10hot.files.wordpress.com/2009/07/sujatha-8-writers-authors-magz-issues-uyirmmai-march-2008-front-cover.jpg 

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன் சிற்சிலர் கூடைகளில் சிவப்பு சிவப்பாகப் பழம் விற்றார்கள்.

சோபனாவுக்கு நிறுத்தி வாங்க வேண்டும் போலிருந்தது. நிறுத்திப் பூப்பறிக்க வேண்டும் போலிருந்தது. அந்தத் துல்லியமான காற்றை நெஞ்சு பூரா நிரப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

காருக்குள் ரவி சோபனா என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். மற்றொரு கை…

அதை விலக்கி ”ஏதாவது பாட்டுப் போடுங்களேன்” என்றாள் சோபனா. அவன் காருக்குள் இருந்த கேஸட் ரிக்கார்டரைத் தட்ட, கீச்சுக்குரல் ஒலித்தது.

‘அட அபிஷ்ட்டு

நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி
பாத்துக்க உம் மூஞ்சி!’


”எப்படி பாட்டு?” என்று ரவி சிரித்தான்.

”வேற இல்லியா?”

”சிரி சிரி மாமா, இருக்கு” என்றான் ரவி.

”சம்சா! சம்சா! சம்சா!” என்றது டேப்.

”பெரிசா வெக்கட்டுமா?”

”நிறுத்திடுங்க.”

”புடிக்கலியா? உனக்கு சினிமா பாட்டு யார்து புடிக்கும். ஜானகியா? ஈஸ்வரியா? சுசீலாவா?”

”ஜோன் பேயஸ் இருக்கா?”

”அது யாரு? ஊட்டில கிடைக் கும்னா வாங்கிடலாம்.”

சோபனா வெளியே பார்த்தாள். மலைச்சரிவு குளிருக்குப் பச்சைப் போர்வை போர்த்திருந்தது. ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை ஞாபகம் வந்தது.

சோபனாவுக்கு மலைப்பாக இருந்தது. இரண்டு தினங்களில் எத்தனை புதுசான சமாசாரங்கள், எத்தனை புதிய முகங்கள், உறவுகள்… ரவியின் இடக்கை மறுபடி அவளை நாடியது. அதை எடுத்து ஸ்டீயரிங் சக்கரத்தின் மேல் வைத்து ”ரெண்டு கையாலயும் ஓட்டுங்க” என்றாள்.


”நான் என்வி சாப்பிடுவேன். ஸ்மோக் பண்ணுவேன். தெரியுமில்ல?” என்றான் ரவி.

”தெரியும். சொன்னீங்களே!”

”ஆரம்பத்திலேயே இதை எல்லாம் சொல்லிடணும் பாரு! உனக்கு ஆட்சேபனை இல்லையே!”

”இல்லை.”

முட்டையைப் பார்த்தாலே குமட்டும் சோபனாவுக்கு.

”யூரோப் போனபோது கத்துக்கிட்டேன். அங்கெல்லாம் நான் வெஜ் இல்லாம உயிர் வாழ முடியாது.”


”எத்தனை நாள் போயிருந்தீங்க?”



”ஒரு வாரம். நாம ஃபாரின் போகலாமா சோபனா?”

”ம்.”


”எங்கே போகணும் சொல்லு? கம்பெனில எக்ஸ்போர்ட் பண்றதால எந்த கன்ட்ரி வேணும்னாலும் போகலாம்.”


”சரி, யோசிச்சுச் சொல்றேன்.”


மலை ஏறிக் கொஞ்சம் இறங்கிச் சரிந்து வளைந்து சென்ற பாதையில் உயர்ந்து தனியாகத் தெரிந்தது அந்த ஓட்டல்.


”ஏ.ஸி. ரூம் இல்லீங்களா?”


”ஊட்டில ஏ.ஸி. ரூம் எதுக் குங்க. ஊரே ஏ.ஸிதானே!”


”சரி, இருக்கிறதுக்குள்ளேயே டீலக்ஸ் பார்த்துக் கொடுங்க. ரெண்டு பேப்பர் ரோஸ்ட் அனுப்பிடுங்க.”


”டிபன் செக்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு மூணரை ஆயிடுங்க.” அலுத்துக்கொண்டான். ”க்ளார்க்ஸ் போயிரலாமா சோபனா?”


”இங்கேயே பரவாயில்லை” என்றாள்.


”உனக்காகப் போனாப்போறதுன்னு இந்த ஓட்டல்ல இருக் கலாம்!”


அறைக்குள் புதிய பெயின்ட் வாசனை அடித்தது. கீழே கயிற்றுப் பாய் விரித்து, சுவர்களில் மர யானை முகங்கள் கோட் ஸ்டாண்டுகளாக நின்றன. ஒரு மஹா மஹா படுக்கை காத்திருந்தது. அதில் படுத்துக்கொண்டு ரவி, ”வா சோபனா” என்றான். சோபனா ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.


”ரவி, இங்க பாருங்க. ப்யூட்டிஃபுல்!”


”வா சோபனா!”


”ரவி, இங்கேருந்து கீழே பெரிய குதிரைப் பந்தய மைதானம் தெரியுது. குதிரையெல்லாம் சுத்திச் சுத்தி வந்து நடை பழகுது. ஊர் பூராத் தெரியுது. அங்கங்கே அட்டைப்பெட்டி சொருகிச்சொருகி வெச்சாப்பல வீடுகள்.”


”அட்டைப்பெட்டி கிடக்கட்டும் சோபனா. இப்ப வர்றியா இல்லியா நீ?”


”ஏரிக்குப் போகலாம் ரவி!”


”க்ளிக்!” ஆஸாஹி பென்டாக்ஸ் அவளை நோக்கிக் கண் சிமிட்டியது. விசைப் படகில் ஏரியில் அவளை அவன் அணைத்துக்கொண்டு இருக்க, எதிரே படகுக்காரன் எடுத்த ‘க்ளிக்’ ”ஆட்டோவைப் போட்டுட்டாப் போதும். யார் வேணா எடுக்கலாம். நாலாயிரம் ரூபா. லென்ஸே நாலாயிரம் ஆச்சு!” ரவி அதை வாங்கிக்கொண்டு அதன் கழுத்தைப் பல கோணங்களில் திருகி, சோபனாவை வரிசையாக க்ளிக் க்ளிக் என்று தட்டிக் கொண்டு இருந்தான்.



