Monday, May 28, 2012

இஷ்டம் -சந்தானம் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDL1n4Wvzw8xB7a_Sz3AWyA484B7n2ZDv4pnMqfxN3KG8OaLsAD2ZhbqI4PDZ5jpeYZMCpjWkfS8AkdMiBSumpyTWtN00LcsU3NyQVMua0OXfFc_k4mEKDI0eqvDDd2HzVCHHcptvh-9lD/s1600/IshtamTamilMovie.jpg

ஹீரோ ஏதோ ஒரு பேப்பரை ஜெராக்ஸ் எடுக்கறாரு.. அண்ணன் கிட்டே சில்லறை இல்லை, 1000 ரூபா நோட்டா இருக்கு, ஹீரோயின் அதே காம்ப்ளெக்ஸ்ல பொழப்பில்லாம நிக்குது, அது கிட்டே  ஒரு ரூபா வாங்கி அதாவ்து பிச்சை எடுத்து கடைல கொடுக்கறாரு.. அந்த ஜெராக்ஸ் காப்பி ஒரு இண்டர்வியூவுக்கு.. வேலை கிடைக்கலை.. உடனே அந்த லூசு ஹீரோ ஹீரோயின்க்கு ஃபோன் பண்ணி உன்னால தான் ராசியே இல்லாம எனக்கு வேலை போச்சுன்னு திட்டறார்.. உலகத்துல எவனும் அப்படி கேவலமா ஒரு ஃபிகரை திட்ட மாட்டான்..

ஆனா இப்போ ஒரு ட்விஸ்ட்.. வேலை கிடைச்சிடுது.. ஏதோ ராங்க் இன்ஃபர்மேஷன் அதான் முதல்ல ரிஜக்ட்னு நியூஸ்.. உடனே ஹீரோ ஹீரோயின் கிட்டே நீங்க ராசியான ஆள்னு வழியறான்.. அந்த பேக்கு ஹீரோயினும் கெக்கேக்கெ பிக்கெக்கேன்னு சிரிக்குது.. 2 பேரும் லவ்வறாங்க .. ஹீரோ ஒரு டைம் ஹீரோயின் கிட்டே நாம 2 பேரும் தப்பு பண்ணலாமா? அப்டிங்கறதை என்னமோ கோயிலுக்குப்போலாமா? அப்டிங்கற மாதிரி  சர்வ சாதாரணமா கேட்கறான். 

 2 பேரும் கோயிலுக்குபோறாங்க ஹி ஹி பேரண்ட்ஸை எதிர்த்து அப்புறம் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. மேரேஜ் பண்ணிட்டு ஜாலியா கில்மா படம் பார்க்காம சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்கறாங்க.. அதுல சீதை தீக்குளிக்கறதை பார்த்துட்டு ஹீரோ ஹீரோயின் கிட்டே இந்தக்காலத்துல இந்த மாதிரி பொண்ணூ எங்கே இருக்கா?ன்னு கேட்க வார்த்தைகள் தடிக்க”அது முற்றி “நான் கில்மாவுக்கு கூப்பிட்டப்ப உடனே வந்தவ தானே நீ , இதுக்கு முன்னால எவன் கூட இதே மாதிரி போனியோனு ஹீரோ லூஸ்டாக் விட  பாப்பா கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுது.. 

ஹீரோ வேற ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் வேற ஒரு ஆளை மேரேஜ் பண்ண ட்ரை பண்றாரு.. க்ளைமாக்ஸ்ல என்ன ஆச்சுங்கறதுதான் கதை..eemayinthi ee vela என்ற தெலுங்கு ரீ மேக் தான் இது

 விமல் தான் ஹீரோ. அவருக்கு கிராமத்தான் கேரக்டர் செட் ஆன அளவு நவ நாகரீக இளைஞன் வேடம் செட் ஆகலை.. அவரோட பெரிய மைனஸ் அவரோட குரல் தான்... நாளைக்கு உலகம் அழியப்போகுதுன்னாலும், ஷகீலா இன்னும் வயசுக்கே வர்லையாம்னாலும் அண்ணன் கிட்டே ஒரே ரீ ஆக்‌ஷன் தான் .. லந்து விடும் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள்ல பாஸ் மார்க் வாங்கறார்.. 


