Thursday, May 17, 2012

ஆனந்த விகடன் VS ஹாய் மதன் - பிரச்சனை - குற்றம் நடந்தது என்ன?

மதன் கேள்வி! விகடன் பதில்!

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர். 


உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? 


ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான்.


 பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!


மேற்கண்ட கேள்வி - பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்... 







...பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.


2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!


ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.


முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.


...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


- மதன்

தன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.


'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.


அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.


இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.


எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://nannool.in:8080/nannoolimages/product_images/2564.jpg


- ஆசிரியர்


எனது கேள்விகள் டூ ஹாய் மதன்  



1. சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் இணை  ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும்போதும் இதே போல் தான் ஒரு சால்ஜாப்பு சொன்னீங்க.. அதாவது உங்க கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுதுன்னு.. அதனால இனி ஹாய் மதன் கேள்வி பதில் மட்டும் வரும், ஆனா மற்ற படைப்புகள் வராதுன்னு சொன்னீங்க.. யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது.. 




2. வெளியேறிய நீங்கள் சக  போட்டி பத்திரிக்கையான குமுதம் இதழில் போய் சேர்ந்தீங்க.. 2009 -ன் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் உடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில்  சந்தித்த நினைவு இருக்கிறதா? அதில் அந்த கூட்டத்தில் ஜோக் எழுத்தாளர்களுக்கு சில அட்வைஸ் பண்ணி இனி புதிய குமுதத்தை பார்க்கப்போகிறீர்கள் என சொல்லி எப்படி எழுத வேண்டும் என எங்களுக்கு சொல்லிக்கொடுத்து சில டாபிக் கொடுத்து அதை பேஸ் பண்ணி ஜோக்ஸ் அனுப்ப சொன்னிங்க.. 10 பேருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் கொடுத்து அந்த அட்ரஸ்க்கு அனுப்ப சொன்னீங்க.. ஆனா 4 வாரங்கள் மட்டுமே அது நடை முறையில் இருந்தது.. பிறகு அது மாறி விட்டது.. உங்கள் எண்ணம் பலிக்கவில்லை.. உங்கள் கைகளை குமுதம் நிர்வாகம் கட்டிப்போட்டது..




3. பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் அவர்களுக்கென்று சில கொள்கைகள்  வைத்திருக்கும்..  அனுசரித்துத்தான் போக வேண்டும்..  ஏன்னா நீங்க உலகத்துக்கு ஃபேமஸ் பர்சனாக இருக்க ஆனந்த விகடன் முக்கிய காரணம். 


4.  ஆனந்த விகடனில் இருந்து வெளியேறி குமுதம் இதழில் பணி ஆற்றி பின் ஏதோ சில காரணங்களால் அங்கே இருந்தும் வெளியேறிய நீங்கள் விண் நாயகன் என்ற   பத்திரிக்கையில் கவுரவ ஆசிரியராக பணி ஆற்றினீர்கள்.. புக் குவாலிட்டிதான்.. ஆனால் சேல்ஸ் 70,000.. தான். பின் கஷ்டப்பட்டு அதை ஒரு லட்சம் ஆக்கினீர்கள்.. ஆனால் தொடர முடியவில்லை.. அந்த புக் நிறுத்தப்பட்டது.. 




5. கமிங்க் டூ த பாயிண்ட் .. ஹாய் மதன் கேள்வி பதிலில் காலில் விழும் கலாச்சாரம் என்ற கேள்வி வரும்போதே உங்களுக்குத்தெரியாதா? இந்த மாதிரி தான் ஃபோட்டோ அட்டாச் பண்ணுவாங்கன்னு?  பொதுவாக சாதாரண வாசகனிடம் இந்த கான்செப்ட்க்கு எந்த ஃபோட்டோ வைக்கலாம் என்றால் கூட அவன் ஜெவை அடி பணியும் முட்டாள் சுயநல அமைச்சர்  ஃபோட்டோவைத்தான் ரெகமண்ட் செய்வான்.. அப்படி இருக்க  பல வருடங்கள் ஆனந்த விகடனில் பணணி ஆற்றிய  நீங்கள் யூகிக்க முடியவில்லையா? 