”வீட்ல ஒரு போலராய்ட் இருக்கு. ஃபிலிம் ஆப்படலை!”


சோபனா தன் விரல்களால் நீரைத் தொட்டுப் பார்த்தாள். சில்லென்று எதிர்பாராத குளிர்ச்சி.


”கொஞ்சம் பெரிய எடம் போலிருக்கே! நமக்குச் சரிப்பட்டு வருமா?”


”பையன் பொண்ணைப் பார்த்துப் புடிச்சுப்போய் அவனே கேக்கறான். ரொம்பப் பணக் காராடி அவா!”


”நம்ம சோபனாவுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பார்த்திங்களா! இருந்தாலும் அவளை ஒரு வார்த்தை கேட்டுர்றது நல்லதில்லையா?”


”பால் பாயசம் சாப்பிடறதுக்குச் சம்மதம் கேக்கணுமா என்ன? என்னடி சோபனா?”


”………..”
”எப்பவாவது அவ வாயைத் திறந்து பதில் சொல்லியிருக்காளா?”


”அவங்க வீட்டிலே மூணு கார் இருக்குக்கா!”


”க்ளிக். ஏ.எஸ்.ஏ.நம்பர் செட் பண்ணிட்டாப் போதும். பாக்கி எல்லாத்தையும் கேமராவே பாத்துக்கும். உள்ளுக்குள்ள எல்லாமே எலெக்ட்ரிக் வேலை… இதை ரிப்பேர் பண்றதுக்கு ஜப்பான்லதான் முடியும்! ரூமுக்குப் போக லாமா சோபனா?”


”இல்லை. பொட்டானிக்கல் கார்டன் போகலாம்.”


புல்வெளியில் புரள வேண்டும் போல இருந்தது. சரிவில் சின்னக் குழந்தை போல உருள வேண்டும் போல இருந்தது. ஒரே மாதிரி உடை அணிந்து ஏறக்குறைய ஒரே வயசுள்ள குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்திருக்க, அவர்களுடன் தானும் உட்கார்ந்து பிஸ்கட்டோ ஏதோ சாப்பிட வேண்டும் போல இருந்தது.


”ரூமுக்குப் போகலாமா சோபனா?”


”இப்பவேயா?”


”ஆரம்பிச்சதை முடிச்சுட வேண்டாம்?”


”இந்தப் பூக்கள் எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு?”


”நிக்கறயா, ஒரு க்ளிக் எடுத் துடறேன்.”


”கொஞ்ச நேரம் நடக்கலாமே!”

”உன் இஷ்டம். நீ சொன்னா சரி” என்று கடிகாரத்தைப் பார்த் தான்.

சரியாக ஒரு நிமிஷம் நடந்ததும், ”நடந்தது போதுமா?” என்றான்.

”எங்கே போகலாம்?”


”காருக்குப் போய் கேஸட் போட்டுக் கேட்கலாம். அப்புறம் ரூம்ல போய் டிபன் சாப்பிட்டுட்டு ராத்திரி ஃபிலிம் போகலாம்.”


”’லட்சுமி’ ஓடுது. நான் இன்னும் பார்க்கலை. நீ பாத்தியோ?”


”என்ன?”

”லட்சுமி; ஒரு குரங்கு டாப்ஸா ஆக்ட் பண்ணியிருக்காம்!”


”அப்படியா?”


”ஒரு ஸாங் நல்லா இருக்குன்னு எழுதியிருந்தான்.”


”அப்படியா? ரவி இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமே.”


”உக்காந்து போட்டோ எடுக்கலாமா?”


”இல்லை, படிக்கலாம்.”


பைக்குள்ளிருந்து அவள் கலீல் கிப்ரானின் ‘A Jear and a Smile’ என்கிற புத்தகத்தை எடுத்தாள். அவன் ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்.


I freed myself yesterday from the clamour of the city and walked in the quiet fields until I gained the heights which nature had clothed in her choicest garments.


”இதோ இப்படித்தான்” என்று இளவரசன் தன் கூர்வாளை உறையிலிருந்து உருவி சிறைக்கூடத்தின் தரைப்பாகத்தில் சில இடங்களை வாள்முனையால் தட்டிப் பார்த்தான்…”

”மனசுக்குள்ள படிங்க?”

”இந்தத் தொடர்கதை படிக்கறியோ? டாப்பா இருக்குது.”


”இல்லை.”

”ரஜினி மறுபடி நடிக்க வந்துட்டான், தெரியுமா?”


”அப்படியா?”

Sleep then, my child, for your father looks down upon us from eternal pastures.

”தீர சாகசம் புரிந்த வீர இளைஞனே வருக…”

”ரெண்டு ஜாதகமும் என்னமாப் பொருந்தியிருக்குங்கறேள்!”

”சோபனா வாயேன். ரூமுக்குப் போயிர�
��ாம். எத்தனை நேரம் பூவையே பாத்துக்கிட்டு… புஸ்தகம் படிச்சுக்கிட்டு… ரூமுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபா கொடுத்துட்டு… கொஞ்ச நேரமாவது இருக்கலாமே!”



அறையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் ரவி.

”என் மீசை உனக்குப் பிடிச்சிருக்கா?”

”ம்.”

”ஸ்டெப் கட்?”

”ம்?”

”இதுக்குன்னே சலூன்ல அஞ்சு ரூபா வாங்கறான்.”

”அப்படியா?”

ரவி தன் உடம்பெல்லாம் பர்ஃப்யூம் அடித்துக்கொண்டான்.

”புடிச்சிருக்கில்ல!”

”ம்!”

”இந்தா, இதை மாத்திக்கிட்டு வந்துரு! பாரிஸ்ல வாங்கினது இது, போ, வெக்கப்படாதே. கட்டின புருசன்கிட்ட என்ன வெக்கம்!”


சோபனா பாத்ரூம் பக்கம் சென்றாள்.


ரவி தன் சட்டையைக் கழற்றினான்.

