ஒவ்வொரு மனுஷனுக்கும் மறுபக்கம்னு ஒண்ணு உண்டு.. இதை படிச்சுட்டு இருக்கற நீங்களும் சரி, இதை டைப் அடிச்சுட்டு இருக்கற நானும் சரி, இதுக்கு விதி விலக்கல்ல.. விமர்சனம் எப்போ வரும்னா ஒரு மனிதனின் இருண்ட பக்கம், அல்லது அவனது கறுப்பு முகம் மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறப்ப..
விவாஜி என்ற நண்பர் கம் ட்வீட்டர் 4 நாட்களுக்கு முன்னால டைம் லைன்ல ஒரு ட்வீட் போட்டார்.. “ கவர்ச்சிகரமான , கிளாமர் நடிகைகளின் ஸ்டில்களை வெளியிடும் அட்ரா சக்க வில் இந்த ------------ பெண் ட்வீட்டரின் ஃபோட்டோவும் வந்திருக்கு, நடிகைகளின் தர வரிசையில் வந்த அவருக்கு என் வாழ்த்துகள்” அப்டின்னார்..
அந்த பெண் ட்வீட்டரின் பெயரையும் அதில் மென்ஷன் பண்ணி இருந்தார்.. நான் உடனே கேட்டேன்.. சார், நீங்க அந்த பெண் ட்வீட்டரின் குடும்ப நண்பர் கம் வெல்விஷர். நீங்க டைம் லைன்ல இப்படி சொல்லலாமா?
அதுக்கு அண்ணன் ரிப்ளை பண்ணுனாரு “ அதை ஆல்ரெடி நாங்க பேசிட்டோம்.. இப்போ பொது வெளில கேட்கறேன் பதில் சொல்லுங்கன்னாரு. ‘
வாக்குவாதத்தை தவிர்க்கவும், தேவை இல்லாமல் அந்த பெண் ட்வீட்டருக்கு மன உளைச்சல் வரக்கூடாது என்பதற்காகவும் நான் பதில் ஏதும் தர்லை, விட்டுட்டேன்.. அன்று இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை அந்த பெண் ட்வீட்டரும் , அண்ணன் விவாஜி அவர்களும் வாக்குவாதம் செஞ்சாங்க .. இப்போ நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்..
அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான முதல் கேள்வி - அட்ராசக்க பிளாக் டபுள் எக்ஸ் படம் எல்லாம் போடும் கேவலமான பிளாக்.. அதுல கவுரமான ஸ்டில் உள்ள ஒரு போஸ்ட்டை காட்டு பார்க்கலாம். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.அந்த பிளாக்கில் போடப்படும் ஃபோட்டோக்கள் எல்லாமே மோசமானவை. கவர்ச்சிகரமானவை.. ஒரு நல்ல போஸ்ட் நான் பார்த்ததில்லை.. ( vivaji @vivaji
எனது பதில் - அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு, தருமரின் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாருமே நல்லவங்களா தெரிஞ்சாங்களாம், துரியோதனன் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாரும் கெட்டவங்களா தெரிஞ்சாங்களாம்.. அந்த மாதிரி நீங்க கில்மா ஸ்டில் உள்ள படங்களா தேடித்தேடி போய் பார்த்திருக்கீங்க. அதான் அப்படி நினைக்க வெச்சிருக்கு. நான் இதுவரை 1357 போஸ்ட் போட்டிருக்கேன்.. அதுல சினிமா விமர்சனங்கள் போஸ்ட் 287... சினிமா நடிக நடிகைகளின் பேட்டி 146 , ஆக மொத்தம் 433 போஸ்ட்டில் மட்டும் தான் கிளாமர் ஸ்டில்ஸ் வந்திருக்கு,,
நான் போஸ்ட் போடற பேட்டர்னல டெயிலி காலைல ட்வீட்ஸ்களின் தொகுப்பா ஒரு போஸ்ட் போட்டுட்டு வர்றேன்.. அதுல நல்ல விதமான இயற்கை காட்சிகள், பறவை இனங்கள் ஃபோட்டோ எல்லாம் இருக்கு.. தயவு செஞ்சு அதை பார்க்கவும்.
எனது 1000 வது பதிவில் எங்கம்மா ஃபோட்டோ போட்டிருக்கேன். எனது 789 வது பதிவில் எனது குடும்ப பெண்களின் ஃபோட்டோ போட்டிருக்கேன். அதை எல்லாம் நீங்க பார்க்கலையா? கிளாமர் ஸ்டில் ஆல்ரெடி ஏதாவது போஸ்ட்டில் போட்டிருந்தால் மற்ற லேடீஸ் ஃபோட்டோ போட்டா கேவலமா?
அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 2வது கேள்வி - கிளாமரான நடிகை ஃபோட்டொக்கள் போடும் ஒரு பிளாக்கில் கவுரமான, குடும்ப பெண் ஃபோட்டோ போட்டாலும் பார்ப்பவர்கள் தவறா தான் நினைப்பாங்க .
எனது பதில் - ஆனந்த விகடன் இதழில் கிளாமரான நடிகை ஃபோட்டோகள் வரவில்லையா? கலகலப்பு பட ஸ்டில்லான அஞ்சலி , ஓவியா ஃபோட்டோகள் வந்த போது நீங்க அதை பார்த்து ரசிக்கலையா?ஆனந்த விகடனில் இதுவரை 887 கிளாமர் ஸ்டில்ஸ் 1998 இலிருந்து 2012 வரை வந்திருக்கு.. அப்படி கிளாமர் ஸ்டில் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் நல்ல குடும்ப பெண்ணின் ஃபோட்டோ வந்தால் அவரும் தவறாகத்தான் பார்க்கப்படுவாரா?
இதே ஆனந்த விகடனில் வலையோசை பகுதியில் அண்ணன் விவாஜியின் வலைப்பக்கம் பற்றி அறிமுகம் வந்தது.. மகிழ்ச்சி.. அப்போ அண்ணனும் அதை கொண்டாடுனார்.. தன் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனா கிளாமர் ஸ்டில்ஸ் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் தன் பிளாக் அறிமுகம் வந்துடுச்சேன்னு அவர் ஏன் வருத்தப்படலை?மாறாக பெருமை தான் பட்டார்..
காரணம் ரொம்ப சிம்ப்பிள்.. அந்த கிளாம்ர் ஸ்டில் வந்தது அந்த கட்டுரை அல்லது செய்திக்கு மேட்சாக.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை..
6 லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நியாயம். 2000 பேர் தினசரி படிக்கும் வெப்சைட்டுக்கு ஒரு நியாயமா?
3. அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 3 வது கேள்வி -பிளாகில் சி பி மார்க்கெட்டிங்க்காக கவர்ச்சிகரமான டைட்டில்களை வைக்கிறார். என்பது..
அவர் கேள்வியிலேயே பதில் இருக்கு.. ஒருசினிமாப்படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒட்டப்படும் போஸ்டர் ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி ஒரு பதிவு போட்டா அதுக்கு மக்களை கவரக்கூடிய தலைப்பு முக்கியம்.. அதனால தான் அப்படி போடறேன், அதுல என்ன தப்பு இருக்கு?
அண்ணன் மற்றும் குடும்ப நண்பர் விவாஜி அவர்களின் அறிவுபூர்வமான ட்வீட்ஸ்
1. I say it is wrong. தொடையும் தொப்புளும் இருக்கிற பதிவுல இந்தப் பெண்ணோட படத்துக்கு என்ன வேலை
2. Didnt I try to explain this yesterday? I am saying you are not wrong, you pictures are place in wrong place
3. Respect are all not to mention in Public, thats different. I say you should whom you are dealing with
4. Oh coming to Character Assassination, let it be.நான் இப்படித்தான்
5,சொல்லனுமா? மகா மட்டமான/ cheap title பதிவுகளா போட்டா எவன் மதிப்பான்?
6. உங்க மத்த பதிவுகள்ல நல்ல படங்கள் போட்டிருக்கீங்களா? #பனைமரம் #கள்.
3. அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 3 வது கேள்வி -பிளாகில் சி பி மார்க்கெட்டிங்க்காக கவர்ச்சிகரமான டைட்டில்களை வைக்கிறார். என்பது..
அவர் கேள்வியிலேயே பதில் இருக்கு.. ஒருசினிமாப்படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒட்டப்படும் போஸ்டர் ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி ஒரு பதிவு போட்டா அதுக்கு மக்களை கவரக்கூடிய தலைப்பு முக்கியம்.. அதனால தான் அப்படி போடறேன், அதுல என்ன தப்பு இருக்கு?
அண்ணன் மற்றும் குடும்ப நண்பர் விவாஜி அவர்களின் அறிவுபூர்வமான ட்வீட்ஸ்
1. I say it is wrong. தொடையும் தொப்புளும் இருக்கிற பதிவுல இந்தப் பெண்ணோட படத்துக்கு என்ன வேலை
2. Didnt I try to explain this yesterday? I am saying you are not wrong, you pictures are place in wrong place
3. Respect are all not to mention in Public, thats different. I say you should whom you are dealing with
4. Oh coming to Character Assassination, let it be.நான் இப்படித்தான்
5,சொல்லனுமா? மகா மட்டமான/ cheap title பதிவுகளா போட்டா எவன் மதிப்பான்?
6. உங்க மத்த பதிவுகள்ல நல்ல படங்கள் போட்டிருக்கீங்களா? #பனைமரம் #கள்.
அண்ணன் விவாஜியிடம் எனது கேள்விகள்
1. மேலே சொன்ன 2 பாயிண்ட்சை விடுங்க.. உங்க குடும்ப நண்பர் ஃபோட்டோ என் பிளாக்ல வந்தது உங்களுக்கு பிடிக்கலை.. ஓக்கே ஒத்துக்கறேன்.. நேர்மையான, அவர் மேல் அக்கறை உள்ளவரா இருந்தா நீங்க என்ன செஞ்சுருக்கனும்? எனக்கு ஒரு ஃபோனை போட்டு அந்த ஃபோட்டோவை எடுத்துடுப்பா என்றால் மேட்டர் ஓவர். ஏன் எனக்கு ஃபோன் பண்ணலை?அல்லது உங்க குடும்ப நண்பரிடம் ஃபோனிலோ, டி எம்மிலோ அதை சொல்லி இருந்தாலும் மேட்டர் ஓவர். அதை ஏன் நீங்க செய்யலை?
2. ஒரு முறை குறும்படம் பற்றி டைம்லைன்ல ஒரு ட்வீட் போட்டீங்க. அதுக்கு நான் பதில் போட்டேன். நீங்க கதையோட ஒன்லைன் சொல்லி அதுக்கு திரைக்கதை அமைக்க முடியுமா?ன்னீங்க.. செய்யறேன்னேன்.. அது சம்பந்தமான உரையாடலில் நீங்க ஐ எஸ் டி கால் போட்டு எனக்கு 19 நிமிசம் பேசுனீங்க.. உங்க வேலை ஆகனும்கறதுக்காக செலவு பண்ணி ஃபோன் பண்ற நீங்க உங்க குடும்ப நண்பருக்காக 2 நிமிஷம் செலவு பண்ண முடியலையா? ஏன்?
3. உங்களுக்கு ஒரு தங்கை அல்லது அக்கா இருந்து இப்படி ஒரு ஃபோட்டோ நான் போட்டிருந்தா அவங்க பேர் வெளீல வராம ஃபோன் பண்ணி சொல்லி இருப்பீங்களா? அல்லது இப்படி டைம் லைன்ல பேசி அவங்க பேர் வெளில வரட்டும்னு செஞ்சு இருப்பீங்களா?
