Wednesday, April 25, 2012

மை - வல்லமையா? சிறுபிள்ளை வெள்ளாமையா? - சினிமா விமர்சனம்

அமைதிப்படைல கொஞ்சம், புதிய மன்னர்கள்ல கொஞ்சம்,கொள்ளைக்காரன்ல கொஞ்சம்  எல்லாத்தையும்  மிக்ஸ் பண்ணுனா மை ரெடி.. படத்தோட பின் பாதில காட்டுன ஆர்வத்தையும், கட்டுக்கோப்பையும் முன் பாதில காட்டி இருந்தா படம் க்ளிக் ஆகி இருக்கும்.. இருந்தாலும் நல்ல முயற்சியே.. லோ பட்ஜெட் படங்களை வரவேற்கலாம்.. 

 ஹீரோ ஒரு  டேக் கேட்சர்.. அதாவது எடுபுடி, அல்லக்கை.. ஏதோ ஒரு வீணாப்போன கட்சியின் வெட்டிப்பேச்சாளன்.. நம்ம டாக்டர் ராம் தாஸ் அரசியல்ல ஈடுபட்ட நேரம் போக மரம் வெட்டுன மாதிரி அவன் பேசுனது போக ஊர்ல அங்கங்கே திருடறான்... ஆனாலும் அவன் நல்லவன்.. ஏன்னா தமிழ் சினிமா ஹீரோன்னா ஹீரோயினையே ரேப் பண்ணாலும் அவன் நல்லவன் தான்.. 

ஹீரோயின் ஒரு தனியார்  டி வி ஓனர் காரு.. பாப்பா பிரின்சிபிள் என்னான்னா மானங்கெட்டுப்போய்  மானாட மயிலாட மாதிரி புரோகிராம் நடத்தி டி ஆர் பி ரேட்டை குப்புன்னு ஏத்தி அதுல வர்ற வருமானத்தை  வாங்கி அதுல சோறு சாப்பிடனும்னு அவசியம் இல்லை.. மக்கள் டி வி மாதிரி , புதிய தலை முறை மாதிரி மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி புரோகிராம் பண்ணுனா போதும்கற கோட்பாடு உள்ளவ.. 

 ஹீரோவும், ஹீரோயினும் சின்ன வயசுலயே க்ளாஸ் மேட்ஸ்... அதனால ஹீரோ பிட்டை போடறான்.. ஹீரோயின் மு்றைக்கறா..  இதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்கற மாதிரி அவன் நயன் தாரா பின்னால பம்புன பிரபு தேவா மாதிரி சுத்தறான்..




 தெருல ஒரு மெண்ட்டல் ( மன நிலை குன்றியவர்) அழுக்கு டிரஸ்சோட குளீக்காம இருக்கு.. அந்தாளை வசூல் ராஜா எம் பி பி எஸ் ல கமல் ரெடி பண்ணுன மாதிரி க்ளீன் பண்ணி  அவனை நீட் பண்றார். உடனே ஹீரோயினுக்கு லவ் வந்துடுது.. இதுல என்ன காமெடின்னா ஹீரோவே கிட்டத்தட்ட அவனை மாதிரியே குளீக்காம , ஷேவிங்க் பண்ணாம  கேவலமாத்தான் இருக்காரு.. ஒரு வேளை அவனைப்போய் நான் குளிப்பாட்டி சுத்தம் பண்ணினா ஹீரோயின் என்னை லவ் பண்ணும்னு நினைக்கறேன்.. 

 டாக்டர் ரியாஸ்க்கு ஃபோன் போட்டு கேட்டா அது என்னமோ க்ளீனோ ஃபோக்கஸ்சோ செட்டப் வியாதியாம் ஹி ஹி .. சரி கதைக்கு வருவோம்.. இப்போ இடைவேளை வரப்போகுது// என்ன கண்டிஷன்? ஹீரோயின் போடுவாங்க? “ நீ பெரிய ஆளா வந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன் “  ( மேடம் நான் 6 அடி .. ஓக்கே வா? ஹி ஹி )

இடைவேளைக்குப்பிறகுதான் படம் சூடு பிடிக்குது.. வார்டு கவுன்சிலரா நின்னு ஹீரோ ஜெயிச்சு மேயராகிடறார்.. அதாவது ஊர் மேயற பயல் இப்போ மேயர் ஹி ஹி இப்போ ஏற்படும் போராட்டத்தில் ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடக்கும் சுவராஸ்யமான மோதல்களே மிச்ச படம்.. 