”சோபனா! சொர்க்கம்னா இதுதான் இல்லையா? இந்த மாதிரி க்ளைமேட்! இந்த மாதிரி ரூம்! இந்த மாதிரி மனைவி! சோபனா! ‘நினைத்தாலே இனிக்கும்’ கேட்டிருக்கியா?”


”சோபனா…”

”சோபனா…”

ரவி சற்றுக் கவலைப்பட்டு பாத்ரூம் கதவைத் தட்டினான்.

கதவு திறந்துகொண்டது.

சோபனா தரையில் உட்கார்ந்துகொண்டு விசித்து விசித்து அழுது கொண்டு இருந்தாள்.

மலை வாசஸ்தலமான உதக மண்டலத்துக்குக் கல்யாண சீஸ னின்போது தினம் நூறு ஜோடிகள் தேனிலவுக்கக வருகிறார்கள்!

நன்றி - சுஜாதா ,உயிர்மை,சிறுகதைகள்


http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha1.jpg

புருஷனுக்கும், ப்ளூ டூத்க்கும் இன்னா ஒத்துமை? ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

மும்பையில் உள்ள " GATE WAY OF INDIA " - வின்
அழகிய தோற்றம் !
1.தினமும் உங்கள் பெற்றோருக்காக எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்? என்பதை  எண்ணிப்பார்த்தால் எல்லா நாளும் இனிய நாளே!


---------------------------


2. .ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! #  அடடா! 13 ராசி இல்லாத நம்பர்னு யாரும் சொல்லலையா?



--------------------------------


3. விஸ்வரூபம் தலைப்பை மாற்ற சொல்லி கமலுக்கு கோரிக்கை! # விஸ்வ = உலகு, ரூபம் = அழகு, உலக அழகன்னு மாத்திக்குங்க


------------------------


4. இலை மறை காய் மறைவாக டபுள் மீனிங்கை பயன்படுத்திய கே பாக்யராஜ் பெற்ற வெற்றியை அப்பட்டமாக சொன்ன எஸ் ஜே சூர்யா பெறவில்லை


--------------------------------


5, சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி நியமனம் செல்லாது:ஜெ மனு # மேடம், பேசாம ஓ பி எஸ் ஸை ஜட்ஜ் ஆக்கிடலாமா?



------------------------------------




6. இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம், எனவே குடிபோதை,புகழ் போதை,பெண் போதையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீண்டுவர சிந்தியுங்கள்



--------------------------------

7. அரசியல்வாதிகள்,கட்டிட காண்ட்ராக்டர்கள்,இஞ்சினியர்கள் வாழ்வு மேம்படக்கட்டப்படுவதுதான் மேம்பாலமா?



-------------------------


8. மனைவியின் தேர்வைக்கண்டு எள்ளி நகையாடுவோர் கவனத்திற்கு,நீங்களும் அவர்கள் தேர்ந்தெடுத்தவர் லிஸ்ட்டில் ஒருவர் என்பதை மறக்காதீர்! #SMS


----------------------------

9.கணவன் என்பவன் ப்ளூடூத் மாதிரி,சம்சாரம் பக்கத்துல இருக்கறப்போ தொடர்புல தான் இருப்பான், அவ அந்தப்பக்கம் போய்ட்டா  நியூ டிவைஸை ஆட்டோமேட்டிக்கா தேட ஆரம்பிச்சுடறான்


------------------------

10. கணவன் வெளியூர் செல்லும் தருணங்களில் மனைவி அவனைப்பற்றியே நினைக்கிறாள், கணவன் அதற்கு நேர் எதிர் 



----------------------------



11. பொண்ணுங்க பசங்களை “ நீயும் உன் முகரக்கட்டையும்” அப்டின்னு திட்டுனா பசங்களுக்கு நோ கோபம், ஆனா பசங்க பொண்ணை கட்டைன்னு சொன்னா ஏன் கோபம்?



--------------------------------

12. பொருட்களை உபயோகியுங்கள்,மனிதர்களை உபயோகிக்காதீர்! மனிதர்களை நேசியுங்கள்,பொருட்களை  நேசிக்காதீர்!



-------------------------------

13. சென்சார் ஆஃபீசர் வீட்டுக்கு வந்ததும் அவர் சம்சாரம் “ இன்னைக்கு என்ன புதுசா பார்த்தீங்க?”ன்னு கேட்பாரோ?



----------------------------------


14. இதோ 5 நிமிஷத்துல ரெடி ஆகிடறேன்- மனைவி = இப்போ பிஸியா இருக்கேன், கால் யூ லேட்டர் - கணவன் # வாழ்க்கைப்பொய்கள்



------------------------


15. இதயத்தில் இருக்கும் வலிகளை உதட்டில் உள்ள புன்னகையால் மறைக்க முடிவதில்லை


----------------------------------



16. காதலி - பைக்ல யார் கூட போனே? 


காதலன் - சிஸ்டர்டி.

. காதலி -ஏன் அவ பர்தா போட்டு முகத்தை மூடி இருந்தா?

 காதலன் - அவ உன் சிஸ்டர்டி  ஹி ஹி 


-----------------------------

17. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் மேட்சுக்கு மேட்ச் பைத்தியம் போல, வாரா வாரம் செவ்வாய் மட்டும் செவ்”வாய்”ல வருது # லிப்ஸ்டிக் லதா



------------------------------


18. அம்மாவுக்கு பிரசவ வலியைக்கொடுத்து பிறந்ததால் தானோ என்னவோ எல்லாக்குழந்தைகளும் வலி ஏற்படும்போதெல்லாம் அம்மா என்கின்றன



----------------------------------

19. உலகின் மிகப்பெரிய பொய் - எங்க பரம்பரைல எல்லாருமே பிரம்மச்சாரிகள் தான் ;-)



--------------


20. பேசாம என் அத்தை பெண்ணையே மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.


 ஏன்? பேசுனா பொண்ணு தர மாட்டாங்களா? 



-----------------------------
இங்கு பெட்ரோல் விலையை ஏற்றி மக்களிடம் பணம் பிடுங்கி பணக்கார நாடுகளான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இத்தாலி போன்ற நாடுகளுக்கு 50000 கோடி உதவி செய்யும் (மன்மோகன்சிங் அரசு) இந்தியா ?

