Thursday, April 26, 2012

பில்லா -2 - ( BILLA -2 ) தல அஜித் கல கல பேட்டி - ”தல”ப்பாக்கட்டு பிரியாணி

http://123tamilgallery.com/images/2012/01/Billa-2-34.jpgஜீத் எப்போதும் ஆச்சர்யம்! '' 'பில்லா-2’ முடிஞ்சிடுச்சு சார். இப்போதான் ரிலாக்ஸ் ஆனேன். கொஞ்சம் பேசலாமா?'' என்று அஜீத் கேட்டது நள்ளிரவு 2 மணிக்கு. நிறையவே பேசினோம்...


சி.பி - மிட் நைட் மசாலா பார்க்கற டைமில் பேட்டியா? விளங்கிடும்



1.  ''இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட 'பில்லா-2’ பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?''


''நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''


சி.பி - கவுண்டமணிக்குப்பிறகு தன் சொந்த லாபத்துக்காக சின்னத்திரையில் பேட்டி கொடுப்பதோ, பிரமோஷன் விளம்பரத்துக்கு எதையாவது உளறுவதோ கூடாது என்பதில் நல்ல கொள்கை கொண்டவர் அஜித்

2. ''பத்திரிகைகள், சேட்டிலைட் சேனல், சோஷியல் மீடியானு எக்கச்சக்கமா புரொமோஷன் பண்ற டிரெண்டுக்கு மத்தியில், நீங்க படத்தைப் பத்திப் பேச மாட்டேன்னு சொல்றது சரியான முடிவா?''


சி.பி - என்னைப்பொறுத்தவரை இது சரியான முடிவுதான்.. ஏன்னா எப்பேர்ப்பட்ட டப்பா ப்டமா இருந்தாலும் சரி, நம்மாளுங்க  “ ஆஹோ ஓஹோ பேஷ் பேஷ்.. இந்த மாதிரி ஒரு ப்டம் ஒலகத்துலயே வந்ததில்லை.. வித்தியாசமான கதை, மாறுபட்ட நடிப்பு அப்டினு ரீல் விட  வேண்டியது அப்புரம் படம் ரிலீஸ் ஆகி டப்பா ஆனதும் நான் எதிர் பார்த்த வெற்றியை மக்கள் அளீக்கவில்லை.. நல்ல படத்தை தமிழர்கள் ஆதரிப்பதில்லைனு கலைஞர் மாதிரி பழியை நம்ம மேலயே தூக்கிப்போட வேண்டியது.. ம் ம் 
''இது என் பெர்சனல் முடிவு. எது சரி, எது தப்பு, இதுதான் டிரெண்ட்னு சொல்ற தகுதி எனக்கு இல்லை. 'எ குட் ஃபிலிம் இஸ் புரொமோஷன் பை இட்செஃல்ப்’னு சொல்வாங்க. என்னைத் தீவிரமா விமர்சனம் பண்றவங்க, திட்டுறவங்க நிச்சயம் என் படத்தைப் பார்க்கப்போறது இல்லை.

சி.பி - அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க.. விஜய் படம் ரிலீஸ் ஆனா அஜித் ரசிகர்களூம், அஜித் படம் ரிலீஸ் ஆனா விஜய் ரசிகர்களும் முத நாளே படம் பார்ப்பாங்க. அப்போத்தானே படம் சரி இல்லைன்னு நெகடிவ் விமர்சனம் பரப்ப முடியும்?


என்னைப் பத்தித் தெரிஞ்சவங்க, 20 வருஷமா என்கூடவே பயணிக்கிறவங்க, அஜீத்தின் நிறைகுறைகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கதான் படம் பார்க்கப்போறாங்க. அவங்க விமர்சனங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்!''


3. '' 'அமராவதி’ அஜீத்துக்கும் 'பில்லா-2’ அஜீத்துக்கும் என்ன வித்தியாசம்?''


