வில்லன் ஒரு மொள்ளமாரி.. டிராவல்ஸ் கம்ப்பெனி, சினிமா டிஸ்ட்ரிபியூஷன் அப்டினு அண்ணனுக்கு பல வேலை.. ஹீரோ வில்லன் கிட்டே தான் வேலை செய்யறார்.. ஓனர் ஒரு மொள்ளமாரின்னா லேபர் ஒரு முடிச்சவுக்கி.. அதாவது ஆண்ட்டி ஹீரோ.. ANTI-HERO -ன்னா எதிர் மறை நாயகன்.. AUNTY HERO-ன்னா ஆண்டிகளை கரெக்ட் பண்ற நாயகன்.
வில்லனோட மெயின் வேலை என்னான்னா ரோடு ரோடா அலைஞ்சு முக்கு சந்துல நின்னு நோட்டம் போடறது.. மனசுக்குப்பிடிச்ச டிக்கெட் வந்தா கார்ல கூட்டிட்டுப்போய் மேட்டரை முடிக்கறது.. மிச்சம் மீதி இருந்தா ஹீரோவுக்கு ஷேர் பண்ணிக்கறது. இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை 2 பேரும் வாழ்ந்துட்டு வர்றாங்க..
ஹீரோயின் ஒரு ரெடிமேடு ஷோ ரூம்ல சேல்ஸ் கேர்ள்.. ஆனா வசனத்துல சூப்பர்வைசர்னு ஜம்பமா சொல்லிக்குது.. 45 மார்க் தேறும்.. ஹீரோ எதேச்சையா அந்த ஷோ ரூம்க்க்கு வர்றான்.. 2 பேரும் பார்வையாலேயே பேசிக்கறாங்க.. 2 வது சந்திப்புல ஹீரோயின் அவ தோழி கிட்டே தகவல் சொல்ற , மாதிரி நைசா அவங்க வீட்டுக்கு எதிரே ஒரு வீடு வாடகைக்கு காலியா இருக்குன்னு தகவல் சொல்லி வீட்டு அட்ரஸையும் சொல்றா..
அடுத்த நாளே ஹீரோ அங்கே குடி வந்துடறான்..அப்புறம் என்ன? டெயிலி பார்வைப்பரிமாறல்கள், ரொமான்ஸ் தான்.. ஆடியன்ஸ் எல்லாம் என்னா நினைக்கறாங்கன்னா ஹீரோ ஹீரோயினை பத்தோட 11 ஆக மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்டுடுவான்னு.. ஆனா பாருங்க காதல் ஒரு அபூர்வமான சக்தி.. கெட்டவனைக்கூட நல்லவன் ஆக்கும்.. உருக வைக்கும்,.. ஹீரோ ஹீரோயினை சின்சியராதான் லவ் பண்றான்..
ஒரு டைம் ஹீரோயின் ஹீரோ பீச்ல லவ்வறப்போ வில்லன் அதாவது ஹீரோவோட ஓனர் பார்த்துடறான்.. ஹீரோயின் மேல அவனுக்கு ஒரு கண்ணு..ஹீரோ வில்லனைப்பற்றி புரிஞ்சுக்காம ஹீரோயின் வீட்டுல வந்து நீங்க தான் பொண்ணு கேட்கனும்னு ஹெல்ப் கேட்கறான்..
வில்லன் ஹீரோவை வெளியூர்க்கு ஒரு வேலை விஷயமா வேணும்னே அனுப்பிட்டு ஹீரோயின் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கறான்.. ஆனா அவனுக்கு.. ஹீரோவுக்காக இல்லை.. ஹீரோயின் அம்மா கிட்டே தன் சொத்து பத்து லொட்டு லொசுக்கு செல்வாக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி பொண்ணு கேக்கறான்.. மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு ராஜ யோகம்.. அம்மா ஓக்கே சொல்லிடறா.. ஹீரோயின் எதிர்ப்பான்னு பார்த்தா ஒரு ஷாக்.. உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரி சடார்னு அவ மனசு மாறி வில்லனுக்கு ஓக்கே சொல்லிடறா.. இடைவேளை..
