Wednesday, May 02, 2012

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

9 comments:

மன்மதகுஞ்சு said...

இந்த படங்களுக்கான லிங்க் கிடைச்சா பகிருங்கள்,நான் போன வாரம் தவறவிட்டிட்டேன்,மிக நல்லதொரு விமர்சனம் ,தவறவிட்டவர்களை மீண்டும் தேடி பார்க்கச்செய்யும்.

ராஜி said...

அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்..
>>
இதுல ரெண்டு விசயம் கன்ஃபார்ம் ஆகுது சிபி சார். நீங்க எல்லாத்தையும் கவனமா பார்த்துக்குறீங்க. ரெண்டாவது கீர்த்தி மேல உங்களுக்கு நெம்ப அக்கறைன்னு.

ஹாலிவுட்ரசிகன் said...

எங்காவது இந்தப் ப்ரோக்ராம் ஆன்லைன்ல பார்க்க லிங்க் இருந்தா தயவு செய்து போடுங்களேன் சி.பி. அடிக்கடி ப்ரோக்ராம் மிஸ் ஆகிடுது.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல விமர்சனம்! கலைஞர் டிவியை இதற்காகவாது பார்க்கலாம்! என்று நினைக்கிறேன்!

Anonymous said...

இப்பதான் பார்த்தேன் சி பி...
வடை போச்சே...
பித்தர் சுட்டுட்டு போய்ட்டாரே...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

விஜய் டிவி நாளைய இயக்குனர் கீர்த்தி பத்தி வர்ணிச்சது எல்லாம் சரி.. ஆனா அவங்க GENRE என்ற வார்த்தையின் சரியான உச்சரிப்பு தெரியாமல் ஜெர்னல் என்று சொல்லிக்கிட்டுருந்தாங்க .. அதை சரி பண்ண சொல்லுங்க தெரியாத மொழியில் கஷ்டப்பட்டு தப்பு தப்பா பேசறதை விட தெளிவா தமிழிலேயே பேசி இருக்கலாம் தமிழ் சேனலில் ஆங்கிலத்தில் பேசவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை வெற்றி மாறன் கூட நல்லா பேசறார். இலக்கிய நடை அல்லது நடை என்ற அழகான தெழிவான தமிழ் இருக்கும் போது தப்பு தப்பான ஆங்கிலம் தேவை இல்லை.

Unknown said...

correction கலைஞர் tv...