6.  ஆனந்த விக்டன் இதழை பார்த்தால் ஜெ தப்பா நினைச்சுக்குவார் என்பது சிறு பிள்ளைத்தனம்.. அவர் என்ன அழகிரியா? ஒண்ணும் தெரியாமல் இருக்க? நீங்கள் ஜெவிடம் “ இந்த மாதிரி மேட்டர்.. எனக்கும் அந்த ஃபோட்டோவுக்கும் சம்பந்தம் இல்லைன்னா   மேட்டர் ஓவர்.. அல்லது விகடன் ஆசிரியரிடம் ஒரு எழுத்துப்பூர்வமான  கடிதம் விளக்கம் வாங்கி ஜெவிடம் சேர்த்தால் பிரச்சனை ஓவர்.. 


7. ஆனந்த விகடன் 6 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது... உங்களை அத்தனை பேரிடம் சேர்ப்பித்து உங்களுக்கு சம்பளமும் தருது.. என்னமோ நீங்க தான் ஓனர் மாதிரி விக்டனை கேள்வி கேட்பது சிறு பிள்ளைத்தனம்.. 


8. இப்படி செய்தால் ஜெ விடம் அனுதாபம் கிடைக்கும், ஜெயா டி வியில் ஏதாவது எக்ஸ்ட்ரா ஸ்லாட் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் இருந்தால் அய்யோ பாவம்.. நீங்க ஏமாறப்போறீங்க.. 



http://www.koodal.com/cinema/gallery/events/2011/656/simran-for-teenage-bonanza-jaya-tv-pressmeet-stills_3_103823123.jpg

 டிஸ்கி - இது குறித்து வாசகர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

39 comments:

Pulavar Tharumi said...

மதன் கேள்வி கேட்டது தப்பில்லை. ஆனால் கேட்டதற்கான காரணம் தான் சரியில்லை. ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தினால் அப்படி செய்திருக்ககூடும். 'வந்தார்கள் வென்றார்கள்' எழுதிய சிறந்த எழுத்தாளர் ஒருவர் மாநில முதலமைச்சருக்கு பயந்து நடுங்குவது சிரிப்பாக இருக்கிறது. மதனின் திறமைக்கு ஜெயா டிவி வேலை ஒரு பொருட்டே அல்ல.

Unknown said...

விடுங்க சார் அவருக்காவது திடு திப்புன்னு ஒரு எதிர்ப்பு காட்டணும்னு தோணிச்சி காட்டி புட்டாரு...அவராவது துட்டு வர்ற வழிக்காக தன்னை மாத்திக்கிட்டாரு... உங்களைப்போல அடுத்தவங்களுக்காக(!) மட்டுமே படைப்புகளை படைப்பவர்கள் ரொம்ப குறைச்சல் சார்...நமக்கெல்லாம்...இதெல்லாம் வராது!

Unknown said...

ஆனந்த விகடன் மிகச் சரியாகவே இந்த விஷயத்தை கையாண்டிருக்கிறது ..இதன் மூலம் நடுநிலை கொஞ்சமாவது காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றே கூறலாம் ..மதனின் இந்த மாற்றம்
மிகவும் ஆச்சர்யமானது ..

பல வாசகர்களின் மனதில் ,அவரைப் பற்றிய எண்ணம் தற்பொழுது மாறுபட தொடங்கியுள்ளது ..

ஆட்சி விசுவாசத்திற்கு ,மதனும் அடிபணிந்துள்ளார் எனபது வருத்தத்திற்குரிய செய்தி !

sasibanuu said...

Wonderful questions to Madhan..

Pls forward this post to Madhan.

Very good and Well done.

