Thursday, April 12, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13.4 .2012) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

 http://suriyantv.com/wp-content/uploads/2012/03/%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF.jpg

1. 'ஒரு கல் ஒரு கண்ணாடி -இன்றைய தேதியில் தயா‌ரிப்பாளர்கள் பயமில்லாமல் அணுகக் கூடிய இயக்குனர் ராஜேஷ் எம். சிம்பிளான பட்ஜெட்டில் அதைவிட சிம்பிளான கதையை ஜாலியாக எடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. கதை இருக்கிறதோ இல்லையோ கல்லா நிறைவது கன்ஃபார்ம்.
சிவா மனசுல சக்தியை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி விஷயத்தில் கை தேர்ந்தவர் என்பதால் தனது திரையுலக பிரவேசத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.
ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ஒரு கல் ஒரு கண்ணாடி. துணைப் பெயர், ஓகே ஓகே. 

உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். 'ஆதவன்' படத்தில் ஒரு மிகச்சிறிய வேடத்தில் நடித்ததிருந்தார். உடன்  ஹன்சிகா, சந்தானம், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 ராஜேஷ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்.


ராஜேஷ் இயக்கிய 'சிவா மனசுல சக்தி' படத்தில் இடம்பெற்ற 'ஒரு கல்.. ஒரு கண்ணாடி.. உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' பாடலின் முதல் வரி இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தினை தனது நிறுவனம் மூலம் வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின், அப்போது இயக்குனர் ராஜேஷிடம் ஏற்பட்ட நட்பால் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்து ஆரம்பிக்கப்பட்டது  'ஒரு கல் ஒரு கண்ணாடி'.

உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ் கதையின் சுருக்கத்தைச் சொல்ல, உதயநிதிக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் நாயகனாக அறிமுகமாக ஏற்ற படம் இது தான் என்று முடிவு செய்தாராம்.
http://123tamilcinema.com/images/2011/08/hansika-nipple-e1313100324383.jpg

நாயகன், நாயகி இருவரும்  காதலித்து வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதை காமெடி காக்டெய்லலாக தந்திருக்கிறாராம் ராஜேஷ்.

வழக்கம் போல் நாயகனின் நண்பனாக நடித்து இருக்கிறார் சந்தானம்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு இயக்குனர் ராஜேஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தானம் கூட்டணி மிகப் பெரிய பலம். ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே இப்படத்தில் சந்தானத்தை வைத்து காமெடி கதகளி ஆடி இருக்கிறார். டிரெய்லருக்கே சந்தானம் கைதட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு. காதலில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கான ' வேணாம் மச்சான் வேணாம் ' பாடல் இணையத்தில் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் 'வேணாம் மச்சான் வேணாம்' பாடலுக்கு தங்களது ஆசைக்கு ஏற்றவாறு நடனம் அமைத்து வீடியோ பதிவினை YOUTUBE இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவது படத்துக்கு பெரிய ப்ளஸ்.

படம் பார்ப்பவர்களை இரண்டரை மணி நேரம் அனைத்தையும் மறந்து ரசிக்க, சிரிக்க வைக்கும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறது படக்குழு.

ஏப்ரல் 13ம் தேதி 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யை வெளியிட இருக்கிறார்கள்.ஈரோடு அபிராமி, ஆனூரில் ரிலீஸ்
http://www.thedipaar.com/pictures/resize_20100812131846.jpg

2. பச்சை என்கிற காத்து -தமிழு’, ‘வதை’ ஆகிய குறும்படங்களை இயக்கிய கீரா, இயக்கும் முழு நீளப்படம் ‘பச்சை என்கிற காத்து’. மணப்பாறை அருகே வாழ்ந்து இறந்துபோன 27வயது இளைஞனின் உண்மை கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் முடிகிறது.



தனக்கு எது பிடிக்கிறதோ, அதை மட்டுமே சரியென்று எண்ணி, சமூகத்தின் பல அடுக்குகளுக்கு ஓடுகின்ற ஒருவன், அவன் தேர்ந்தெடுத்த அரசியலாலும், காதலியாலும் எப்படி சிக்கி சீரழிகிறான்? என்பதே இப்படத்தின் கதை.


பச்சை ராம்குமார், வாழ்ந்த, பழகிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் கதை சொல்லுவது போல இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் கோணத்தில், பிளாஷ்பேக் ஆக காட்சிகள் விரிகின்றன.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் எதார்த்த வடிவில் உருவாகியுள்ளது. உதவி இயக்குநர் வாசகர் கதாநாயகாகவும், தேவதை கதா‌நா‌யு‌கி‌யா‌கவு‌ம்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌லகள்‌.இவர்‌களுடன்‌ மு.ரா, அப்புக்குட்டி, துருவன், பரத்குமார், மருதை, சத்யபாமா, துளசி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் கூத்துப்பட்டறையில் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.


அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்ய, ஹரிபாபு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கீரா, இயக்குகிறார். ‘அ’ திரை நிறுவனம் சார்பில் அசுவத்தாமன் இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி ஆகிய இருவரும் தயாரிப்பிலும், திலீபன் – சங்கர் , அஸ்வின்ராஜா இருவரது இணைதயாரிப்பிலும் விரைவில் வெளிவர இருக்கிறது ” பச்சை என்கிற காத்து!”

 http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3206_L_galvpf.gif


படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ கூறுகை‌யி‌ல்‌ “படை‌ப்‌பி‌ல்‌ வலி‌ இருக்‌கி‌றது. தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌ நா‌னும்‌ ஒரு தே‌னி‌ர்‌ கடை‌யி‌ல்‌ அமர்‌ந்‌து பே‌சும்‌போ‌து நா‌ம இந்‌தப்‌ படத்‌தை‌ செ‌ய்‌யலா‌ம்‌ என்‌றா‌ர்‌. சொ‌ன்‌னது போ‌லவே‌ செ‌ய்‌து கா‌ட்‌டி‌னா‌ர்‌. இது இயக்‌குநரி‌ன்‌ படம்‌ இல்‌லை‌. இதி‌ல்‌ உழை‌த்‌த கடை‌சி‌ மனி‌தனுக்‌கும்‌ இந்‌த படை‌ப்‌பி‌ல்‌ வெ‌ற்‌றி‌யி‌ல்‌ பங்‌கு இருக்‌கி‌றது..” என்‌றா‌ர்‌

 ஈரோடு ஸ்டார், ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்


http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/04/Varudangal-20.jpg


3. வருடங்கள் 20 - கே.பி. பிரியங்கா புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'வருடங்கள் 20' இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்திருப்பவர் புதுமுகம் கே.கென்னடி.


 இப்படம் குறித்து அவர் பேசும்போது, "கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சினிமாவுக்காக கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதையாக்கி, கதைக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். கதைக்கு ஏற்ற முகங்களைத் தேர்வு செய்ததால் எனக்கு வேலை வாங்க எளிதாக இருந்தது. நான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறேன். என்னுடன் ஜனார்த்தனன், மைக்கேல், சார்லஸ், கதாநாயகியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷோபியா மற்றும் ஸ்வாதி ஆகியோர் நடித்துள்ளனர்.


 இது 1980ஆம் கால கட்டத்தில் நடக்கிற கதை. அதனால் அந்தக் காலத்தை நினைவுப்படுத்தும் வகையிலான உடை, நடை, பேச்சு என எல்லாம் இருக்கும். நான் நிறைய படங்களை வாங்கி திருநெல்வேலி ஏரியாவில் ரிலீஸ் செய்திருக்கிறேன். என் அண்ணன் டைட்டான், இயக்குநர் ஜி.எம்.குமாரிடம் உதவியாளராக இருந்தவர். அவர் தற்போது இயக்கியுள்ள 'பிஸி' என்கிற படத்தில் நான் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை செய்திருக்கிறேன்


. 'வருடங்கள் 20' படத்தின் காட்சிகளை முட்டம், பெரியவிழை, அழிக்கால், பிள்ளைத்தோப்பு என நாகர்கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எடுத்திருக்கிறேன். படப்பிடிப்பில் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் சந்திரன். அதேபோல எடிட்டர் ரஜினிகுமார், டான்ஸ் மாஸ்டர்கள் பாஸ்கர், சீனு, சண்டை பயிற்சியாளர் த்ரில் சேகர் ஆகியோரும் எனக்குப் பக்க பலமாக இருந்தார்கள்.


சிறு வயதிலிருந்தே எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். நான் சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது நாட்டுப்புறப் பாடல்களையும் பாடுவேன். இசையிலும் எனக்கு ஞானம் உள்ளதால் படத்திற்கு நானே இசையமைக்க முடிவு செய்தேன். படத்தில் இடம் பெறும் அத்தனை பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன்.




 'அதிகாலை நிலவு... நடைபாதை வந்ததே...' என்கிற மெலடிப் பாடலையும், 'ஊரு ஊரா கூத்தடிக்கற கும்மாங்கோ... வெளிநாட்டுக்கெல்லாம் ரூட் அடிக்கிற கொய்யாங்கோ...' என்கிற குத்துப் பாடலையும் முதலில் டியூன் போட்டு பாட வைத்தேன். இது அனைவருக்கும் பிடித்துப் போனதால் மத்தப் பாடல்களையும் உருவாக்கினேன்.


ஈரோடு அண்ணா, சங்கீதாவில் ரிலீஸ்


4 comments:

MARI The Great said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல ..!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ட்ரைலர் விமர்சனம் சூப்பர்.

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

காலை வணக்கம்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!