கூட இருக்கறவங்களே குழி பறிக்கற மாதிரி நம்ம நெருங்கிய சொந்தங்களே சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கும் கழுகுகளாய் பெண்ணை சீரழிக்க திட்டம் போடறாங்க.. நாம கவனமா நம்ம பெண் குழந்தைகளை கண்காணிச்சுக்கனும், பாதுகாப்பா பார்த்துக்கனும்.. இது தான் படத்தோட ஒன் லைன்.. இந்த கால கட்டத்துல மக்களுக்குத்தேவையான சமூக விழிப்புணர்வு படம் தான்..
ஹீரோவோட ஃபேமிலில அம்மா, ஒரு தங்கச்சி.. ஹீரோவோட தாய் மாமன் அதாவது அம்மாவோடதம்பி ஒர்ஸ்ட் கலெக்டர் ஆஃப் லேடீஸ் அதாவது மோசமான பொம்பள பொறுக்கி.. வீட்ல ஆள் இல்லாதப்ப ஹீரோவோட தங்கையை அதாவது தன் சொந்த அக்கா பொண்ணையே பாலியல் பலாத்காரம் பண்ன ட்ரை பண்றாரு..
அந்த அதிர்ச்சில அந்தப்பொண்ணு உறைஞ்சு போய்க்கிடக்கு.. மேட்டர் நடக்கலை.. தப்பிச்சுடுது.. ஆனாலும் அந்த பாதிப்பு திக் பிரமை அடைஞ்ச மாதிரி ஆக்கிடுது.. வெளில சொல்லவும் முடில.. தன் மகளூக்கு பேய் பிடிச்சுடுச்சு.. சாமி வந்து இறங்கிடுச்சுன்னு அவங்கம்மா கோயில் கோயிலா சுத்தறாங்க..
ஹீரோவோட முறைப்பொண்ணு தான் ஹீரோயின்.. அந்த வில்லனோட பொண்ணு.. இவங்க 2 பேரும் லவ்வறாங்க.. திடீர்னு ஹீரோ தங்கச்சி செத்துடுது..
தங்கச்சி சாவுக்கு யார் காரணம்? வில்லன் என்ன ஆனான்? ஹீரோ லவ் நிறைவேச்சா? என்பது தான் மிச்ச கதை..
உண்மையில் எங்கோ நடந்த சம்பவம் போல.. திரைக்கதை நகர்த்தப்பட்ட விதம் அதைத்தான் சொல்லுது.. இடை வேளை வரை கதை சரியான திசைல தான் பயணிக்குது.. ஆனா ஹீரோ தங்கை இறந்த பின் இயக்குநருக்கு ஒரு குழப்பம்.. படத்தை எப்படி கொண்டு போறதுன்னு...
மன்னித்தல் தான் சிறந்த குணம்.. பழசை பழைய பகையை எல்லாம் மறக்கனும் அப்டிங்கற கருத்தை சொல்ல வந்திருக்கார்.. ஆனா ராஜ பக்சே செஞ்ச கொடுமையை மன்னிச்சு மறக்க முடியுமா? அதனால வில்லனை மன்னிச்சு விட்டுடறதை ஜீரணிக்க முடியலை.. கடைசி வரை ஹீரோ அல்லது ஹீரோயினிக்கு வில்லனோட சுய ரூபம் தெரியாமயே இருக்கு என்பதையும் ஏத்துக்க முடியல..
ஹீரோ ஆழ்கடல் நீச்சல் வீரர் திலீப் குமார்.. ஓக்கே ரகம்.. அவர் ஏன் படம் பூரா தாடியோட வர்றார்?லவ் ஃபெயிலியரும் இல்லை.. டூயட் காட்சிகளில் இன்னும் முகத்தில் ரொமான்ஸ் கொண்டு வரனும்..
ஹீரோயின் பளிச் அக்மார்க் வில்லேஜ் கேர்ள்.. இந்த இடத்துல ஒரு கேள்வி.. வடிவுக்கரசி கேரக்டர் தவிர படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேரக்டரும் லிப்ஸ்டிக் போட்டிருக்காங்களே ஏன்? ஹீரோயின், ஹீரோ தங்கச்சி போட்டிருந்தாக்கூட ஓக்கே வில்லனோட மனைவியா வர்ற 40 வயசு லேடியும் லிப்ஸ்டிக் .. எந்த கிராமத்துல அப்படி இருக்கு?
ஹீரோவின் தங்கை கேரக்டர் சோனியா கர்வால் மாதிரி எப்பவும் சோகத்தை கண்களில் தேக்கி வைக்கும் முகம்.. நல்லா பண்ணி இருக்கார்..
