Friday, May 11, 2012

கலகலப்பு - சினிமா விமர்சனம்

http://5eli.com/Song/wp-content/uploads/2012/04/Kalakalappu-@-Masala-Cafe.jpg
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் என்னென்னெ? என ஒரு லிஸ்ட் எடுத்தால் உள்ளத்தை அள்ளித்தா-வுக்கு ஒரு இடம் உண்டு.. அந்தப்பட டைரக்டர் சுந்தர் சி  டைரக்ட் செஞ்ச 25 வது படம் என்ற மகுடத்தோட களம் இறங்கி இருக்கு இந்த கலகலப்பு.. இதுல ஒரு சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசன உதவி சக பதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்..


கும்பகோணத்துல பாரம்பரியம் மிக்க ஹோட்டல் நடத்தி வரும் விமல் போட்டியின் காரணமா தொழில் நொடிச்சதால அடிக்கடி கடன் வாங்கி கடனுக்கு நடத்திட்டு இருக்கார்.. ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலி 2 மாசம் டைம் கொடுத்து அதுக்குள்ள கடையை நீட் பண்ணலைன்னா  சீல் வெச்சுடுவேன்னு மிரட்றாங்க.. விமல் தன் தாத்தா உதவியோட இயற்கை உணவு வகைகள், பாரம்பரியம் மிக்க சமையல் வகைகள் செஞ்சு ஹோட்டலையும் பிக்கப் பண்ணி அஞ்சலியையும் கரெக்ட் பண்ணிடறார்.. 

 விமலோட சகோ சிவா ஜெயில்ல இருந்து வந்து  ஓவியாவை கரெக்ட் பண்றார்..ஓவியா அதே மசாலா கஃபேல ஒர்க்கிங்க்.. இடைவேளைக்கு அப்புரம் யாரடி நீ மோஹினி படத்துல வர்ற மாதிரி கதை டிராக் மாறுது.. அதாவது அஞ்சலியோட கிராமத்துக்கு கதை ஷிஃப்ட் ஆகுது.. அங்கே சந்தானம் முறை மாமன்... அவர் கூட அஞ்சலிக்கு மேரேஜ்..  அங்கே வந்து விமல் எப்படி காமெடி கலாட்டா பண்ணி கை பிடிக்கறார் என்பதே கதை.. 



http://img1.dinamalar.com/cini/ShootingImages/15170280652.jpg

ஊடால இன்னொரு கிளைக்கதை.. வில்லன் கேனத்தனமா அவன் கிட்டே இருக்கற  கோடிக்கணக்கான மதிப்புள்ள  வைரக்கற்களை அவன் அடியாள் கிட்டே கொடுத்து ஒரு இடத்துல தங்க வைக்கறான்.. அது  பல கை மாறி  விமல் கிட்டே வருது.. இப்போ விமலை துரத்தி அந்த வில்லன் கும்பல் கிளம்புது..  தொடர்ந்து நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 


 படத்துல விமல் தான் மெயின் ஹீரோ.. ஆள் பம்பறது... காமெடி பண்றது எல்லாமே செம இயல்பு.. தேவை இல்லாம பில்டப் பண்றது, ஓவர் ஆக்டிங்க் எல்லாம் கிடயாது, நீட்டான நடிப்பு.. 

தமிழ் படம் புகழ் சிவா  செகண்ட் ஹீரோன்னாலும் அவருக்குன்னு ஒரு ஃபேன்ஸ் கிளாப்ஸ் இருக்குப்பா... டைமிங்க் காமெடி, மொக்கை காமெடி, ஸ்பூஃப் காமெடின்னு கலந்து கட்டி அடிக்கிறார்... ஆனா அவர் வசனம் பேசறப்ப அவர் கிட்டே ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸும், எல்லாரையும் செகண்ட் பை செகண்ட் கலாய்க்கனும்கற வெறி தெரியறது.. கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2xeuWsGoeFG_i3xMaNqJEwJ_MU5RdbumETApOvgFzKsvmeaiuON8bHiKOEg8_JL5U-wimmTksQebsl2GpzN1A-k0FdAmHl269tElPegHuHRm8lRKh91MytyOcgV_rQoldYUEe6Ae0jRI/s1600/Actress-Ooviya-hot-Photos+%252823%2529-724383.jpg

