1. ''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?''
சி.பி - கொலம்பஸ்.. புதுசா கண்டு பிடிச்சுட்டாரு.. இரிடேட் பண்ணாம தானே இமிடேட் பண்றாரு?
''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம்.
என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க.
ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா. ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை மிஸ்டர் மகுடேஸ்!''
சி.பி - நாத்திகம் பேசி கருத்து சொன்னா அது விவேக் காமெடி, அடிவாங்கி அழுதா வடிவேல் காமெடி, எல்லாரையும் நக்கல் அடிச்சு துவைச்சு காயப்போட்டு தொங்கப்போட்டா அது கவுண்டமணீ காமெடின்னு தமிழன் மனசுல ஃபார்ம் ஆகிடுச்சு.. மாற்ற முடியாது.. நமக்கு சிரிப்பு வருதா?ங்கரதுதான் முக்கியம்..
2. ''விஜய், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யானு ஹீரோக்களே சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, வடிவேலு - சந்தானம் காம்பினேஷன் இனிமேல் சாத்தியமா? எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்க ஆசையா இருக்கே?''
''எனக்கும் அந்த ஆசை இருக்கு. நான் ரெடிங்க!''
3. ''நீங்க பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஆனாலும், பக்கா மெட்ராஸ் பாஷை பேசி ஒரு படம்கூட நடிக்கலையே நீங்க... ஏன்?''
''என்ன திவ்யா... நம்மகிட்டயே காமெடி பண்றீங்க. இப்ப நான் பேசுறது எந்த ஊர் பாஷைனு நினைச்சுட்டு இருக்கீங்க? 'எப்டிக்கீற? நாஷ்டா துன்னியா? இட்னு வா... வலிச்சுனு வா’னு பேசுற பழைய மெட்ராஸ் பாஷையை மனசுலவெச்சுட்டுக் கேக்குறீங்கனு நினைக்குறேன்.
அப்படிலாம் இப்ப சென்னையிலயே யாரும் பேசாதப்ப, நான் மட்டும் பேசினா ரொம்ப கேரிங்கா இருக்குங்க. இப்பல்லாம் மெட்ராஸ் பொண்ணுங்க செம டீசன்ட்டா இங்கிலீஷ்லதான் கலக்கு றாங்க. அவங்களுக்கு ஈக்குவலா இல்லாங் காட்டியும் பசங்களும் தமிழையே இங்கிலீஷா ரீ-மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க.
அதைத்தான் நானும் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக் கேன். இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ படத்துலகூட பக்கா ட்ரிப்லிக்கேன் பாஷைதான் பேசி யிருப்பேன். அதைக் கவனிக்கலையா நீங்க? ஆங்... பை தி பை... திவ்யகுமாரி, நீங்க லூஸ் மோகன் ரசிகையா?''
4.''தமிழ் சினிமாவில் காமெடின்னா ஆண்கள்தானா... ஏன் பெண்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கவே மாட்டேங்கிறீங்க?''
''எப்பவுமே இப்படினு சொல்ல முடியாது. ஒருகாலத்துல மனோரமா ஆச்சி கொடுத்த ஸ்பேஸ் போகத்தான் எல்லாருக்கும் இடம் இருந்தது. தங்கவேல் சார், நாகேஷ் சார், சந்திரபாபு சார்னு வளைச்சு வளைச்சு எல்லாருக்கும் ஜோடியா நடிச்சுட்டு இருந்தாங்க ஆச்சி. அதுக்குப் பிறகு, கோவை சரளா மேடம் அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருந்தாங்க.
ஆனா, அவங்களுக்கு அப்புறம் யாரும் வரலை. பார்ப்போம்... யாராவது வருவாங்க... அது வரைக்கும் 'அவள் வருவாளா... அவள் வருவாளா’னு நாம பாட்டு பாடிட்டு இருப்போம்!''
சி.பி - ஏன்? ஷகீலா, ஆர்த்தி 2 பேரும் இப்போ காமெடி டிராக்ல ட்ரை பண்ணிட்டுதானே இருக்காங்க? ஓக்கே ஓக்கே ல உங்க கூட நடிச்ச தேன்ன்ன்ன்ன்ன் அட கூட காமெடில கலக்க வாய்ப்பு இருக்கு..