நம்மால பிரச்சனை எதுக்கு? என நான் அந்த ஃபோட்டோக்களை எடுத்துட்டேன். உடனே ஒரு பிரபல புத்திசாலி ட்வீட்டர் “ என்ன அந்த போஸ்ட்ல இருந்த ஃபோட்டோக்களை காணோம்? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? என கேட்டார் .. காமெடியாம்.. ஹா ஹா சிரிச்சாச்சு.
பெண் குயின் என்ற போஸ்ட் போட்டப்ப அந்த போஸ்ட்டில் பெண் ட்வீட்டர்களை ஜாலியா கலாய்ச்சு அவர்கள் மனம் நோகா வண்ணம், அவர்களும் ரசிக்கும்படியாகத்தான் பட்டப்பெயர் வெச்சு எழுதி இருந்தேன். அப்போது ஏதும் சொல்லாத ஒரு பிரபல ஆண் ட்வீட்டர் 3 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டருக்கு ஃபோன் போட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்.. “ உன்னை பற்றி வர்ற லைன்ஸை எடுக்க சொல்லு.. எதுக்காக உன் பேரு வருது? “ என
அவர் டி எம்மில் கேட்டார், நான் உடனே எடுத்துட்டேன். அப்படி மிரட்டிய பிரபல ட்வீட்டரிடம் நான் கேட்பது “ உங்க தோழியிடம் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர் எனில் ஏன் போஸ்ட் போட்ட அன்னைக்கே அதை சொல்லலை? அதை நீங்க படிக்கலைன்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. அந்த போஸ்ட் போட்ட அன்னைக்கே மாலை 6 மணிக்கு நீங்க அந்த போஸ்ட் பற்றி உங்க நண்பர்களிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது என்றதும் உங்க ஈகோ தலை தூக்கி.. “ ஓஹோ. நீ என்னை இப்படி மடக்கிறியா?நான் எப்படி உன்னை மடக்கறேன் பாரு? என்ற ஈகோ தான் அதுல தெரியுதே தவிர தோழி மீது நீங்க வெச்ச நட்புக்காக செஞ்ச மாதிரி எனக்கு தெரியல ..
ட்வீட் உலகின் நாட்டாமை என்று அழைக்கப்படும் ஒரு பெரியவர் கேட்கும் புத்திசாலித்தனமான கேள்வி
பிரச்சனை இவ்வளவு பெருசானப்பறமும் @senthilcp, அவர் இல்லை இவர் இல்லைன்னு வழவழகொழகொழன்னு இல்லாமா யாருன்னு சொல்லணும்
இல்லனா அவர் சொன்னது அனைத்தும் கட்டுக்கதை....விளம்பரத்துக்காக செய்தது..அவ்வளவே
அவருக்கு நான் கூறும் பதில்
ட்வீட்டப்பில் நடந்த மேட்டர் பற்றிய போஸ்ட்டில் ஒரு பெண் ட்வீட்டரின் படம் போட்டதுக்கே இவ்வளவு எதிர்ப்பும், தாக்குதலையும் அந்த பெண்கள் சந்திக்க வேண்டி வரும் அவலமான இந்த சூழலில் நான் அந்த பெண் ட்வீட்டர் பெயரை சொன்னா என்ன ஆகும்னு உங்களுக்குத்தெரியாதா? சம்பந்தப்பட்ட பிரபல ட்வீட்டர் அந்த பெண்ணை போட்டு தாளிச்சிட மாட்டாரா?
தனி மனித தாக்குதலில் எனக்கு விருப்பம் இல்லை.. எல்லோரிடமும் நட்புடன் பழகவே ஆசை.. எனவே தான் பெயர் சொல்லவில்லை.. சொல்ல வந்த கருத்து என்ன என்பதை சொல்லியாச்சு..
நான் இதுவரை யாரையும் அன்ஃபாலோ செய்யவில்லை, யாரையும் பிளாக் செய்யவில்லை.. அதை எப்படி பண்றதுங்கறதே நிஜமா எனக்குத்தெரியாது.ஆனா சிலர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. அது பற்றி எனக்கு கவலை இல்லை.சும்மா ஒரு தகவலுக்காகத்தான் இதை சொல்றேன்..