ஹீரோயின் ஜில் ஜில் ராணி ஜிகிர் தண்டா மேனி  காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.. நிஜ வாழ்க்கைல பொதுவா ஃபிகருங்க அக்காவை விட தங்கச்சி ஃபிரஸ்சா இளமையா அழகா இருக்கும், சினி ஃபீல்டுல மட்டும் இதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்// பானுப்ரியா- நிஷாந்தி, அம்பிகா- ராதா, சிம்ரன் -மோனல்,ஸ்ருதி-அக்‌ஷரா அப்டினு சொல்லிட்டே போகலாம்.. நிஷா அகர்வால்க்கு ஒரு வார்த்தை நீறில்லா நெற்றி பாழ் என்பது மாதிரி குங்குமம் இல்லா பெண் நெற்றி தண்ணீர் கலந்த பால் தான்,... அதாவது டேஸ்ட் கம்மி.. 


 பாப்பா ஒரு சீன்ல க்ளோசப்ல 3 டி எஃபக்ட்ல லோ ஹிப் காட்டுது.. அக்னி நட்சத்திரம் படத்துல அமலா லோ ஹிப் சீனை தூக்கி சாப்பிடற சீன்..ஒளி மயமான எதிர்காலம் பாப்பவுக்கு இருக்கு ஆனா கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லா உணர்வுக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்.. நல்ல வேளை பொதுவா தமிழர்கள் ஹீரொயின்ஸ் முகத்தை பற்றி அதிகம் அக்கறை எடுப்பதில்லை என்பதால் தப்பித்தார்.. 


 சந்தானம் வழக்கம் போல் ஹீரோ ஃபிரண்டா வந்து படத்தை பிரமோட் பண்ண ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. படத்துல அவர் சொல்ற டைமிங்க் விட், ஜோக்ஸ் மொத்தம் 71.


ஹீரோயின் ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸா வந்த  6 ஃபிகர்ல 2 தான் சுமார் ஃபிகர்ஸ் . மற்றதெல்லாம் அட்டு ஃபிகர்ஸ்.. இயக்குநர் இன்னும் நல்லா செலக்‌ஷன்ல கவனம் செலுத்தி இருக்கலாம்.. 

 ஹீரோவின் அம்மாவா வர்றவர் நடிப்பு, பாத்திரப்படைப்பு கலக்கல்.. தமிழ் சினிமா காட்டும் மாமியார்களில் இவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் பேசும் வசனங்கள், முக பாவனைகள்  எல்லாமே அருமை..


http://www.cinemaexpress.com/Images/article/2011/9/21/newrelease1.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. டூயட் சீன்ல  ஹீரோ ஹீரோயின் வாய்ல பிளாஸ்திரி வெச்சு ஒருவரை ஒருவர் நக்கலா பார்க்கும் சீன்


2. ஹீரோ ஹீரோயின் இருவரும் டைவர்ஸ் வாங்கினாலும் அவர்கள் மனசு ஒருவரை ஒருவர் சுத்திட்டே இருப்பது பாந்தம்.. 


3. ஓப்பனிங்க்ல 2 லவ் ஜோடிகள் மாற்றி மாற்றி பேசும் வசனங்களை ஒருவருக்கொருவர் மேட்ச் பண்ணிக்காட்டும் சீன்.. அதில் இயக்குநரின் திறமை அபாரம். 


4. ஹீரோ ஹீரோயின் காதல் மலர ஜஸ்ட் அந்த ஒரு ரூபாய் மேட்டர் வெச்சே கொண்டு போனது ஷார்ப்.. 


5. படத்தோட சந்தானம் காமெடி வசனங்கள், ஹீரோவின்  அம்மா இந்தக்கால திருமணங்கள், சகிப்புத்தன்மை பற்றி அங்கலாய்க்கும் காட்சிகளில் வசனகர்த்தா கலக்கி இருக்கிறார்..


http://suriyantv.com/wp-content/uploads/2012/01/vimal.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ஹீரோயினுக்கு அந்த மினிஸ்டர் பையன் அடிக்கடி டார்ச்சர் கொடுக்க ஒரு சீன்ல ஹீரோயின் ஓடற வண்டில இருந்து ரூ 12000 மதிப்புள்ள செல் ஃபோனை தூக்கி வீசிடறா.. சிம்கார்டை கழட்டி போட்டா மேட்டர் ஓவர்.. அல்லது செல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணா போதுமே?


