Saturday, June 09, 2012

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அதிரடிப்படங்கள் 4 - முன்னோட்டம்

சும்மாச்சுக்கும் இல்லை... நிஜமாகவே உலகம் முழுக்க வெளியாகி திரையரங்குகளை அதிரடிக்கவிருக்கும் மெகா சினிமாக்கள் குறித்த கலர்ஃபுல் டிரெய்லர் இங்கே... -ஜாக்கிசான்,ஜேம்ஸ்பாண்ட்,ஸ்பைடர் மேன் -லேட்டஸ்ட் படங்கள் ஒரு பார்வை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb6qt7JlXkMSs-DZjTDbHWnfGksOCP8LlErDRkECHj30yauePg6JmWr80yHQnYcd_XQ6DGNi0_Qxno0D6f4tSo5xMqEBU5jr-iG1xgpNUrwaxhAPpGM0_lD6lrB5xa1S21QW_EvBN1SCc/s1600/Skyfall+Movie+Poster.jpg

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 23-வது படம். டேனியல் க்ரேய்க்கின் மூன்றாவது பாண்ட் அவதாரம். ''டபுள் ஓ செவன்... நீ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?'' என அடிக்கடி பாண்டின் மீது செல்லக் கோபம் காட்டும் 'மிஸ் எம்’ அப்பத்தா ஓர் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார். அது அவர்களின் 'எம்16’ (MI6) புலனாய்வு அமைப்புக்கே சிக்கலாகும் சமயம் பாண்ட் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.


'மிஸ் எம்’ வேடத்தில் முந்தைய படங்களில் நடித்த ஜூடி டென்ச்சின் கணவர் இறந்த பிறகு, 'இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பிறகு 'பாண்ட் படங்களுக்கு என் ஆயுள் முழுக்க நடிக்கக் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு, அடங்காத குதிரை பாண்டை மிரட்டி வேலை வாங்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


''மிஸ்டர் ஜேம்ஸ்... யார்கிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கணும்னு உங்களுக்குச் சொல்லியா தரணும்?'' என்றபடி ஆடைகளைக் களையும் ஹீரோயின்களாக நவோமி ஹாரிஸும்  பெரினிஸ் மார்லோவும் நடித்திருக்கிறார்கள். கறுப்பழகி நவோமி ஹாரீஸுக்கு படத்தில் பாண்டுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் உண்டு. பாண்டுடன் நவோமி உருண்டு புரளும் சமயமே ஹிட் ஹாட் கெமிஸ்ட்ரியும் அரங்கேறுமாம்.


முன்னெப்போதையும்விட, இந்த பாண்ட் படத் தயாரிப்பில் ஏகப்பட்ட சிக்கல். ஆரம்பத்தில் எம்.ஜி.எம். நிறுவனம்தான் படத்தைத் தயாரித்தது.


ஆனால், வங்கிக் கொள்ளையில் பணத்தைப் பறிகொடுத்து மிகப் பெரிய இழப்பில் தவித்த அந்த நிறுவனம், படத்தை சோனி நிறுவனத்துக்குக் கை மாற்றியது. இதனால் உப தயாரிப்பாளர்கள்  நம்பிக்கையிழந்து கழன்றுகொண்டனர். இந்தியாவில் கொங்கன் ரயில்வேயின் அதீத வளைவுகளில் படம் பிடித்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தால் ரத்தான படப்பிடிப்பு, விபத்து காரணமாக டேனியல் க்ரேய்க்கின் ஓய்வு என ஏகப்பட்ட தடைகள். அத்தனையையும் தாண்டி உள்ளம் கொள்ளைகொள்ள வருகிறான் பாண்ட்!



படத்துக்கான பட்ஜெட்...? 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே! நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 838 கோடி ரூபாய். படத்தில் வில்லனுக்கே 100 கோடி சம்பளமாம். அப்போ க்ரேய்குக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvazIv0HWuUK8xDyTsg_CWYCaUU27M7y8ieU_BSQ3Gw9zX0_w3KRmRoKoNo3E31oHVSHJhz1sSLwauS6UX6y8UxhszNfw78SwcKo8ad6OzQyoP1TodBcJQRSJbibBL0Pt22_HbltUvlavY/s1600/cz12+poster+cannes.JPG



சைனீஸ் ஸோடியாக்
''இந்தப் படத்தோடு ஆக்ஷனில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன். இனி, என் வயதுக்குத் தகுந்த மென்மையான படங்களில் மட்டுமே நடிப்பேன்'' என ஜாக்கிசான் அறிவித்திருப்பதால், எதிர்பார்ப்பை மில்லியன் டாலருக்கு எகிறவைத்துள்ள படம்... 'சிஇசட்12’ (CZ12) என்று குறிப்பிடப்படும் சைனீஸ் ஸோடியாக்.


12.12.12-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், ஜாக்கியின் ஹிட் சீரிஸ் படமான 'ஆர்மர் ஆஃப் காட்’ படத்தின் மூன்றாவது பாகம். சகட்டுமேனிக்குக் காயங்கள், 58 வயதுக்கே உரிய தளர்ச்சி, காதல் மனைவி லின் ஃபெங்கின் தொடர் அறிவுரை கள்தான் காரணம், 'ஆக்ஷன் ரிட்டையர்மென்ட்’ முடிவுக்கு.


படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஆக்ஷன் என அத்தனையும் ஜாக்கி சான். சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெயின், பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப் பில் இருந்து மீட்டு வரும் முந்தைய பாகக் கதையின் தொடர்ச்சிதான் என்றாலும், நவீன டெக்னாலஜியோடு ஆக்ஷன் காட்சிகளை அலேக்காக அமைத்திருக்கிறார் ஜாக்கி.

 க்ளைமாக்ஸ் சண்டைக்கு மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம். புவி ஈர்ப்புக்கு எதிராகக் காற்றில் பறந்து மோதும் சாகசக் காட்சிகளில் தன் டிரேட் மார்க் குறும்புத்தனம் சேர்த்து ஷூட் செய்திருக்கிறார். ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என உலகின் அத்தனை சாகசங்களையும் உள்ளடக்கிய பேக்கேஜாக வரும் இந்தப் படத்திலும் வழக்கம்போல டூப் போடாமல் நடித்து இருக்கிறார் ஜாக்கி. 'என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது நீயல்லவா’ என்று ரசிகர்களை நோக்கிப் பாடுவதற்கு மிகப் பொருத்தமான ஜாக்கி... இனி, 'ஒரு பவுன் வியர்வை’ சிந்த மாட்டார் என்பது அகில உலக ரசிகர்களுக்கும் வருத்தமே!



தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
டம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ என்ற ஹிட் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் படம். ஸ்பைடர் மேனின் பீட்டர்பார்க்கர் கதாபாத்திரத்தில் இந்த முறை நடித்திருப்பவர் ஆண்ட்ரூ.

http://emma-stone-photos.yesyada.com/wp-content/uploads/2012/04/the-amazing-spider-man-poster.jpg


 'தி சோஸியல் நெட்வொர்க்’ படத்தில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஆருயிர் நண்பன் சாவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஆண்ட்ரூ. இப்போது 'ஸ்பைடர் மேன் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு சின்சியராக நடித்தவரை, இரண்டாம் பாகத்துக்கும் கமிட் செய்துவிட்டார்கள். ஆண்களின் மனம் கவர்ந்த டாப் 100 செக்ஸி அழகிகளில் ஆறாவது இடம் பிடித்த எம்மா ஸ்டோன்தான் இந்த வலை மனிதனுக்கு வலை விரிக்கும் அழகி!


படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கான் ('ஸ்லம் டாக் மில்லினியர்’ பட இன்ஸ்பெக்டர்!) ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நான் வில்லன் இல்லை. ஆனால், படத்தில் என்னுடைய ஆராய்ச்சிகள் ஸ்பைடர் மேனுக்கு வில்லத்தனமாகத் தெரியும்!’ என்கிறார் இர்ஃபான். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2011-லேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக 'போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ வீடியோ கேம் மெகா ஹிட் அடித்திருக்கிறது.

http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/the-amazing/spider-man-character-posters/The%20Amazing%20Spider-Man%20Character%20Posters-03.jpg


இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில்... இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூன் மாதம் வலை விரிக்கப்போகிறான் இந்த ஸ்பைடர் மேன்!



வேர்ல்டு வார் இஸட்
மெரிக்க எழுத்தாளர் மார்க்ஸ் ப்ரூக்ஸின் 'தி வேர்ல்டு வார் இஸட்’ நாவல் அப்படியே சினிமாவாகி இருக்கிறது. 2006-ல் வெளியான அந்த நாவலில் கவரப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், தானே படத்தைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


கதை? 'ஸோம்பீஸ்’ (zombies) எனப்படும் மரணம் இல்லா மந்த மனிதர்களால்தான் உலகம் அழியும் என்பதே ஒன் லைன்!


ஆட்கொல்லி வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து வெறும் சதைப் பிண்டங்களாக அலைகிறார்கள். அந்த மந்த மனிதர்களின் மூளையில் பதிந்துள்ள ஒரே பழக்கம்... இயல்பான மனிதர்களைக் கொன்று தின்பது மட்டுமே. இந்த ஸோம்பிக்களின் மூளையைச் சிதைப்பது மட்டுமே அவைகளை அழிக்கும் ஒரே வழி. நிஜத்திலும் இதுபோன்ற ஸோம்பிக்களால்தான் உலகம் அழியப்போகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ள ப்ரூக்ஸ், 'ஸோம்பிக்களால் கடி வாங்குபவர்களும் ஸோம்பிகளாக மாறிவிடுவார்கள்.

http://farm5.staticflickr.com/4116/4759295551_3baa1e8cca_z.jpg


இந்தக் கதையை நான் கற்பனையில் மட்டுமே  உருவாக்கவில்லை. இந்த நாவலுக்காக நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சில ராணுவ ரகசியங்களை  தெரிந்துகொண்டேன். அமெரிக்க ராணுவம் ஸோம்பிக்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ப்ரூக்ஸ்.


 படத்தில் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க ஸோம்பிக்களை உருவாக்கும் அமெரிக்க, சீன ராணுவத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறார்களாம். தீவிரவாதத்தின் இன்னொரு பக்கத்தை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களில் செலவுசெய்து காட்டுகிறார்கள். ஸோம்பிக்கள் நிஜத்தில் வந்தால், நாமெல்லாம் என்னாவோம்?!



 நன்றி - விகடன்

0 comments: