1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?
என்னோட லட்சியமே டைரக்டர் ஆவதுதான்.. ஆனா அதுக்கான முறையான முயற்சிகளையோ, பயிற்சிகளையோ நான் எடுக்கலை.குடும்ப சூழலின் காரணமா என்னால ஈரோட்டை விட்டு சென்னை போக முடியாத சூழல்.. அப்படி இருக்கும்போது நீங்க சொன்ன மாதிரி ஒரு சம்பவம் நடந்தா பிளாக்கை விட்டுடத்தயார்..
இந்தகேள்வில ஏதாவது உள்குத்து இருக்கா? என்னை துரத்தும் பிளானா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொன்னேன்..
2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?
சுற்றுப்புறத்தை, நாட்டு நடப்பை கவனிப்பதால் தான், அவற்றை உள் வாங்குவதால் தான் ஜோக்ஸ், கமென்ட்ஸ், ட்வீட்ஸ், பதிவுகள் போட முடியுது.. திண்னைல உக்காந்து வெட்டி அரட்டை அடிக்கலை, டாஸ்மாக் போய் சரக்கு அடிச்சு ரோட்டோரம் கிடக்கலை.. இழந்தைவைகள் என ஏதும் இல்லை.. குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கிட்டு தான் இருக்கேன்.. இல்லைன்னா குடும்பம் நம்மை ஒதுக்கிடுமே?
3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.?
சினிமாங்கறது ஜஸ்ட் எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. உறவுகள் என்றென்றும் எண்ட்டயர்லி அட்டாச்மெண்ட்.. உறவுக்குத்தான் முக்கியத்துவம். ஆனாலும் என்னை நன்கு புரிந்த உறவுகள் என் சுபாவம் உணர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நெருக்கடி கொடுப்பதில்லை
4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆனோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?
ஆனானப்பட்ட காந்தியே எதிர்மறை விமர்சனங்களை சந்திச்சவர் தான்.. அதனால என்னைப்பற்றிய தாக்குதல்களை நான் பெரிதா எடுப்பதில்லை.. பதிவுலகில் ஜாக்கி சேகருக்கு அடுத்த படியா தாக்கப்பட்ட தனி மனிதன் நான் தான்.. அவரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் இதுவரை 34.. என்னை தாக்கி எழுதப்பட்டவைகள் 28.. என்னை அதிகம் புரிந்து கொள்ளாத, என்னுடன் பழகாத நண்பர்கள் தாக்கும்போது எனக்கு பாதிப்பு இருக்காது
ஆனா என் கூடவே பழகி, என்னைப்பற்றி நன்கு புரிந்த நண்பர்கள் தாக்கும்போது வருத்தம் இருக்கும்.. ஆனாலும் நண்பர்களை எதிர் தாக்குதல் செய்வதில்லை.. இது என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்
5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா? - ராஜி, வேலூர் ( மேலே உள்ள 5 கேள்விகளும்)
நல்ல கேள்வி. கில்மாப்படம் பார்க்காத ஆண்கள் யாருமே கிடையாது.. பெண்களும் சிலர் பார்க்கறாங்க.. ஆனாலும் அந்தப்பட விமர்சனங்கள் போட்டா எல்லாரும் கிண்டலாவும், கேலியாவும் தான் பார்க்கறாங்க. கில்மாப்பட விமர்சகர்னு நக்கல் பண்றாங்க.. நான் இதுவரை செய்த சினிமா விமர்சனங்கள் 147, அதுல கில்மாப்பட விமர்சனங்கள் 13 தான். ஆனா என்னமோ என் தொழிலே கில்மாப்பட விமர்சனம் தான் அப்டிங்கற மாதிரி பேசிக்கறாங்க.
நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் உணவு உலகம் ஆஃபீசர் வேண்டுகோளின் படி 2012 ஜனவரி 1 இல் இருந்து நான் கில்மாப்படம் விமர்சனம் பண்றது இல்லை, ஆனால் படம் பார்த்துடுவேன்.. சில பெண் வாசகிகளும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாங்க. உங்க தளத்தில் கமெண்ட் போட தயக்கமா, சங்கடமா இருக்கு. அதனால அந்த மாதிரி படங்களுக்கு விமர்சனம் பண்ண வேணாம் .. உங்க இமேஜை உடங்க அப்டின்னாங்க..
-----------------------------
மயிலன்
அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டா?.. ஹ்ம்ம்ம்...
சரி என்னோட கேள்விகள்...
1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?
சரி என்னோட கேள்விகள்...
1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?