2. கல்யாணமாலைல மேரேஜ்க்கு ஆள் பார்க்கறவங்க ஆல்ரெடி மேரேஜ் ஆன செகண்ட்ஸ் ஆளை ஃபிரஸ் ஆள்ங்க எப்படி ஓக்கே சொல்வாங்க? ஆளா சிக்கலை? அதாவது மனைவியை இழந்தவர் இன்னொரு விதவையை மேரேஜ் பண்றது ஓக்கே .. ஆனா அழகும், அறிவும், வசதியும், நிரந்தரப்பணியும் உள்ள 25 வயசு இளைஞன்  ஆல்ரெடி மேரேஜ் ஆகி டைவர்ஸ் ஆன பொண்ணு ஓக்கே  என சொல்வது ஏன்?


3. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் க்ளைமாக்ஸ்ல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல  வெவ்வெற ஜோடி கூட மேரேஜ் பண்ண உறவும், சுற்றமும் சூழ வந்து கடைசி டைம்ல மனம் மாறுவது சினிமாத்தனம்..  இன்னும் இயல்பா காட்டி இருக்கலாம்.. 


4. ஹீரோ ஒரு சீனில் புது ஹீரோயின் கிட்டே  தன்னோட மனைவி மேல வெச்சது உண்மையான காதலே இல்லை, ஜஸ்ட் அட்ராக்‌ஷன் தான் அப்டினு ஒரு லைன் பேசறார்.. அது தேவையே இல்லை, ஏன்னா அவர் க்ளைமாக்ஸ்ல அதே பழைய மனிவியோட தான் சேர்றார்.. அப்போ அவர் பேசுன அந்த பழைய வசனம் ஆடியன்ஸ்க்கு நெருடலாமே?


5. ஹீரோயின்க்கு ரொம்ப நாளா ஒரு மினிஸ்டர் பையன் ரூட் விட்டுட்டே இருக்கான்.. அவன் கூட அடிக்கடி ஃபோன்ல பேசறா.. 2 வது மேரேஜ் பண்ற சூழலில் ஹீரோயின் அவனை ஏன் செலக்ட் பண்ணாம முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆளை செலக்ட் பண்ணனும்?


6. மினிஸ்டர் பையன் ஹீரோயினுக்கு ஜோடி இல்லை, அவரால எந்த திருப்பமும் இல்லை அப்புறம் ஏன் அந்த கேரக்டர்? திரைக்கதையை இழுக்கவா? கட் பண்ணி இருக்கலாம்.. 


7. ஹீரோ, ஹீரோயின் கில்மா மேரேஜ்க்கு முன்னாலயே  முடிஞ்சுடுது.. அதுக்கப்புறம் ஹீரோ ஹீரோயின் முன்னால மண்டி போட்டு என்னை மேரேஜ் பண்ணிக்கோன்னு பிரபோஸ் பண்றது  ரொம்ப செயற்கையா இருக்கு. மேட்டர் முடிச்சுட்டா எந்த ஆணும் அப்படி பம்ம மாட்டான்..


 http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/10/Nisha-Agarwal-Hot-Stills-from-Solo-Movie-1.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  டேய்.. இந்தப்பொண்ணு யாரு? எதுக்கு ரூம்க்கு வந்திருக்கா?


அது வந்து நான் யூஸ் பண்ற டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?ன்னு பார்க்க வந்தா,, ஹிஹி பார்த்துட்டா இப்போ போயிடுவா 


2.  யோவ். ரேட் ரூ 5000 தானே பேசுனோம்.. ஆனா ரூ 4500 தான் இருக்கு?

 ஹி ஹி  டி டி எஸ் பிடிச்சுட்டு கொடுத்திருக்கேன்,., இன்கம்டாக்ஸ் பிராப்ளம் வந்துடக்கூடாது பாருங்க 


3. உலகத்துலயே இந்த கில்மா பார்ட்டிக்கு கேஸ் தராம செக் கொடுக்கற ஆளை இப்போ தான் பார்க்கறேன்

 இதென்ன பிரமாதம்? சில சமயம் நான் டி டி யே எடுத்துக்குடுத்திருக்கேன்



4. இங்கே பாருங்கடி.. பசங்க பொண்ணுங்களை முதல்ல அங்கே தான் பார்ப்பாங்க.. என்ன பெட்?



5. ஹலோ மிஸ்டர். உங்க ஸ்கேனிங்க் முடிஞ்சிடுச்சா? நாம பேச வந்த மேட்டரை பேசலாமா? 

 ஹி ஹி ஹி 


6. என் பேரு நிமிஷா.. 

 ஓக்கே நான் மட்டும் உங்களை மினிட்ஸ்னு கூப்புட்டுக்கறேன்


7. ஆம்பளைங்களுக்கு மேரேஜ்னா  நோ பிராப்ளம்.. அது யாரா இருந்தாலும். ஆனா பொம்பளைங்களுக்கு செகண்ட் மேரேஜ்ங்கறது ரொம்ப சிரமம்.. சமூகம் கிண்டல் பண்ணும்



8. உங்க  கடந்த கால வாழ்க்கை பற்றி எனக்கு அக்கறை இல்லை, ஏன்னா என்னோட கடந்த கால வாழ்க்கைலயும் சில கறுப்[பு பக்கங்கள் இருக்கு 


9. டேய்.. அதென்னடா லார்டு முருகனை விட உனக்கு ரொம்ப சீக்கிரமா ரெண்டாவது மேரேஜ்  ரொம்ப சீகிரமா செட் ஆகிடுது?


10. பொண்ணுங்க தலைல பேனு இல்லாம கூட இருப்பாங்க, ஆனா கைல ஃபோனு இல்லாம இருக்க மாட்டாங்க


11. உன் ஆள் பேர் உனக்கு தெரியும் தானே.. அதை அக்குள்ல வெச்சுத்தேடு.. 

என்னது?

 அதாண்டா கூகுள் ல தேடு.. காமெடி பண்ணேன்.. 


12.  கடவுளோட கால்குலேஷனை யாராலும் யூகிக்கவும் முடியாது, மாத்தவும் முடியாது


13. மிஸ்.. உங்க ராசி ஸ்கார்ப்பியோவா? 

 ஆமா, எப்படி தெரியும்?

 அவங்க தான்  என்ன பொய் சொன்னாலும் அதிகமா நம்பற ஆள்ங்க 


14. டெயிலி காலைல நானும் ஜாகிங்க் போவேன், என் ஃபிரண்ட்சையும் போகச்சொல்வேன்

 இப்போ புரிஞ்சுதுங்க.. டெயிலி உங்க கணவரை ஓடச்சொல்லி இருப்பீங்க.. அவர் அப்படியே உங்களை விட்டுட்டு ஓடி இருப்பார் .. 


15. உங்க கையால தண்ணி வாங்கிக்குடிச்சாலே  ஒயின் குடிச்ச மாதிரி தான்.




http://www.sattigadu.com/wp-content/uploads/2012/05/Nisha-Agarwal-Hot-Stills-At-Sukumarudu-Movie-Launch.jpg


16. சார். 1000 ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?


எது? இந்த 1க்குப்பக்கத்துல 3 ஓட்டை இருக்குமே அதான் ஆயிரமா?

 சுத்தம்


17. சில்லறை இல்லைன்னா சில்லறைப்பொழப்புங்க.. 

 அதை ஒரு சில்லறை சொல்லக்கூடாது.. 

18.  இங்கே பார்டி.. எப்போ சென்னை வந்துட்டியோ அப்போவே நீ ஒரு பாய் ஃபிரண்டை செட் பண்ணிக்கோ அப்போ தான்  லைஃப் நல்லாருக்கும் 


19.  என்னடா பம்பறே.. வழக்கம் போலவே இந்த இண்ட்டர்வியூவும் நக்கிட்டு போயிடுச்சா?


20. அப்படிப்போட்றா ஆம்லெட்டை


21. வாங்கி வந்தது ஓ சி.. அதுல ஏண்டா பார்க்கறே ராசி ?


22. சார்.. பக்கெட் சேல்ஸுக்கா?