5''நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி... இவங்கள்ல யார் உங்களுக்கு நெருக்கமான தோழி?''
''நல்ல வேளை... என் நெருக்கமான தோழி பேரு இந்த லிஸ்ட்ல இல்லை. கிரேட் எஸ்கேப்!''
6. ''தமிழில் எந்த ஹீரோவுடன் நடிப்பது உங்க கனவா இருந்தது?''
''ரஜினி சார்தான். அந்த அளவுக்கு அவரோட தீவிர வெறி பிடிச்ச ரசிகன். 'எந்திரன்’ மூலம் அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு. 'எந்திரன்’ ஷூட்டிங்ல என் டயலாக்கை எல்லாம் மறந்துட்டு, ரஜினி சார் நடிக்கிறதையே பார்த்துட்டு நிப்பேன்.
'ஏன்... ஏன்... என்ன... என்ன... என்ன ஆச்சு சந்தானம்?’னு சார் பதற்றமா கேட்பார். 'இல்ல சார்... நீங்க நடிக்கிறதையே பாத்துட்டு இருந்துட்டேன்’னு சொல்வேன். 'ஓ.கே. நான் நடிச்சதைப் பார்த்துட்டீங்க. நீங்க என்ன நடிக்கிறீங்கனு நான் பார்க்கணும்ல. அதுக்காகவாவது நடிங்க சார்’னு கிண்டலடிப்பார்.
நாம ஏதாவது செட்ல காமெடி பண்ணா, அவரும் ஜாலியா சேர்ந்து கலாய்ப்பார். சீன்ல என் காமெடி டயலாக் டெலிவரி எல்லாத்தை யும் ரசிப்பார். 'சூப்பர்... சூப்பர்’னு என்கரேஜ் பண்ணுவார். கடைசியில ஒரு சீரியஸான சீன். நான் ரொம்பவே திணறிட்டேன். 'அப்பா, காமெடின்னா மட்டும் பபபபனு பேசிடுற. சீரியஸ் சீன்ல சிக்கிக்கிட்ட பார்த்தியா’னு சிரிச்சார். சார் செம ஸ்ட்ரிக்ட்டு... ஆனா, செம சாஃப்ட்டு!''
7 ''எப்பவும் ஹீரோவுக்கு நண்பனாவே காமெடியன் வர்றது ஏன்?''
சி.பி - அப்போத்தானே படம் பூரா வர முடியும்? காமெடி களை கட்டும்? வில்லனா வந்தா ஹீரோயின் இருக்கற சீன்ல அதிகமா வர முடியாதே?
''இந்தக் கேள்வியைத்தாங்க நானும் எல்லா டைரக்டர்கள்கிட்டயும் கேட்டுட்டே இருக்கேன். அட... ஹீரோவுக்கு மட்டும்தான் உலகத்துல ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்களா? அந்த ஹீரோயின் ஹீரோயின்னு ஒருத்தங்க நடிக்கிறாங்களே... அவங்களுக்குலாம் பசங்க ஃப்ரெண்ட்ஸா இருக்க மாட்டாங்களா?
'அந்த கேரக்டர்ல ஒரு பொண்ணுதான் நடிக்கணும், நீ பையன். நடிக்கக் கூடாது’னு ஏதோ சினிமா இலக்கணத்தை மீறக் கூடாதுங்கிற மாதிரி சொல்றாங்க. அட... இந்த மாற்று சினிமா... ரியல் சினிமானு ஏதேதோ சொல்றாங்களே... அதுலயாச்சும் ஹீரோயினுக்கு ஒரு காமெடி யனை ஃப்ரெண்ட் ஆக்குங்கப்பா... அன் லிமிடெட் கால்ஷீட் தர்றேன்.''
சி.பி - அதுல ஒரு பிரச்சனை இருக்கு.. பெரும்பாலான படங்கள்ல ஹீரோவை விட நீங்க பர்சனாலிட்டில தூக்கலா தெரியறதால உங்களூக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா அப்புறம் ஹீரோ ஷூட்டிங்க்ல டம்மிஆகிடுவார்..