சி.பி - அமராவதில வாக்கிங்க் போன தூரம் சும்மா ஒரு பர்லாங்க தான். ஆனா பில்லா 2 ல 5 கி மீ வாக்கிங்க் போயிருக்காராம்.. .. தல நடையா நடப்பாரு,. படம் ஓட்டமா ஓடும்.  சிலர் படம் பூரா ஓடிட்டே இருப்பாங்க, ஆனா படம் ஓடாது ஹி ஹி 


''கொஞ்சம் பக்குவம், நிதானம் வந்திருக்கு. ஆனா, பேஸிக் கேரக்டர் மாறலை. அனோஷ்கா பிறந்த பிறகு பொறுப்பு இன்னும் கூடியிருக்கு. நிறைய அனுபவங்கள்... பல கசப்பானவை. ஆனா, எந்த நிலைமையிலும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. அதனால், நோ ரிக்ரெட்ஸ்!''



4. ''பாலிவுட்போல இங்கேயும் மாஸ் ஹீரோக்கள் டி.வி. நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களை அப்படி ஒரு டி.வி. ஷோவில் பார்க்கலாமா?''


சி.பி - 6 மாசம் ஷூட்டிங்க் நடத்தி கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசு சும்மா ஜஸ்ட் 2 நாள் ஷூட்டிங்க்ல கிடைக்குதுன்னா யாருக்கு கசக்கும்?
''சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதெல்லாம் எனக்கு செட் ஆகும்னு தோணலை. அதுக்கு சில முன் அனுபவங்களும் காரணம்!''


சி.பி - அது என்ன மேட்டர்னு சொல்லி இருக்கலாம்.. 


5. ''உங்களை மிகவும் பாதிக்கிற விமர்சனம் என்ன?''


''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''


சி.பி - காய்ச்ச மரம் தான் கல்லடி படும்.. மார்க்கெட் இல்லாத ஆளை யாரும் கண்டுக்க மாட்டாங்க.. எப்போ ஒருத்தனைப்பற்றி விமர்சனங்கள், வாக்குவாதங்கள் வந்துட்டே இருக்கோ, அவன் டாக் ஆஃப் த டவுன், வில்லேஜ் ஆக இருக்கானோ அவன் டாப்ல இருக்கான்னு அர்த்தம். இது சினிமா  ஃபீல்டுக்கும் பொருந்தும்..  


http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/billa_0.jpg.crop_display.jpg


6. ''ஆரம்பத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து, பிறகு நீங்கள் விலகி வேற ஹீரோ நடிச்ச எல்லாப் படங்களுமே ஹிட். 'மிஸ் பண்ணிட்டோமே’னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?''


''நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியில யும் நம்ம பேர் எழுதி இருக்கும்னு சொல்வாங்க. அதை நான் நம்பறேன்!''


7.''உங்க பலம், பலவீனம் என்ன?''


''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''


சி.பி -  பல நல்ல படங்கள் ஓடாம இருக்கறது  தலயின் பலம், படம் ஓடுனாலும் ஓடாட்டியும் பொது வாழ்வில் அவரது நடத்தை பற்றி மக்கள் நல்ல மதிப்பு வெச்சிருக்கறது பலம்.. 


8. ''பாலிவுட்டில் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடிக்கிறாங்க; சேர்ந்து பட புரொமோஷன்களில் கலந்துகொள்றாங்க. ஆனா, அந்தச் சூழல் இங்கு இல்லையே?''


'' 'அமராவதி’ படத்துல ஹீரோவா நடிச்சுட்டு, அடுத்து அரவிந்த்சாமி படத்துல ஒரு சீன்ல வந்து நடிச்சேன். விஜய் ஹீரோவா நடிச்ச 'ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவரோட நடிச் சிருக்கேன். முதலில் 'நேருக்கு நேர்’ படத்தில் நானும் விஜயும்தான் சேர்ந்து நடிச்சோம். சில காரணங்களால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியலை. 'உல்லாசம்’ படத்தில் நானும் விக்ரமும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அவசியம் வரும் போது சேர்ந்து நடிக்கத்தான் செய்றோம்!''