இதுவரை படம் விறு விறுப்பா, சுவராஸ்யமாத்தான் போகுது.. இடைவேளைக்குப்பிறகு கதை அப்டியே ஜம்ப் ஆகுது.. வில்லன் இந்த மாதிரி பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் ஹீரோ வில்லன், ஹீரோயின் 2 பேர் சகவாசமே வேணாம்னு உதறி இருக்கனும்.. ஆனா அந்த லூசு ஹீரோ வில்லன் கிட்டேயே வேலை செஞ்சு பின் சீட்ல வில்லன், ஹீரோயினை உக்கார வெச்சு ஓட்டிட்டு போறார்.. முடியல..
ஹீரோயின் மாடலிங்க் கேர்ள் ஆகி, நடிகை ஆகறா... அப்போ ஒருத்தி அட்வைஸ் பண்றா.. நமக்காக உருகக்கூடிய ஒரு இளிச்சவாயன் லவ்வரை மேரேஜ் பண்ணிக்கிட்டாதான் சவுகர்யம்னு.. உடனே ஹீரோயின் பல்டி அடிச்சு ஹீரோவை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொல்றா.. ஹீரோ நைஸா ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி மேட்டரை முடிச்சுட்டு என்னை ஏமாத்துனே இல்லை.. உன்னை நான் ஏமாத்துறேன்னு குட் பை சொல்றான்.. அவ்ளவ் தான் கதை..
ஹீரோ புதுமுகம்.. ஆள் டீசண்ட்டாதான் இருக்கார்.. புது முகம் என்ற எண்ணமே வராத அளவு அவர் நடிப்பு கன கச்சிதம்.. வில்லன் நடிப்பு டாப்.. நய வஞ்சகம்.. கோபம், குள்ள நரித்தனம் எல்லாவற்றையும் பார்வையாலேயே வெளிப்படுத்தும் கேரக்டர்..
ஹீரோயின் முகம் சுமார் என்றாலும் மேற்படி விஷயங்கள் எல்லாம் சராசரிக்கும் மேலே.. பாப்பாவுக்கு நடிப்புதான் வர மாட்டேங்குது..
அல்வா வாசுவின் காமெடி சுமார் ரகம்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்துல முக்கியமான கேரக்டர்ஸ்னு பார்த்தா ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 பேர் தான்.. ஆனா நாடகம் பார்க்கும் உணர்ச்சி இல்லாமல் விறு விறுப்பாக இடைவெளை வரை கொண்டு சென்றது..
2. கதை , திரைக்கதை அனுமதித்தும் மோசமான காட்சிகள் ஏதும் வைக்காமல் கண்ணியமான காட்சிகள் வைத்து பெண்களூம் பார்க்கும்படி படம் எடுத்தது
3. ஹீரோவிடம் ஃபோனை இரவல் வாங்கி அல்வா வாசு பேசி பேலன்சை தீர்த்து, ஃபோனை முடிச்சுக்கட்டும் காமெடி கலகலப்பு
4. ஹீரோயின் மொட்டை மாடியில் நின்று ஹீரோவிடம் கண்களாலேயே ஹீரோ தம் அடிப்பதை கண்டிப்பதும், அப்போ ஹீரோ சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு அவர் வீட்டுக்குள் சென்றதும், மீண்டும் தம் அடிப்பதும், பின் திரும்பி வந்த ஹீரோயின் செல்ல முறை முறைப்பது, பார்த்துப்பழகிய காட்சி என்றாலும் ரசிக்க முடிகிறது..
5. ஹீரோ ஹீரோயின் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு சைகை பாஷையில் பேசிக்கொள்ளும் அந்த 6 நிமிட லாங்க் ஷாட் அழகுக்கவிதை..அப்போது ஹீரோயின் காட்டும் எக்ஸ்பிரஷண்ஸ் கச்சிதம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோவுக்காக பெண் கேட்டு வர வேண்டிய வில்லன் அவனுக்காக தன்னை பெண் கேட்கும்போது ஹீரோயின் முகத்தில் ஒரு அதிர்ச்சியே தெரியலை.. அப்போ ஒரு ஷாக் காட்டி 2 நாள் யோசனை பண்ணி ஓக்கே சொல்லி இருந்தா கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்..
2. பல களம் கண்ட டே நைட் ஒர்க்கர் டேவிட் மாதிரி இருக்கும் வில்லன் ஒரு சப்பை சில்ஃபான்சியை கண்டு மயங்குவதும், மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுவதும் நம்பற மாதிரியே இல்லை..
