வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் எம் பி ஏ கேண்டிடேட் தன்னோட சம்சாரத்தை கூட்டிக்கிட்டு அந்த ஊருக்கு வர்றான். கம்பெனி அவங்களூக்கு குடுத்த பங்களாவை பார்த்தா சசிகலா மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. அவ்ளவ் படோடகம்.. ஆடம்பரம்.. கிட்டத்தட்ட ஃபாரீன் தூதர் தங்கற மாதிரி ஒரு பில்டிங்க்..
அப்படி என்ன அப்பாடக்கர் வேலைன்னா அந்த கம்பெனி டைமண்ட் பிஸ்னெஸ் பண்ணுது.. ஹீரோ தன்னோட வாய் சாமார்த்தியத்தால ( இதுக்கு இங்க்லீஷ்ல ஓரல் டேலண்ட்னு சொல்லலாமா? ஹி ஹி ) ஒரு வைரக்கல்லை 7 கோடிக்கு வித்துடறார்.. எந்த கேனயனும் அப்படி வாங்க மாட்டான்.. ஆனாலும் டைரக்டர் சொன்னதுக்காக ஒரு சேட்டு ஜி வாங்கிடுது.
அந்த பிஸ்னெஸை டீலை முடிச்சதுக்கு கம்ப்பெனி ஹீரோவுக்கு கமிஷனா 25 லட்சம் கொடுக்குது.. படம் பார்த்துட்டு இருக்கறவங்க, தியேட்டர் ஆபரேட்டர் உட்பட என்ன நினைக்கறாங்கன்னா வருஷம் பூரா கஷடப்பட்டு வேலை செய்யறதுக்கு இந்த மாதிரி ஒரு நாள் மட்டும் வேலை செஞ்சா போதும்னு நினைக்கறாங்க..
ஹீரோ அந்த 25 லட்சத்தை டெபாசிட் பண்ணி சேமிக்காம சம்சாரத்துக்கு அதுவும் அவனோட சம்சாரத்துக்கு நகை வாங்கித்தர்றான்.. அந்த நெக் லசை பார்த்து ஹீரோ நெக்குருகிடறா..
ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனில ஒரு வில்லன்.. அவனைப்பற்றி சொல்றதுக்கு முன்னால ஆஃபீஸ் பற்றி பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன்.. சின்ன ஆஃபீசோ, பெரிய ஆஃபீசோ, கவர்மெண்ட் ஆஃபீசோ, பிரைவேட் ஆஃபீசோ எல்லா பக்கமும் ஓனருக்கோ அல்லது மேனேஜருக்கோ கூட்டிக்கொடுத்து அல்லது சக ஊழியர்களை காட்டிக்கொடுத்து அல்லது போட்டுக்குடுத்து வாழும் ஜென்மங்கள் இருப்பாங்க..
அந்த மாதிரி இந்த வில்லன்க்கு ஹீரோவை பிடிக்கலை. என்ன காரணம்னா வந்த உடனேயே ஓனரை இம்ப்ரஸ் பண்ணிடறானே?ஹீரோ வில்லன் செய்யற ஒரு தில்லு முல்லு வேலையை கண்டு பிடிச்சு அதை பற்றி ஓனர்ட்ட எச்சரிக்கிறான்.
ஓனர் ஒரு ஆடம்பரமான ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் லஞ்ச் சாப்பிட வைக்கிறார். சாப்பிடறப்போ ஹீரோட்ட கேட்கறாரு.. உன் கிட்டே இப்போ 2 ஆப்ஷன் தான் இருக்கு 1. அட்டகசமான இந்த விருந்தை ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும் 2. கிச்சன் ரூம்க்கு போய் இந்த சமையல் எப்படி செய்யறாங்கன்னு பார்க்கனும்.. 2ல எதை நீ செலக்ட் பண்ணுவே? சமையல் செய்யறதை பார்த்தா ரசனையோட சாப்பிட முடியாது..
