Friday, April 06, 2012

கொஞ்சி கொஞ்சிப்பேசி மதி மயக்கும்..,- சிறுகதை

                                                     
வெள்ளிக்கிழமை....,

ஹேய் கிஷோர், என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற? என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியாடா?

ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேடி...,


--....................................... 
சனிக்கிழமை....,

 ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம்கூட தெரியுமாடி?

 நீ எனக்கு எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது. போடா, ஐ ஹேட் யூ 


என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை  பின் தொடர்ந்தபடியே போன கிஷோர்...,



 ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' 

 என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.



 இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கமல் ஸ்டைல்லில் கிஷோர்  சொல்ல, 


அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும்



 ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..!!!!


>>>>>>>>>>>>


ஞாயிற்றுக்கிழமை..., 


ஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர்...,

ஹேய் ஜம் இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் 

ஒண்ணுமில்லடா  என்றவளிடம் 


இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா? 

ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு

 அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி



 என்று ஜமுனா ஓடி ஒளிய


 சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஸ்ஸையும் பெற்றுக்கொண்டான்..! 


>>>>>>>>

திங்கட்கிழமை....,

ஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்பேன் 
என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும்...,

 என்ன விளையாட்டுடா?! என்று ஆர்வமாக கேட்டவளிடம்

 ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?'' என்றான்.

 சரி என்றவளிடம்...,

 லேடீஸ் ஃபர்ஸ்ட்

 என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் 


கேன் ஐ ஹெல்ப் ?


என்றான் .ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! 


>>>>>


செவ்வாய் கிழ்மை....,

அழகான முன்னிரவு வேளயில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் ,

 அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர்

 அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான்

 அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..!

>>>>>>


புதன் கிழமை...,

கிஷோர் ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான்


 பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன் டொம்மென்று பெட்டில் விட்டான் .

செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான்

 அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...


>>>>>>



       என் வயிற்றில் ஆடும் தாமரை கையசைக்க  காலசைக்க காத்து வளர்ப்பேன் ன்னு என் ராசாவின் மனசுல வரும் பாடலை ஹம் செய்தவாறே...,  பிள்ளை சுமக்க போகும் வயிற்றை தடவியவாறே, நாட்டைக்காக்க எல்லைக்கு செல்லும்  கிஷோருக்கு கையசைத்தவாறு அவன் வருகைக்காக்காக நாட்களை எண்ணி காத்திருக்க தொடங்கினாள்.


1 comments:

chinnapiyan said...

ரொம்ப ரொமாண்டிக்கா இருந்துச்சு. திருமணம் ஆகாதவங்களுக்கு ஏக்கத்தை உண்டுபண்ணும் . நல்லது வாழ்க வளர்க