Unknown said...

பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
மதன் திறமையான ஒரு கார்டூனிஸ்ட், வரலாற்று அறிஞர், கேள்வி பதிலுக்கான கடின உழைப்பு...எனக்கு நினைவு தெரிந்து விகடன் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் ரசித்த ஒருவர் அவர் நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

Unknown said...

இந்த படத்தை போட்டதுக்கு வேனா ஈரோட்டுகாரங்க நாம எங்கியாவது முட்டிக்கலாம்......!

Unknown said...

வேலைக்காரன் விலகும் போது முதலாளியை காயப்படுத்தி விட்டுத்தான் போவான்!# இது பழமொழியல்ல!..நடைமுறை!

உலக சினிமா ரசிகன் said...

இனி மதன் ரபி பெர்னார்டு போல ஜொலிப்பார்.

MANO நாஞ்சில் மனோ said...

போடுங்க எசமான் போடுங்க...!!

நிரூபன் said...

வணக்கம் சார்,
நல்லா இருக்கீங்களா?

பிரபலங்கள் என்றால் ப்ராப்ளங்கள் சகஜம் என்பதற்கு மதன் சாரும் எடுத்துக்காட்டு.

அனைத்தையும் கடந்து மீண்டும் கலக்குவார்..

காத்திருப்போம்.

Unknown said...

பான்பராக் போடுறத கண்டின்யு பண்ணுவாரோ மதன் பாப்ஜி ?!

Vijay said...

தனி ஆள் பெரியவனா இல்லை நிர்வாகம் பெரியதா என்ற ஊடலே மதன் - விகடன் சர்ச்சை.
தந்தை விகடன் நிர்வாகத்தை கவனித்த வரை மதனின் போக்குகளுக்கு நெளிவு சுளிவாக இருந்து விட்டார்
முழு இதழ் வெளிவர உதவி செய்த மதனை ஆண்டுகளுக்கு முன்பே கார்டூன் மற்றும் கேள்வி பதிலோடு நிறுத்தி கொள்ள ஒப்பந்தம் போடப் பட்டது
விகடனில் மதன் கேள்வி பதில் நிறுத்தியதில் என்னளவு ஒரு வாசகனாய் வருத்தமே

மன்மதகுஞ்சு said...

மதன் சார் தான் ஒரு விமர்சகராக வெளிக்காட்ட முடியாமல் அதிகாரத்துக்கு அஞ்சுபவராகவே அதிகம் காட்டி கொள்ள விரும்புவது பத்திரிகை சுகந்திரம் என்ற வார்த்தையையே கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

வால்பையன் said...

loosu madhan

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!இதுல பயப்படுற அளவுக்கு ஒண்ணுமே இல்லைன்னு நான் நினைக்கிறேன்.இத வுட எத்தனையோ போட்டோஸ்,கார்ட்டூன்களெல்லாம் வேற பத்திரிக்கைகளில வந்திருக்கே?மண்ண வாரி அவர் தலையிலேயே போட்டுக்கிட்டாரு!

கூடல் பாலா said...

இந்த ஆளும் அம்மாவுக்கு பயந்துட்டாரா.....

IKrishs said...

அந்த 2வது பாயிண்ட் டுக்கும் இந்த கட்டுரைக்கு ம் என்னங்க சம்பந்தம் ?
நீங்கள் சொல்லி இருப்பது போல் , குமுதத்தில் சேரவில்லை ,பிரீலான்செர் ஆக தானே இருந்தார்..
மற்ற உங்கள் கேள்விகள் வழிமொழிகிறேன்..

MaduraiGovindaraj said...

அம்மாவுக்கு இவ்வளவு பயம் இருந்தால் இவர் எப்படி இதனை நாளும் அரசியல் கார்டூன் நடுநிலையுடன் வரைந்திருப்பார்?
மதனை நீக்கியது நல்லமுடிவு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்கள் பதிவு அருமை. இன்னும் பலரையும் சென்றடைய www.xxx4u.com-ல் இணைக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடப்பது அம்மா ஆட்சி!

