Thursday, May 24, 2012

ஆ ராசா, ப .சிதம்பரம், அடுத்த ஆப்பு சோனியா ?- சுப்ரமணீயம் சுவாமி பேட்டி

சைக்க முடியாத சக்தியாக இருந்த ஆ.ராசா தன் அமைச்சர் பதவியை இழந்தது தொடங்கி திகார் சிறைக்குள் தள்ளப்பட்டது வரை அத்தனைக்கும் முக்கியக் காரணம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!



 15 மாத திகார் சிறை வாசம் கடந்து, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ராசா. இதைவைத்து, 'இனி சி.பி.ஐ. விசாரணை பிசுபிசுத்துவிடும்’ என்றும் 'ஸ்பெக்ட்ரம் பூதம் அவ்வளவுதான்’ என்றும் எக்கச்சக்க அனுமானங்கள். இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களில் தீவிரமாக இருந்த 'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதில் இருந்து...


1. ''ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?''



''இது சுத்த அபத்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் கோருவதும் கொடுக்கப்படுவதும் முறையானதுதான். ராசா விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஜாமீன் கோருவது குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உரிமை.


இதற்கு ராசா மட்டும் விதிவிலக்கா என்ன? சட்டரீதியான அணுகுமுறையில் அவர் ஜாமீனில் வந்திருக் கிறார். இதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் எந்த விதத்திலும் குறையாது. சொல்லப்போனால், ஒரு வருடத்துக்கு முன்னரே ராசா வெளியே வந்திருக்கலாம்.''



சி.பி - அவர் உள்ளேயே இருந்திருந்தா அவருக்குப்பாதுகாப்பு, வெளீயே வந்தா திமுக வுக்குப்பாதுகாப்பு. இது தெரிஞ்சவங்க வாய்ல ஜின்னு, அறியாதவங்க  வாயில மண்ணு


2. '' 'ஸ்பெக்ட்ரம் விசாரணை சரியான பாதையில் செல்லப்போவது இல்லை என்பதையே ராசாவுக்கான ஜாமீன் உறுதி செய்திருப்பதாக’ தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துச் சொல்லி இருக்கிறாரே?''



''ஜெயலலிதா, சட்டம் படிக்காதவர். சட்டப் பிரிவுகளையோ, நுணுக்கங்களையோ அறியாதவர். அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். நியூக்ளியர் சயின்ஸைப் பற்றித் தெரியாமலேயே, கூடங்குளம் அணு மின் நிலைய விளைவுகள் குறித்து ஏதேதோ பேசினார். பின்னர், அப்படியே அந்தர் பல்டி அடித்து, அணு மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்றார். புரியாமல் ஏதாவது பேசுவதும் பின்னர் அப்படியே உல்டா அடிப்பதும் அந்த அம்மாவுக்கு வாடிக்கையானதுதான்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நாங்கள் தீவிரமாகக் கையில் எடுத்தபோது, 'இதனால் ஒரு உண்மையும் வரப்போவது இல்லை’ எனச் சொன்னவர்தான் ஜெயலலிதா. ஆனால், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் ஆதி தொடங்கி அந்தம் வரையிலான அத்தனை உண்மைகளும் சட்டத்தால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. 


 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் வசமாகச் சிக்கத் தொடங்கியதும், 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிவர ஆதாரம் கொடுத்தவர்களே நாங்கள்தான்’ எனப் பெருமிதம் தேடப்பார்த்தார் ஜெயலலிதா. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் ஜெயலலிதா, இப்போது சிதம்பரத்தின் குற்றத்தை நான் நிரூபிக்க வேண்டும் என்கிறார்.


 சரி, நாளைக்கே நான் அதை நிரூபித்துவிட்டால், அம்மையார் என்ன சொல்வார்? சிதம்பரத்தின் மீதான குற்றத்தை நிரூபிக்க அவரே ஆதாரங்களைக் கொடுத்ததாக அள்ளிவிடுவார்.


நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடந்தன என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த உண்மைகளை சென்னை உயர் நீதிமன்றத் தில் அம்பலப்படுத்தி சிதம்பரத்தின் மீது நடவடிக்கைக்கு வித்திடாதது ஏன்?


 அப்படியென்றால், சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்றுதானே எண்ணத் தோன்றும்? தேர்தல் குளறுபடிகள் குறித்த அத்தனை ஆதாரங்களையும் வைத்து சிதம்பரத்தைச் சிக்கவைத்திருக்க வேண்டிய ஜெயலலிதா வும் கண்ணப்பனும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டது ஏனாம்? இதற்கெல்லாம் அம்மையாரிடம் பதில் இருக்கிறதா?''