 ஏண்டா நாயே கைல பக்கெட் வெச்சிருந்தா அது சேல்ஸ்க்குன்னு எப்படிடா நினைக்கலாம்? நீ கூட கைல  குழந்தையை வெச்சிருக்கே.. நான் ஏதாவது கேட்டேனா?


23. ஆய் போறதுல கூட நம்மாளுங்க ஹை டெக்னிக் கண்டு பிடீச்சிருக்கானுங்க 


24. ஆப்பிள் கம்ப்யூட்டர் மாதிரி ஒரு அழகு ஃபிகர்டா.. 


25. இந்த ஃபிகருங்க 2 பேருக்கும் பாய் ஃபிரண்ட்ஸே இல்லை.. 

 எப்படிடா சொல்றே?

 அது இருந்தா இவளுங்க ஏண்டா ரீ சார்ஜ் பண்ண  கடைக்கு  வர்றாங்க?அந்த இளிச்சவாய் பசங்களை வெச்சே ரீசார்ஜ் பண்ண சொல்லி இருக்க மாட்டாங்களா?



26. அவ நெம்பரை ஏத்தறதுக்கு ஏண்டா என் பர்ஸ்ல இருந்து 100 ரூபா இறக்குனே?


27. சார்.. இந்த நெட் ஒர்க் செலக்ட் பண்ணுனா சிவா மனசுல சக்தி ஃபிரீயா? 

 அப்டின்னா?

 அதான் சார் எஸ் எம் எஸ்.. 



28. என்னதான் துணிக்கடை ஓனரா இருந்தாலும் பாத்ரூம்ல குளிக்கறப்ப எல்லா துணியையும் கழட்டிட்டுத்தான் குளிக்கனும்


29. அம்மா// நான் கோயில்ல தான்மா இருக்கேன்.. 

 மறக்காம தீர்த்தம் வாங்கிக்குடிடா.. 

 இப்போ தீர்த்தம் தான்மா குடிச்சுட்டு இருக்கேன் ( சரக்கு )


30.ஆண்ட்டி, நீங்க உங்க பையன் கிட்டே 5000 ரூபா குடுத்து விட்டீங்களே சென்னை அனுப்பறப்போ அந்த பணத்தை அப்படியே செலவு பண்ணாம பத்திரமா வெச்சிருக்கான்.. எல்லா செலவும் நான் தான் பண்ணிட்டு இருக்கேன்




http://www.cinejosh.com/gallereys/actress/normal/nisha_agarwal_hot_stills_2412110315/nisha_agarwal_hot_stills_2412110315_005.jpg


31. டியர்.. ஒரு கிஸ்சை செல் ஃபோன் மூலம் பார்சல் பண்ணு

 போடா.. குடுத்து குடுத்து வாய் தான் வலிக்குது


32.. மினிஸ்டர் பையனே சிக்கி இருக்கான்.. வேற ஒரு நல்ல ஆள் சிக்கற வரை இவனை ஸ்டேண்ட் பை- யா வெச்சுக்கோ , பின்னால யூஸ் ஆகும். உனக்கு ஆகாதுன்னு நினைச்சா என் கிட்டே தள்ளி விட்டுடு நான் பார்த்துக்கறேன்.. 


33. யார்றா அது விடிகாலைல 11 மணிக்கே எழுப்பி விடறது?


34. அவனைப்பாரு.. செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு என்னமோ செய்வினை வெச்சதால கை கால் விளங்காதவன் படுத்திருக்கற மாதிரி  இருக்கறதை.... 


35. கடவுள் கண்ணைத்திறந்துட்டார்.. 

 இத்தனை நாளா அவர் கோமா ஸ்டேஜ்ல இருந்தாரா?


36. அங்கே அவ அசிங்க அசிங்கமா ஃபோன்ல திட்டிட்டு இருக்கா .. இவன் என்னமோ ஹாரீஸ் ஜெயராஜ் மியூசிக் கேட்கற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான் பாரு.. 


37. விக்கிரமாதித்தன் தோள்ல ஏறுன வேதாளம் மாதிரி எதுக்குடா சிரிக்கறே?

 ஒரு ஃபிகர் செட் ஆனா போதுமே அவ காரித்துப்புனாக்கூட கவிதை சொல்ற  மாதிரி நினைச்சுக்குவானுங்களே?


38. மேடம். உங்களுக்கு திமிரு  ஜாஸ்தி..


 எப்படி சொல்றீங்க?
\
கொழுப்பு ஜாஸ்தியா இருக்கறப்ப திமிரு ஜாஸ்தியாத்தான் இருக்கும்


39. ஒரு தெருவுக்கு 10 சுத்து சுத்துனாலும் ஃபிகர்க்காக எது வேணாலும்  செய்றவன் இவன்

அதாவது நாய் மாதிரி..?


40. உங்களுக்கு பட்டர் ஸ்காட்ச்னா பிடிக்குமா? ஏன்?

 அதுல தானே ஸ்காட்ச் இருக்கு?


41. உன் எக்ஸ்ரே பார்வையை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.. என் கணிப்புல 50 % பசங்க பொண்ணுங்களை செக்ஸியாத்தானே பார்க்கறாங்க?

 என்னங்க இப்படி சொல்லீட்டீங்க?

 அய்யய்யோ ஏதாவது  தப்பா சொல்லீட்டேனா?

 100% பேரும் அப்படித்தான் பார்க்கறாங்க


42. ஹூம்  டிவில சில படங்கள் பார்த்தேன். கிஸ் சீன்ஸ் ம் ம் சிம்புவும் , விஷாலும் கொடுத்து வெச்சவங்க


43. என்னடி சொல்ரே? கிஸ்ல இத்தனை வெரைட்டி இருக்கா? என் பாய் ஃபிரண்ட் ஒரே மாதிரி தான் இதுவரை குடுத்துட்டு இருக்கான்./. அவன் கிட்டே முதல்ல இந்த புக்கை கொடுத்து படிச்சு கத்துக்க சொல்லனும்


44. டேய் மாப்ஸ்.. என் ஆளை நான் கிஸ் அடிக்கனும்.. அதுக்கு ஒரு கார் வேணும்.. 

 கிஸ் அடிக்க 2 வாய் இருந்தா போதுமே. எதுக்கு காரு?


45. அப்புறம் இன்னொரு மேட்டர்.. கார்ல கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கனும்

 கார்க்கு கண் ஆபரேஷனா நடந்திருக்கு? எதுக்கு அப்படி? 

 அதாவது வெளீல இருந்து யார் பார்த்தாலும் உள்ளே நடப்பது தெரியக்கூடாது





http://www.andhrabulletin.com/admin/images/nisha%20agarwal%20hot%20stills%20in%20solo%20(9).jpg
46. வாழ்க்கையில் இந்த செகண்டை எப்பவும் மறக்ககூடாது


47. எங்கப்பா எத்தனையோ தடவை கட்சி மாறி இருக்காரு.. ஆனா நான் என்னைக்கும் மாறாம இருக்கேன்.. எப்பவும் உன் மனசுல எனக்கு ஒரு இடம் வேணும்.. நீ எப்போ மன்சு மாறுனாலும் என்னை கால் பண்ணு


48. யார்றா அந்த ஃபிகரு.. பேரென்ன?


 சீக்ரெட்.. 

 ஸ்வீட் நேம் 


49. எந்த புருஷனும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவ கிட்டே இப்படி ஒரு ஃபிளாஸ்பேக் கேட்கவே கூடாது


50. வழக்கமா தப்பு நடந்த பிறகு பொண்ணுங்க அதை நினைச்சு அழுவாங்க.. ஆனா எனக்கு அழுகையே வர மாட்டேங்குது.. ஏன்?


51. உங்க பேரண்ட்ஸ் எப்படி அவ்ளவ் சீக்கிரமா உங்க மேரேஜ்க்கு சம்மதிச்சாங்க?


 அப்படி உடனே சம்மதிச்சா அவங்க எப்படி பேரண்ட்ஸ் ஆவாங்க? ஆரம்பத்துல சம்மதிக்கலை



52. உங்க வயசுப்பசங்க டக்னு பேரண்ட்ஸை விட்டுட்டு வந்துடறீங்க.. ஆனா எங்களால அப்படி உங்களை விட்டுட்டு வர முடிய்றதில்லைடா. 