சந்தானம் இடைவேளைக்குப்பிறகுதான். வர்றார்ங்கறது முதல் ஏமாற்றம்னா  ஓக்கே ஓக்கே அளவுக்கு  பிரமாதமான டைமிங்க் காமெடி இல்லைங்கறது  2 வது ஏமாற்றம்.. ( பொதுவா ஒரு படைப்பாளியும் சரி  கலைஞனும் சரி ஒரு மெகா ஹிட் கொடுத்துட்டா அது அவங்களூக்கு எதிராவே திரும்பிடும்.. அடுத்து வரும் ஒவ்வொரு படைப்பையும் அந்த மெகா ஹிட்டை  கம்பேர் பண்ணியே பேசுவாங்க.. )

ஹீரோயின் அஞ்சலி மயில் மாதிரி இருக்கார்.. ஸ்ருதி கூட தேவலை அவரை விட மிக மோசமான குரல்,,.  டப்பிங்கா? ஒரிஜினல் வாய்ஸா தெரியலை.. 99% அஞ்சலியோட ரியல் வாய்ஸ் ஸாகத்தான்  இருக்கும்.. படு மோசம்.. ஆனா ஆள் கும்முன்னு தான் இருக்கார்...  அவர் கிளாமர் காட்டறப்ப  தரை டிக்கெட் ரேஞ்ச்க்கு இறங்கி காட்டறார்.. லோ ஹிப் சீன்களில் எவ்ளவ் நாசூக்ககாக, கண்ணியமாக கேமரா ஆங்கிள்ல காட்டனும், எந்த மாதிரி இருந்தா டீசண்ட்டா ரசிப்பாங்க  என்பதெல்லாம் சிம்ரன், பூமிகா படங்களை பார்த்து கத்துக்கனும்..  ஆனாலும் அஞ்சலி வந்த வரை அலுக்கவே இல்லை.. 

 ஓவியா செகண்ட் ஹீரோயின்..  கேரளா ரிட்டர்ன் ஓமனாக்குட்டி மாதிரி ஃபிகர் பாவாடை சட்டையோட வலம் வருது.. எந்த ஊர்ல 27 வயசுப்பொண்ணு இப்படி காஸ்ட்யூம்ல வருதோ? எங்க ஏரியாப்பக்கம் எல்லாம் 15 வயசு ஆனாலே தாவணி போடச்சொல்லிடுவாங்க.. இவர் காதல் வயப்படுவது எல்லாம் ரொம்ப செயற்கை.. ஆனா இது லவ் ஸ்டோரி அல்ல,, காமெடி படம் என்பதால் அந்த மைனஸ் எல்லாம் பெரிதாக தெரியாது.. 


படத்தின் பெரிய பிளஸ் யோசிக்க வைக்காத காமெடி பேஸ்டு ஸ்க்ரீன்ப்ளே தான்.. பாடல்கள் 3 ஓக்கே ரகம்..  



http://www.koodal.com/cinema/gallery/movies/kalakalappu/kalakalappu_6_427201220428123.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. அஞ்சலி, ஓவியா இருவரையும் வைத்து கிளாமரான ஸ்டில் எடுத்து மீடியாவில் பரப்பி படத்துக்கு நல்ல ஓப்பனிங்க், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

2.  கதைக்கோ, திரைக்கதைக்கோ தேவைப்படலைன்னாலும் 2 ஹீரோயின்ஸையும் அடிக்கடி குளிக்க வைத்து, ஒரு பாட்டுக்கு குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட வைத்து  வேலை வாங்கியது

3. சுமாரான கதையில் சந்தானத்தை முறைப்பையனாக வலியனா புகுத்தியது.. அவர் வரும்  காட்சிகள் ஆரவாரம்.. 