இந்தியப் பொருளாதார நிலைமையே படுமோசமாகி இருக்கக் கூடிய நிலையில் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்திய நிதி உதவி அளிப்பதா? என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துள்ளார்.


Friday, June 29, 2012

THE AMAZING SPIDER MAN - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://i979.photobucket.com/albums/ae273/mikkisays/mikkisays4/ScoreJamesHorner-TheAmazingSpider-ManOST-2012MP3.jpgநான் சின்னப்பையனா இருந்தப்போ அதாவது சுமார் 5 வருஷங்களுக்கு முன்னே லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்ல இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மேன் , ஆர்ச்சி கதைகளை விரும்பிப்படிப்பேன்.. அதே ஸ்பைடர்மேனை திரைல பார்க்கறப்போ அதன் பிரம்மாண்டமோ, பிரமிப்போ கொஞ்சமும் குறையலை. ஒவ்வொரு பாகமும் ஒரு விதம்.. இதுவரை 3 பாகம் பார்த்தாச்சு.. ஆனா இந்தப்படத்துல ஹீரோவும், ஹீரோயினும் புதுசு..


ஹீரோ சின்ன வயசுலயே அம்மா , அப்பா இருந்தும் கூட  அத்தையிடம் தான் வளர்றாரு.. அப்பாதான் அந்த ஏற்பாட்டை பண்ணிட்டு எங்கேயோ போயிடறாரு..ஹீரோ பெரிய ஆள் ஆகி  படிக்கறப்ப கூட படிக்கற கிளாஸ்மேட் கிட்டே அப்பப்ப கடலை போடறாரு..தன் அப்பா , அம்மா எங்கே என்ற ஆராய்ச்சியில் ஈடுபடறாரு..

 ஹீரோயின் அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ஒரு ஆராய்ச்சிக்கூடத்துல ஹீரோயினை பார்க்க வர்றப்போ ஹீரோவை ஒரு சிலந்தி கடிச்சுடுது.. அப்போ இருந்து ஹீரோ கிட்டே ஏகப்பட்ட மாற்றங்கள். அபூர்வ சக்திகள் கிடைக்குது..

 பேஸ்கட் பால் கிரவுண்ட்ல விளையாடற ஒரு ரவுடி கும்பல் ஹீரோயின் கிட்டே வம்பு பண்ணுது.. ஹீரோ சும்மா விடுவாரா? பட்டாசை கிளப்பறாரு..


ஆராய்ச்சிக்கூடத்துல  வில்லன் ஒரு ஆராய்ச்சி பண்றார்.. அதாவது பல்லிக்கு வால் அறுந்தா ஆட்டோமேடிக்கா அது வளருது இல்லையா? அந்த பல்லியோட டி என் ஏவை கால் உடைஞ்ச எலிக்கு சேர்த்து விட்டா காலும் வளருமா?  இதுதான் ஆராய்ச்சி.. நல்ல வேளை கால் வளருமா?ன்னு பார்த்தாரு..

 அந்த ஆராய்ச்சி எசகு பிசகா போயிடுது.. எலிக்கு பயங்கர சக்தி கிடைச்சு  ஒரு மார்க்கமான எலி ஆகிடுது..


இப்படி இருக்கும்போது ஒரு நாள் ஹீரோ ஷாப்பிங்க் காம்பெள்க்ஸ் போறாரு.. அங்கே ஒரு திருடன்.. திருடிட்டு தப்பிக்கறப்போ எதிரில் வரும் ஹீரோவோட மாமாவை போட்டுத்தள்ளிடறான்.. அதாவது ஷூட் பண்ணிடறான்.. எஸ்கேப் ஆகிடறான்..

மாமாவை கொலை செஞ்ச அந்த திருடனை  தேடி ஹீரோ கிளம்பறார்.. என்ன அடையாளம்னா அந்த திருடன் நயன் தாரா மாதிரி  தோள் பட்டைலயோ, த்ரிஷா மாதிரி நெஞ்சுலயோ பச்சை ( டாட்டு) குத்தாம கை மணிக்கட்டுல பச்சை குத்தி இருக்கான்.. அதை வெச்சு ஹீரோ ஊர்ல இருக்கற ரவுடிகளை எல்லாம் ரவுண்ட் கட்டி  பிடிச்சு பச்சை குத்தி இருக்கா?ன்னு பார்த்து அப்புறம் விட்டுடறார்..

ஹரே ராதா ஹரே கிருஷ்ணா என்ற கலக்கலான காமெடிப்படத்துல கமல் டபுள் ஆக்ட்.. அதுல ஒருத்தருக்கு ஒரு மச்சம் ஒரு முக்கியமான இடத்துல இருக்கும்.. ஆள் மாறாட்டமா?ன்னு செக் பண்றப்ப எல்லாம் அவர் மச்சம் காட்டி மனுஷனா மாறுவாரு.. அந்த மாதிரி ஹீரோ ரவுடிங்களை எல்லாம் மச்ச சாரி டாட்டூ அடையாளத்தை வெச்சு தேடறாரு.. நான் டைரக்டரா இருந்தா அந்த கொலை செய்யற ஆளை லேடி ரவுடியா காட்டி இருப்பேன்.. படம் பூரா ஒவ்வொரு லேடி ரவுடியா பிடிச்சு டாட்டு செக் பண்ணி இருக்கலாம்.. ஜிகிடிக்கு ஜிகிடி.. கிளு கிளுக்கு கிளு கிளு

மீடியாக்கள் மூலம் ஸ்பைடர்,மேன் ஹீரோ ஆகறார்.. போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கு இது பிடிக்கலை.. அவங்க ஒரு  பக்கம் அவரை தேடறாங்க..

 வில்லன் ஆராய்ச்சியின் உச்ச கட்டமா அந்த விநோத மருந்தை தன் உடம்பு மீதே செலுத்தி எதிர்பாராத விதமா டினோசர் ஆகறான்.. அதாவது நெஞ்சு வரைக்கும் ஹல்க் மேன் மாதிரி.. நெஞ்சுக்குக்கீழே  டினோசர்.. வில்லன் அந்த ஊர் மக்களை  ஏதோ ஒரு  விஷ வாயுவை செலுத்தி அழிக்க திட்டம் போடறான்,, ஹீரோ அதை எப்படி முறியடிக்கறார்? என்பதே கதை..