இன்னும் சில பிரபலங்கள் காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு இவர் ட்வீட்டை தேடிப்பிடிச்சாவது ஆர் டி பண்ணிடனும், ஆர் டி க்காக பிச்சை எடுக்கக்கூடாது, டைப் அடிப்பதெல்லாம் படைப்பு அல்ல , என்ற தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என் நன்றிகள்
நான் தனி ஆள்.. எனக்குன்னு எந்த குரூப்பும் கிடையாது.. ஆனால் சிலர் செட் சேர்த்துக்கிட்டு வேணும்னே டைம் லைன்ல என்னை நக்கல் அடிச்சு ட்வீட் போடறாங்க. அவர்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நல்ல தெளிவு பெற அவர்கள் என் சென்னை ட்வீட் பதிவுகளை பொறுமையாக முழுவதுமாக படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
டாக்டர் ரியாஸ் உட்பட 187 பேரை பிளாக் செய்து புகழ்பெற்ற ஒரு ட்வீட்டரின் பேட்டி பாகம் 7 லும், வாழை பற்றியும், மெகா ட்வீட்டப்பில் நடந்த பிரமாதமான சாப்பாடு, உபசரிப்பு,நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சத்யா, கரையான், பரிசல்காரன்,கேசவன் அவர்களுக்கு நன்றி சொல்லி பாகம் 8ம் அடுத்தடுத்த நாட்களில் வரும்.
டிஸ்கி-
இந்த மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/
பாகம் 2 படிக்காதவங்க
http://www.adrasaka.com/2012/
பாகம் 3 - http://www.adrasaka.com/2012/
பாகம் 4 -
11 comments:
அட விடுப்பா!!!!சொம்மா!!!!!
இதுவும் கடந்து போகும் என்று நினைங்க அண்ணா..
விடுங்க தல .. சில அதிமேதாவிகளுக்கு இதுவே பொழப்பு .. பழுத்த மரம் தான் கல்லடி ஆடும் . உங்க ஸ்டைல் ல சொன்னா நல்ல பிகர்ணா நாலு பேர் பார்ப்பாங்கதான்
சி.பி அண்ணா டிவிட்டருக்கு வர முன்பே உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகன்.. உங்கள் டைமிங் காமெடிகளும் சினிமா விமர்சனங்களையும் வியந்து பார்த்தேன்,டிவிட்டர் வந்த பிறகு உங்களுடன் நட்பு பாராட்டியதில் ரொம்ப மகிழ்சியடைந்தேன்.ஆனால் அண்மைக்காலமாக நடைபெறும் மாறி மாறீ தனிமனித தாக்குதல்கள்.. இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கவே முடியாதா, இது என்ன தமிழர் சிங்களவர் இனப்பிரச்சினையா, சாதாரண பிரச்சினைதானே சம்மந்தப்பட்டவர்கள் சந்தித்தோ அல்லது அலிபேசியோ நிகழ்ந்த சம்பவங்களை பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்காளேன்,எவ்வளவுகாலத்துக்கு இப்படியே மாறீ மாறீ டிவிட்டர் பதிவு யுத்தம் ? பார்க்கவே கவலையா இருக்கு அண்ணா... நான் யார் பக்கத்துக்கும் புகழ் பாட விரும்பல,ஆனால் அனைவரும் ஒண்றாக இருக்கவே விரும்புகிறேன்.. டிவிட்டர்களில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரும் பழக்கவழக்கம் இருக்கலாம்,ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்பதே எனது அவா..