4.  ஓப்பனிங்க் சாங்கில் மயில் தோகையை பிரமாணடமாக காட்டி பாடல் காட்சியில் அழகியல் ரசனையுடன் சூட் பண்ணியது.. ( அவள் திரும்பி பார்த்து மெல்ல சிரித்தாள்.. பாட்டு)


5.  மசாலா கஃபேக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு சிவா அண்ட் கோ மிட் நைட்டில் திருடும் காட்சி கலக்கல் காமெடி.. 

6. உன்னைப்பற்றி உன்னிடமே எப்படிச்சொல்வேன் பெண்ணே அழகிய மெலோடி பாடல் படமாக்கப்பட்ட விதம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEG408E1z-1kRuCNRJidyWw1J3byJ54St4QJgZfxa88F7EGLZYVI2xImxrtLE5pR9K7Bo4DxxwRIsuCxpGIn2XxZjJNMjlMDbfHbgftr0ll-vTkXesPjpUnJ1N4Z8qtVWzzDXmiPIYDbwL/s0/kalavani_tamil_actress_oviya_stills_02.jpg

7.  பர்தா போட்டு திருடும் பெண்ணிடம் விமல் எனக்காக ஒரு ஹேண்ட் பேக்  திருடித்தாங்க என கெஞ்சுவதும் , அந்தப்பெண்  மாறுவேடத்தில் வந்த சிவாவாக இருப்பதும்.. செம

8.. எது வீசினாலும் அதை லபக்கும் நாய்-ன் கேரக்டரை வெச்சு 3 இடங்களில் நச்சென அமைந்த காமெடி

9. சுந்தர் சி யின் ட்ரேட் மார்க்கான உருட்டுக்கட்டை காமெடியை  இந்தப்படத்தில் வைக்காதது.. 

10.  காமெடி கிளப்பும் வசனங்கள்.. படத்தில் மொத்தம்  68 ஜோக்ஸ்.. அதில் கேபிள் சங்கர் எழுதியது 70 % என கணிக்கிறேன்.. 

11. நாளைய இயக்குநர் ல ஜட்ஜா வந்தப்போ கொடுத்த வாக்கை மதிச்சு அதன் இயக்குநர்கள் 2 பேருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பதும் அவர்கள் நடிப்பும் நீட்.. 

12. இளவரசுவின் கமல் கெட்டப் காமெடிகள், மனோபலா காமெடி படத்துக்கு பிளஸ்.. 

13. செம கிளாமர் சீன்ஸ் இருந்தும் படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது

14. எந்தப்படமும் போட்டிக்கு இல்லாம கோடை விடுமுறையில் ரிலீஸ் செஞ்சது




http://masscinema.in/wp-content/gallery/anjali-hot-red-saree/anjali-red-hot-saree-6.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அஞ்சலிக்கு ஓப்பனிங்கில் ஸ்லொமோஷன் பில்டப் கொடுத்துட்டு ஓவியாவை சர்வ சாதாரணமா இண்ட்ரோ கொடுப்பது ஏன்?

2. எந்த கேனயனாவது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை செல் ஃபோனில் வைத்து அதை அடியாளிடம் கொடுத்து அனுப்புவானா?அதுவும் அதன் முக்கியத்துவம் பற்றி ஏதும் சொல்லாமல்?