 ஹீரோ விஷ்ணுப்பிரியன்.. அண்ணன் ஆல்ரெடி இலக்கணம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தவர் தான் .தூள் ஹிட்டுக்குப்பின் அருள்னு ஒரு டப்பா படத்துல விக்ரம் நடிச்சாரே அந்த கெட்டப்..  நல்ல நடிப்பு.. டயலாக் டெலிவரில கொஞ்சம் தடுமாற்றம்.. மற்றபடி நல்ல எதிர்காலம் உண்டு.. 

 ஹீரோயின் ஸ்வேதா பாசு.. ஃபிகர் செம ஹோம்லி..  70 மார்க் போடலாம்.. மேற்குவங்காளம் பூர்வீகம்.. பாப்பா நம்ம ஊரு பேபி ஷாலினி மாதிரி.. சின்ன வயசுல இருந்தே கலைச்சேவை... கண்ணு அழகு.. கன்னம் அழகு.. லிப்ஸ் இருக்கே நேச்சுரல் ரோஸ்.. கலர்.. அவ்ளவ் தான்.. அதுக்கு மேல வர்ணீக்க மாட்டேன்.. மீ எ டீசண்ட் மேன் ஹி ஹி


ஜெயப்பிரகாஷ் தான் வில்லன்.. சூப்பர் நடிப்பு..  ஆர்ப்பாட்டம் ஏதும் பண்ணலை.. ஆனா மன்சை கவர்கிறார்..




 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது 10 வது ,மாசம்.. 

 அப்படியா? கங்கிராட்ஸ்.. 

 யோவ்... இது சாதா 10 ய்யா.. 


2.  நீ கொடுத்தை செக்கை பேங்க்ல போடவே வேண்டியதில்லை.. சும்மா இப்படி கீழே போட்டாலே பவுன்ஸ் ஆகிடும் போல  ( ஜோக் டேக்கன் ஃப்ரம் ஆனந்த விகடன் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு)

3. முகத்தை பார்த்து பேச தைரியம் இல்லையா? 

 அப்படி இல்லை.. உன் முகத்தை பார்த்தா கிஸ் அடிக்கத்தோணும்... 


4. மாப்ளை கிட்டே பெரிய வண்டி கேட்கப்போறேன்.. 

 யூ மீன் லாரி? அந்தாள் கிட்டே பைக்கே இல்லையாம்.. 

5.  குத்துக்கல்லாட்டம் இருந்துட்டு பேச்சைப்பாரு ராஸ்கல்ஸ். 

6. மாமா.. உங்க பொண்ணை விட உங்களைத்தான்  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பேசாம நான் உங்களையே கட்டிக்கிடவா? ( ஐஸ் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ்)


7. மீடியான்னா என்ன வேணாலும் காட்டலாமா? க்ரைம் ஸ்டோரி போடறேன்னு சொல்லி எப்படி ரேப் பண்றது? எப்படி மர்டர் பண்றது? எல்லாம் கத்துக்கொடுத்துடுவீங்க போல .. 

8. எனக்கு மூடு இல்லை

 மூடிட்டு கிளம்புடா முதல்ல. 

9. அவ்வ்வ்வ்வ். ஜூஸ் குடுத்து அப்புறமா ஃபியூஸ் பிடுங்குவாங்களோ?

10.  பிச்சைக்காரரா அவரு?

 நோ.. மன நலம் பாதிக்கப்பட்டவர்

 ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi85C-TEJPU8-tj-aOjUYDWe73wdPis-0kbSgIOUc3IY308oRgvhftU3HK3IWCOpyYhnlRGJKtKx3eyC5s2yS1i3lChj-XP5CxJs0gUUBncgJklgEu7s8z0mo8Mkg4WeotJRapyZzNTE84/s400/swetha+basu+prasad+hot+photos1.jpg
11. நாய்க்கடிங்கறது சாதாரண விஷயம் இல்லை.. நகம் பட்டாக்கூட 3 நாள் ட்ரீட்மெண்ட் எடுக்கனும்.. கடி பட்டா 10 நாள் சிகிச்சை.. 

12. எங்கம்மாவுக்குப்பிறகு நான் பயப்படற ஒரே ஆள் நீ தான்.. 

13.  சொல்றேனேன்னு வருத்தப்பட வேண்டாம்.. பன்னிக்குட்டியா இருந்தாலும் ( பன்னிக்குட்டி ராம்சாமியா இருந்தாலும் ) ஓட்டுன்னு இருந்தா மதிச்சுதான் ஆகனும்,.. 