8 ''நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ஸ்கூல்ல வாத்தியார்கிட்ட அடிலாம் வாங்கி இருக்கீங்களா? ('சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா’னு கலாய்க்கக் கூடாது!)''
''டிப்ளமோ இன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்... சுருக்கமா டி.இ.சி. படிச்சிருக்கேன். அதுவே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் படிச்சேன். வாத்தியார்களையே கலாய்ச்ச சம்பவம்தான் நிறைய இருக்கு.
ஒரு சின்ன சாம்பிள்... கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். காலையில நாலு பீரியட், மத்தியானம் மூணு பீரியட். மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டுப் போறப்ப ஒரே ஒரு புக்கை மட்டும் கைல வெச்சு ஸ்டைலா சுத்திக்கிட்டே ஸ்கூலுக்குப் போவேன். அப்படி ஒரு தபா போனப்ப, 'எங்கடா என் சப்ஜெக்ட் புக்?’னு வாத்தியார் கேட்டாரு.
என்ன பண்றதுனு தெரியாம, 'இல்லைங்க சார்... வர்ற வழியில ஒருத்தர் புடுங்கிக்கிட்டாரு’னு சமாளிச்சேன். அப்புறம் அப்புறம் அவர் கேட்டப்பவும் அதே காரணத்தைச் சொன்னேன். ஒரு நாள் என்னை இறுக்கிப் புடிச்சுட்டாரு... 'புக்கை எவனாவது புடுங்குவானா? உன்கிட்ட புத்தகத்தைப் புடுங்குனது யார்னு சொல்லு... நான் என்னன்னு கேக்குறேன்?’னு என்னை ஸ்கூட்டர்ல தூக்கிப் பின்னால உட்காரவெச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு.
'என்ன பண்ணி டபாய்க்கலாம்’னு யோசிச்சுட்டே போறேன். ஒரு நாலு ரோடு சந்திப்புல ஸ்கூட்டரை நிப்பாட்டச் சொன்னேன். 'எங்கடா, யார்றா அது?’னு சுத்திமுத்திப் பார்த்துட்டே கேட்டார். 'அதோ அவருதான் சார்’னு கை காமிச்சுட்டு, வீட்டுப் பக்கம் ஓடிட்டேன். வாத்தியார் திரும்பிப் பார்த்தா, அங்கே கையில புத்தகத்தை வெச்சிட்டு சிலையா நிக்கிறார் பாரதியார்.
பயங்கர காண்டாயிட்டார் மனுஷன். 'டேய்...’னு நடுரோட்ல நின்னுட்டு ஆந்திரா வில்லன் மாதிரி கத்தினார். அக்கம்பக்கத்துல நின்னவங்க கூடி விசாரிச்சதும், விஷயத்தைச் சொல்லியிருக்கார். 'ஏன்யா, வாத்தியார் வேலைதானே பாக்குற... அறிவில்லையா உனக்கு. சின்னப் பையன் சொல்றான்னு கேட்டுக்கிட்டு இவ்ளவு தூரமா வருவ?’னு எல்லாரும் அவரைப் போட்டுக் கலாய்ச்சிட்டாங்க. இந்த மாதிரி மத்தவங்களை மாட்டிவிட்டு பிரச்னை ஆனது நிறைய இருக்கு!''
- அடுத்த வாரம்...
''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்போ எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடிகாலா காலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?''
''இப்போதைக்கு காமெடியில் உச்சகட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?''
''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?''
- இன்னும் கலாய்க்கலாம்...
THANX - VIKATAN
டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/ 05/blog-post_4450.html
சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/ 05/2.html
சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/ 06/blog-post_8565.html
சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/
சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/
4 comments:
அண்ணே சந்தானம் வடை.......
தலைவர் பேட்டி.. கலக்கல்ஸ் பாஸ்!
அப்புறம் 'தெய்வத்திருட்டுமகள்'ல தலைவர் ஹீரோயின் கொடைதான் வருவாருல்ல!
சந்தானத்தையும் விட்டு வைக்கலியா?!
Post a Comment