 ஹீரோ  ரொம்ப சின்னப்பையன்..  இதுவரை வந்த ஸ்பைடர்மேன்ல இவர் தான் ரொம்ப ஒல்லி கம் யங்க்.. நல்ல ஜிம்னாஸ்டிக்  பாடி போல .. நல்லா ஃபைட் போடறார்.. லவ்வறார்.. ஆக்‌ஷன் காட்சிகளில் முகத்தில் வீரம், கோபம் எல்லாம் கொஞ்சம் கம்மிதான்.. ஆனாலும் ஓக்கே..


 ஹீரோயின் ரொம்ப சின்னப்பொண்ணு.. எல்லாமே சின்னது.. ஐ மீன் கண், காது , மூக்கு.. இப்படி.. 28 டைம் ஹீரோயினை உத்துப்பார்த்தும் அதுதான் தோணுச்சு.. ஹீரோ கூட 3 இடத்துல  கிஸ் சீன் உண்டு.. 3 இடம்னா 3 வெவ்வேற  இடத்துல அல்ல.. ஒவ்வொரு டைமும் உதட்டுல தான்.. ஆனா படத்துல வெவ்வேற இடத்துல..


வில்லனா வர்றவர் டைனோசரா மாறுனதும் முகத்துல காட்டற வெறுப்பு, கோபம் ஏ கிளாஸ்..  வில்லனுக்கு ஏன் ஜோடி இல்லைன்னு தெரியல..



http://www.geeksofdoom.com/GoD/img/2012/05/2012-05-15-amazing_spider_man-e1337068461811-533x330.jpg


 மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை 


1.  என் பாய் ஃபிரண்ட் காரை ஃபோட்டோ எடுக்கனும், ஹெல்ப் பண்றீங்களா?


காரை..? ம் ம் .. முயற்சி பண்றேன்..


2.  உன் பேரென்ன?

 என் பேர் என்ன?ன்னு உனக்குத்தெரியாதா?


 எனக்குத்தெரியும்.. இப்போ அடிபட்டுதே அதனால உனக்கு எந்த பாதிப்பும் இல்லையா? உன்னை முதல்ல உனக்கு அடையாளம் தெரியுதா?ன்னு செக் பண்ணேன்..


3.  ஏய்.. நீ இங்கே என்ன பண்றே?


நான் இங்கே தான் வேலை செய்யறேன்னு பொய் சொல்லலாம்னு நினைச்சேன்,.., ஆனா பார்த்தா நீ இங்கே ஒர்க் பண்ற மாதிரி தெரியுது..  அதனால அப்படி சொல்ல முடியாது..  யோசிச்சுட்டு இருக்கேன்..


4.  என்னையே ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு.. வீணா வீட்லயோ, வம்புலயோ மாட்டிக்காதே..

5. அவன் தண்ணி அடிச்சிருக்கானா?

 ம் ம் ஏதோ தப்பு இருக்கு..

 உன் சமையலை விரும்பி சாப்பிடறான்.. அது நல்லாருக்கு ன்னு வேற சொல்றான்.. அதுதான் எனக்கு டவுட்டா இருக்கு..


ஹலோ அப்புறம் என்ன இதுக்கோசரம் 37 வருஷமா என் சமையலை சாப்பிட்டுட்டு கஷ்டப்படறீங்க.. எவ  நல்லா சமைக்கறாளோ அவ கிட்டே போகறதுதானே?


 கூல் கூல்


6. உன்னை சஸ்பெண்ட் பண்ணீட்டாங்களா?

 ச்சே. ச்சே.. ஒரு வாரம் ஸ்கூலை க்ளீன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க..


 7. உங்கப்பா மாதிரி நீ சாயல்ல இருப்பது சந்தோஷம் , ஆனா  உங்கப்பா ஒரு கட்டுப்பாட்டோட, நெறிமுறையோட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்..


 நீங்க சொல்றது உண்மையா இருந்தா ஏன் என்னை பொறுப்பில்லாம உங்க கிட்டே விட்டுட்டு போய்ட்டார்.. ஏன் என்னை வளர்த்தலை..?


8.  ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸில் - இந்த சில்லறையை உன்  பில்க்கு பத்தலைன்னு எல்லாம் எடுக்கக்கூடாது,.,. யார் வேணாலும் இதுல காசு போடலாம்.. ஆனா எடுக்கக்கூடாது..


9. எனக்கென்னமோ ஸ்பைடர் மேன் கிட்டே பெரிய பவர் எல்லாம் இருக்கற மாதிரி தெரியலை..  உடல் எடை + செயல் திறன்  = அதீத தன்னம்பிக்கையை அவனுக்கு தருதுன்னு நினைக்கறேன்


10.   நீ போலீஸா?

என்ன பார்த்தா போலீஸ் மாதிரி தெரியுதா? தொப்பி இல்லை.. தொப்பையும் இல்லை


11. போலீஸோட முக்கால் வாசி வேலையை நானே முடிச்சுடறேன்.. வந்து அள்ளிட்டு போறது மட்டும் தான் செய்யறாங்க..


12.  ஏய்.. நீ எப்படி உள்ளே வந்தே?

 செக்யூரிட்டி உள்ளே விடலை..  அதான் மாடி ஏறி வந்துட்டேன்..

 என்னது>? 20 மாடி ஏறீயா? அவ்வ்வ்வ்வ்



13. ஹீரோ - நான் உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்.. நான் மாறிக்கிட்டு வர்றேன்..


 ஹீரோயின் - நானும் தான்

 நீ சொல்றது மனசை.. நான் என் உடம்பை பற்றி சொல்றேன்


14.. எப்போ வந்தாலும் திருடன் மாதிரியே என்னை பார்க்க வர்றியே? ஒரு நாளாவது வாசல் வழியா வாயேன்..


15. ஹீரோயின் அப்பா - கோக் வேணுமா?