14,  என்னால எதுவும் இனி பண்ணமுடியாது.. 5 வருஷம் விட்டுடு.. அப்புரம் பார்க்கலாம். கூட்டத்துக்கு பேசப்போ.. 

 சுயேச்சையா நிக்கறேன் தலைவரே.. 5 வருஷம் கழிச்சு மறுபடி பார்ப்போம்.. 

15. டேய் டேய் என்னை நம்பாதிங்கடா.. பணத்தை வாங்கிட்டு துரோகம் பண்ணாலும் பண்ணிடுவேன்

16. பொண்ணுன்னு இருந்தா புகுந்த வீடு போய்த்தான் ஆகனும், மனுஷன்னு இருந்தா மாறித்தான் ஆகனும்

17. அரசியல்ல மட்டும் தான் ஏமாத்தறதுக்கு ராஜ தந்திரம்னு பேரு( அப்போ எங்க தானைத்தலைவர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரின்னு சொல்றாங்களே அவர்  துரோகியா?

18. எனக்கு ஓட்டு போட்டா எந்த பொருளும் திருடு போகாது.. ஏன்னா திருடனே நான் தான்.. என்னை கவுன்சிலர் ஆக்கிட்டா நான் என் வேலைஅயை பார்ப்பேன்.. இல்லைன்னா நான் மறுபடி திருட வந்துடுவேன் ஹி ஹி 

19. மூணாவது தெருல சரோஜான்னு ஒருத்தி இருக்கா. நான் சொன்னா கேட்பா.. அவ ஓட்டுக்கான பணத்தையும் என் கிட்டே கொடுங்களேன்// 

 டேய் நாயே.. அவ பேரைச்சொல்லி ஆல்ரெடி 3 பேரு பணம் வாங்கிட்டாங்க.. ( முப்பெருந்தேவி போல )

20.  காசு மட்டும் இல்லைன்னா ஒயிஃப் கூட பக்கத்துல படுக்க விட மாட்டா.. ( சரி கொஞ்சம் தள்ளித்தான் படேன்.. அவ துங்குன பின் ட்ரை.. ஹி ஹி )

21.. நான் இப்போ லவ்வர், மேயர், கணவர் அப்டினு 3 போஸ்ட் பார்த்துக்கறேன்

22. இருவருக்குமே ஓட்டு போடுவதாக வாக்கு கொடுத்துட்டு வேறு ஒருவருக்கு ஓட்டு போடுவதாக சொல்றீங்களே. இது நியாயமா?

நம்ம பணத்தை கொள்ளையடிச்சு நமக்கே கொடுக்கிறாங்க. அவங்ககிட்ட நியாயமா நடக்கலாமா?




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பின் பாதி திரைக்கதை மிகச்சிறந்த பலம்.. செம ஸ்பீடு.. பர பரனு காட்சிகள் பறக்குது

2. ஹீரோயின் செலக்‌ஷன்.. அவரது அலட்டல் இல்லாத பாந்தமான நடிப்பு.. 

3.  கடவுளைக்கண்டால் என் அன்புக்கு நன்றி சொல்வேன், போடு போடு சக்கை போடு,தேவதை போல் இவள்” என 3 பாட்டு கேட்கற மாதிரி இருக்கு.. 

4. பெண்களும் பார்க்கும்படி ரொம்ப கண்ணியமான காதல் காட்சிகள்.. வன்முறை அதிகம் இல்லாதது ஒரு பிளஸ்

5. ஹீரோவாக வரும் தீப்பொறி சுனாமி சுப்புவின் பேச்சைக் கேட்டு வேட்டி தீப்பிடிக்கும் என்று பில்டப் கொடுத்துவிட்டு, அவர்களே பத்த விடுவது செம காமெடி.. 

6.பேங்க் லோன் ஆட்களிடம் சுப்பு அண்ட் கோ செய்யும் ஆர் பார்த்திபன் பாணி கலாட்டாக்கள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3y6OIXSAKLtCKwU34jCdpDz4wG8TK7nR5CJt86WftzArnM2ngXgInVfL9pJJQd6AZ05zXVuKc1rXjtVpHQxzMcd9ZvuXYevpHUu0BNCJPhsZsYNy0FTx7IOhYzWwveLpkG72y-q-zu9DV/s1600/4.jpg

 இயக்குநர் கோபாலன் அவர்களிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோ வில்லன் கிட்டே பேசிட்டு இருக்கும்போது  அவருக்கு ஒரு கால் வருது.. அவர் கட் பண்றார்..  மறுபடியும் வருது.. எகெயின் கட் பண்றார்.. இப்போ 3 நிமிஷம் கழிச்சு அதே நம்பருக்கு ஃபோன் பண்ணனும்னா கால் ரெஜிஸ்டர்ல போய் ரிசீவ்டு கால்ல தேடுனா அந்த நெம்பர் வருமே அப்படியே கால் பண்ணலாமே.. ஏன் தனியா நெம்பர் டைப் பண்றார்?