சி.பி - நல்ல வேளை நேருக்கு நேர் படம் கை மாறுச்சு.. இல்லீன்னா தியேட்டர்ஸ் எல்லாம் ரண களம் ஆகி இருக்கும். 2  பேர் ரசிகர்களூம் அடிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க. 



http://www.moviephotos.in/stills/billa-2-17.jpg
9. ''படம் வெளியாகி முதல் ஷோ முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிடுதே?''


சி.பி - முன்னே எல்லாம் படம் ரிலீஸ் ஆகி 7 நாள் கழிச்சுத்தான் பத்திரிக்கைகள்ல விமர்சனம் வரும், இப்போ தான் இண்டர்நெட்ல படம் ரிலீஸ் ஆகி 3 மணீ நேரத்துல வந்துடுதே.. மவுத் டாக் மூலமா ரிசல்ட் பரவிடுது. 

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். 


கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''  

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/04/Billa-2-Movie-Onlocation-Stills-12-300x268.jpg


10. ''இத்தனை வருஷத்தில் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் உங்க ரசிகர்களின் எண்ணிக்கை குறையலையே?''


''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன்.

 ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

http://images.news.pluzmedia.in/slide/big_Ajith_heroines_in_Billa_2_calendar-315a60037a9eda5b6d7771d48e2e97c9.jpg


ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''


http://www.dailomo.com/wp-content/gallery/billa-2-item-song-actress-meenakshi-dikshit-stills/billa2-item-song-actress-meenakshi-dikshit-stills-8.jpg

7 comments:

Sudhesamithran said...

First time naan first

கோவை நேரம் said...

இடம் பிடிக்க என்னா போட்டி இங்க...

Shiva sky said...

thala na thala thaan......i love u thala

Shiva sky said...

enga thalayai patri post potta annan cps ku ..nandri

ரா.ரமணன் said...

முதலில் ஒரு நன்றி! பழம் உள்ள மரம் கல்லடி படும் என்று சொன்னதற்கு. தமிழ் சினிமாவில் (இணையத்தில்) கூட கல்லடி படுபவர் தளபதி. so , நீங்களே ஒத்துக்கொண்டதக்கு தளபதி ஒரு பழம் (பணம்) காய்க்கும் மரம் என்றதற்கு.
அஜித் ஒவ்வொரு முறை படம் வரும் பொழுதும் பேட்டி அளிப்பார். ஆனால் படம் பற்றி பேச மாட்டார் ஏன் என்றால் எங்கு எதிர்பார்ப்பை கூட்டி கடைசியில் வாயை போத்த வேண்டும் என்று பயம்.( குள்ளநரி கருணாநிதி முன் மண்டியிட்டமாதிரி) அதனால் ரசிகர்கள் ரசிகர்கள் என்று அப்பாவி ரசிகர்களை ஏமாற்றுகிறார், படம் ஓட வேண்டும் என்பதற்காக. ஆந்திராகாரனின் மூளையே மூளை தான். பாவம் அப்பாவி இளிச்சவாய் தமிழர்கள்.

அண்ணை, நீங்கள் அஜித்தின் பேட்டியை TV யில் பார்த்தது இல்லையா. பாவம் நீங்க. நீங்களும் இளிச்சவாய் தமிழர்களில் ஒருவர் போல? எங்கள் தல கவுண்டமணி உடன் ஒப்பிடவேண்டாம், அப்புறம் கொலையே விழும்.

http://www.youtube.com/watch?v=ZIc_BtuixH0

மனித புத்திரன் said...

ஏய் தல பேஷ் மாட்டேன் என்கு ஷூபர ஷ்டார் நாக்காளி வேனம்

tech news in tamil said...

always thala great