சி.பி - ஊழல் குற்றச்சாட்டு வெளில வரணும், உண்மையான குற்றவாளிகள்  பிடிபடனும்னு யாரும் ஐ மீன் எந்த அரசியல் வியாதியும் நினைக்கறதில்லை.. அவர் ஆட்சிக்கு வந்தா இவங்க ஊழல் வெளீல வந்து பேரை கெடுத்தா போதும், அதே போல் இவங்க ஆட்சி வந்தா அவர் ஊழல் வெளில வந்து பேரை கெடுக்கனும்


3. ''அடுத்தபடியாக இதிலேயே 275 கோடி ரூபாய் விவகாரம் எனப் பரபரப்புக் கிளப்புகிறீர்களே... அது உண்மையா?''


''நான் என்ன சொன்னாலும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டுதான் சொல்வேன். பரபரப்புக்காக எதையும் சொல்பவன் நான் அல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் விஸ்வரூபத்தை ஆரம்பத்தில் நான் சொன்னபோது, பலரும் நம்ப முடியாமல்தான் பார்த்தார்கள்.






 ஆனால், சுவாமி சொன்னது உண்மைதான் என இப்போது எல்லோருக்குமே புரிகிறது. ராசாவுக்கு 275 கோடி ரூபாய் கைமாறியதாக இப்போது சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்கிறது. ராசாவுக்கு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் கொடுத்த பணம்தானே அது? இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. சேகரித்துவிட்டது. இது தொடர்பாக விரைவில் இன்னொரு குற்றப்பத்திரிகை ராசா மீது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வெயிட் அண்ட் வாட்ச்!''


4. ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி மனு தாக்கல் செய்து இருக்கிறாரே... அப்படி விடுவிக்க சாத்தியம் இருக்கிறதா?''


''அவர் என்ன மனு வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும்; எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும். ஆனால், இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அவர் விடுபட வாய்ப்பே இல்லை.''



5. ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது தவறே சொல்ல முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தத்தோடு சொல்லி இருக்கிறாரே?''


''எத்தகைய குற்றம் செய்தவரும் தன்னை அப்பாவி என்றுதான் சொல்லிக்கொள்வார். சிதம்பரத்தின் பேச்சும் அப்படிப்பட்டதுதான். தான் நிரபராதி என இவர் சொன்னால் போதுமா? ஸ்பெக்ட்ரம் வழக்கின் போக்கை நீதிமன்றம் அல்லவா நிரூபிக்க வேண்டும்?''


6. ''ப.சிதம்பரம் தொடங்கி தயாளு அம்மாள் வரை பலரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்குவார்கள் எனச் சொன்னீர்களே... இப்போது நிலைமை எப்படி?''


''குற்றவாளிகள் யாரும் தப்பவே முடியாது. ராசா, சிதம்பரத்தைத் தொடர்ந்து சிக்கப்போவது சோனியாதான். அடுத்தடுத்து எறும்பு வரிசைபோல் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள். இப்போது உறுதியாக அடித்துச் சொல்கிறேன்... ஸ்பெக்ட்ரம் என்கிற பிரமாண்ட ஊழலில் பங்கெடுத்த புள்ளிகள் யாரும் வழக்கில் இருந்து தப்பவே முடியாது.''


 நன்றி - விகடன்

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடுத்த சாமி நீதான் அண்ணே ஹி ஹி...

R. Jagannathan said...

இதில் ஒன்று தான் உறுத்தல் - ‘ஜெயலலிதா சட்டம் படிக்காதவர்’. எனக்குத் தெரிந்து சு.ஸ்வாமியும், குருமூர்த்தியும் கூட சட்டம் ‘படிக்காதவர்கள்’ தான்! ஆனாலும் இவர்களின் சட்ட ஞானத்தை யாராவது சந்தேகப்பட முடியுமா?

ஜெ வேறு வழியில் சட்டத்தைக் கற்றவர். அவர் மேல் உள்ள குற்றங்களை சந்திப்பதில், வழக்குகளைத் தள்ளிப்போடும் உத்திகளில், நேரடியாக கை வைக்காமல் மற்றவர்கள் மூலம் செய்வதில் - எல்லாம் அவரின் சட்ட ஞானம் அபாரம் என்றே சொல்வேன்!

-ஜெ.

Anonymous said...

இந்த ஆளு பேட்டிய விடுங்க அது கிடக்குது... பாஸ் சூப்பர் பாஸ்..ராட்டினம் விகடன் 42 மார்க்குக்கு ஒரு சல்யூட்..

rajamelaiyur said...

ஒ ,... இததான் சாமி கண்ண குத்தும்னு பெரியவங்க சொல்வாங்களா ?

rajamelaiyur said...

இன்று

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை