Tuesday, May 08, 2012

இலக்கியவாதி எழுத்தாளர் ஜெய மோகன் தாக்கு - சி.பி ஒரு அடிமுட்டாள் விமர்சகன்

http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/images/person/img_6318_0.jpg
நாகர்கோயிலில் நான் எழுதிய மலையாளப்படம் ஒழிமுறியின் படப்பிடிப்பு. கிட்டத்தட்ட குழுவே படத்தை பாதியில் விட்டுவிட்டு பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தை பார்த்தார்கள். வழக்கமாக நான் படப்பிடிப்புகளுக்குச் செல்வதில்லை. ஆனால் ஒழிமுறியில் பெரும்பாலான நேரம் இருந்துகொண்டிருக்கிறேன். நானும் குடும்பத்துடன் சென்று பாலாஜியின் படத்தைப் பார்த்துவந்தேன்.

தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று இது என்பதில் சினிமா தெரிந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சினிமா ஆக்கத்துடன் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்தலின் சிறு நுட்பங்கள் அனைத்திலும் முழுமையை நோக்கிச்செல்லும் படைப்புகளில் ஒன்று இது.சினிமா எடுப்பதைப்பற்றி அறிந்தவர்கள் அதில் முழுமை என்ற இலக்கை குறிவைப்பதே அபத்தம் என அறிவார்கள். அவர்கள் கண்ணில் இந்தப்படம் பிரமிப்பூட்டக்கூடியதாகவே இருக்கும்.

படத்தின் மீதான விமர்சனத்தை எழுதவிரும்பவில்லை. படம் எனக்கு அபாரமான மன எழுச்சியை உருவாக்கியது. கலை என்பதே நம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி சொல்லிப்பார்ப்பதுதான். கடவுள் மீதான மனக்குறையை அப்படி தீர்த்துக்கொள்வதுதான். கலைஞனின் கருணையும் கையாலாகாத கனவும்தான் பெரும்பாலும் கலையின் உள்ளடக்கம். இதுவும் அப்படியே.

ஒரு பொது அறிவுக்காக இணைய மதிப்புரைகளை வாசித்தேன். எந்த ஓரு விஷயத்திலும் இணையத்தில் தமிழில் தொண்ணூறு சதவீதம் அடிமுட்டாள்தனங்கள்தான் எழுதப்பட்டிருக்கும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நம்மாட்களுக்கு எதிலும் வாசிப்பும் இல்லை, வாசிப்பு தேவை என்ற புரிதலும் இல்லை. சினிமாவாவது ஏதோ பார்ப்பார்கள் என நினைத்திருந்தேன். அதிலும் மண்

இரு விமர்சனங்களை குறிப்பாகச் சொல்லவேண்டும். இந்த விமர்சனத்தை மன்னிக்கலாம், ஒரு வழக்கமான அசட்டுத்தனம். இந்த விமர்சனத்தில் அந்த மேதை 17 ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சொல்கிறார் பாருங்கள், ஹாலிவுட்டில் ஊறுகாய் வடிவில் பாதுகாக்கப்படவேண்டிய மூளை! 



அவரது கண்டனத்துக்கு உள்ளான பதிவு

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்  

http://www.adrasaka.com/2012/05/18-9.html


இது குறித்து உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

 

diski -

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
 
.
http://www.hotlinksin.com
 
 
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

 

20 comments:

Unknown said...

நம்ம செந்திலாரைக் கேவலப்படுத்திய அந்த விமர்சகரின் மூளையை வேண்டுமானால் நாய்க்கு தேங்காய் மாதிரி கொடுத்து விடலாம்!

குரங்குபெடல் said...

தம்பி நல்ல விளம்பரம்

நடத்து . . நடத்து . . .

அது அவரோட கருத்து . . . அவ்ளோதான் . .

அனுஷ்யா said...

உங்கள் விமர்சன பதிவில் varusha மற்றும் என்னுடைய கருத்துரைகளைப் பார்த்தாலே உங்களுக்கே தெரியுமுங்களின் விமர்சனம் பிழையானது என்று... உங்களின் பதினேழு ஆலோசனைகளுக்கான பதில்கள்...