வில்லன் நடிப்பு கன கச்சிதம்.. வடிவுக்கரசி நடிப்பில் அனுபவம் தென்படுது..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. வில்லன் - ஏம்மா என்னைப்பார்த்ததும் பட்டுன்னு எந்திரிச்சுட்டே..?நீ பாட்டுக்கு சாமான் கழுவு.. மரியாதை மனசுல இருந்தா போதும்..
2. எல்லா அம்மாக்களும் தன் புள்ளைங்க தன் பக்கத்துல இருக்கனும்னு தான் ஆசைப்படுவாங்க..
3. ஒரு வேப்ப மரத்தையே புடுங்கி சாப்பிட்ட மாதிரி வாய் கசக்குது ( ஆஹா.. என்ன ஒரு உவமானம்.. சபாஷ் வசனகர்த்தா)
4. கண்ணுக்கு முன்னால இருக்கற ஆளை கட்டுறதுதான் பெஸ்ட்.. ஆள் எப்படி? என்னென்ன நல்ல பழக்கம் இருக்கு.. எப்படிப்பட்ட ஆள்னு தெரிஞ்சுக்கலாம்.. முன்னே பின்னே பார்த்தே இராத ஆளை கட்டறது ரிஸ்க்..
5. வயசானாலும் மாமனுக்கு நக்கல் குறையலை..
அது என் உடன் பிறந்தது..
6. சாமி எப்படிங்க மனுஷனை அடிக்கும்? அது நம்மளை காப்பாத்தும்..
7. பெண்களோட மனசு ரொம்ப சாஃப்ட்.. ஒரு சின்ன டம்ளர் விழுந்தாக்கூட அதிர்ந்துடுது..
8. இந்த உலகத்துல மாத்த முடியாதது எதுவுமே இல்லை.. அது ஆண் பால்., பெண் பால் அனைவருக்கும் பொது..
9. வாழ்றது கொஞ்ச நாள்.. அதுல போய் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ர ஈகோ எதுக்கு?
10. மன்னிக்கத்தெரிஞ்சவன் தான் மனுஷன்.. முரண்பாடுங்கறது மனுஷனோட வாழ்க்கைல வந்துட்டே தான் இருக்கும்..
11. பத்து விரல்ல பாடுபடறோம் .. 5 விரல்ல சாப்பிடறோம்
இயக்குநர் மற்றும் சக பதிவர் நண்பர் பாலு மலர் வண்னன் அவர்களிடம் சில கேள்விகள்
1. கிராமங்களில் உள்ள பழக்கப்படி பெரிய காரியத்துக்குப்போய்ட்டு வர்றவங்க அதாவது இழவு வீட்டில் பொய் துக்கம் விசாரிச்சுட்டு வர்றவங்க ரிட்டர்ன் வர்றப்ப எதுவும் கடைலயோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்லயோ வாங்கிட்டு வரக்கூடாது.. வெறும் கைல தான் வரனும்னு ஒரு சாங்கியம் இருக்கு.. ஆனா ஹீரோவின் அம்மா வடிவுக்கரசி மருமகளுக்கு பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வர்றார்..
2. கிராமங்களில் வயசுக்கு வந்த பொண்ணை தனியா விட்டுட்டு போக மாட்டாங்க.. பக்கத்து வீட்டில் ஏதாவது வயசான பாட்டியை கர்டியனா விட்டுட்டு தான் போவாங்க.. ஆனா வடிவுக்கரசி அதெல்லாம் கண்டுக்கவே இல்லை..
3. வில்லன் வேலைக்காரியிடம் ஓப்பனிங்க் ஷாட்லயே ஜொள் விடறார்.. அவரோட சபல குணத்தை பயன் படுத்தி அந்த பணிப்பெண்ணும் அப்பப்ப பணத்தை கறந்துக்குது.. ஆனா மேட்டர் மட்டும் நடக்கலை.. ஓக்கே.. ஆனா செகண்ட் ஆஃப்ல ஹீரோ ஒளிஞ்சு இருந்து பார்க்கும்போது வில்லன் வேலைக்காரியை கட்டிப்பிடிக்கறப்ப அது என்னமோ பதி விரதை மாதிரி சீன் போடுதே ஏன்?
4. அண்ணன் ஒரு ரவுடி.. மேட்டரை வெளீல சொன்னா அவன் மாமாவை கொலை பண்ணி ஜெயிலுக்கு போயிடுவான்கறதால மறைச்சாச்சு ஓக்கே ஆனா ஹீரோயின் கிட்டே கூட ஏன் சொல்லலை? அவ கிட்டே சொல்லி அவங்கப்பாவை கண்டிக்கச்சொல்லலாம் அல்லது வில்லனின் மனைவியை அதாவது அத்தையை சந்திச்சு ஒழுங்கா இருக்கச்சொல்லுங்கன்னு சொல்லி இருக்கலாமே?