3. செல்ஃபோனை லபக்கும் அந்த டிக்கெட்  உடனே செல் ஃபோனை ஆஃப் பண்னாமல், அல்லது சிம் கார்டை தூக்கி வீசாமல் வர்ற கால்க்கு அட்டெண்ட் பண்ணி பதில் சொல்லிட்டு இருக்கே? அது அவ்லவ் கேணையா? பொதுவா ஒரு செல் ஃபோனை திருடுனா முதல் விதி சிம் கார்டை நயன் தாரா லவ்வரை கடாசற , மாதிரி, ஜெ  ஆகாத அமைச்சரை தூக்கி வீசற மாதிரி வீச வேணாமா?




http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/523169_430409203639634_1014517917_n.jpg

4. சிவா அவர் ஃபோன்ல இருந்து..வில்லன் போலீஸ்க்கு கமிஷ்னர் மாதிரி மிமிக்ரி பண்ணி பேசறார்..  அந்த வில்லன் போலீஸ் எந்த நெம்பர்னு பார்க்காமயே கேனம் மாதிரி  கமிஷ்னர்னு நம்பிடறார்.. ஏன் ஒரு போலீஸ் ஆஃபீசர்க்கு கமிஷ்னர் நெம்பர் தெரியாதா? இத்த்னைக்கும் சிவா அந்த போலீஸ் வில்லனுக்கு ஃபிரண்ட் வேற.. 

5.  ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி 90 % டைம் மசாலா கஃபேதான் சுத்திட்டு  இருக்கார்..  அவர்க்கு விமல் மேல காதல் வர்ற சீன் நம்பற மாதிரியே இல்லை..  ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்ல அவர் தகுதிக்கு மீறி 1100 ரூபாய்க்கு ஹேண்ட் பேக் வாங்கிக்குடுத்ததும் அவர்க்கு லவ் வந்துடுது.. அடங்கோ.. 

6. இடைவேளை வரை சீராக போகும் திரைக்கதை இடைவேளைக்குப்பிறகு டிராக் மாறுது.. கதையோட மெயின் பாயிண்ட் மசாலா கஃபே தானே? எதுக்கு சம்பந்தமே இல்லாம அஞ்சலி கிராமத்துக்கு போறது? சந்தானம் காமெடியை உள்ளே கொண்டு வரவா?

7. க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.. நறுக் சுருக்னு முடிச்சிருக்கலாம்.. சந்தானம் இருக்கற தெம்புல  இழு இழுனு இழுத்துட்டாங்க போல..

8.. மசலா கஃபே க்கு ஓனர்ஸ் 2 பேரு.. அப்படி இருக்கும்போது எப்படி சிவா தன்னிச்சையா  அந்த ஹோட்டலை அடமானம் வெச்சு சீட்டாடி தோக்க முடியும்?

9. ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல அந்த ஹோட்டலை பதிவு பண்ணி எழுதி வாங்கிக்கும் வில்லன்  சிவா கிட்டே மட்டும் சைன் வாங்கிக்கறார்.. அது எப்படி செல்லும்?

10. வில்லனுக்கு தெரியாம வைரத்தை ஒளிச்சு எடுத்துட்டு வந்து டீல் பேசறவங்க வில்லன் இன்ஸ்பெக்டரா இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயே மேல் பாக்கெட்லயே வைரத்தை வெச்சுக்கிட்டு டீல் பேசுவாங்களா?

11. ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி என்னமோ பஸ் ஸ்டேண்ட்ல நிக்கற  கனகாம்பரபூ  தலைல வெச்சிருக்கற  டிக்கெட் மாதிரி நடந்துக்குது..



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/tamil-actress-anjali-hot-navel1-300x207.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41 ( ஏன்னா செம காமெடியான ஓக்கே ஓக்கேவுக்கே 43 தான்)

 குமுதம் எதிர்பாப்பு ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - ஜாலியா போய் சிரிக்கனும்னு நினைக்கறவங்க, அஞ்சலி, ஓவியா கிளாமர் சீன் பார்க்க நினைக்கறவங்க, சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம்.. படம் பிரமாதம் எல்லாம் இல்லை.. மொக்கையும் இல்லை.. டைம் பாஸ் காமெடி

 ஈரோடு ஆனூரில் பார்த்தேன் ( இது ஒரு கில்மா படம் அல்ல.. )



http://www.thamilan.lk/news_images/49202893masalacafe3.jpg

35 comments:

குரங்குபெடல் said...