1.எந்த ஒரு பெண்ணும் காதலிப்பவனைதான் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமா...? எல்லோரையும் சந்தேக பட அவள் என்ன PARANOID ஆ?

2.அந்த பெண்ணின் அப்பாவித்தனமாக அது உங்களுக்கு தெரியவில்லையா? கேனைத்தனமாக தெரிகிறதா?

3.அவனுக்கு பிறந்தநாளே இல்லை.. அந்த பெண்ணுக்காக போலியாய் பார்ட்டி வைக்கிறான் என்றுதான் சினிமாவிலேயே சொல்ல பட்டுள்ளதே?

4.அவன் அவளுக்கு ஒரு மொபைல் பரிசளிதுள்ளான்.. சிம் கார்டோடு.. அந்த நம்பரை அப்படி சேமித்து உள்ளான்..முதல் அழைப்பு வந்த பிறகும் அப்படியே உள்ளதாய் படத்தில் படத்தில் காட்டவில்லையே...

5.அவளே சொல்கிறாள் தான் திருச்சியில் இருந்து சென்னை வந்தவள் என்று... எல்லா சிட்டியிலும் கடல் உள்ளதா? இல்லை பட்டிக்காட்டவர்களுக்கு மட்டும் தான் கடல் ஓர் வியப்பா?

6.ஓர் அவசரம்..ஓர் ஆசை.. கடலில் குளிக்கிறாள்.. க்ரூப் ஸ்டடி என்று முதல் பொய் சொன்ன பெண்ணிற்கு மேற்கொண்டு பொய்கள் சொல்வது கஷ்டமில்லையே...

7.அவ்வாறு எடுப்பது சாத்தியம் இல்லை என்று நினைகிறீர்களா? முடியாதெனில் எப்படி இதனை ஸ்கேண்டல்கள் வலையில் உலவுகின்றன?

8.அந்த நைட்டி அவள் எடுத்து வந்தது போல காட்டப்படவில்லையே.. ஓர் ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் வழங்கப்படும் ஓர் குளியறை அரை உடைதானே அது...

9.மறுபடியும் அந்த அப்பாவித்தனத்தை பேக்கு என்று சொல்வதே தவறு... அவளை வலிந்து சென்று அவனிடம் விழவில்லை.. ஒவ்வொரு கட்டத்திலும் யோசிக்கிறாள்.. அவனின் நாடகத்தில் விழுந்துவிடுகிறாள்... அவளின் தோழிகளின் வட்டத்தில் இவளை ரொம்பவே அப்பாவியாய்தான் இயக்குனர் காட்டியுள்ளார்... அப்பாவிகள் ஆசை பட கூடாது என்றோ அவர்களின் மனம் சலனப்பட கூடாது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது...

10.மொபைல் மிரர் இமேஜ்...ஏற்கனவே சொல்லியிருந்தேன்...

11.அவன் ஒரு யதார்த்தமான பள்ளி வயது கிரிமினல்.. ஜேம்ஸ் பான்ட் பட வில்லன் அல்ல... அவளின் மன ஓட்டத்தை படித்து அதற்க்கு தகுந்தார்போலே காரியங்களை கொண்டு செல்கிறான்..

12,அவள் பார்த்தது ஒரு குழந்தையின் படம்.. இந்த காட்சியை நீங்கள் கவனிக்காததால் கூட அந்த பெண்ணை உங்களால் மதிப்பிட முடியாமல் போயிருக்கலாம்..

13.தவறுகள் என்பது எதிர்பாராமல் நடப்பது... காரை விட்டு வெளியே இறங்கும் முன் அந்த பெண் காதலுரைக்க தயாராகி இருந்தாள்.. திடீரென கார் நின்றதும் அந்த ஏமாற்றத்தில் அவன் எப்படி ஜாக்கிரதையாக மொபைலை பற்றியெல்லாம் சிந்திக்க முடியும்...

14.அந்த புக் சமாசாரம் எல்லாம் உப்புக்கு உதவாத ஒன்று.. தவறை நீங்கள் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்...

15.அதற்கு முன்பே நீதி நீதி வழங்கப்பட்டுள்ளதே...

16.ஆசிட் ஊத்தும் காட்சி ஓர் சினிமா திணிப்பு.. அவ்வளவு யதார்த்தம் இல்லை...இருந்தாலும் அந்த லெட்டர் கொடுப்பதில் என்ன குற்றம்? ஏன் என்று ஏன் கேட்கிறீர்கள்?

17.போலீஸ் மேலே ஆசிட் ஊத்தியதே படத்தோடு ஒட்டாத பொது...அந்த பள்ளி மாணவன் மீதும் ஊத்தியிருந்தால் விஜய் படம் மாதிரி ஆகியிருக்கும்... வழக்கத்தில் பல நிரபராதிகள் சிறையிலும் குற்றவாளிகள் வெளியிலும் இருக்கும் அவலத்தை சொல்ல நினைத்த யதார்த்த முயற்சியில் உங்களுக்கு தேவையான கை தட்டும் விஷயங்கள் எல்லாம் வைக்க முடியாதே,.. எப்பவும் உண்மைகள் கசக்கவே செய்யும்... கை தட்ட முடியாது...

18..முன் பின் பாதிகள் சரியாகவே உள்ளன... கதையின் கரு பின் பாதியில்தான் உள்ளது...

இந்த பதினெட்டு ஆலோசனைகள், விகடன் மார்க் தவிர உங்களின் விமர்சனம் எப்போதும்போலதான் இருந்தது...

நீங்கள் ஜாலியாய் விமர்சனம் எழுதுபவர் என்றாலும் உங்களுக்கு நிச்சயம் பதிவுலக பொறுப்பு ஒன்று உள்ளது.. ஆயிரத்தை தாண்டி பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.. உங்களின் விமர்சனம் ஒரு படம் குறித்த பார்வையை மாற்றிவிடலாம்.. மொக்கை படங்களை புரட்டியெடுக்கும் நீங்கள் நல்ல படங்களை கடுமையாய் விமர்சித்தாலும் பரவாஇல்லை.. குறைந்தது தவறான விமர்சனத்தை தராதீர்கள்..
உங்களை பின்பற்றும் ஆயிரத்தில் ஒருவன்...

Unknown said...

யார் இந்த ஜெயமோகன். இணையத்தில் அடிக்கடி பந்தாடப்படும் ஒரு பெயர். அந்த வகையில் அவருடைய ஆதங்கம் நியாயம் தான்.

சேலம் தேவா said...

எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கணும்.பிரபல எழுத்தாளர் கூட இணைய மதிப்புரை எப்டி இருக்குன்னு பாக்கறதுக்காக உங்க பதிவையும் படிச்சிருக்காரு.So,நீங்க பிரபலமாயிட்டே வர்றீங்க... :)

NAGARAJAN said...

ஜெய மோகனுக்கு போட்டியாக நீங்களும் சினிமாவுக்கு கதை வசனம் எழுதி அவர் முகத்தில் கரி பூச வேண்டும். பழிக்குப் பழி.

கோவை நேரம் said...

எனது நம்ம சிபி மூளை ஹாலிவுட்ல ஊறுகாயா இருக்கனுமா..?

காட்டான் said...

காய்த்த மரமே கல்லடிபடும்!!!!;-)

Unknown said...

சித்தப்பு! நல்ல படங்களை ஓரளவு விமர்சனம் செய்யலாம் ரொம்ம தோண்டி நொங்கெடுத்து எழுதுவதின் மூலம் சிலர் படங்களை தவிர்க்கலாம்....யார் பொழப்பிலும் நாம் மண்ணைப் போடக்கூடாது என்பது என்னுடைய கருத்து!

ராஜி said...

யாராவது கும்முறதுக்குள்ள நீங்களே கும்முக்குறீங்களா?!

கவி அழகன் said...

vaalthukkal

MARI The Great said...

தலை எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று ..!

MARI The Great said...

தல எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி ..!

உலக சினிமா ரசிகன் said...

வழக்கு எண் பற்றிய பதிவில் நீங்கள் எழுப்பிய கேள்விகள் எனக்கும் உடன்பாடில்லைதான்.
சிபி..தரமான படங்களை விமர்சிக்கும்போது நீங்கள் மிக ஜாக்கிரதையாக உங்கள் கேள்விகளை வைக்கவேண்டும்.
குறையே இல்லாத நிறைவான படம் ஒன்று கூட உலகத்தில் இல்லை.