அந்த மாதிரிதான் நம்ம தொழிலும். சிலதை எல்லாம் கண்டுக்கக்கூடாது.. அப்டிங்கறார்.
ஒரு பார்ட்டி கம்ப்பெனில நடக்குது. அதுல ஓனரோட பி ஏ ஹீரோவுக்கு ரூட் விடறா.. தானா வந்த கில்மா சான்ஸை வீணா போக விடலாமா? என்ற சித்தாந்தப்படி ஹீரோ தப்பு பண்ணிடறார்..
அதை வில்லன் செல் ஃபோன்ல படம் எடுத்து வெச்சு ஹீரோவை மிரட்றான்.. அவன் ஹீரோவின் மனைவி கிட்டே சொல்லிட்டா என்ன பண்றது?ங்கற பயத்துல ஹீரோவே தன் மனைவிட்ட மேட்டரை சொல்லிடறான்..
2 பேருக்கும் ஃபைட்.. அப்புறம் ஹீரோ என்ன பண்றான்? வில்லன் என்ன ஆகறான்கறது தான் மிச்ச சொச்ச கதை.
ஹீரோ ஆள் ஜம்முன்னுதான் இருக்கார்.. டைட்டானிக் ஹீரோ கணக்கா..அவர் பிஸ்னெஸ் பண்றதுல காட்டுற லாவகத்தை விட கமல் மாதிரி பாடியை எக்ஸ் போஸ் பண்றதுல தான் அதிக கவனம்..
ஹீரோவோட டிரஸிங்க் நீட் . ஹீரோயின் ஒரு அட்டு ஃபிகர் ( @டு ஃபிகர்)
ஆனா பி ஏ வா வர்ற வில்லி செம கட்டை.. கலைஞர் விஜயாந்த்துக்கு குடுத்த எழுச்சிக்கலைஞர் பட்டத்தை இவருக்கு குடுக்கலாம்..
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. நான் கனவு தான் காண்கிறேனா?ன்னு டவுட்டா இருக்கு..
ம்ச் ம்ச்
இப்போ எதுக்கு எனக்கு கிஸ் பண்ணீங்க?
இது கனவு இல்லைன்னு நிரூபிக்க ஹி ஹி
2. ஏய்.. நீ லேட்டா ஆஃபீஸ் ல இருந்து வர்றதுக்கும், நீ பண்ற தப்பை மறைக்கறதுக்கும் தான் , அல்லது அதுக்கு பரிகாரமாத்தான் அந்த நெக்லஸா? ஃபுல் ஷிட்.
3. சார். எனக்கு ஒரு டவுட். நாம கவர்மெண்ட்டை ஏமாத்தறோமா?
நாம பிஸ்னெஸ் பண்றோம்.. அவ்ளவ் தான்..
4. சார்.. அவனைப்பற்றி குறை சொல்றதால என்னை பொறாமை பிடிச்சவன்னு சொல்றிங்களா?
ச்சே ச்சே. எனக்கு மனித மனம் அத்துபடி . ஐ நோ சைக்காலஜி..
5. நான் அதிகமா பேசறதா நீங்க நினைச்சா இத்தோட நிறுத்திக்கறேன்
நோ நோ. யூ கண்ட்டிநியூ
இயக்குநரிடம் சில கேள்விகள் , மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்
1. ஹீரோ ஹீரோயினோட அதாவது அவர் சம்சாரத்தோட ஆஃபீஸ் பார்ட்டிக்கு போறார்.. அங்கே ஹீரோவை மட்டும் தனியா கூட்டிட்டு போயிடறாங்க.. ஹீரோயின் தனியா இருக்கா. அப்போ ஒரு பொண்ணு வந்து அவர் வர லேட் ஆகும் .. நீங்க வீட்டுக்குப்போறதுன்னா கிளம்புங்க அப்டிங்கறாங்க.. எந்த சம்சாரமாவது இதுக்கு ஒத்துக்குவாளா? விடிஞ்சாலும் சரி புருஷன் கூட தான் வந்தேன். புருஷன் வந்த பின் போறேன்னு தானே சொல்வா? தனிக்குடித்தனம் இருக்கற அவங்க தனியாப்போய் என்ன பண்ணப்போறாங்க. யாருக்கு சமைச்சு வைக்கனும்?