3. நிச்சயிக்கப்பட்ட ஹீரோயினுடன் காரில் செல்லும் வில்லன் அவ தோள்ல கை போடும்போது அவ வேணாம்கறா.. உடனே ஜுவல்ஸ் கடைல ஒரு நெக்லஸ் வாங்கிக்குடுத்ததும் ஓக்கே சொல்லிடறா.. இது பெண்களை ரொம்ப கேவலப்படுத்தற மாதிரி இருக்கு..
4. வில்லன் ஹீரோயினை மேட்டர் முடிச்சுட்டானா? இல்லையா? என்பது தெளிவா சொல்லப்படலை.. அதை சொல்லலாமா? வேணாமா?ன்னு குழப்பமா திரைக்கதை, காட்சிகளை வடிவமைச்சது நல்லா தெரியுது.. தேங்கா உடைச்ச மாதிரி சொல்லிடனும்.. அது பிளசோ மைனஸோ.. அப்புறம்..
5. சினிமா சான்ஸ், மாடலிங்க் இவற்றுக்காக ஹீரோயின் தன் கற்பை இழக்கிறாளா? இல்லையா? என்பதை தெளிவா சொல்லலை. அது ஏன் தேவைப்படுதுன்னா க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஹீரோயினை மேட்டர் முடிச்சதும் அழறா.. அதனால டீட்டெயில்ஸ் தேவை..
6. படத்தோட டைட்டிலும் சரி இல்லை.. அதிகாரம் 92ன்னா ஏதோ மாஃபியா கேங்க் படம் மாதிரி இருக்கு ..
மனதில் நின்ற வசனங்கள்
1. ஸாரிக்கா.. சேலை கன்ஃபியூசன் ஆகிடுச்சு.. பார்ட்டி மஞ்சள் கலர் சேலைல வரும்னாங்க... நீங்களும் அதே கலரா... அதான்..
பரவால்ல தம்பி.. நானும் பார்ட்டிக்குத்தான் வெயிட்டிங்க்..
2. ஏய்யா என்னை ஃபோட்டோ எடுக்கறே?
ம்.. அரவிந்தனும் 1001 நைட்டும் அப்டினு புக் எழுத..
3. பொம்பளைங்க கிட்டே அப்படி என்ன இருக்கு? ஆம்பளைங்க ஏண்டா அப்படி அலையறீங்க?
4. ஏம்மா..15 நாள் கேம்ப்.. வந்துடறியா?
சாரி சார்.. டெஸ்ட் மேட்ச் உடம்புக்கு ஒத்துக்காது..ஒன் டே மேட்ச்னா ஓக்கே.. ட்வெண்ட்டி ட்வெண்ட்டின்னா இன்னும் பெஸ்ட்..
5. டேய்.. உனக்கு 27 வயசா..? பார்த்தா அப்படி தெரியலையே?
மிஸ்.. பாத்தா தெரியாது............
6. டேய்... இந்த வண்டி ஸ்டார்ட் ஆகலை.. இதை ஸ்டார்ட் பண்ணிக்குடு.. உனக்கு 27 வயசுன்னு நம்பறேன்..
அய்யய்யோ , ஸ்டார்ட் பண்ண முடியலையே?
ம்க்கும்.. இந்த வண்டியையே உன்னால ஸ்டார்ட் பண்ண முடியலையே........?
7. டேய். அவ கிட்டே போய் ஃபோன் நெம்பர் வாங்கிட்டு வா
மொதலாளி.. ரோட்ல போற யாரோ ஒரு லேடி கிட்டே போய் ஃபோன் நெம்பர் கேட்டா செருப்பை கழட்டி அடிப்பா..
போடா போ.. கண்ணை பார்த்தே கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிடுவேன்.. நீ போய் கேளு.. தருவா பாரு
8. மொதலாளி.. நீங்க நினைச்சது சரிதான்.. எப்படி ஒரு பொண்னோட முகத்தை பார்த்தே கண்டு பிடிச்சுடறீங்க?
முகத்தை மட்டும் பார்த்து கண்டு பிடிச்சிட முடியாது.........
9. லேடி- எங்க வீட்ல பெட் இல்லை .. பரவாயில்லையா?
\
நோ பிராப்ளம்.. நாங்க தரை டிக்கெட்டுங்கதான்
10. ஒருத்தரோட வாழ்க்கையை பணம் எவ்ளவ் தூரம் உயர்த்தும்கறதை உணர்ந்தவன் நான்.. அதனால பணத்தை என்னைக்கும் அலட்சியம் பண்ண மாட்டேன்
11. முதல் காதலை யாராலும் மறக்கவே முடியாது, எதுக்கு மறக்கனும்? அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டு போகுது
12. அவ எனக்கு எத்தனை டெஸ்ட் வெச்சா தெரியுமா?நான் எதுலயும் ஃபெயில் ஆகலை..
