Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - கலக்கல் காமெடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggphRLV1XyzfBgyoBo5SD4JcIdR5z3Y-H6VCJ6DHR7HcPHR4_MENdXU41-ECgSVtxl_4KGlwYxyrjTGFg5vNiZfKwkr1l1wrd9eM165_6FGdI8Cl0L6ROIlrp8Y7kvCehjoAnr4kMIT_Ps/s1600/oru+kal+oru+kannadi+New+Tamil+movie+Wallpapers1.jpgஹீரோ பைக்ல டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப அங்கே   கலர்ஃபுல்லா ஒரு பிச்சைக்காரி சாரி  லட்சக்காரி கம் லட்சணக்காரியை பார்க்கறாரு.. 35 மார்க் ஃபிகரை லாங்க் ஷாட்ல பார்த்தாலே 10 அடி தூரம் பாய்ஞ்சு போய் கடலை போடற தமிழன் கசக்கு முசக்குன்னு கொழுக் மொழுக்னு  திமிசுக்கட்டையை 25 வயசுல பார்த்தா இன்னா பண்ணுவாரு? ஜொள் விட்டுக்கிட்டே பின்னால போறாரு..

 பார்த்தா ஃபிகரு சாரி அந்த திமிசுக்கட்டை போலீஸ் ஆஃபீசர் பொண்ணு ..நம்ம ஆளுங்க உடனே ஒரு போலீஸ் ஆஃபீசர் பொண்ணு இப்படித்தான் பூனம் பாண்டே மாதிரி அரை குறை  டிரஸ்சோட அலைவாங்களா?ன்னு லாஜிக் மிஸ்டேக் கேள்விகள் கேட்டறக்கூடாதுன்னு ஹீரோயின்பை ஏர் ஹோஸ்டல்ல ட்ரெயினிங்க் படிக்கற ஸ்டூடண்ட்டா காட்டிடறாரு.. ( திடீர்னு ஒரு சீன்ல ஏர் ஹோஸ்டலாவே காட்றாங்க )

பார்த்ததுமே காதல்.. ஹீரோ ஓப்பனா சொல்லிடறாரு.. ஆனா ஹீரோயின் ஒத்துக்கலை... நேரா அவங்கப்பா கிட்டேயே கூட்டிட்டு போய் டாடி இவன் என் கையை பிடிச்சு இழுக்கறான்னு புகார்.. ஆல்ரெடி பல பசங்க கைஅயை பிடிச்சு இழுத்து பஞ்சாயத்து பண்ணி இருப்பாங்க போல.. ஹீரோயின் அப்பா கூலா ஹீரோவை துரத்தி விடறார்.. 

 ஹீரோ கவலையே படலையே.. நாய் மாதிரி பின்னாலயே அலைஞ்சு எப்படியோ கட்டையை கரெக்ட் பண்ணிடறாரு.. கூட இருக்கற ஃபிரண்ட் செய்யற சில குளறுபடிகளால பல குழப்பங்கள் வருது.. சின்னச்சின்ன ஊடல்கள், பிரிவுகள் எல்லாம் முடிஞ்சு அவங்க எப்படி சேர்றாங்க அப்டிங்கறதை லாஜிக் எல்லாம் பார்க்காம ஒரு காமெடி டிராமா மாதிரி சொல்லி இருக்காரு டைரக்ட்டர் ராஜேஸ்..  


http://www.indiancinemagallery.com/Gallery2/d/776873-1/Oru+Kal+Oru+Kannadi+movie+stills+07_03_12+_4_.jpg



படத்தோட ஹீரோ சாட்சாத் சந்தானம் தான்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் அரங்கம் அதிருது.. படம் முழுக்க காமெடி களை கட்டுது.. படத்துல மொத்தம் 112 ஜோக்ஸ்..  செம சிரிப்பு.. ஸ்க்ரிப்ட்டில் எழுதிய வசனங்கள் போக தானாக டைமிங்காய் பேசும் வசனங்கள் தான் அதிகம்.. அதற்க்குத்தான் அப்ளாஸ்சும்.. 

க்ளை மாக்ஸ் மண்டப சீனில் கன்னத்தில் சந்தனத்துடம் சந்தானம்  கலக்கல் ஹீரோவாய் இருக்கிறார் .. இந்தப்படத்துக்குப்பின் சந்தானம் சம்பளம் எகிறுவது உறுதி..

 செகண்ட் ஹீரோவாய் உதய நிதி ஸ்டாலின்..  இவரே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் பெரிய பில்டப் எல்லாம் தராமல் இயல்பாக அறிமுகம் ஆகிறார்.. அப்பாவுக்குப்பிள்ளை தப்பாம பிறந்துருக்கார்.. அதாவது அடக்கமா , அமைதியா இருக்கற மாதிரி காட்டிக்கறார்.. ஒரு புது முக ஹீரோ என்ற அளவில் இவர் பாஸ் மார்க் தாண்டி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகிறார்.. விஜய், விஷால் வகையறாக்கள் கவனிக்க .. நடன காட்சிகளில் பாக்யராஜ் பாணியில் சமாளிக்கிறார்.. 

 ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி .. சாக்கு மூட்டைக்குள் திணிக்கப்பட்ட தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம்) போல் மினுக்குகிறார்.. பாடல் காட்சிகளில்  ஸ்லோமோஷனில் தளும்புகிறார்.. (45 லட்சம் சம்பளம் வாங்கிட்டு அது கூட இல்லைன்னா எப்படி?) 

ஹீரோவின் அம்மாவாக வரும் சரன்யா காமெடியில் அடி பின்றார்.. 20 வருடங்களாக பேசாத தன் கணவர் பேசும் சீனில் அவர் காட்டும் உற்சாகம் கிளாஸ் ரகம்.. அப்பாவாக வரும் அழகம் பெருமாள் நடிப்பு ஓக்கே.. 

 சாயாஜி ஷிண்டே ஹீரோயின் அப்பா.. வந்தவரை ஓக்கே சினேகா , ஆர்யா கெஸ்ட் ரோல்... குட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgef6l8PAIeiSe6P3yDUJgPubB9uuNLG1JIs9scnV16VWHaNDG7UegXz1t9TwUxKG8ZPhcWK7g7OZq0ZM1USsYatxbE-Zw5ZhwHu4TJAA2WGdK7xatG0cvTte7l26Ay74N2s5yz_eekv8k/s1600/ok+ok+%25281%2529.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  ஹீரோ அண்ட் கோ டிராஃபிக் எஸ் ஐ யிடம் மாட்டி ஸ்டேஷனில் விடிய விடிய சந்தானத்தை மிமிக்ரி பண்ணச்சொல்லி டார்ச்சர் பண்ணும் காட்சி கலக்கல் காமெடி

2. கனவுக்காட்சியில் ஹீரோவை வில்லன் ஷூட் பண்றப்ப தேமேன்னு பக்கத்துல நிக்கற சந்தானத்தை துப்பாக்கிக்குண்டு வாங்க வைக்கும் இடம் செம.. 

3.  கதையே இல்லாமல் போனாலும் திரைக்கதையில் சுவராஸ்யம் சேர்த்த விதம், சந்தானத்தை அவர் வழியில் பேச விட்ட சுதந்திரம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgct2GAZCH8YjGaQksyN20UgHq8Vhw9QGVMfpsKBmr9v2ds_uvDwxdfIxRUxJojfvIspwz05q9_ktARIiTeiTmwZ4cpTB4PXtkt6ii1ByXf26Ug2PBLw1zBvrGYPZOgzaQY3zgz8aRI7KZH/s1600/Oru+Kal+Oru+Kannadi+Movie+Stills+Mycineworld+Com+(8).jpg

4. தயாரிப்பாளராய் எந்த பந்தாவும் காட்டாமல் அடக்கி வாசித்து  நல்ல பிள்ளையாய் இருக்கும் உதய நிதி.. 

5. படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ஆன வேணாம் மச்சான் வேணாம் மச்சான் இந்த பொண்ணுங்க காதலு.. மூடி திறக்கும் முன்பே நம்மை கவுக்கும் குவாட்டரு பாட்டுக்கான சிச்சுவேஷன், நடன அமைப்பு செம கலக்கல்..  அரங்கத்தில் பாதிப்பேர் எழுந்து ஆடறாங்க  ( பொண்ணுங்களால  எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ? )

6. உயிரே உயிரே எங்கே , காதல் ஒரு பட்டர் ஃபிளை, அழகே அழகே, அகிலா அகிலா என் நெஞ்சில் பூ பூத்ததோ என எல்லா பாடல்களுமே கேட்கும் படி இருக்கு.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே 

 7. யாரையும் யோசிக்க வைக்காமல் , காமெடி ஒன்றையே குறி ஆக்கி பர பர என நகரும் காட்சி அமைப்புகள் பிளஸ்.. 


http://moovstills.com/wp-content/uploads/2012/03/Oru-Kal-Oru-Kannadi-Movie-Stills-31-e1331105217367.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  சிட்டி கமிஷனர் பொண்ணு  டூ வீலர் இருக்கு, கார் இருக்கும் ஜீப் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு ஹீரோ வரட்டும்கரதுக்காகவே பஸ் ஸ்டாப்ல நிப்பாரா?  எந்த ஹை க்ளாஸ் ஃபிகர் பஸ்ல போகுது?


2. சரண்யா காலைல 10 மணிக்கு எக்சாம் ரிசல்ட் பார்க்கப்போனவர் கோயிலுக்குப்போனேன் அதான் லேட்னு நைட் 10 மணீக்கு வர்றார்..  அவ்லவ் நீளமான ரிசல்ட்டா?