 ஹீரோவுடன் ரூமில் இருக்கும் ஹீரோயின் அவனை மறைத்து - ம்ஹூம், வேணாம் டாடி..


 போன வாரம் தான் கோக்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு அதுக்காக அம்மா கிட்டே சண்டை போட்டுட்டு இருந்தே??

 அது போன வாரம்.. நான் சொன்னது இந்த வாரம் ஹி ஹி



16. நாம செய்யற ஒவ்வொரு காரியமும் நாம யார் என்பதை இந்த உலகத்துக்கு சொல்லும்..


17. இந்த உலகத்துல மொத்தமே 10 கதை தான் இருக்குன்னு சொல்வாங்க.. அது தப்பு,.. ஒரே ஒரு கதை தான்.. அது அவங்கவங்க கதை தான்.. அதாவது நாம யார்? என்ற கதை தான்


18.  எங்கப்பா செத்தப்ப எல்லாரும் வந்தாங்க.. ஆனா நீ மட்டும் வர்லை..


 இனி என்னை மறந்துடு..காரணம்  கேட்காதே..

 ஓ! இப்படி பேசச்சொல்லி சாகறப்ப எங்கப்பா உன் கிட்டே சத்தியம் வாங்கிட்டரா?


19. எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?


http://moviecarpet.com/wp-content/uploads/2012/05/amazing-spiderman.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1.  படத்தில் திரைக்கதை ரொம்ப நீட்டாக , தெளிவாக இருப்பது முதல் பிளஸ்.. ஒரு இடத்தில் கூட ஃபிளாஸ் பேக் சீனோ, ஆடியன்சை குழப்புவது போல் காட்சியோ வர்லை..


2. ஓடும் ரயிலில் ஸ்பைடர் மேன் முதன் முதலில் தன்னை உணருகையில்  அங்கே இருக்கும் லேடியின் மீது எதேச்சையாக கை வைக்க கை ஒட்டிக்குது.. அந்த லேடியோட கணவன் வலுக்கட்டாயமா கையை பிடிச்சு இழுக்க டாப் கழண்டு வருவது அப்ளாஸ் அள்ளுது ( நோ டென்ஷன் ப்ளீஸ்.. உள்ளாடை இருக்கு)


3. பேஸ்கட் பால் கிரவுண்டில் ஹீரோ ஹீரோயினிடம் வம்பிழுத்த ஆளை பட்டாசுக்கிளப்பும் ஃபைட் பார்த்து பபுள்கம் லேடி மிரளும் சீன்.. ( அப்படியே தமிழ்ப்படம் மாதிரியே இருக்கு.. காதல் கொண்டேன் படத்தை பார்த்து அடிச்சுட்டாங்களோ? )


4. ஸ்பைடர் மேன் ஸ்டெப்  பை ஸ்டெப் தன்னோட பவரை உணரும் காட்சிகள் அழகு..



5. ஹீரோ 7 அடி தூரத்தில் தயங்கிச்செல்லும் ஹீரோயினை வலை வீசி இழுத்து கிஸ் செய்யும் சீன் செம கிளு கிளு.. 3 கமல் படம் பார்த்த மாதிரி.. செம ரொமான்ஸ்..

6. லைப்ரரில ஒரு ஆள் வாக் மேன்ல பாட்டு கேட்டுட்டே  ஏதோ புக்கை தேட பின்னணியில் ஹீரோ, வில்லன் ரணகள ஃபைட் போடுவதும் அது எதுவும் தெரியாமல் கருமமே கண்ணாக அவர் இருப்பதும் செம கல கல






 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. போலீஸ் எதுக்கு தேவை இல்லாம ஸ்பைடர் மேனை சுடனும்? அவர் தான் போலீஸ்க்கே உதவி பண்றவர் ஆச்சே?


2. உலகையே காக்கும், ரட்சிக்கும் ( 2ம் 1 தான் ) ஸ்பைடர்மேன் ஏன் தனக்கு மாப்ளையா வர வேணாம்னு போலீஸ் ஆஃபீசர் நினைக்கறார்? அதுக்கு என்ன காரணம்?னு சரியா சொல்லலையே? உலகை காக்க வேண்டியது உன் கடமைன்னு டயலாக் எல்லாம் சொல்றார்.. உலகையே காக்கும் விஷ்ணு, சிவன், பிரம்மா எல்லாம் ஆளாளுக்கு 2 பேரை  மனைவியா வெச்சுக்கிட்டே பார்ட் டைம்ல உலகை ஆளலையா?


3. ஹீரோ வில்லனை அடையாளம் காட்டி அவனை விசாரிங்க என போலீஸ் ஆஃபீசர்ட்ட சொல்றப்போ அவங்க ஏன் அலட்சியம் காட்டனும்? அப்பவே லேபை சர்ச் பண்ணீ இருக்கலாமே? போலீஸ் ஆஃபீசர் தன் மகள் காலேஜ்ல சேர அவர் தான் உதவி பண்னாருன்னு சப்பை கட்டு கட்டறது ஏத்துக்க முடியலை..


4. ஒரு சீன்ல லேப்ல இருந்து வெளி வந்த ஏராளமான எலிகள் குட்டி டினோசரா நகர்ல பாதாள சாக்கடைல உலா வருவதை பார்க்கும் ஹீரோ அதை ஒரு ஆதாரமா போலீஸ்க்கு ஏன் காட்டலை?


5. ஸ்பைடர் மேன் டிரஸ் ஹீரோவா வடிவமைச்சது.. மாஸ்க் மக்கள் யாரும் அடையாளம் தெரியாம இருக்கவே.. சக்திக்கும் அந்த டிரஸ்சுக்கும் சம்பந்தம் இல்லை.. ஆனா வில்லன் கூட ஃபைட் போடறப்போ ஹீரோ மெனக்கெட்டு அந்த டிரஸ்ச ஏன் தேடிட்டு இருக்கார்?


6. அபாரமான சக்தி இருக்கற ஹீரோ பொடிப்பசங்க வில்லன்களை துவம்சம் பண்ணாம எதுக்கு ஓடி வந்துட்டு இருக்கார்.. சும்மா சேசிங்க் சீனை விறு விறுப்பாக்காட்டவா?


