Monday, April 23, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 7

ஃபிலாசபி பிரபாகரன் 2011 ஆம் ஆண்டில் அவரது தளத்தில் பகிர்ந்த பதிவு.
பதிவுலகில்  சக பதிவராக அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பி அவரை தொடர்பு கொண்டேன். அப்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே:-
(பி.கு: இது நேர்காணல் அல்ல தொலைபேசி உரையாடல்)

1.ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.

2. நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
(பலத்த சிரிப்புடன்) பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.

3. மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.

4. ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...?
கிளம்பத்தான் செய்கிறது. அவ்வப்போது படத்தின் துணை, இணை இயக்குனர்கள் போன் செய்தும் மெயில் அனுப்பியும் திட்டுகிறார்கள். இருப்பினும் நான் என்னுடைய பார்வையில் தானே படங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் மொக்கை என்று எழுதிய காரணத்தினால் எந்தப்படமும் தோல்வி அடையப்போவதில்லை.

5. சமீபத்தில் சிரிப்பு போலீஸ் ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...?
உண்மைதான். இதுப்பற்றி ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேனே. கடந்த 18 வருடங்களில் நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள். பாக்யா இதழின் மூலமாக இயக்குனர் பாக்யராஜுடன் நெருங்கிய பழக்கம் உண்டு.

நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. அப்படி என்றால் சித்து +2 பட விமர்சனத்தில் சொம்படித்திருப்பீர்களே...?
அதுதான் இல்லை. எப்போதும் போல எனது நடையிலேயே எழுதினேன். ஆனால் அதைப் படித்தபின்பு இயக்குனர் பாக்யராஜ் வருத்தப்பட்டார். பின்னர் என்னுடைய விமர்சனம் சரிதான் என்று நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.

7. விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...?
சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தலைவிரித்து ஆடியபோது கனிமொழி ஆ.ராசா பற்றி ஜோக் ஒன்றை எழுதி தி.மு.க தரப்பில் இருந்து அந்த ஜோக்கை நீக்கும்படி மிரட்டல் வந்தது. அலுவலகத்தில் இருப்பதால் வீட்டுக்கு போனதும் டெலீட் செய்துவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவசரப்படுத்த உடனடியாக பிரவுசிங் செண்டருக்குப் போய் அந்த ஜோக்கை நீக்கினேன்.

8. சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...?
கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.

9. ஆடுகளம் தான் பொங்கல் படங்களில் டாப் என்று சொல்கிறார்களே...?
ஆடுகளம் நல்ல படம்தான். ஆனால் B,C சென்டர்களில் பெறும் வரவேற்ப்பை A செண்டரில் பெறாது என்பதே எனது கணிப்பு.

10. எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்....?
காவலன் 45, சிறுத்தை 44, ஆடுகளம் 43

11. அப்படின்னா கலைஞரின் இளைஞன்....?
இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

12. கேபிள் சங்கரின் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் முரண்படுகிறதே...? குறிப்பாக காவலன் படம் பற்றிய கருத்து....? (இதுவும் ஒரு ஜாலி கேள்வியே)
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். கேபிள் சங்கர் அனுபவஸ்தர். அதைவிட முக்கியமானது, அவர் திரையுலகில் இருப்பவர். காவலன் படம் பற்றி சொல்லும்போது, கேபிள் மலையாள பாடிகார்ட் படத்தை பார்த்து அதையும் இதையும் கம்பேர் செய்திருக்கக் கூடும். 
மேலும் அவர் மேல்தட்டு மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்திருக்கலாம். திரையுலகத்திற்கு உள்ளே இருந்து பார்த்ததால் அவர் கண்களுக்கு அதிக குறைகள் தெரிந்திருக்கலாம். நான் ரசிகர்களோடு அமார்ந்து ரசிகனாகவே படம் பார்த்தேன். நான் பார்த்தவரைக்கும் பொதுமக்கள் படத்தை ரசித்தார்கள், கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக...

13. மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பட விமர்சனத்திலும் இருபது முப்பது வசனங்களை தொகுத்து வெளியிடுகிறீர்கள்...? அது எப்படி சாத்தியமாகிறது...?
சில பேர் நான் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும், பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில் பதியவைத்தே எழுதுகிறேன்.

இதை சோதனை செய்வதற்காக ஒருமுறை பதிவர் நண்டு@நொரண்டு என்னோடு திரையரங்கம் வந்திருந்தார். மேலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.

சூப்பர்ப் சிபி, உங்களுடைய மொக்கைப் படங்கள் பார்க்கும் பிஸி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்த பேட்டியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுலக, திரையுலக எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சிபியுடன் வகுப்பறைத்தோழனை போல நெருங்கிப் பழகிவரும் நான் அவரைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...?
 ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நன்றி - ஃபிலாசபி பிரபாகரன் 





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html

12 comments:

Unknown said...

இதே பிரபா இப்போ என்ன சொல்றாருன்னு போட்டா தேவல...கண்டமேனிக்கு.....!

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment

For latest stills videos visit ..

www.chicha.in

ராஜி said...

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.
>>>
அட அட் அட அடடா, சிபி சார் அன்னப்பறவை போல. அன்ன பறவை பாலையும், தண்ணியும் கலந்து வச்சா பாலை மட்டும் ஏடுத்துக்கிட்டு தண்ணியை அப்படியே வச்சுடுமாம. அதுப்போல பார்க்குற படத்துல இருந்து நல்லது மட்டும்தான் எடுத்துப்பாராம்.

Unknown said...

சிபி மாதிரி ஒரு நல்ல நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.....பழக அருமையான மனிதர்...ஈரோட்டுல எங்க இருந்து அழைத்தாலும் வந்து சந்திப்பார்....இது நமக்கு ஒருத்தர் சொன்னாருங்க.....என் அனுபவத்திலும் இது உண்மை!

ராஜி said...
This comment has been removed by the author.
Vadakkupatti Raamsami said...

இதே பிரபா இப்போ என்ன சொல்றாருன்னு போட்டா தேவல...கண்டமேனிக்கு.....!///
.
.
ஏன் பாஸ்?இப்போ ரெண்டு பேரும் டூவா?

MARI The Great said...

////சிலர் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும் பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர்///////

இறைவன் எல்லோருக்கும் இந்த அளவிற்கு ஞாபகசக்தி கொடுப்பதில்லை

அனுஷ்யா said...

நீங்க டயலாக் எல்லாம் எழுதியோ பதிந்தோ வெச்சுக்கறது இல்ல ன்னு தப்பு தப்பா நெறையா டயலாக் இருக்கும் போதே நான் கண்டுபுடிசுருவேன்... ஹி ஹி....

ராஜி said...

என் கேள்விகள்...,
1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?

2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?

3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.

ராஜி said...

4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆணோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?

ராஜி said...

5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா?

கலையன்பன் said...

ரகளை!