Wednesday, May 23, 2012

ஒரு தன்னிலை விளக்கம் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 5

பிரச்சனையை திசை திருப்பறதுல தமிழனை அடிச்சுக்க உலகத்துலயே ஆள் கிடையாது.. தானைத்தலைவர் , தமிழ் இனத்தலைவர்  டாக்டர் கலைஞரும் சரி ,ஒரு நாக்கு, ஒரு சொல் என வாழும் டாக்டர் ராம்தாசும் சரி ,பிரியமான தோழியை உள்ளே வெளியே சீட்டு ஆட்டம் மாதிரி கட்டம் கட்டி விளையாடும் புரட்சித்தலைவியும் சரி,நாட்ல என்ன பிரச்சனை நடந்தாலும் அதை அவங்களுக்கு சாதகமா ஆக்கிக்க , தமிழனை ஏமாற்ற ஏதாவது ரீல் விட்டு அறிக்கைங்கற பேர்ல காமெடி பண்ணுவாங்க.. அந்த மாதிரி தான் இருந்துச்சு என்னோட ஆர் டி பற்றிய நேற்றைய பதிவுக்கான விளைவுகள், எதிர் ட்வீட்கள்

நான் சொல்ல வந்த மேட்டர் என்ன? படைப்பு நல்லா இருந்தா அதை ஆர் டி பண்ணுங்க.. ஆளை பார்க்காதீங்க.. அதை யார் ட்வீட் பண்ணி இருந்தா என்ன? இதுதான் சொல்ல வந்தது.. அதை விட்டுட்டாங்க.. யார் அந்த பிரபல ட்வீட்டர்? மாயவரத்தானா? அதிஷாவா? லக்கிலுக் யுவ கிருஷ்ணாவா? அப்டின்னு கேட்டு ஆளாளுக்கு டி எம் பண்றாங்க, ஃபோன் பண்றாங்க.. அதை சொல்ல விருப்பம் இருந்தா நான் பதிவுலயே சொல்லி இருக்க மாட்டேனா?பேசாம அண்ணன் கானா பிரபாவை இதுல இழுத்துவிட்டுலாமா?ன்னு மீ யோசிச்சிங்க்.. ஏன்னா அவரும் என் ட்வீட்ஸ் ஆர் டி பண்ணதில்லை.. :0


 ஒரு பிரபல ட்வீட்டர் கம் பதிவர் வாலண்ட்ரியா ,வாண்ட்டடா ஜீப்ல ஏறி அது நானா? அப்டினு டைம்லைன்ல அவர் பங்குக்கு காமெடி பண்றார்.. ஆக்சுவலா அது அவர் அல்ல.. ஆனாலும் அவர் விசுவாசிகள் கம் நண்பர்கள் சப்போர்ட் பண்றோம்கற சாக்குல பிரச்சனையை திசை திருப்பறாங்க.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அதற்கான என் விளக்கங்களும்


1. பிரபல பதிவர் பொண்ணுங்க கிட்டே கடலை போடறது சி.பிக்கு பிடிக்கலை.. பொறாமைல தான் அப்படி வேணும்னே கற்பனையா புனைந்து சொல்றாரு .. -


இது தான் செம காமெடி.. தினமும் 18 மணி நேரமும் கடலை போடுவது ஒன்றையே தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருக்கும் கடலை மன்னன் கட்டதுரையை விடவா அந்த பதிவர் பெரிசா கடலை போட்டுட்டார்? அவர் மேல் வராத பொறாமையா எனக்கு இவர் மேல் வந்துடப்போகுது?விடிகாலைல 3 மணிக்கு ஆரம்பிச்சு மிட் நைட் 12 வரை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்னு 3 பாஷைல 23 பேர்ட்ட கடலை போடறாரே குவிஸ் மன்னன் ரவி அவர் போடாத கடலையா இவர் போட்டாரு? நம்ம தல செந்தில்நாதன் 19 மணி நேரம் ஆன் லைன்லயே இருக்காரு.. அவர் போடாத கடலையா?அவ்ளவ் ஏன்?என்னையே எடுத்துக்குங்க , நான் போடாத கடலையா?