விடுங்க மாம்ஸ் .... சில பேரு அப்படி தான் இருப்பாங்க.... நாம அவங்கள கண்டுக்கலன்னா ஏன் திருப்பி வர்றாங்க . இனிமே கேள்வி கேட்டா பதில் சொல்லாதீங்க . அவரு கேள்விய ஒரு பொருட்டா கூட நினைக்காதீங்க . அவரு இதெல்லாம் பண்ணுறது அவர பப்ளிசிட்டி பண்ணிக்க தான்னு நினைக்கிறன் . இல்லன்னா ஏன் ஒரே பிரச்சனைய திருப்பி திருப்பி பேசனும் ?
அதே மாதிரி தான் ட்விட்டர்லையும் சில பேரு இருக்காங்க . நாம எதாச்சும் எழுதுனா அத வச்சு அவங்களே நம்மள உருவகம் பண்ணிடுறாங்க . அதுக்கு அப்புறம் நம்ம என்ன நல்லது பண்ணாலும் அவங்களுக்கு நாம கெட்டவங்களா தான் தெரிவோம் . இதெல்லாம் சகஜம் மாம்ஸ் , விட்டு தள்ளுங்க. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.....
இப்படிக்கு ,
குட்டி
மாம்ஸ் என்ன கமெண்ட் மாடரேசன் வச்சுருக்கீங்களா ??? :(((
வணக்கம் சி.பி சார்!என்ன செய்ய?இப்புடியாச்சும் பிரபலமாகலாம்னு பாக்குறாங்க போல!தூக்கிப் போட்டுட்டு வேலையைப் பாருங்க!
இப்பதான் ஒரு உண்மை தெரியுது. பிரபல பதிவர்கள் டுவிட்டர்கள் யாரும் தன் சக பதிவர் பிரபல பதிவரா இருந்தா அவர் போடும் எந்த பதிவையும் முழுசா படிக்கமாட்டாங்க போல....
தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க மாதிரி அரகுறையா படிச்சிட்டு அறிக்கை விட்டு பல்பு வாங்குறாங்க...
விவாஜி என்ன சாமியார இருப்பாரோ... கில்மா படமா தேடி தேடி போய் பார்த்து இருக்காரு...
அவருக்கு ஒரு சின்ன அட்வைஸ்.. உங்களுக்கு பலான படங்கள் வேணுமுன்னா தயவு செய்து வேறு ஒரு நல்ல XXX சைட்ஸ் பார்த்துக்கொள்ளவும்.. இந்த தளமானது நம் அம்மா மாதிரி நமக்கு என்ன தேவயோ அதை நம் மனம் அறிந்து தானாகவே கொடுக்கும். அதனால்தான் உங்களுக்கு கில்மா படங்களா கொடுத்திருக்கு....
சிபி அண்ணா விடுங்க....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை....
அந்தப் பதிவை படிக்கும் போது எங்களுக்கெல்லாம் அப்படித் தோன்றவவே இல்லை. 18 வயதிற்கு மேல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெண்களே ஒப்புதல் தெரிவித்து இருக்கும் போது, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் கூட புகைப்படத்தை எடுத்துவிடுமாறு கோரமுடியாது.
புகைப்படத்தை வெளியிடும் விசயத்தில் உங்களுக்கோ அந்தப் பெண்மணிகளுக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிகிறது. இவர்கள் தான் தாங்களாகவே உரிமை கொண்டாடுகிறார்கள்.
தவிர, சமூதாயத்தில் நாளு பேர் நாளு விதமாக பேசத்தான் செய்வார்கள். இதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொண்டால் நம் தனித்துவத்தை இழக்க நேரிடும். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பணியை தொடருங்கள்.
இதுல ஆச்சர்யப்படரதுக்கோ கோவப்படரதுக்கோ என்ன இருக்கு? காய்ச்ச மரம்தானே கல்லடி வாங்கும், அசாராம அடிக்கிறானேன்ற கடுப்புல செய்வாங்களா இருக்கும்...
ட்விட் உலக அரசியல்! விட்டுத்தள்ளுங்க! இந்த தொல்லைக்குத்தான் நான் இப்ப அதிகம் டிவிட்டரது இல்லை! தொடர்ந்து கலக்குங்க! கல்லடிகள் மறைந்து போகும்!
Post a Comment