53. இந்தக்காலத்துப்பசங்க  பேரண்ட்ஸ் கிட்டே பர்மிஷன் எல்லாம் கேட்கறதே
 இல்லை.. ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் தான் தர்றாங்க 


54. இப்போ நான் சரக்கு புராணம் சொல்லப்போறேன்.. லிக்கர் ஃபேமிலி அவங்களூக்கு விஸ்கி, பிராந்தி, ஜின், ரம்னு 4 பசங்க.. 

 பீர்?

 அது கூலிங்க்டா அது பொண்ணு.. 


55. சிட்டில வலை வீசித்தேடினாலும் வெர்ஜினிட்டி கேர்ள்ஸ் கிடைக்காது.. 


56. என்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டியா? நம்பிக்கைல கல்யாணம் பண்ணிக்கிட்டியா?


57. இன்னைக்கு ஃபுட்டும் கட், பெட்டும் கட்டா? (  FOOD & BED)


58. என்ன பார்க்கறே? உன்னை மாதிரி நடு ராத்திரில திருடித்திங்கற புத்தி எனக்கு இல்லை.. 


59. வீட்ல சண்டையா பாஸ்? எங்க வீட்லயும் சண்டை தான்.. இதே பார்க்ல உக்காந்திருங்க.. இதுக்குனு ஒரு சங்கமே இருக்கு.. மெதுவா ஒவ்வொருத்தரா வருவாங்க


60. டியர்.. நான் மூடுல இருக்கேன்


 நான் மூடு அவுட்ல இருக்கேன்



http://www.bestceleb.info/wp-content/uploads/2012/01/nisha-agarwal-hot-navel-ishtam-movie.jpg


62. மேரேஜ்க்கு முன்னால என் கூட பலான மேட்டருக்காக கூப்பிட்டதும் ஓடி வந்த நீ  அதுக்கு முன்னால வேற யார் கூடவாவது  போய் இருக்க மாட்டேனு என்ன நிச்சயம்?

63. இருடா.. உன்னை வெச்சுக்கறேன்..

 உன்னை கட்டிக்கிட்டதே பெருசு.. இதுல என்னை வெச்சுக்கறியா?

64. உங்களை மாதிரி ஆண்ட்டிங்கன்னா ரொமாண்ட்டிக்கா இருப்பிங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஹி ஹி


65,.கிச்சன் ரூம்ல ஃபைட் வந்தாலும், ஹால்ல ஃபைட் வந்தாலும் எல்லாத்தையும் சமாதானப்படுத்தத்தானே பெட்ரூம் இருக்கு.. ? அதை ஏன் யூஸ் பண்னலை?


66. ஹாஸ்டல் பொண்ணுங்கடா நாங்க.. பார்க்க எப்படி தெரியுது?

 பார்க்க என்னென்னெமோ தெரியுது.. அதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா?


67.,டேய்.. என்னடா டி சர்ட் இது/


 மிஸ் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க கழட்டிடறேன் ஹி ஹி 

68. இந்த பொண்ணுங்களை நம்பவே முடியலை.. தனியா இருந்தா அடக்கி வாசிக்கறாங்க , அணியா இருந்தா அநியாயத்துக்கு வாசிக்கறாங்க


69. எட்டாங்கிளாஸ்ல ஹெட்மாஸ்டர் நுழைஞ்ச மாதிரி நான் உள்ளே ரூம்ல நுழைஞ்சதும் ஏன் எல்லாரும் பம்பறீங்க?


70. இப்போ நீங்க அவனை அடிச்சீங்களே இந்த அடியை சின்ன வயசுலயே அடிச்சு வளர்த்தி இருந்தா நல்லாருந்திருக்கும்.. கண்ணு போன பிறகு கலர் டி வி வாங்கி என்ன பிரயோசனம்?

71. உனக்கு எந்த மாதிரி பொண்ணுடா பார்க்க?

 சேட்டிங்க் டேட்டிங்க் சீட்டிங்க் இல்லாத பொண்ணா வேணும்..


 ஓக்கே பார்க்கறோம்

 கிழிச்சீங்க.. 400 வருஷம் தேடுனாலும் கிடைக்காது..



72.  டியர்.. எனக்கு வேலை போயிடுச்சுங்கற மேட்டர் உனக்கு எப்படி தெரியும்?