5. தனது பெண் குழந்தையிடன் சின்ன மாற்றம் வந்தாலும் ஒரு தாய் டக்னு கண்டு பிடிச்சுடுவா .. ஆனா வடிவுக்கரசிக்கு அது எல்லாம் ஒண்ணும் தெரியலை..
6. ஹீரோவின் தங்கைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கு என்ற பாயிண்ட் திரைக்கதைல யாரும் கே:ள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே சாமார்த்தியமா சொன்ன மாதிரி இருக்கு..
7. செகண்ட் ஆஃப்ல வில்லன் வேலைக்காரியை பலாத்காரம் பண்றப்ப அந்த வீட்டில் இருக்கும் நாய் சும்மா குலைச்சுட்டுதான் இருக்கு.. கட்டி வைக்கவும் இல்லை.. ஏன் நாய் பாயவே இல்லை?
8. படம் போட்ட முதல் 26 நிமிஷங்களில் 3 பாட்டு.. ஒரு ஓப்பனிங்க் சாங்க், அப்புறம் கோயில் பாட்டு.. டூயட் பாட்டு.. ஏன்? ஏன்?
9. ஹீரோ திடீர்னு சிங்கப்பூர் போறதும் டக்னு ரிட்டர்ன் வர்றதும் செயற்கை..
10. இடைவேளைக்குப்பின் அழுகை காட்சிகள், சோகக்காட்சிகள் அதிகம்.. கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாம்.. ஆடியன்ஸ் சோக சிச்சுவேஷன் உணர்ற அளவுக்கு இருந்தா போதும்.. போட்டு புழிஞ்சு எடுக்க தேவை இல்லை..
11. திரைக்கதைல ஆடியன்ஸ் எல்லாரும் வில்லன் எப்படி மாட்டப்போறான்? அவனுக்கு என்ன தண்டனை?ன்னு பார்க்கறப்ப அவனை மன்னிச்சு விட்றதும்.. அவருக்கு ஒரு கால் போயிடுது இயற்கையாகவே என்பது செயற்கை..
12. இயக்குநரோட பார்வை எப்டி இருக்குன்னா ஹீரோ ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு பர பரப்பை காட்டலாம்னு.. ஆனா ஆடியன்ஸ் என்ன நினைக்கறாங்கன்னா வில்லன்க்கு தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா?ன்னு..
திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( நண்பர் என்பதால்)
1. ஹீரோ சிங்கப்பூர் போற மாதிரி காட்டி இருக்கவே தேவை இல்லை.. ஹீரோ அருகில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்த மாதிரி காட்டினால் தான் பரபரப்பு , டெம்ப்போ ஏத்த முடியும்..
2. ஹீரோவுக்கு வில்லன் செஞ்ச வேலைகள் தெரிஞ்சு இருக்கனும்.. கடைசி வரை தன் தங்கயை மாமா பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார் என்பதும் தன் தன் தங்கையின் சாவுக்கு மாமா தான் காரணம் என்பதும் தெரியாமல் போவதும் திரைக்கதையின் மைனஸ்.. தெரிய வந்து வில்லனை ஒரு புரட்டு புரட்டி இருக்க வேண்டும்..
3. வேலைக்காரியை வில்லன் ட்ரை பண்றப்ப ஹீரோ மறைஞ்சு இருந்து கல் எடுத்து அடிக்கறார்.. அதுல டெப்த் இல்லை.. மக்களுக்கு அதாவது ஆடியன்ஸ்க்கு வில்லன் சரியான தண்டனை பெற வில்லை என்ற மன வருத்தம் கடைசி வரை இருக்கு..
4. இந்தக்கதைக்கு பாடல் காட்சிகளே தேவை இல்லை.. ஆடியோ சி டி மார்க்கெட்டுக்காக பாட்டு வெச்சாலும் படத்துல குறைச்சிருக்கலாம்..
5. படத்தில் சோகம் அதிகம் என்பதால் காமெடி டிராக் வெச்சிருக்கலாம்..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர்களில் சுமாராத்தான் ஓடும்.. பி சி செண்ட்டர்களில் படத்தின் விளம்பரம் ரீச் ஆகும் விதம் பொறுத்து ஓடலாம்..
5 comments:
படிச்சுட்டு வரேன்
படம் பார்க்க முடியுற மாதிரி இருக்கும் போல. விமர்சனத்திற்கு நன்றி
"படம்" பாக்குற மாதிரி தான் இருக்கு!
படம் நல்லா இருக்கும்போலருக்கு
எல்லாப்படத்தையும் ஒரே மாதிரி விமர்சிக்கிற விதம் நல்லாயிருக்கு சி பி...
Post a Comment