தம்பி, இப்போ நான் தமிழ் மணத்துலயே இல்லை.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடவேணாம்னு அவங்க எச்சரிக்கைகள் கொடுத்தும் என்னால சில சமயங்கள்ல போட வேண்டிய சூழல் வந்தது.. அதனால அவங்க என் தளத்தை நீக்கிட்டாங்க.. தமிழ் மண ரேங்க்ல முதல் இடம் வந்தப்போ நான் லஞ்சம் ஏதும் தர்லை.. லஞ்சம் கொடுத்தா முதல் இடம் வரலாம்னா பலர் அதைத்தர தயாராவே இருந்தாங்க. ஆனா தமிழ் மணம் ஹிட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கறாங்க, துட்ஸை அல்ல
2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?
யா யா.. ஏராளம்.. சேட்டைக்காரன், கும்மாச்சி, குசும்பன் என நகைச்சுவை கலந்து எழுதுபவர்கள் பல பதிவுகள் அப்படி நினைக்க வெச்சிருக்கு. ராவடி ராம்சாமி எழுதுன பூமியை நோக்கி என்ற வித்தியாசமான தொடர் வந்தப்போ அப்படி நினைச்சேன். அதே போல் ட்விட்டர்ல வேதாளம் எழுதுன ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படிச்சும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஐ ஆம் கார்க்கியின் லேட்டஸ்ட் யூ டியூப் மிக்சிங்க் காமெடி ரிலீட்டட் சென்னை மெகா ட்வீட்டப் நையாண்டி பார்த்தப்பவும் நினைச்சேன்
3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...
பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் அப்டினு ஒரு பதிவு போட்டேன்.. சும்மா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்க. நான் சொன்ன அதே கருத்தை அண்னன் உண்மைத்தமிழன் அடுத்த நாள் ஆமோதிச்சு பதிவுல சொன்னப்போ எல்லாரும் கமுக்கமா இருந்தாங்க. இதில் இருந்து கிடைக்கும் நீதி பின்புலம் இல்லாம பலம் இல்லாம நாம எந்த காண்ட்ரவர்சியான கருத்தையும் சொல்லக்கூடாது.
4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?
எனக்கு பிளாக் இருக்கறதே வீட்டுக்குத்தெரியாது.. எங்க வீட்டுல நெட் கனெக்ஷனே இல்லை. ஆல் ஒர்க் இன் ஆஃபீஸ் ஒன்லி.. ஹி ஹி இந்த கேல்வில பொத்தாம்பொதுவா அண்ணி அடிக்கறது இல்லையா?ன்னு கேட்டிருக்கலாம். அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?இந்த அளவு வன்முறை தேவையா? :)
5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...
எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...
நாட்டுல எல்லாருக்கும் 1000 பிரச்சனை.. உங்க பிரச்சனை இதுதானா? அனுப்பித்தொலைக்கிறேன் ; -)
ராஜபேட்டை ராஜா
பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாம் ஜஸ்ட் பொழுது போக்குத்தான்.
நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?
ஜாலியா கலாய்ச்சுப்போட்ட சில பதிவுகள் பலர் மனதை காயப்படுத்தி இருக்கு. அவற்றை எல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கறேன். இனி வரும் காலங்களில் கவனமா இருந்துக்க வேண்டியதுதான்
கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?
ட்விட்டர்ல ஒரு நல்ல ட்வீட் யாராவது போட்டா அதை மற்றவங்க RETWEET பண்றாங்க . சுருக்கமா அதை RT னு சொல்வோம். அந்த மாதிரி எனக்குப்பிடிச்ச சில படைப்புகளை என் பிளாக்ல RT பண்றேன்.. ஆனா பலர் நான் ஆனந்த விகடன்ல இருந்து மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்றதா தப்பா நினைச்சு எதிர் பதிவு போடறாங்க. அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது நான் சண்டே இந்தியன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ர்ட்டர், நக்கீரன்,கல்கி என எல்லா இதழ்களில் இருந்தும் பதிவுகள் போடறேன்.
துக்ளக் இதழ் மட்டும் தான் இன்னும் என் கைக்கு சிக்கலை.. ஆன் லைன் சந்தாதாரர்கள் யாராவது உதவி செஞ்சா குருமூர்த்தியின் பொருளாதாரக்கட்டுரைகள், துக்ளக் சத்யாவின் காமெடி கட்டுரைகள் போட ஆசை.
கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?
சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா பலர் “ ஏண்டா இவன் பதிவுலகிற்கு வந்தான் என எரிச்சலோட மெயில் சேட்டிங்க்ல நண்பர்களுடன் அளவளாவுவதை கவனிச்சிருக்கேன்
கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ?