 இண்ட்ரஸ்ட் ஒருத்தர் மேல வ்ந்துட்டா அவர் பற்றிய எல்லா மேட்டரும் தெரிஞ்சுடும்


73. அவளை மறந்தாச்சா?

 இன்னும் இல்லை. ஆனா சீக்கிரம் மறந்துடுவேன்..


74. செகண்ட் ஹேண்ட் வண்டி எனக்கு வேண்டாம் டாடி..  புதுசுதான் வேணும்.. யாரோ ஓட்டுன பைக்கை ஓட்ட கஷ்டமா இருக்கு. அவன் ஹாரன் அடிச்சதை நான் எப்படி யூஸ் பண்ண?



75.  பசங்க அவங்களோட கேர்ள் ஃபிரண்ட்சை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டு போவாங்க, ஆனா அபார்ஷன் பண்ன மட்டும் பொண்ணுங்க தனியாத்தான் போகனும்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK-6kUNpDMZ-RJc_u_Kv-WNUKjtH9QU341-RNUQtTHJ0WqyLCyWRGcVlRVA0zNy-gej1kz8g8lqzMeZ7j06EyWZQ7mWoEcO7PxCNfEreITag-Cvv_Q0c0bQ3hNG5d9y6sgiVuJQ_2RTus/s1600/Nisha-Agarwal-Hot-Wallpapers-Photos1.jpg


76. உங்கம்மாவோ, நானோ ஏன் இன்னும் பிரியாம இருக்கோம்? எல்லாம் கல்யாணம் மேல வெச்சிருக்கற மரியாதைதான்..


77. பிரிஞ்சு வாழ 1000 காரணம்  இருக்கும் ஆனா சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் போதுமே?


78. ஆண்ட்டி.. நீங்க மாதர் சங்கத்துல இருக்கீங்க.. முதல்ல நீங்க ஒரு மேரேஜ் பண்ணிக்குங்க.. ஏன்னா அப்போதான் மத்த பொண்ணுங்க எல்லாம் உருப்படுவாங்க




 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? மேரேஜ் ஆகி பிரிந்து வாழும் தம்பதியர் அவசியம் காண வேண்டிய படம்.. கொஞ்சமாவது மனமாற்றத்தை நிச்சயம் தரும்.. காதல்ர்கள், லேடீஸ் ஹாஸ்டல் பெண்கள் பார்க்கவேண்டிய படம்



 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - யூத்ங்க எல்லாம் பார்க்கலாம். சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம்


 ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்


9 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

ิவணக்கம் தல ...
படத்துல ஏதாவது கில்மா சீன் இருக்கா
இன்னிக்கி ஆபிஸ் போகலையா

ArjunaSamy said...

வழக்கம் போல் அருமையான விமர்சனம்

ஒரு டவுட் இது டப்பிங் படமா ? இல்லை ரீமேக் படமா?

”தளிர் சுரேஷ்” said...

சந்தானத்தின் டைமிங் காமெடி அசத்தலாக உள்ளது படத்தில்! ஹீரோயின் முகத்தை யாரும் பார்க்க மாட்டாங்கன்னு சொன்னது நக்கல்!

தாமரைக்குட்டி said...

ஹிஹிஹிஹிஹி..... செம கலக்கல் விமர்சனம்... வசனங்கள் அருமை....

தாமரைக்குட்டி said...

கண்டிப்பா பாக்கணும்.....

Menaga Sathia said...

இன்னிக்கு ஆபீசுக்கு போகாமா சினிமா பார்த்தாச்சா??....இந்த பதிவு ரொம்ப நீளமாக இருக்குற மாதிரி இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை.
விமல் நடிப்பு ஓகேதானா இல்லையா?
வசனங்கள் எல்லாம் நல்லாயிருக்கு.

ஹாலிவுட்ரசிகன் said...

வசனங்கள் செம கலக்கல் சி.பி. காமெடிக்காக சரி ஒருமுறை பார்த்துடுவோம்.

ஹாலிவுட்ரசிகன் said...

//சந்தானம் காமெடிக்காக//

வரவர நிறையப் படங்கள் இந்த நிலைமையில் தான் வந்திட்டிருக்கு.