சி.பி.செந்தில்குமார் said...

@IKrishs


அதாவது விகடனை விட்டு விலகி அவர்களுக்கு டஃப் ஃபைட் குடுக்க குமுதத்தில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கலாம் என நினைத்தார்.. ஆனால் நிர்வாகம் அவர் கைக்கு கட்டுக்களை போட்டது.. நான் சொல்ல வருவது யார் எந்த பத்திரிக்கையில் பணி புரிந்தாலும் அந்த பத்திரிக்கையின் சட்ட திட்டங்களூக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே..

Unknown said...

இந்த கேள்விகளுக்கு தங்களுக்கு நியாயமான பதில்களை பெறமுடியாது

ஸ்ரீரங்கம் A.S.Murali said...

ஆனந்த விகடனும் மதன் அவர்களின் கேள்விபதில்,கார்டூன்,கட்டுரைகள் ,தொடர்கள் போன்றவற்றின் மூலம் பலன் பெற்றதையும் மறக்கக் கூடாது சிபி அவர்களே! ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை விமர்சிக்கும் படியான நிகழ்வு ஏற்ப பட்டால் தர்ம சங்கடம் ஏற்படுவது இயல்பு தானே? அதைதானே மதன் சுட்டிக் காட்டி உள்ளார்?விகடனும் அவரை நிறுத்தியது கொஞ்சம் ஓவர் தான்.மற்றபடி நீங்கள் முட்டாள் அமைச்சர் என எழுதி உள்ளது அநாகரிகமாகப் படுகிறது. எதற்கும் ஜாக்கிரதை யாகவே இருங்கள்!

Manimaran said...

ஆனந்த விகடன்ல மதன் பதில்கள் ஆரம்பித்த புதிதில் அவ்வளவாக வரவேற்பு இல்லை.நிறைய பேருக்கு மதன் பெரிய அளவில் பரிச்சயமாகாத காரணம் கூட இருக்கலாம்.இரண்டு மூன்று மாதம் கழித்து ஒரு கூத்து நடந்தது.மதன் பதில்கள் இனி வெளிவராது என்று விகடனிலிருந்து அறிவிப்பு வந்தது.அதை வாசகர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் அடுத்த இதழிலே அதற்கான தன்னிலை விளக்கம் அளித்தார் மதன்.அது உலக காமெடியின் உச்சம்.அதாவது இவரது பதில்களை படித்து லயித்து போய் ஒரு பெண் இவரை திருமணம் செய்யும் படி தொந்தரவு செய்தாரம்.மதனின் ஆபிசுக்கு தினமும் வந்து தொல்லைக் கொடுப்பாராம்.அதன் காரணமாகத்தான் இவர் பதில் எழுதுவதை நிறுத்தி விட்டாராம்.அதாவது இவர் உலக அறிவைப் புகுத்தத்தான் கேள்வி பதில் எழுதினாராம்.அது ஒரு பெண்ணைப் பாதிக்கும் அளவுக்கு சென்றதால் தான் கேள்வி பதில் எழுதுவதை நிறுத்துவதாகச் சொல்லியிருந்தார்.அச்சு ஊடகங்களிலே முதல் இடத்தில் இருந்த ஒரு வார பத்திரிகையில் இவரின் கேள்விபதிலை பிரபலப் படுத்துவதற்க்காக இப்படியொரு கேவலமான சம்பவம் அப்போது நடந்தது.ஆனால் அடுத்த வாரமே திரும்பவும் இவரின் கேள்வி பதில் வந்ததுதான் அதைவிட பெரிய கூத்து..