சி.பி கமெண்ட் - ஸ்பைடர்மேன் , காமிக்ஸ் ரசிகர்கள், பள்ளி , கல்லூரி மாணவ ,மாணவிகள் எல்லாரும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கலாம்././ ஆனா ஒரே ஒரு குறை கதைல புதுமை இல்லை.. ஆல்ரெடி வந்த, சொன்ன கதை தான்.. மற்ரபடி டைம் பாஸ் படம் . மொத்தம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுது.ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

சுஜாதா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் - சிறுகதை - திமலா


Writer Sujatha - Smiles at Chennai book fair 2006

உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது.



“நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி”




“ஒ நித்யா! நீயா?”




“உள்ளே வரலாமில்லையா?”




“தாரளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்?. அருகே வா! முத்தம் தருகிறேன்.




நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துக்கள் அதி விரைந்தன.


சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று ‘ஆத்மா & கோ’வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின.


ஆத்மா டச் போனில் “நியூயார்க்” என்று கூப்பிட்டு விட்டு “உட்காரேன் நித்யா” என்றான்.


நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.




“நியூயார்க் நியூயார்க்!”




“நியூயார்க் சார்”




“எத்தனை வேண்டுமாம்?”


“இருபது மில்லியன்”


“பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு”




“நிக்ஸ் சார்”


“வாங்குவது யார்?”


“ராத்சைல்டு”


“அந்தக் கழுகா?. சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ”.




“சரி”


ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ””பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?”  என்றான். நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில்கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பைஅதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான்.




துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன.




“க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா

நீ நிற்கிறாயே  என்னவேண்டும் சொல்”


“நான் யார் தெரியுமா உனக்கு?”


“என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க்
பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு”.




“என்ன சொன்னே  நித்யா”




“ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்”.


“என்னவேண்டும? சொல்லவே இல்லையே”


“ஆத்மா,எனக்கு நீ வேண்டும்”




“நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே”




“என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்”




“பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்”




“ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்”




“ராத்திரிதான் வருகிறேனே”




“வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய்.  தூங்கி விடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை”




“தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?”


“அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ”




“ஹலோ டோக்கியோ”




நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.




“என்ன நித்யா இது?”


“ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம் இருக்கிறதா?”




“அதற்கென்ன?”


“அனுமதி கிடைததிருக்கிறது” என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது  அவனிடம் காட்டினாள்    அதில் கம்பயுட்டர் அச்சில்




திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்-
20-2-2080 அன்று காலை 10-16
உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும் கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)




ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு “அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா” என்றான்


நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் “ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும்.   ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து..”




“இரு இரு எப்போது போகவேண்டும்”




“நாளை காலை 10-16″




“ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?”




அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.




“நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் “




“ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது”




நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ”முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு  ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு”.




“ஸாரி கிடைக்கவில்லை” என்றது குரல்.




“போய் உன் தலையைத் தின்னு”




“ஸாரி தலை கிடையாது”




“இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்”




நித்யா பதற்றத்துடன் ” ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!”




“கூட யாரையாவது அனுப்பட்டுமா?”




நித்யா அழ ஆரமபித்தாள்.




“நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை”.




மேலும் அழுதாள்.




“இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?”




“ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?”




“ஒன்று செய்யலாம், திமலா எவ்வளவு தூரம்?”




“நூற்றம்பது கிலோ”




“நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்”




“முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும். நான் போகிறேன். உனக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா”




“ஸாரி பதில் இல்லை”

http://image1.indiaglitz.com/tamil/news/shankar010308_1.jpg


ஆத்மா சிரித்தான்.




“சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.  எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்”




“அப்படி எல்லாம் பேசாதே நித்யா”




“பின்னே என்ன?”




“அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு”




“முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம், என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.. ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை”.






“இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது  எனக்கு”.




“ஒரு முறை வந்துபார். உன் மனம் மாறிவிடும். கணவன் மனைவியாகப் போவது பெரும்  பாக்கியம் என்கிறார்கள்”.




“இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம்”.




“ஹலோ  ந்யூ யார்க்  என்ன ஆச்சு?” நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள்




ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை.


ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு “கோபம் கூடாது என் மனைவியே”என்றான்.


“நான் அனி உன் மனைவி இல்லை”


கம்ப்யூட்டர் குறுக்கிட்டது “ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது”.




“என்ன?”




“வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்”


நித்யா முகம் மலர்ந்தாள் “வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க” என்று கூவினாள்.


“மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும்“ என்றது கம்ப்.


ஆத்மா சிரித்து” திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?”.


நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.




மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள். ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.  தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது.




திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!


கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம்  என் விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.


நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை


.
கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை. அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை.
குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள்.
அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான்.




இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.
மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.




நித்யா ஏறிக் கொண்டாள் “எங்கே” என்றான் டாக்ஸி ஓட்டி.


“முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு
திமலா போகவேண்டும்  பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?”.




“இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டிடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?”.




“அதிகப் படியாக ஐந்து நிமிஷம்”


“சரி”


டாக்ஸி நழுவியது.




அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.”ஒரு நிமிஷம்” என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான்,




“ஹலோ லண்டன்!  மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா”




“நேரமாகிறது கிளம்பு கிளம்பு”




“ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?”




“நாசமாப் போச்சு. திமலா!”




“ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா?.
இன்னும அரை மணி இருக்கிறதே, இதோ வந்துவிட்டேன்”.




ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.
பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே!
போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.




“டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்”




“கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன  பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?”




“புரியவில்லை”




“உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?”




“மஞ்சள்”


“பத்தாவது ப்ளாட்பார்ம்”


வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின்
வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.




ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.




அவனை உரசிக் கொணடாள்




திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது.


அப்பாடா!


ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.




நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.


‘திமலாவுக்கு வரவேற்கிறோம்’ என்று ஸோடியம் ஒளிர்ந்தது.




நித்யா வேகமாக நடந்தாள்.




நீண்ட சதுர இயந்திரங்கள் ’உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள்‘ என்றன.




செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு

” நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்”. சற்று தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் எண் கன்வேயருக்கு.
ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.




‘இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்’ என்றது ஒலிபெருக்கி ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.




முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து …கோபுரம் தெரிந்தது.




நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள்.




பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார்.




நித்யா துள்ளினாள். “பார் ஆத்மா, அவர்தான்!”.




வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.




மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.




“அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!”




“உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்’என்று குரல் மேலே ஒலித்தது.




அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து “அர்ச்சனை உண்டா? என்ன மொழி?” என்றார்.




“தமிழ்” என்றாள் நித்யா.




அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது.




துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-




“குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே”





“சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்டருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா… பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில்.
நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்..





கற்பூர ஒளியில் ஆத்மா “த்ரில்லிங்!”என்றான்.

நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம்

BTW, here are the pictures of Sujatha which I took in the Chennai book fair 2006.
Writer Sujatha - Chennai book fair 2006

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (29.6..2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை



29.6.2012 கோடம்பாக்கத்துக்கு மோசமான நாள், நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று எந்த ஒரு நேரடி தமிழ்ப்படமும் ரிலீஸ் இல்லை.. 2012 பொங்கல் வாரம் முடிஞ்ச அடுத்த வாரம் இதே சூழல்.. 6 மாதத்திற்குப்பிறகு இப்படி.. இது சகுனிக்கு லக்.. அடுத்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நான் ஈ எனும் சயின்ஸ் ஃபிக்சன் படமும், அதுக்கடுத்த வாரம் பில்லா 2 வும் வருது..
1.The Amazing Spider-Man -
 Like most teenagers, Peter is trying to figure out who he is and how he got to be the person he is today. Peter is also finding his way with his first high school crush, Gwen Stacy, and together, they struggle with love, commitment, and secrets. 

As Peter discovers a mysterious briefcase that belonged to his father, he begins a quest to understand his parents' disappearance - leading him directly to Oscorp and the lab of Dr Curt Connors, his father's former partner. As Spider-Man is set on a collision course with Connors' alter-ego, The Lizard, Peter will make life-altering choices to use his powers and shape his destiny to become a hero. Written by Nicky Mitchell   

 http://cf.badassdigest.com/_uploads/images/23329/amazing_spiderman_ver5_xlg__span.jpg

I have read spider-man stories for years and I loved the connection that Gwen Stacey and Spider-man had together. What I do not like is twihard, romance novel like eye candy up on the screen. When sitting in the movie, I had to deal with the girls talking about how hot they thought Peter Parker was. 

My immediate thought was "Peter is me, a nerd, sense when has any girl found me attractive?" I realized that he was the epitome of what tweens found attractive. He may be playing a nerd but he certainly does not look like one. Then I experienced something that I hope no spider-man fan should ever go through.


when Peter took of his clothes, My EARS FELT LIKE THEY WHERE GOING TO SPLIT OPEN! Because the girls in the theater screamed so loud for peter having no shirt on. I should have sold my ticket on ebay. There was redeeming factors for this movie, like I said before there is some great action and an amazing cast to pull it off. 

 The relationship between Peter, Dr.Connors and the friction between Captain Stacy was great. The origin story of Peter seemed more plausible then Sam's Spider-man (More realistic?) But what made this crushingly unwatchable, for me, was the way the romance was written, then seeing it play out.

 This coming from a guy who love some well written romance movies (like The Notebook). What I am trying to say is. Headline for this movie should be. Spider-man, a love story. Maybe I am over reacting. I did see it with a bunch of screaming girls. If you are going to see this movie. Whether you think it will be good or not, see it a good two weeks after the release to avoid the large Twilight crowd.

2.15 மணி நேரம் ஓடுதாம்..  வி எஸ் பி, தேவி அபிராமி, சண்டிகா என 3 தியேட்டர்ல ரிலீஸ்


http://img.poptower.com/pic-94223/amazing-spider-man-2012-movie.jpg?d=600

2. காதல் போதை - இது கிட்டத்தட்ட ஒரு கில்மா படம்.. தெலுங்கு டப்பிங்க் படம்னு நினைக்கறேன்... ஒரு பெரிய தொழில் அதிபர்.. அவர் சம்சாரத்தை ஏமாத்தி ஒரு டீன் ஏஹ் காலேஜ் கேர்ளை லவ்வறார்.. பல மாசம்  தெய்வீகமா லவ்வுன பின் அந்த பொண்ணு மாசம் ஆகறா.. என்ன பிரச்சனைகளை சந்திக்கறார் என்பதுதான் கதை.. படு கேவலமான திரைக்கதை.. ஆல்ரெடி பள்ளி பாளையத்துல பார்த்தாச்சு.. இப்போ தான் ஈரோட்ல ரிலீஸ் ஆகுது. ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் ரிலீஸ்.. படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை. கூகுள்ள தேடுனா காதல் பாதைன்னு ஒரு குப்பை படம் ரிலீஸ் ஆகி 2 நாள்ல காணாம போச்சே அந்த படம் ஸ்டில் தான் வருது..


3.சபலம் - இதுவும் மலையாள டப்பிங்க் கில்மா படமே.. ஃபேக்டரி ஓனர் அங்கே ஒர்க் பண்ற லேடீஸ் மேல ஒரு கண்.. சாரி 2 கண்ணையும் வெச்சு மேத்தமேடிக்ஸ் பண்ண பார்க்கறாரு.. அந்த தொழில் அதிபரோட சம்சாரம் தோட்டகாரனோட அக்ரிகல்ச்சர் பண்றாங்க.. ஹி ஹி இது போன்ற அஜால் குஜால் கதை எழுதும் கதாசிரியர்களுக்கு செம சம்பளமாம்.. நம்ம கைவசம் ஏகப்பட்ட கில்மாக்கதை இருக்கு.. யாரும் கண்டுக்கறதில்லை.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை.. சென்னை கோவை போன்ற முக்கியமான நகரங்களில் மட்டும் இப்போ ரிலீஸ்.. படத்தில் 4 சீன் இருக்காம்.. அந்த 4 சீனுக்கு நன்றி..