' அஞ்சலி வந்த வரை அலுக்கவே இல்லை.. "


இதெல்லாம் ஓவருய்யா . .

ரொம்ப பம்மிகிட்டே விமர்சனம் பண்ணுன

மாறி இருக்கு

'பரிவை' சே.குமார் said...

அப்ப படம் பாக்கலாம்ன்னு சொல்றீங்க...
விமர்சனம் எழுதுவதற்காக முதல் காட்சி பார்த்துடுவீங்க போல... ஆபீஸ் கட்டா...?

கும்மாச்சி said...

சி.பி. படம் கில்மா படமா இல்லையா? அதை விமர்சனத்தில் நச்சென்று சொல்லலாமே?

MANO நாஞ்சில் மனோ said...

ஓ இன்னைக்கு வெள்ளிகிழமையா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசியா கீழ ஒரு படம் போட்டிருக்கீங்களே, அத பாத்து ஏதாச்சும் கம்பேர் பண்ணி சொல்லனுமாண்ணே?

Anonymous said...

@சி.பி.செந்தில்குமார் ஐயய்யோ நா ஒன்னும் தப்பா சொல்லல பாஸ், சும்மா ஒரு காமெடிக்கு சொன்னேன்... btw இப்போ நீங்க போடுற மார்க்கும் விகடன் மார்க்கும் ஒன்னாவே இருந்தால், எங்களுக்கு சத்தியமா உங்க ஞாபகமே வராது... ஆனா இந்த மாதிரி பெருசா எதாவது வித்தியாசம் இருந்தால்தான், அடடே சி.பி இவ்வளவுதானே சொன்னாரு, இங்க ஜாஸ்தியா போட்டுருக்காங்களே ன்னு உங்கள கலாய்க்க தோணும்.. இதுதானே பாஸ் மனித குணம், இதுக்கு நாம மட்டும் என்ன விதி விலக்கா?

Anonymous said...

பாஸ் ஆகா மொத்ததுல ஓகேஓகேயவிட கம்மி, ஆனா ஒரு காமெடி ரசிகனா கண்டிப்பாபார்க்க வேண்டிய படம்னுசொல்றீங்க... ஆனா பாருங்க பாஸ், இந்த படத்துக்கு உங்க மார்க்கும், விகடன் மார்க்கும் ஒன்னாவே வந்துருச்சுன்னு(0r + - 2) வைங்க, கண்டிப்பா உங்கள தேடி வந்து பாராட்டுவேன்... இது எங்க மாமியார் மேல சத்தியம்...

Unknown said...

படத்தை ஓவரா நக்கலடிக்காம விமர்சனம் செய்வதிலும் ஒரு சுயநலம் இருக்கு....கேபிள் வேற வசனம் எழுதியிருக்காரு! அப்படித்தானே சித்தப்பு!

Anonymous said...

@பன்னிக்குட்டி ராம்சாமி ரெண்டு வித்தியாசம் கண்டு பிடிச்சிட்டேன்... மீதிய நீங்க சொல்லுங்க பாஸ்...

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

:))

பல்பு பலவேசம் said...

இந்த சீன் காட்சிகள் மட்டும் நாக்கு தரிசனம் ஒச்துநானு
720p resolution இல் விரைவில் இவை கிடைக்கும் அப்பா பார்த்துகிரேன்.
*
பண்ணிகுட்டி
அதெல்லாம் ஒனக்கு ஆகாது செல்லம!பால் குடி மறவாத புள்ள நீ

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஓஹோ, ஆராய்ச்சியாளரா? நீங்க.. வேணாம், எல்லாம் நாங்களே பார்த்துக்கறோம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@மொக்கராசு மாமா

:)) சவாலே சமாளி!!