பொதுவாக மதனின் கேள்வி பதிலைப் பொறுத்தவரையில் எல்லாமே 'கேள்வியும் நானே பதிலும் நானே ரகம்'.உதாரணமாக ஒரு கேள்வி...தவளைகளில் விஷம் உள்ளவை இருக்கிறதா? இதற்கு இவர்...பிரேசில் நாட்டில் ஒரு பார்டியில் தவளை முட்டை சூப் வைக்கப்பட்டது......... என்று தொடங்கி ஒரு பக்க அளவுக்கு ஒரு கதை சொல்லியிருத்தார்.கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...நம்ம ஊரு ஆளு.. ஒரு தபால் கார்டு வாங்கி.. ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு இப்படியொரு கேள்வியைக் கேட்டு அனுப்பியிருப்பான்.இவர் எங்கேயோ இந்த செய்தியைப் படித்து விட்டு அதை கேள்வியாக்கி பதிலையும் இவரே சொல்லியிருக்கிறார்.இவருடையை பெரும்பான்மையான கேள்வி பதில் இப்படித்தான் இருக்கும்.ஆனால் அதில் சுவாரஸ்யம் இருப்பது மறுப்பதிற்கில்லை.பின்ன இது கூட இல்லனா என்ன எழுத்தாளர்?

சரி இந்தக்கூத்தையும் ரசிப்போம்.....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

mathanukku neengal kotuththirukkum pathil neththiyati

R. Jagannathan said...

என் கற்பனையில், இப்போது மதன் போயெஸ் தோட்டத்து காவலாளியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார் - தன்னை எப்படியாவது அம்மாவைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி! அடுத்த காட்சி: அம்மா கார் வருகிறது, மதன் தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார்! அடுத்து ஜெ டி.வி. புது ஒப்பந்தம் போட்டு இன்னும் கொஞ்ஜம் போட்டுக் கொடுக்கிறது! ஐயா சலாம் போட்டு வாங்கிக்கொள்கிறார்!

ஏன், ஏன் மதன் இப்படி? ஜெ டி.வி.யில் ஒரு ப்ரொக்ராம் செய்கிறீர்கள், சரி; அதற்கும் இந்த விகடன் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்? அம்மா கோபித்துக் கொள்வார், அவரை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?

குறிப்பிட்ட கேள்விக்கு உங்கள் பதிலைப் படியுங்கள் - நீங்களே ”இன்று தலைவர்கள் காலடியில் (பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்) என்கிற ஒரு அர்த்தம் தான் உண்டு” என்று எழுதியிருக்கிறீர்கள். நாம் இருக்கும் தமிழ் நாட்டில் வேறு ஏதாவது இந்த மாதிரி தலைவர் / தொண்டர் உங்களுக்குத் தெரிகிறாரா?

திடீரென்று உங்களை தரம் தாழ்த்திக் கொண்டுவிட்டிர்கள். பார்க்கலாம், அம்மா ஏதாவது பதவி தருகிறாரா என்று!

-ஜெ.

பூங்குழலி said...

மதனின் காரணம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது ,விகடனின் வாதமும் ..ஒரு தனி பிரச்சனையை ஏதோ காரணங்களுக்காக பொதுவில் அலசுகிறார்கள் ..எதற்காக இந்த கேள்வியையே முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும் ?சர்ச்சை வரும் என தெரியும் தானே!

”தளிர் சுரேஷ்” said...

யூ டூ மதன்??! என்பதை தவிர வேறோன்றும் சொல்வதற்கில்லை! மதனின் கேள்வி பதில் மற்றும் கார்டூன்களின் ரசிகனான எனக்கு அவரது செயல் அதிர்ச்சி அளிக்கிறது! விகடனை விட்டு ஜெயா டிவியில் சேர்ந்த போதே அவரது சுதந்திரம் பறிபோய்விட்டது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

