Friday, May 18, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18.5..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/p480x480/542866_282481731839813_172708432817144_608265_631120300_n.jpg 

1. ராட்டினம்  - லகுபரன் – ஸ்வேதா நடிப்பில் தங்கசாமி இயக்கியிருக்கும் படம் ராட்டினம். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்தான் நடைபெற்றது. இந்தப் படம் வரும் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராட்டினத்தை வேந்தர் மூவிஸ் மதன் ரிலீஸ் செய்கிறார். ராட்டினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தூத்துக்குடியில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ராட்டினம் படம்’ என கௌதம் மேனனும் மேலும் பேசிய இயக்குநர்கள் படத்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியது படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

புதுமுகங்கள் நடிக்க புதிய இயக்குநர் தங்கசாமி எழுதி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதன் விளைவு அந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை படத்தைத் தயாரித்த மதன்,வாங்கி வெளியிட முடிவு செய்தார். அவருடன் இப்போது வேந்தர் பிலிம்ஸ் மதனும் இணைந்து கொண்டார். இதனால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. இதனால் இதுபோன்ற புதுமுகங்களின் படத்துக்கு வியாபாரம் என்பதே இல்லை என்பதைப் பொய்யாக்கி இந்தப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம். இந்நிலையில் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஒரு கோடி கொடுத்து சன்தொலைக்காட்சி வாங்கிவிட்டதாம்.
http://www.cinespot.net/gallery/d/899832-1/Raattinam+movie+stills+_21_.jpg

இதனால் படத்தின் தயாரிப்பாளருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.காரணம்,படத்தின் மொத்த பட்ஜெட்டே தொண்ணூறு இலட்சம்தான் என்கிறார்கள். அந்தப் பணத்தைச் செலவிட்டு படத்தை எடுத்து முடித்த நேரத்தில் படத்தை வெளியிடுவதற்காக மதன்கள் வாங்கிக்கொண்டதால் விளம்பரச் செலவுகள் அனைத்தும் அவர்களையே சேர்ந்துவிட்டது. இதனால் ஒரு சின்னச் சிக்கல் கூட இல்லாமல் போட்ட பணத்தை எடுத்துவிட்ட தோடு படம் ஓடுகிற அளவுக்கு இலாபத்தையும் பார்க்க முடியும் என்கிற ஒப்பந்தமும் இருப்பதால் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

அதோடு அடுத்து ஒரு படத்தை இயக்க இதே இயக்குநரிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சினிமா ரொம்ப ரொம்ப நல்ல தொழில். ஈரோடு ஸ்ரீசண்டிகாவில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg68WfndkSXcbYsMHjSU4mNzMlw75_Wa96hxaJRkT4-h5hPxoAlmJ-dbG-iEoe3zwZKbD8yO5GbCvRpcRZNGwlu9h2ZrkWlEI2B-MuhrqrtMim6tQovNg0TbAuyJ3k6su0kosOaKSqxdQ0F/s1600/download-latest-movie-stills-sridhar-posters-tamil-mp3-songs-free.jpg
2. ஸ்ரீதர் - சித்தார்த், ஸ்ருதி, ஹன்சிகா, நவ்தீப் நடித்த ஸ்ரீதர் என்ற படம் தமிழில் வெளியாகிறது. இது தெலுங்கில்  வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பஞ்சரான படத்தின் தமிழ் டப்பிங். ஆனால் புதிய தமிழ்ப் படம் போல் வெளியிடுகிறார்கள்.இந்தப் படத்தில் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த்துக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.ஈரோடு ஸ்ரீலட்சுமியில்,அண்ணா,சீனிவாசாவில்  ரிலீஸ்

 http://truthdive.com/wp-content/uploads/2012/04/kk-5-300x200.jpg

3. கண்டதும் காணாததும்  - எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் எஸ்.சங்கரநாராயணன், எஸ். இந்து   தயாரிக்கும் படம் கண்டதும் காணாததும்.
இதில் நாயகனாக விகாஷ், நாயகியாக  சுவாஷிகா நடிக்கின்றனர். பரோட்டா  சூரி, ஆர். சுந்தரராஜன், சூப்பர் குட் லஷ்மணன்,  நிஷா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு  கதை, திரைக்கதை, வசனம்  எழுதி சீலன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்
http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg
ஒரே  கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் நட்புடன் பழகுகின்றனர். திடீரென அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டு  இருவரும் பிரிகின்றனர். பிரிவுக்கு காரணம் என்ன மீண்டும் இணைந்தார்களா? போன்ற கேள்விகளுக்கு  விடையாக  இப்படம் வருகிறது.

ராகிங், பேர்வெல் டே, கல்லூரி தேர்தல் என வழக்கமான  காட்சிகள் இல்லாத புதுமையான கல்லூரி காதல் கதையாக உருவாகிறது. சென்னை, மதுரையில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

இசை: வி.ஏ. சார்லி, ஒளிப்பதிவு: வின்ஷி பாஸ்கி, எடிட்டிங்: பி.எஸ். வாசு, பாடல்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன் இணை தயாரிப்பு: பெரியம்மாள் கலைக்கூடம் சார்பில் எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.மணிமாறன். . ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்

http://desiboost.com/telugu/wp-content/uploads/2011/11/Sri-Rama-Rajyam-Telugu-Movie-Preview.jpg


4. "ஸ்ரீராம ராஜ்ஜியம்". -நடிகை நயன்தாரா, நடித்திருக்கும் படம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்". ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராமராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நடிகை நயன்தாராவும் நடித்துள்ளனர்.

ஸ்ரீ சாய் பாபா மூவிஸ் சார்பில் எலமஞ்சலி சாய் பாபு தயாரிக்க, பாபு இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பி.ஆர்.கே.ராஜூ ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ணா ராவ் படத்தொகுப்பு வேலையை கவனித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் பெரும்பாலும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

http://www.cineindya.com/wp-content/uploads/2011/11/Telugu-Movie-Sri-Rama-Rajyam-Pictures-Gallery-3.jpg


இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது.ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்

http://phim1s.net/images/film/cuoingaykeolo.jpg


 5.BLACK DRAGON -  ஏழாம் அறிவு படத்தில் ஹிப்னாடிஸ் வில்லனாக வந்து ஒரு கலக்கு கலக்கினாரே டோங்க்லீ அவர் ஹீரோவா  நடிச்ச படம் .. ஒரிஜினல் டைட்டில் cuoi ngay keo lo... ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

3 comments:

Speed Master said...

ஸ்ரூதீ நடித்த எந்த மொழிபடமும் ஓடாது போல


cuoi ngay keo lo இதை எப்படி படிப்பது என ஒரு பதிவு போடவும்

'பரிவை' சே.குமார் said...

ராட்டினம் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட்தானா?

'பரிவை' சே.குமார் said...

ராட்டினம் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட்தானா?