2. பார்ட்டிக்கு வந்த ஹீரோ எதுக்கு செல் ஃபோனை பாக்கெட்ல வைக்காம டேபிள்ல வைக்கறார்.. மனைவி கிட்டே இருந்து கால் வருது.. அப்போ ரிங்க் டோன் சத்தம் கேட்கலை.. ஆனா வில்லி மட்டும் கரெக்ட்டா எடுத்துப்பேசறா .. அது எப்படி? சைலண்ட் மோடுல ஹீரோவுக்கும், வைப்ரேஷன் மோடுல வில்லிக்கும் இருக்கா?
3. ராமன் மாதிரி உத்தமனா வாழ்ற ஹீரோ வில்லி ஜால்ஸ் சாரி ஹால்ஸ் மிட்டாயை வாய்ல போட்டுக்கிட்டு அதை எடுன்னு சொல்றப்ப பளார்னு ஒரு அறை விட்டா விழுது.. எதுக்கு லிப் கிஸ் பண்ணி அதை எடுக்கனும்? அப்புறம் அய்யய்யோ கற்பு போச்சேன்னு புலம்பனும்// ( எல்லாம் ஒரு ஆற்றாமைல தான் ஹி ஹி )
4. அந்த பார்ட்டில ஹீரோயின் , வில்லி 2 பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாங்க.. 2 பேரும் ரெட் கலர் டிரஸ்ல வந்தா ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?
5. ஹீரோயினுக்கு பர்த்டே.. அன்னைக்கு ஆஃபீஸ்ல இருந்து லேட்டா ஹீரோ வர்றார்.. வந்து ஹேப்பி பர்த்டே சொல்றார்.. அப்போ மணி நைட் 10... உடனே ஹீரோயின் கோவிச்சுக்கறா.. என் பர்த்டே அன்னைக்கு கூட நேரத்துலயே வர மாட்டீங்களா?ன்னு கேட்கறா.. என் கேள்வி இன்னான்னா காலைல தானே வழக்கமா ஹேப்பி பர்த்டே சொல்வாங்க? ஏன் காலைல ஹீரோ அதை சொல்லலை?
கதை ஆப்பிரிக்கா ஆங்களூர்ல நடக்கறதால லொக்கேஷன்ஸ் எல்லாம் செம பிரம்மாண்டம்.. ஆனா கதைல அழுத்தம் இல்லை.. படத்துல ஒரே ஒரு கில்மா சீனுக்கான லீடு இருக்கு.. ஆனா அது யானைப்பசிக்கு சோளப்பொறி தான் ..
சி.பி கமெண்ட் - இந்தியாவுல எப்படியோ தெரில தமிழ்நாட்ல இந்தப்படம் ஓடாது.. பார்த்தே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லாத படம்..
ஈரோடு ஸ்ரீநிவசாவில் படம் பார்த்தேன்
5 comments:
போஸ்டர் செமயா இருக்கு. ஆனா படம் தேறாது. அதானே? ரைட்டு ... விடுங்க.
படத்துல இருக்கிற ரெண்டு பீஸுக்கும் “எழுச்சிக்கலைஞர்” விருது கொடுக்கலாம் போல. ஹி ஹி
கில்மா படங்கள் சூப்பரு
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
விமர்சனத்துக்கு நன்றி
இலங்கையில் ஒரு வைர வியாபாரம் நடந்தது (10 நாட்களுக்கு முன்பு) அந்த கல் விற்கப்பட்டது 45 கோடி ரூபாய்க்கு ( இந்திய மதிப்பு 18 கோடி) Broker க்கு கிடைத்தது 4.5 கோடி ரூபாய்.
Post a Comment