க.தியாகராசன் ஒரு கேள்வி கேட்டாலும் கேட்டார்; இவ்வளவு பிரச்சினையாயிடுச்சி. அவர் கேள்வி
கேட்குறதுக்கு முன்னயே ஜெ...வை மனதில் வைத்துதான் கேட்டிருப்பார் (என்று நினைக்கிறேன்).
அந்தக் கேள்வியப் படிக்கும்போதே மதனுக்கும், ஜெ...வை ஞாபகம் வராமல் இருந்திருக்காது.
அப்படியும் அந்த(!)ப் படத்தைப் போட்டதிலும் தப்பில்லை. ஏனென்றால், அதே மாதிரியான
படங்கள் எல்லாப் பத்திரிகைகளிலும் ஏகப்பட்ட தடவைகள் பிரசுமாகியுள்ளனவே!
மேலும், அந்தப் படம் தப்பு என்றே ஜெ... எடுத்துக் கொண்டாலும் அவர் (ஜெ...)
இவ்வாறு நடக்காமல், அதாவது காலில் விழாமல் தடுத்துக் கொள்ள வேண்டியது
அவருடைய பொறுப்புதான். அதேசமயம் இதற்கு மாறாக அதை ஊக்குவிப்பதே ஜெ...தான்.

"ஜெயா ட்டீவி.யி.யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால் இதன் பின்னனியை
விவரமாக விளக்க வேண்டி வராதா?" என்று மதன் கேட்கிறார். மதன் அவர்கள்
விகடன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இல்லை. அவர் ஃப்ரீலான்சர் தான்.
கேள்விக்கு பதில் மட்டும் எழுதும் எழுத்தாளர்தான். எழுதிக் கொடுப்பதோடு
அவர் பணி முடிந்தது. படங்கள் சேர்ப்பது, லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டும்
அதற்கு ஒப்புதல் கொடுப்பதோ, யோசனை கொடுப்பதோ ஆசிரியர் குழுவும்தான்.
இது ஜெயா ட்டீ.வி.யின் தலைமைக்குத் தெரியாதா? அல்லது அந்தத் தலைமை(!)
கூப்பிட்டுக் கேட்டால் மதனுக்குச் சொல்லத் தெரியாதா?

"தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்மென்ட் கேட்டு" என்று சொல்லும் மதன் அவர்களே...
ஏன் அப்பாயின்மென்ட் கேளுங்களேன்; கேட்டு உங்கள் வாதத்தை சொல்லுங்களேன். விகடனுக்காக
எத்தனையோ தடவைகள் சந்தித்துள்ளீர்களே, இப்போதும் சந்தியுங்கள். ஆனால் 1 (ஒன்று).
இந்த சேதி ஜெ.. காதுக்குப் போனால்.... அப்பாயின்மென்ட்டோ, கூப்பிடவோ மாட்டாங்க.
மறுநாள் டாக்டர் எம்ஜியாரில் கட்டம் கட்டி நியூஸ்லாம் வராது. உடனடியாக
ஜெயா ட்டீ.வி.( சினிமா விமர்சனம் நிகழ்ச்சி)யிலிருந்து டிஸ்மிஸ்தான். இது உங்களுக்குத்
தெரியாதா? முன்னே விகடன்லருந்தும் அப்புறம் குமுதத்திலிருந்தும் வெளியே
வந்தீங்களே, அது மாதிரி வந்துடுங்க. இந்தச் சேனல் வேலை இல்லாட்டி என்ன?
வேற சேனல் போங்க!

சார்புத் தன்மையுள்ள மதனிடமிருந்து கார்ட்டூன் பொறுப்பையும் பதில்கள் பொறுப்பையும்
திரும்பப் பெற்றுக் கொண்டது விகடனின் சரியான, நியாயமான செயல்தான் என்பதில்
சந்தேகம் ஏதுமில்லை.

கடைசியாக, தியாகராசன் இப்ப வி.ஐ.பி. ஆயிட்டாரு!!! (முன்னமயே வி.ஐ.பி.யோ?)

scenecreator said...

