வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு 3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..
நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி, என்ன ரீஸன்?
ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க
அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..
1.இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )
ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக் KNOT
ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..
கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.
மனம் கவர்ந்த வசனங்கள்
1. கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?
2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..
அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?
புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?
3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?
4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்
சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு
2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு
படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..
படத்துல வசனமே இல்லை.. 5 பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..
இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை..
பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்
3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா பொறுப்பு நாங்க இல்லை
இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்..
ஒரு அப்பா தன் பையனை மன நல மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட 3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..
அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு..
ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல ..
மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க் பண்ணி காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு..
2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி போடுவது போர்.. ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்..
3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..
சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..
1 comments:
அய்யா ச்சீ.பீ ,
படங்களை விமர்சனம் பண்ணும் போது அதுவும் கிளைமாக்ஸ் இல் டுவிஸ்ட் இருக்கும் படங்களில் விமர்சனத்தில் சொல்லகூடாது.அப்படி சொல்லிவிட்டால் படம் பார்க்கும் ஆவல் போய் விடும்.நான் உங்கள் தடையற தாக்க விமர்சனம் படித்துவிட்டு படம் பார்த்தேன். வில்லனை யார் கொன்றிருபார்கள் என்று நீர் எழுதிவிட்டதால் படம் நன்றாக இருந்தும் எனக்கு திருப்தியில்லை.எப்படியும் நான் சொன்னாலும் கேட்க்கபோவது இல்லை.உங்கள் புத்தியை தான் காட்டுவீர்கள்.
Post a Comment