என் பொண்ணு அபிராமி ஸ்ரீதான்
டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected] இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9) அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3 - இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka .blogspot.com/2 012/01/1_31.htm l
டிஸ்கி 6 - இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/
டிஸ்கி 7 - இதன் 5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/
டிஸ்கி 8. இதன் 6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/
டிஸ்கி 9. இதன் 7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக - http://www.adrasaka.com/2012/
13 comments:
Good post after a verylong time:)
copy and Paste பதிவுகள் சிலவேளை உங்கள் மொக்கை பதிவுகளை விட interesting ஆக இருக்கும் so keep writting
கேள்விகளுக்கு உங்கள் பாணியில் நச் பதிலகள்...
நல்லா இருக்கு பதிவு.
சிபி: காபி பேஸ்ட் செய்வது தவறே இல்லை என்கிற மாதிரி எழுதி உள்ளீர்கள்.
அது தவறு இல்லை எனில் உங்கள் பதிவுகளை பிறர் காபி பேஸ்ட் செய்ய நீங்கள் அனுமதிக்கலாமே?
உங்கள் விமர்சனங்களை பிறர் காபி செய்து போட்ட போது பொங்கி எழுந்தீர்கள். உங்கள் தளத்தின் ஒரு வரி கூட பிறர் காபி செய்ய முடியாத படி டெக்னிகல் வேலை செய்து வைத்தீர்கள்.
ஆக உங்கள் தளத்தை மற்றவர் காபி அடிக்க கூடாது ஆனால் நீங்கள் மற்ற தளங்களை காப்பி அடிக்கலாம் அப்படி தானே? நல்லா இருக்கு உங்கள் நியாயம் ! (ப்ளாகை தான் காபி அடிக்க கூடாது; புத்தகத்தை காபி அடிப்பது வேறு என்று பேசாதீர்கள். ஒருவர் உழைப்பை காப்பி அடிப்பது இரண்டுக்கும் பொது தான் !)
நக்கீரன் போன்றவற்றில் இருந்து எப்போதோ ஒரு முறை தான் எடுக்கிறீர்கள். விகடனில் இருந்து ஒரு வாரத்துக்கு எத்தனை எடுக்கிறீர்கள் என கடந்த இரு வாரங்களை நீங்களே பாருங்கள்
நன்றி விகடன் என தற்போது தான் போட ஆரம்பித்துள்ளீர்கள் ... முன்பு எப்போதும் போட்டதில்லை. விகடன் இப்போது விளக்கெண்ணையாக தூங்கி வழியலாம் என்றேனும் ஒரு நாள் உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் இணையத்தில் இதனை எடுத்து மறு பதிவு செய்ய கூடாது என போட்டுள்ளார்கள் அதை மீறி தான் நீங்கள் பதிவிடுகிறீர்கள்
ஒரு பதிவு எழுத முதலில் எந்த தலைப்பு பற்றி என ஒரு யோசனை வர வேண்டும். இது வராமலே பதிவு எழுதாத பதிவர்கள் எத்தனையோ பேர். யோசனை வந்த பின் அதனை மனதில் டெவலப் செய்ய வேண்டும். பின் எழுத வேண்டும். இப்படி ஒரு பதிவு யோசிக்க, எழுத குறைந்தது இரண்டு மணி நேரத்திலிருந்து அரை நாள் கூட ஆகலாம். ஆனால் நீங்கள் விகடன் காபி பேஸ்ட் பதிவுகள் ஒரு நிமிடத்தில் காபி செய்து அடுத்த நிமிடம் உங்கள் பதிவில் போடுகிறீர்கள் இதில் என்ன உழைப்பு இருக்கிறது ?
ஒரு பக்கம் விகடன் உழைப்பை திருட்டு தனமாய் பயன் படுத்துவது இருக்கட்டும் மறுபுறம் உண்மையாய் பதிவு எழுதுவோரையும் இத்தகைய பதிவால் தாண்டுகிறீர்கள். நீங்கள் காப்பி பேஸ்ட் செய்யும் பதிவுகள் பிரபலங்கள் பற்றியது என்றால் ஓசியில் படிக்க நிறைய பேர் வர தான் செய்வார்கள். அவர்களில் சிலர் இதை விடாதீர்கள் தொடருங்கள் என்பார்கள்
ஆனால் உங்களுக்கு இதில் என்ன சந்தோசம் கிடைக்கிறது என தெரிய வில்லை. இதில் கிடைக்கும் ஹிட்ஸ்சில் என்ன சாதனை இருந்து விட முடியும்?
நீங்கள் இந்த கமண்ட்டை வெளியிடாமலும் போகலாம். நீங்கள் வெளியிட்டாலும் வெளியிடா விடினும் பின்னர் இதனை எனது தளத்தில் நான் பகிரலாம்
சிகரெட், சாராயம் இரண்டையும் தொடாமல் இருப்பதனால் மட்டும் நல்லவன் ஆகி விட முடியாது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தே நம் மதிப்பு அமையும். உங்கள் காபி பேஸ்ட் பதிவுகள் மூலம் உங்கள் மதிப்பை நீங்கள் பெரிதும் இழக்கிறீர்கள் !