2.  கேப்டன் பிரபாகரன் படத்துல மன்சூர் அலிகான் பேசுன ஃபேம்ஸ் டயலாக்கை அப்படியே சுட்டு இருக்கீங்க.. கொஞ்சமாவது மாத்தி இருக்கலாம்.. ( 10 வருஷம் கழிச்சு ஒருத்தன் பகையாளீயா வருவான்னு  தெரிஞ்சா அவனை  இப்பவே போட்டுத்தள்ளிடுவான் அவன்.. )


3. வில்லன் ஏன் க்ளைமாக்ஸ்ல தனியா வந்து ஹீரோ கிட்டே மாட்டிக்கறாரு? அவ்ளவ் பெரிய அரசியல் தலைவரு தனியாவா வருவாரு? இப்போ எல்லாம் அல்லக்கைங்களே அஞ்சாறு பேர் கூட அலையுதுங்க. 

4..ஹீரோவுக்கு லவ் ஃபெயிலியர் ஏதும் இல்லை, ஏன் தாடி? ரோட்ல இருக்கற பிச்சைக்காரனைக்கூட சுத்தமா பார்க்க ஆசைப்படும் ஹீரோயின் ஹீரோவை குளிச்சு ஷேவிங்க் பண்ணுன்னு சொல்ல மாட்டாரா?

5.  ஒரு சாதாரன கவுன்சிலர்க்காக ஸ்டேட் மினிஸ்டர் அப்படி பம்புவாங்களா?அவன் ஃபேமில இருக்கற லேடீஸை கிட்நாப் பண்ணி மிரட்னா போதாதா?

6. பணபலம் உள்ள கட்சிக்கு எதிரா ஹீரோ கவுன்சிலர் ஆகறது அழகிரியை எதிர்த்து மதுரைல சாதா ஆள் ஜெயிக்கற மாதிரி நம்பவே முடியல

7. க்ளைமாக்ஸ்ல மாசமா அதுவும் நிறை மாசமா இருக்கும் ஹீரோயின் வயிற்றில் கிட்டத்தட்ட ஒரு அடி ஆழம் கடப்பாறை அல்லது வாள் மாதிரி ஆயுதத்தால தாக்கப்பட்டு ( சொருகிட்டான்) அவ, அவ குழந்தை எல்லாம் பிழைச்சுக்குச்சுன்னா எப்படி? அதுக்கு அந்த சீனையே  வேற மாதிரி எடுத்திருக்கலாம்

8. செகண்ட் ஆஃப்ல அரசியல்ல அதகளம் பண்ணுன நீங்க முதல் பாதில காதல் காட்சிகள்ல இன்னும் ஸ்கோர் பண்ணி இருக்கலாம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwW1DEpKwgaLqnSvbzK7VTA63Y6vq1KS0n4OBTzlO6mP6Fq8vMC9y3Dwj1yJMz00Sx1J8LWFmiX0roCaJ1Kk_GL8YpHtZPWiymLzSiaQG0g3rNWAtBQ_IDBzsbawNvujc0PRD7-57KhXg/
 எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர் பார்க்கும் குமுதம் ரேங்க் -  ஓக்கே

 சி.பி  கமெண்ட்.. - லோ பட்ஜெட் நல்ல படங்களை ஆதரிப்பவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் விதத்தில் தான் படம் இருக்கு

 ஈரோடு ஆனுரில் படம் பார்த்தேன்


5 comments:

முத்தரசு said...

சித்தப்பு வணக்கம்

குசும்பு.... கடைசி மூணு படம் பெண்கள் பார்க்கிற மாதிரியா இருக்கு, எங்கே மனசாட்சியை கேட்டு சொல்லுங்க.

நெல்லையில் இருக்கீக வாழ்த்துக்கள்

test said...

வணக்கம் பாஸ்! பாத்துடுவோம்!

test said...

வணக்கம் பாஸ்! பாத்துடுவோம்!

test said...

ஹீரோ - தாடி! - சினிமால அல்லக்கைங்கன்னா தாடி வைக்கனும்னு ரூல்ஸ் ஏதாவது இருக்கும் பாஸ்!

சி.பி.செந்தில்குமார் said...

@மனசாட்சி™that stills are taken from her fb