அப்புறம் ஏன் அவ அமெரிக்க , மாப்ளைக்கு ஓக்கே சொல்லிட்டா?
அதை அவ கிட்டே தான் கேட்கனும்
13. சின்சியரா லவ் பண்றவனை இப்போவெல்லாம் பெண்களுக்குப்பிடிக்கறதே இல்லை..
14. மேரேஜ்க்குப்பிறகு ஒரு பொண்ணு மனசு மாற சான்ஸ் இருக்கு
15.. ஆடு எப்பவும் கசாப்புக்கடைக்காரனைத்தான் நம்பும்.. அது அவ தலை விதி விடு.. எப்படியோ போகட்டும்..
16. பொண்ணு எதை வேணாலும் விட்டுக்கொடுப்பா, ஆனா தன் படுக்கையை மட்டும் விட்டுத்தர மாட்டா..
17.. உன் ஆள் சரி இல்லைடா.. பெண் கேட்டுப்போனப்போ வேணுவுக்கு நான் என்ன பதில் சொல்ல? அப்டினு அவ கேட்கலை.. வேணு ஏதாவது தகராறு செஞ்சா என்ன செய்ய? அப்டினு தான் கேட்டா..
18.. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்..
கவர்மெண்ட் பஸ் பக்கம் எல்லாம் அடிக்கடி போகாதேனு சொன்னா கேட்டாத்தானே.. ஏதாவது குறளை படிச்சுட்டு வந்து இப்படி பிளேடு போடறான் பாரு
19. ஆஹா.. அடுத்தவன் லைஃபை கெடுக்கறதுல தான் எவ்லவ் ஆனந்தம்?
20. ஹூம்.. நீ இன்னும் நடிகை ஆகலை.. ஷூட்டிங்கும் ஆரம்பிக்கலை. ஆனாலும் நல்லா நடிக்கறியே?
21. உன்னை விட சின்ன வயசா.. உன்னை மட்டுமே லவ் பண்றவனை மேரேஜ் பண்ணிக்கோ.. அவன் நாய்க்குட்டி மாதிரி உன்னை சுத்தி சுத்தி வருவான்.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு
22. நீ தான் உலகம்னு யார் மனசார நினைக்கறாங்களோ அவனை கண்டு பிடிச்சு உன் கைக்குள்ளே போட்டுக்கோ
23. சொந்த டயலாக் பேசி நடிக்கறது எவ்ளவ் கஷ்டம் தெரியுமா? இனி ஒன்லி ஆக்ஷன் தான்
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - இடைவேளை வரை ஜாலியா போகுது.. மோசம் இல்லை.. 18+ எல்லாரும் பார்க்கலாம்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்
டிஸ்கி - இந்தப்படத்தின் ஸ்டில்கள் கூட கூகுள்ல கிடைக்கலை.. =மார்க்கெட்டிங்க் ரொம்ப மோசம்.. மலையாள அதிகாரம் படம் தான் காட்டுது
டிஸ்கி 3 , அதிகாரம் 92 டைட்டில்க்கான விளக்கம்.. தகவல் உதவி -விஜய் ~ Vijay @Kannamoochi
.
டிஸ்கி - இந்தப்படத்தின் ஸ்டில்கள் கூட கூகுள்ல கிடைக்கலை.. =மார்க்கெட்டிங்க் ரொம்ப மோசம்.. மலையாள அதிகாரம் படம் தான் காட்டுது
டிஸ்கி 3 , அதிகாரம் 92 டைட்டில்க்கான விளக்கம்.. தகவல் உதவி -விஜய் ~ Vijay
This page presents the text of Tirukkural in the Tamil Script with translation in English. One Adhikaram consisting of ten couplets is shown at a time. The text is displayed as an image, to allow direct viewing on most Browsers. The contents being an image, it may take a while to download the page.
3 comments:
செந்தில் அம்பி! நன்னா இருக்கியா அம்பி! இதை பப்ளிஷ் பண்ணுடா! நீ நன்னா இருப்பே; இல்லே நீ நாசமா போவே"
=======================
ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...
அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html
அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html
அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html
என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!
அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com
படம் பாக்கலாம் போல
படம் ஓகே ரகம்தானா?
Post a Comment