ஜெயமோகன் உங்களை குறை சொன்னதை பெரிதுபடுத்த வேண்டாம்.
மோதிரக்கையால் குட்டு வாங்க கொடுப்பினை வேண்டும்.

MaduraiGovindaraj said...

சினிமா என்றால் விமர்சனம் உண்டு திரைக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு "கலக்குங்கள் சிபி என்ற சினிமா சுப்புடு"

நம்பள்கி said...

ஜெயமோகன் என்பவர் இலக்கியவாதி என்று சொல்லியுள்ளீர்கள். எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது? அவர் என்ன இலக்கியங்கள் படைத்த்தார்? ஏன் அவ்வாறு சொன்னிர்கள?

அனால் அவர் பேச்சில் திமிர் தெரிகிறது. How can he make a sweeping statement? இந்தப் படம் மைல் கல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாத் என்று? உனக்கு பிடிச்சா நீ பாரு. செந்திலுக்கு புடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு போ!

படம் ஆரம்பித்து பத்து நிமிடம் கழித்து நானும் தான் படத்தை நிறுத்தி விட்டேன். பார்க்கவில்லையே.

ஜெயமோகன் என்ன பெரிய ஆயாடக்கரா? இல்லை படத்தை அவர் எடுத்தாரா? யார் அவர்?

சபைக்கு வந்தால் நாலு பேர் நாலு விதமா எழுதத் தான் செய்வான்.

ஜெயமொஹனுக்கு செந்தில் மாதிரி எழுத முடியவில்லை என்ற பொச்சரிச்சல்!

செந்தில் மூளையை ஊறுகா மாதிரி வைக்கலாம்; இந்த ஆய்டக்கர் மூளையை உயிர்காலேஜில் தான் தேடனும்!

சென்னைத் தமிழில் உயிர்காலேஜ் என்றால் Zoo என்று அர்த்தம்!

J.P Josephine Baba said...

என்ன நண்பா ஜெயமோகனிடம் குட்டா? (no good)அதும் ஒரு விளம்பரம் தான் போங்க!

Pulavar Tharumi said...

சமீபத்தில் பாரதியாரை விமர்ச்சித்து பதிவு போட்டவர் தான் இந்த ஜெயமோகன் என்று நினைக்கிறேன்.

நீங்கள் கேட்டுள்ள 17 கேள்விகளும் எதார்த்தமானவை.

இப்போதைய சமுதாய சூழலில், ஒரு நல்ல படைப்பைக் கொடுத்து பெயர் வாங்குவது என்பதை விட, அடுத்தவர்களை விமர்ச்சித்து, மட்டம் தட்டி பெயர் வாங்கும் போக்கே இங்கு உள்ளது.

உங்களுடைய சிறப்பே, உங்களுடைய விமர்சன பாணிதான். எல்லோரும் எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது. பிடிக்காதவர்கள் அவர்கள் பாணியில் விமர்சனம் எழுதி கொள்ளட்டும். நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள் :)

நாட்டாமை said...

"எந்த ஓரு விஷயத்திலும் இணையத்தில் தமிழில் தொண்ணூறு சதவீதம் அடிமுட்டாள்தனங்கள்தான் எழுதப்பட்டிருக்கும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நம்மாட்களுக்கு எதிலும் வாசிப்பும் இல்லை, வாசிப்பு தேவை என்ற புரிதலும் இல்லை. சினிமாவாவது ஏதோ பார்ப்பார்கள் என நினைத்திருந்தேன். அதிலும் மண்." எதுக்கு எதை இணை வைத்து தனது ஞானத்தை வெளிப்படுத்தி தமிழனை எதுக்கும் (சினிமா பார்க்க கூட)லாயக்கற்றவன் என்று தைரியமாகச் சொல்கிறான். இவனை சும்மா விடலாமா சிபி?

நா.கிருஷ்ண கோபிகா said...

எல்லா பெரியவங்களும் சிபியை படிச்சுட்டு இருக்காங்கன்னு தெரியுது.. வாழ்த்துகள் சார்!