சி.பி.செந்தில்குமார் said...

@வீடு சுரேஸ்குமார்

இந்த கமெண்ட் நீங்களா போட்ட கமெண்ட்டா? யாராவது இப்படி போடு. பிரச்சனையை கிளப்புவோம்னு சொல்லிக்குடுத்தாங்களா?

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்
ஹஹஹஹ! நீங்க என் கமெண்டை கண் மூக்கு எல்லாம் இருக்குமோ என்று ஆராய்ச்சி பண்ணவேண்டாம்.....உங்க பதிவை படிச்சுத்தான் கேபிள் வசனம் எழுதியதே எனக்கு தெரியும்.......

:)

பல்பு பலவேசம் said...

யோவ் நா காமன்டு போட்டது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியலியா?கண்ணாடிய கழட்டு கருனாநிதின்னு நெனப்பா?

பல்பு பலவேசம் said...

ஓவரா ஒவியாவை பார்த்ததுல உன் கண்ணு பழுத்து போச்சு!உச்..உச்..உச்

ராஜி said...

விமர்சனத்துக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

@விடுதலை கரடி

:)hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD NELLAI


ஹா ஹா நான் ஏமாறலை.. நீங்க ஏமாந்துடக்கூடாதுன்னு வார்னிங்க். நான் தான் எல்லா படமும் பார்க்கறேனே?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

விமர்சனம் வழக்கம் போல கலக்கல் .
உன்னிப்பாக கவனித்து உள்ளீர்கள் .
நான் படத்தை சொன்னேன் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

விமர்சனம் வழக்கம் போல கலக்கல் .
உன்னிப்பாக கவனித்து உள்ளீர்கள் .
நான் படத்தை சொன்னேன் .

சேகர் said...

உங்க விமர்சனம் அருமை அண்ணா... கூடவே படங்களும் அள்ளுது.....

சேகர் said...

உங்க விமர்சனம் அருமை அண்ணா... கூடவே படங்களும் அள்ளுது.....

சேகர் said...

உங்க விமர்சனம் அருமை அண்ணா... கூடவே படங்களும் அள்ளுது.....

kobikashok said...

நன்றி

Raj said...

why I am getting vomitting.. whenever I see Oviya ??

Anonymous said...

நல்ல விமர்சனம்... அஞ்சலி மேல என்ன அவ்வளவு பாசமா...? நிறைய அஞ்சலி படமாகவே இருக்கு...?

தல வந்து தலையை காப்பாத்துவரா! ஆஸ்கார் ரவிச்சந்திரன்?
http://www.hotlinksin.com/story.php?id=10442

Unknown said...

கலக்கல் பாஸ்

Saminathan said...

பாஸ் இந்த படம் சரியில்லைன்னு கூட சொல்லுங்க ஒத்துக்கறேன் பட் ஒகே ஒகே படம் அளவுக்கு காமெடி இல்லைன்னு நீங்க எழுதியிருக்கதெல்லாம் டூ மச்

”தளிர் சுரேஷ்” said...

படங்களை ரசித்தேன்!??

Unknown said...

நல்ல விமர்சனம்...

Anonymous said...

exact vikatan mark, 41/100, great

silverhawks said...

Soul Kitchen- German padathai kaapi adichu masala thadavi thanthu irukirar Sundar C (Nallaya iyakunar judge) Thu thu thu, maanam ketavaikenga

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல படம் தான். விமல் நல்லா நடிச்சிருக்கார். அஞ்சலியும், ஓவியாவும் நல்லா கட்டுகிறார்கள். அஞ்சலியை விட ஓவியாவுக்கு கதாபாத்திரம் பெருசு. இருந்தாலும் படம் எனக்கு புடிக்கலை. ஏன்னு தெரியலை. இருந்தாலும் சும்மா ஒரு பத்து தடவ பாக்கலாம்.
நல்ல நல்ல போடோகளை போட்டிருக்கிங்க நல்லது.