3.  ஹீரோவும் , சந்தானமும் பேசிட்டு இருக்காங்க.. அப்போ சந்தானம் மீசை இல்லாம  படம் பூரா வர்றவரு அந்த சீன்லயும் மீசை இல்லாம வர்றார்... பேசிட்டு இருக்கறவங்க  அப்படிக்கா கிராஸ் பண்ணி அந்த ரோட்டுக்குப்போய் டான்ச் ஆடி வேணாம் மச்சான் பாட்டுக்கு ஆடறப்ப மீசையோட இருக்காரு.. அந்த பாட்டு முடிஞ்ச அடுத்த சீன் மீசை நோ.. 

4. மேரேஜ் ஆகி 25 வருஷம் ஆச்சு.. 25 வது ஆண்டு விழா இன்னைக்குன்னு சரண்யா ஒரு சீன்ல சொல்றாங்க.. அடுத்த சீன்லயே 20 வருஷமா என் கிட்டே பேசாமயே இருக்காரு அப்டிங்கறார்... அதுவும் டிகிரி முடிச்சுட்டதா பொய் சொன்னதுக்காக.. இந்தக்காலத்துல எந்த புருஷனாவது இந்த சின்னக்காரணத்துக்காக 20 வருஷம் பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம இருப்பானா? ( பேச்சு வார்த்தை மட்டும் தான் இல்லை ஹி ஹி )

5. எல்லா படங்கள்லயும் ஹீரோயினா மனசு மாறி ஹீரோவை ஏத்துக்கற மாதிரி சீனே வைக்கறதில்லை.. க்ளை மாக்ஸ்ல கல்யாண கோலத்துல இருக்கும்போது அந்த மாப்ளை ஆல்ரெடி ஒரு ஃபிகரை மேட்டர் முடிச்சு கழட்டி விட்டுருப்பான்.. அதை யாராவது காட்டிக்கொடுத்து பேரை கெடுப்பாங்க.. அதே சீன் தான் இதுலயும்..

6. போலீஸ் ஹையர் ஆஃபீஸ் வீட்டு மேரேஜ்.. மண்டபத்துல நோ போலீஸ்..??? பாதுகாப்பே இருக்காதா?


http://chennaionline.com/images/gallery/2012/March/20110322103210/oru-kal-oru-kannadi-movie-latest-photos-images-stills-37.jpg


பஞ்ச் டயலாக்ஸ், ஃபைட்ஸ் எல்லாம் இல்லாம வன்முறைக்காட்சிகள் இல்லாத ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட் சினிமா .. சந்தானத்துக்காக பார்க்கலாம்.. 

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் -  கதை முக்கியம் இல்லை.. ஜாலி சிரிப்பு போதும்னு சொல்றவங்க, சந்தானம் ரசிகர்கள் என எல்லாரும் படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

 ஏ செண்ட்டரில் 75நாட்கள், பி செண்ட்டரில் 40 டூ 50 நாட்கள் , சி சென்ண்டரில் 20 நாட்கள் ஓடும்

 படத்தின் கலக்கலான காமெடி ஜோக்ஸ் 112 அடுத்த பதிவில்



http://chennai365.com/wp-content/uploads/On-Location/Oru-Kal-Oru-Kannadi/Oru-Kal-Oru-Kannadi-Stills-030601001.jpg

diskci - review of the film http://www.adrasaka.com/2012/04/ok-ok-108.html
 

13 comments:

Unknown said...

அருமையான விமர்சனம்.
astrovanakam.blogspot.in

kumar said...

அருமையான விமர்சனம்.

112 Dialogs CD parthu than Sollanumo

சி.பி.செந்தில்குமார் said...

@kumarno already typed and drafted

Mayiluu said...

நல்லா எழுதி இருக்கீங்க. .

murali said...

as usual romba detailed-a watch panirukeenga.
theatre ku laptop eduthutu poiduveengalo?

Anonymous said...

படத்த இந்த அளவு ஆழந்து பாத்ருகீங்க அதுக்கே ஒரு சபாஷ். குறைகளை ரொம்ப அருமையா சுட்டி காட்டீருகீங்க...ரொம்ப நன்றி விமர்சனத்திற்கு

ராஜி said...

படத்தைவிட உங்க விமர்சனம் நல்லா இருக்கு

test said...

பாக்கணும் பாஸ்! நிறைய நாளா வெயிட்டிங்!

R. Jagannathan said...

40 posts in 13 days! You are the superman of the Blog World! - R. J.

ஹாலிவுட்ரசிகன் said...

கொழும்பு பக்கம் போனா முதல் வேலை இது தான்.

Pulavar Tharumi said...

கலக்கல் விமர்சனம்!

yakoop said...

hero nalla varuvaru good parkkalam

Santhosh Saravanan said...

அருமையான விமர்சனம்! இங்கு மட்டும் அல்ல, எல்லா ப்டங்களுக்குமே!! கூற்மையான கவனிப்பு!!