சி.பீ. அவர்களே, ஜெயலலிதா எவ்வளவு கோப குணம்,அகம்பாவம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது.நிச்சயம் அவர் ஒரு வேலை அந்த படத்தையும் கேள்வி பதிலையும் பார்த்தால்நிச்சயம் கோபப்படுவார்.நீங்கள் சொல்லுவது போல் மதன் ஒன்றும் அவ்வளவு ஈசியாக அவரை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க முடியாது.நீங்கள் தெரிந்துதான் எழுதுகிறீர்களா என்று தெரிய வில்லை.விகடனில் மதனுக்கு என்று இடம் உள்ளது.இதனை வருடம் அங்கே பணியாற்றியவருக்கு பிரச்சனை வரும் என்னும் போது கொஞ்சம் அவர்களும் விட்டு கொடுத்திருக்கலாம்.நீங்கள் விகடனில் இருந்து பகுதிகளை அவர்களுக்கே தெரியாமல் பதிவில் போடுவது ஒரு வேலை தெரிந்து நீங்கள் மாட்டி கொண்டால் ,தப்பிக்க இப்படை அவர்களுக்கு ஜால்ரா அடிகிரீரோ.நீங்கள் பதிவில் விகடன் பகுதிகளை போடுவது அவர்களுக்கு தெரியுமா தெரியாத என்பதை பகிரங்கமாக கொஞ்சம் சொல்லுங்களேன்.

FRANCO MARIAN said...

உண்மையில் இது நீதிக்கு புறம்பானது ! ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பின் கேள்வியில் இடம் பெட்ச ஒரு புகைபடதிருக்கு விளக்கம் கேட்டது அத்தனைக்கும் தவறான விசஹயமாக தெரியவில்லை.. என்னை போல் முட்டாள்கள் கூட புத்தகங்களின் மேல் ஈடுபாடு கொண்டதற்கு மதன் போன்ற சுவாரஸ்யமான எழுத்தாளர்கள் தான் காரணம். தொழிலாளியின் நலம் கருதாது, தன்னுடைய லாபத்தினை மட்டும் நோக்குவது எல்லா முதலாளிகளின் வழக்கமே ! என்னுடைய கேள்வி ஒன்று தான் ! நீங்கள் எப்படி நியாயம் இல்லது நடந்து கொண்டு எப்படி மக்களிடம் நியாயமான செய்திகளை எடுத்து செல்வீர்கள் ? Shame on you Vikadan

Pandian R said...

ஆ.விகடன் பத்திரிக்கை மன்னிக்கவும் குப்பையை சிலாகித்துப் படிப்பீர்கள் போல.

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றி!! இதுல ஏதாவது உள்குத்து இருக்கா??

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

Velu said...

கேள்வி கேட்டவர் ஜெயா காலில் விழுவதை பற்றி கேட்டிருந்தால் அந்தப்படத்தைப் போடலாம்
ஆனால் பொதுவாக கேட்டிருப்பதால் எப்போதும் நடுநிலைமையை (?) கடைப்பிடிக்கும் ஆ.வி
ஜெயாப்படத்தின் கூட கருணாநிதியின் காலில் யாராவது விழுவதைப்போல படம் போட்டிருந்தால்
அவர்களின் நடுநிலைமை தெரிந்திருக்கும்
ஆனால் ஜெயாப்படத்தை மட்டும் போட்டதால் அவர்கள் நடுநிலைமையைப் பற்றி பேசத் தகுதி அற்றவர்களாகி விடுகிறார்கள்

Mukunthan said...

Naadagam aarambam...
Next, circulation egirum...

doshanivarthi said...
This comment has been removed by the author.
chinnapiyan said...

@Manimaran எனக்கு எப்பவோ தெரியும் "கேள்வியும் நானே பதிலும் நானே". சில அபூர்வமான எங்கேயோ அரிதா நடக்கும் விசயங்களுக்கு கூட அதற்கான பதிலை தன் விரல நுனியில் வைத்திருப்பதை போல பதில் சொல்வார். you are very correct.