 இப்போ பொறாமைன்னா எப்படி வரும்னா நம்மை விட ஒருத்தர் டேலண்ட்டா இருக்கனும், அவருக்கு வந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காம இருக்கனும், அப்போ தான் பொறாமை வரும்.. என்னமோ நான் கடலையே போடாத மாதிரியும், அண்ணன் கடலை போட்டதால் தான் எனக்கு பொறாமை வந்த மாதிரியும் பேசறது எப்படி ஒத்துக்க முடியும் ?


2. திருப்புற சுந்தர கவர்மெண்ட்னு ஒரு ட்விட்டர் போட்ட எதிர் ட்வீட்டின் சாராம்சம் - ஏன் இதை செஞ்சே?ன்னு கேக்குறது எப்படி அத்து மீறலோ அதே போல் ஏன் இதை செய்யலைன்னு கேட்கறது அராஜகம்..


அண்ணன் என்ன சொல்ல வர்றார்ன்னா யார் கிட்டெயும் நீ போய் ஏன் ஆர் டி பண்ணலைன்னு கேக்காதே.. அது தனி மனித சுதந்திரம்.. அவங்கவங்க விருப்பம்.. பிடிச்சிருந்தா ஆர் டி பண்றாங்க, பிடிக்கலைன்னா விட்டுடறாங்க.. 


அவர் கருத்தை 100% நான் ஒத்துக்கறேன்.. இப்போ என் கேள்வியை அவர் சரியா புரிஞ்சுக்கலை.. அதாவது என் ட்வீட்டை ஏன் ஆர் டி பண்ணலை? என்பது என் கேள்வி அல்ல.. என் ட்வீட் எதுவும் ஆர் டி பண்ணாதவரு என் ட்வீட்டை பெண் பெயரில் போட்டதும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான் கேள்வி..


3. இன்னொரு பிரபல ட்வீட்டர் சொன்னது - நிஜ‌மாக‌வே ----------தான் அவ‌ர் சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சா ஓட‌விட்டு ஒட்டு துணி இல்லாம‌ அவுத்துடுவேன் அவுத்து

  ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? இப்போ என்ன ஆகிடுச்சு? கருத்து சுதந்திரம் இல்லையா? ஏதாவது சொன்னா உடனே டாக்டர் ராம்தாஸ் மாதிரி வன்முறைல இறங்கிடுவீங்களா? 


 4. ஒரு பிரபல பெண் ட்வீட்டர் சொன்னது - சாத்தான் வேதம் ஓதுது.. 


  ஏன் , ஒரு நல்ல விஷயத்தை நல்லவன் தான் சொல்லனுமா? கெட்டவன் சொல்லக்கூடாதா?( அதுக்காக நான் கெட்டவன்னு அர்த்தம் இல்லை) உங்க பேச்சுக்கே வர்றேன்.. எய்ட்ஸ் பற்றிய பிரசார கூட்டத்துக்கு ஒருத்தன் வர்றான் பாதுகாப்பான உறவு தேவை, சோ காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றான்னு வைங்க.. உடனே ஆடியன்ஸ்;ல ஒருத்தன் எழுந்து “ உனக்கே எய்ட்ஸ் இருக்கு.. நீ எங்களை எச்சரிக்க என்ன தகுதி இருக்கு?ன்னு கேட்கற மாதிரி இருக்கு.. அவனுக்குத்தான் அதிக தகுதி இருக்கு.. அங்கே போகாதே  பாழுங்கிணறு இருக்குன்னு ஆல்ரெடி கிணத்துல விழுந்து அடி வாங்குனவனுக்குத்தான் சொல்ல அதிக தகுதி இருக்கு.. நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன? சொல்லப்படற விஷயத்தை மட்டும் பாருங்க




 5இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டரும்,5572 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கறவருமான  அண்ணன் கார்க்கி போட்ட ட்விட்டர் லாங்கருக்கு என்  பதில் 






 நீங்க‌ எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கிற‌ ஆளு. அப்ப‌டி இப‌ப்டின்னு உஷாரா டிஸ்க்ள‌ய‌ம்ர் போட்டு ஆர‌ம்பிக‌க்ணும்ன்னு தோண‌ல‌ சிபி. நீங்க‌ ப‌ரிச‌ல‌தான் சொல்ற‌தா இருந்தா நேரிடையா சொல்ல‌லாம். அது போல‌ அந்த‌ பெண் ட்விட்ட‌ர் யாரு, எந்த‌ ட்வீட்டுன்னு நேரிடையா சொல்லலாம். 


அந்த பிரபல பதிவர் பரிசல் அல்ல.. அதே போல் எனக்கு உதவி செய்த அந்த பெண் ட்வீட்டரை  அவங்க பேரை நான் ஏன் சொல்லனும்? அது தேவை இல்லாத பல பிரச்சனைகளை கொண்டாந்து விடும்..




அத‌ விட்டுட்டு ஏதோ கிசு கிசு ரேஞ்சுக்கு எழுதி இருப்ப‌த ர‌சிக்க‌ முடிய‌ல‌. முத‌ல்ல‌ நீங்க‌ மெகா ட்விட்ட‌ப்ல‌ பேசின‌ப்ப‌வே ஏன் யாரும் அவ‌ர த‌டுக்க‌ல‌, அட்லீஸ்ட் பேசி முடிச்ச‌ப்பின்ன‌ அது ப‌த்தி பேச‌லைன்னு கேட்டுட்டு இருந்தேன். உங்க‌ ஆர்டி ப‌ஞ்சாய‌த்து காமெடியா இருக்கு. யார் யார் எத‌ எத‌ ஆர்.டி ப‌ண்ண‌னும்ன்னு நீங்க‌ லிஸ்ட் போடுறீங்க‌. அதையும் சில‌ர் ம‌ன‌சுல‌ ப‌ட்டத‌ பேசுறீங்க‌, தேர்ந்த‌ ஜெய‌காந்தன் ந‌டைன்னு காமெடி ப‌ண்றாங்க‌. 


அண்ணே, நீங்க தான் காமெடி பண்றீங்க.. கூட்டத்துல மனசுல பட்டதை பேச எல்லாருக்கும் உரிமை இருக்கு.. சட்ட திட்டம் போட்டு இது இதுதான் பேசனும்னு ஏதாவது ரூல்ஸ் சொல்லி இருந்தீங்களா?  நான் எதை ஆர் டி பண்ணனும்னு லிஸ்ட் போடலீங்கோவ்.. நல்லா படிங்க.. அந்த போஸ்டடை,, என் பாயிண்ட்.. என்னோட நல்ல ட்வீட்டை ஆர் டி பண்ணாம என்னோட குப்பை ட்வீட்டை ஒரு பெண் பெயரில் போட்டப்ப மட்டும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான்.. அதுக்கு பதிலை காணோம்.. சம்பந்தம் இல்லாம ஏண்ணே சண்டைக்கு வர்றீங்க? அண்ணே அந்த அளவு நான் ஒர்த் இல்லீண்ணே..



புதுசா வ‌ர்ற‌வ‌ங‌க்ள‌ நிறைய‌ பேர் ஃபாலோ ப‌ண்ண‌ மாட்டாங்க‌. அத‌னால‌ அவ‌ர் ட்வீட்ஸ் பல‌ரும் ப‌டிக்க‌ வாய்ப்பு இருக்காது. அதையே நிறைய‌ ஃபாலோய‌ர்ஸ் இருக்கிற‌ ஆளு ஆர்.டி ப‌ண்ணும்போது அவ‌ரோட‌ எல்லா ஃபாலோய‌ர்ஸூக்கும் அந்த‌ ட்வீட் க‌ண்ணுல‌ ப‌டும். அப்ப‌ உட‌னே ஆர்.டி ப‌ண்ணுவாங்க‌. இந்த‌ சின்ன‌ லாஜிக் கூட‌ தெரியாம‌ க‌ல்யாண் ஜுவ‌ல்ல‌ர்ஸ் பிர‌பு ரேஞ்சுக்கு குர‌ல‌ உய‌ர்த்தி சீமான் ரேஞ்சுக்கு முஷ்டி ம‌ட‌க்கி நீங்க‌ அன்னிக்கு க‌த்தின‌தெல்லாம் ஹார்ட்கோர் காமெடி.



ஹா ஹா ஹா அப்போ நீங்க என் போஸ்ட்டை முழுசா படிக்கலைன்னு அர்த்தம்.. ஏன்னா அண்ணன் டைம் லைன்ல இருக்கறப்ப தான் நான் ட்வீ்ட்ஸே போட்டேன்


அன்னைக்கு பெண் ட்விட்ட‌ர்க‌ள் அமுக்க‌ல் அம‌ராவ‌தி அது இதுன்னு எழுதின‌ப்ப‌வே யாராச்சும் வ‌ம்புக்கு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சிருப்பீங்க‌.


 அண்ணே, உங்களுக்கு இன்னும் விபரம் பத்தலண்ணே... சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர், அவர் கணவர் அங்கீகாரம் கொடுத்த பின் தான் அப்படி எழுதுனேன்.. ஹய்யோ அய்யோ ஜில்னு மோர் சாப்பிடுங்கண்னே.. சரி ஆகிடும்
 
 அது ச‌ப்புன்னு போயிடுவே‌ இத‌ ஆர‌ம்பிச்சீங்க‌. அடுத்து ஏதோ பிளாக் மேட்ட‌ராமே.. உங்க‌ இந்த‌ அட்டென்ஷ‌ன் சீக்கிங் ப‌ரிச‌ல்தான் டேமேஜ் ப‌ண்ணியிருக்கு. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌த்தி க‌வ‌லையில்லை. சில பேரு உங்க ப‌திவ‌ ப‌டிச்சுதான் ட்விட்ட‌ருக்கான‌ இல‌க்க‌ண‌த்தையே தெரிஞ்ச‌ மாதிரி க‌மென்ட் போட்டிருப்ப‌தால் நான் ப‌தில் சொல்ல‌ வேண்டியிருக்கு. ஃபாலோ செய்ற‌து, ந‌ல்லா ட்வீட்டாவே இருந்தாலும் அத‌ ஆர்டி ப‌ண்ர‌து அவ‌ங்க‌ இஷ்ட‌ம் என்ற‌ எல்.கே.ஜி டைப் அட்வைஸ‌ சொல்ற‌துக்கு என‌க்கே அருவ‌ருப்பா இருக்கு.

சி.பி - நான் யாருக்கும் அட்வைஸ் பண்னலையே, எனக்குத்தோன்றியதை நான் என் பிளாக்ல போடறேன்.. அதை என் வாசகர்கள் படிக்கறாங்க.. அது தப்பு, என்ன போஸ்ட் ட்விட்டப் பற்றி போட்டாலும் என் கிட்டே அப்ரூவல் வாங்கித்தான் போடனும்னு சொல்ல வர்றீங்களாண்ணே?

ஜோக் எழுத‌றேன்னு ஜோக் அடிக்கிற‌தோட‌ நிறுத்திக்கொங்க‌. தேவையில்லாம‌ ப‌ரிச‌ல்கிட்ட‌ பிர‌ச்சினை மாதிரி இனியும் செய்யாதீங்க‌.  


சி.பி -இது என்னமோ மிரட்டற மாதிரி இருக்கு.. நான் டம்மி பீசுண்ணே.. சாதாரண  ஆள்.. உங்க ரேஞ்சுக்கு பெரிய ஆள் கூட மோதுங்கண்ணே.. 


மொத்தமாக என் கருத்துக்கு ட்விட்டர் உலகில் 12 பேர் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.. ஆனா ஆதரவா 187 பேர் கருத்து சொல்லி இருக்காங்க? அப்போ 12 பெரிசா? 187 பேரு பெரிசா? கருத்துக்கணிப்பு எடுங்க..



டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

 

 

10 comments:

MARI The Great said...

இன்னிக்கு நாம தான் பஸ்ட்டு ஹி ஹி ஹி ..!

Unknown said...

சரியா சொன்னீங்க சிபி. வாழ்துக்கள்

கார்க்கிபவா said...

உங்க‌ள‌ மாதிரி வ‌ரிக்கு வ‌ரி க‌ட் ப‌ண்னி பதில் சொல்ல‌ வேணாம்னு பார்க்கிறேன் :))

1) நீங்க‌ ட்விட்ட‌ப்ல‌ பொதுவாதான் சொன்னீங்க‌. அதாவ‌து யாராச்சும் புது ட்விட்ட‌ர் போட்டா ஆர்.டி ப‌ண்ணாம‌, அதிக‌ பேர் ஃபாலோ ப‌ண்ர‌ ஆளு ப‌ண்ண‌ உட‌னே ஏன் ப‌ண்றீங்க‌ன்னு.. அதுக்காக‌ விள‌‌க்க‌ம் தான்.

3) அனும‌தி வாங்கித்தான் போட்டீங்க‌ன்னா இப்ப‌ ஏன் அந்த‌ பெண் ட்வீட்ட‌ர்ஸ் ப‌திவுல‌ அமுக்க‌ல் அம‌ராவ‌தியும் இன்னொரு பெண் ட்விட்ட‌ரை ப‌ற்றிய‌ மேட்ட‌ரையும் டெலீட் ப‌ண்ணீங்க‌??


3) அது அப்ரிச‌ல் இல்லைன்னு நீங்க‌ ஜிம்ப‌ல‌க்க‌டி ஜிம்பா அடிச்சாலும் யார‌ நினைச்சு எழுத‌னீங்க‌ன்னு தெரியும். என‌க்கு லேட்டாதான் தெரிஞ்ச‌து. இப்ப‌ அவ‌ர் இல்லைன்னு சொன்னாலும் எது உண்மைன்னு தெரியும்.

4) உங்க‌ள‌ பேச‌வே விட்டிருக்க‌ கூடாதுனு சொல்ல‌ல‌. நீங்க‌ ட்விட்ட‌ர‌ ப‌த்தி புரிஞ்சிக்காம‌ பொங்கின‌ப்பா தெரிஞ்ச‌வ‌ங்க‌ இடை ம‌றித்து உங‌க்ளுக்கு விள‌க்க‌ம் சொல்லியிருக்க‌லாம்ன்னு சொல்றேன்.. நீங்க‌ ச‌ரியா ப‌டிங்க‌ முத‌ல்ல‌ :))

நீங்க‌ ஆர்டி வாங்குவீங்க‌ளோ 12 டீ வாங்குவீங்க‌ளோ.. என்ன‌வோ செஞ்சுக்கோங்க‌.. என்னைக்காச்சும் ப‌ரிசலாதான் சொன்னேன்னு சொல்ற‌ தில்லு இருந்தா சொல்லி அனுப்புங்க‌.. அன்னைக்கு வ‌றேன்.. :))

சி.பி.செந்தில்குமார் said...

@கார்க்கி



அமுக்கல் அமராவதி கமெண்ட் நான் கட் பண்ணலையே? நல்லா பதிவை பொறூமையா படிங்க, பாயிண்ட் 7 ல அப்படியே தான் இருக்கு..

ஒரு பிரபல பெண் ட்வீட்டர் மட்டும் போஸ்ட் போட்ட அன்னைக்கு படிச்சுட்டு எதுவும் சொல்லலை, நேத்து அவரோட நண்பர் யாரோ சேட்ல மிரட்டி இருக்காங்க.. அதனால அவங்க “ என் சம்பந்தப்பட்ட கமெண்ட்சை எடுங்க”ன்னு கேட்டுக்கிட்டாங்க.. எடுத்துட்டென்:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விவகாரம்...
விளக்கம்...
விவகாரம்...
விள... ...

Unknown said...

ஒருவர் வெளிப்படையாக கருத்தை தெரிவித்தால் ,எதிர் கருத்தை தெரிவிப்பதில் தவறில்லை ..அதை விட்டு அவுத்து விட்டு அம்மணமா என்று சொல்வதெல்லாம் சிறு ஊடலை ,பெரிய விசயமாக ஆக்குகிற விஷயம் ..

இதுவும் கடந்து போகும் சிபி சார் ..

Unknown said...
This comment has been removed by the author.
பல்பு பலவேசம் said...

ஆமா பெரிய காந்தி கொலை வழக்கு ஒன்று ரெண்டு மூன்னுன்னு சாகடிக்கிற!
அந்த ப்ராப்ள ப்ரபாவுக்கும் உனக்கு என்னதான் சண்டை?ட்விட்டர் என்பதே ஒரு தெண்ட கருமாந்திரம்..அதுல நீ மொக்க ட்வீட் பொதுவ அதுக்கு அவனுங்க சண்டை போடுவானுங்க மெரீனா பீச்சுல போய் சரக்கடிப்ப?இதெல்லாம் தேவையா?மூடிகிட்டு சினிமா விமர்சனம் மட்டும் எழுத்து..அத விட்டுட்டு நாட்டாம் குசு விட்டார் பிரபா உச்சா போனான் இதெல்லாம் எவனுக்கு வேண்டும்?

”தளிர் சுரேஷ்” said...

பதிவுலகில் தான் அரசியல் என்றால் ட்விட்டரிலுமா? ஆகா! வெளங்கிடும்!

வவ்வால் said...

சிபி,

என்னைய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு, யாரு ,யாரை ஆர்.டீ செய்தா என்ன ஆறாத டீ செய்தா என்ன? , எத்தனைப்பேரை பாலோவ் செய்தா என்ன? , 180 கேள்விக்கேட்டா எப்போ வந்து பதில் சொன்னா என்ன? அதை எல்லாம் எதுக்கு கேள்விக்கேட்டுப்பொலம்பணும், நமக்கு யாரு ஒத்து வராங்களோ அவங்க கூட பேசிட்டு போகணும்.

இப்படிலாம் என்னைப்போல டிவிட்டரா இருக்கணும் என ஊருக்கு அட்வைஸ் (அட்வைஸ் இல்லை பொதுவா சொன்னேன்னு சொன்னாலும் சரி)செய்தா அப்புறம் இப்படி திருப்பிக்கேட்பாங்க,

1)உங்கப்பதிவில் பின்னூட்டம் போடுறவங்க எல்லாருக்கும் ,பதில் பின்னூட்டம் போடுறிங்களா?

2) பின்னூட்டம் போட்டவங்களுக்கு எல்லாருக்கும் உங்கப்பதிவில் பதில் சொல்லி இருக்கிங்களா?

3) குறைந்த பட்சம் அனைவருக்கும் நன்றினு ஆவது சொல்லி இருக்கிங்களா?

4) வரிசையா 10 பேரு பின்னூட்டம் போட்டு இருப்பாங்க,ஆனால் சில பதிவர்களின் பின்னூட்டத்திற்கு மட்டும் அக்கறையாப்பதில் சொல்லுறது ஏன்?

இப்படிக்கேள்விக்கேட்டு ,நான் எல்லாருக்கும்,பதில் சொல்வேன்,நன்றி சொல்வேன், அவங்கப்பதிவுக்கும் போய்ப்படிப்பேன் அப்படியே நீங்களும் செய்யணும் என யாராவது வந்து உங்களுக்கு அறிவுரை சொன்னா என்ன பதில் சொல்வீங்க :-))

ஹி...ஹி இதை நான் கேட்டதா நினைச்சுக்காதிங்க ...யாராவது இப்படி திருப்பிக்கேட்கும் வாய்ப்பு இருக்குனு சொல்ல வந்தேன்.