இந்த இடத்தில் உங்கள் நண்பர்களுடன் விவாதத்தை வைத்து கொள்ள நான் விரும்ப வில்லை. விவாதம் இங்கு வந்தால் அதை பின் எனது தளத்தில் தனி பதிவாக வெளியிட்டு தொடர்வேன்
நேரடியே உங்களிடமே உங்கள் தவறை சொல்கிறேன் : " வாளால் அறுத்து சுடினும்" என்று ஒரு தமிழ் பாடல் உண்டு. உங்களை நான் சொல்வது கஷ்டப்படுத்தினாலும் இதுவும் உங்கள் நன்மைக்கு சொல்லப்பட்டது என்பதை என்றேனும் ஒரு நாள் நீங்கள் உணர கூடும் !
மோகன் குமார் = மிரட்டும் குமார்
CP,
ஒரு நாளைக்கு 1 அல்லது 2 போஸ்ட் மட்டும் போட்டா எல்லா போஸ்டையு படிக்க ஏதுவாக இருக்கும்;
இதுவரை 43 போஸ்ட் (in Jun'12). அவை அத்தனையு படிச்சவங்க எத்தனை பேர் ?
நண்பர்கள் படிக்கத்தானே போஸ்ட் போடறீங்க.
யாரு படிக்காம போஸ்ட் போட்டு என்ன USE ?
உங்கள் நகைச்சுவை உணர்வு எங்களுக்குத் தெரியாம, படிக்க முடியாம போகுதுன்னு வருத்தம்.
Sri Srini said...
மோகன் குமார் = மிரட்டும் குமார்
ஸ்ரீனி: மிரட்ட வில்லை. நானே ஒரு நிறுவனத்தில் தலைமை சட்ட அதிகாரியாக உள்ளேன். இது
சட்டப்படி தவறு என நன்றாக தெரியும். எனவே சொல்கிறேன்.
எங்கள் நிறுவன தகவல்கள் எங்கள் அனுமதியின்றி பயன்படுத்திய பலர் மீது வக்கீல் நோடிசு அனுப்பியும் வழக்கு பதிவு செய்தும் அவர்கள் அப்படி செய்வதை நிறுத்தி உள்ளோம். நஷ்ட ஈடும் வாங்கி உள்ளோம். விகடன் சிபி மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தால் சிபி தனக்கு தற்காப்பாக சொல்ல எதுவும் இருக்காது. அல்லது அவர் சொல்வது எதுவும் நீதிமன்றம் ஏற்காது.
இது போன்ற கேஸ்கள் ஏராளமாய் பார்த்துள்ளேன். ஒரு வக்கீல் நோட்டிசு அனுப்பியதும் இந்த வேலைகளை உடனடியே மூட்டை கட்டி விடுவார்கள். தேவை பட்டால் அவர்கள் முழுதும் நிறுத்தி விட்டால் கூட, பிறர் இப்படி செய்ய கூடாது என வழக்கும் பின் போடுவோம் கடந்த பத்து வருடத்தில் இது தான் நான் கண்ட நேரடி அனுபவம் !
இந்த விபரம் தெரிந்தும் அதை சிபிக்கு சொல்ல வேண்டியது என் கடமை தானே?
@ மோகன்
நீண்ட விளக்கத்துக்கு நன்றி! தங்கள் வாதத்தை ஏற்கிறேன், செயல்படுத்துவதில் சில சிக்கல்கள்...
@ விஸ்வநாத்
ஜோக்ஸ் அல்லது ட்வீட்ஸ் போஸ்ட் காலை 6 மணீக்கும், சினிமா விமர்சன போஸ்ட் மாலையிலும் என ஒரு கணக்கு வெச்சிருக்கேன்.. சென்சேஷனல் நியூஸ் வரும்போது டக்குன்னு அதை போட வேண்டியதா போயிடுது.. உங்கள் கருத்தை அவசியம் பரிசீலிக்கிறேன்
/ ராஜபேட்டை ராஜா
//
அண்ணே மன்னிக்கணும் அது "ராஜபாட்டை "
மோகன் குமார் சார் ... முழு ஆனந்தவிகடனும் இலவசமா டவுன்லோட் தர தளங்களை நீங்கள் இன்னும் பார்க்கலாலையா ?
//சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை.
//
தல நிச்சயமா அப்படி இல்லை .. ஒரு flow ல வந்துட்டு ...
Post a Comment