தினத்தந்தில நான் குழந்தையா இருந்தப்ப கன்னித்தீவு கதை வந்தது வருது இன்னும் வந்துட்டே இருக்கும் போல.. முடிவே கிடையாதா? அந்த சிந்துபாத் மூசா அப்படிங்கற அரக்கன் கிட்டே இருந்து லைலாங்கற ஃபிகரை காப்பாத்த செய்யும் சாகசப்பயணம் தான் கதை.. ஆனா இந்தப்படக்கதை வேற .. ரசிகர்களை கவர்றதுக்காக டைட்டிலை மம்மி அண்ட் சிந்துபாத்னு வெச்சிருக்காங்க தமிழ் டப்பிங்க் போஸ்டர்ல .. ஆனா கடைசி வரை மம்மியோ, ஜெவோ யாரும் படத்துல வரவே இல்லை..
எல்லா அட்வென்ச்சர்ல வர்ற புளிச்சுப்போன அதே கதைதான். ஒரு தீவுல தங்கப்புதையல் இருக்கு.. அதை தேடி ஹீரோ போறான்.. பார்க்கற நமக்கும், போற அவனுக்கும் போர் அடிக்கக்கூடாதுங்கறதுக்காக ஒண்ணுக்கு 2 ஹீரோயின்.. அவன் சந்திக்கற துக்கங்கள் , துயரங்கள் , சாகசங்கள் தான் கதை.. ஹீரோ வழில 2 ஜிகிடிகளை சந்திக்கறான்.. அது கணக்குல வராது ..
படத்தை பத்தி சொல்றதுக்கு முன்னால ஒரு செம காமெடி சீன் சொல்றேன்.. ஹீரோ ஒரு மன்னரோட அரண்மனைக்கு திருட்டுத்தனமா போறான்.. புதையல் பத்தின ரகசியங்கள் அடங்கிய மேப்.. அங்கே அப்போதான் முதன் முதலா ஒரு ஜிகிடியை பார்க்கறான்.. அந்த பாப்பாவும் அப்போதான் ஹீரோவை பார்க்குது.. உடனே “நீ என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடு”ங்குது.. அவ்வ்வ்வ்
அதுக்கு டைரக்டர் ஒரு லாஜிக் வெச்சிருக்கார்.. அதாவது ராஜா ஒரு கொடுமைக்காரன்.. பாப்பாவை ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கான்.. அதனால எப்படியாவது தப்பிக்க பாப்பா வெயிட் பண்ணி இருக்கு.. கிடைச்ச ஃபிகரை மடக்கி போடு பாலிசி பிரகாரம் ஹீரோவை பார்த்ததும் கிளி தொத்திக்கிச்சுனு சொல்றார்.. ம் ம்
கதைப்படி 1000 வருஷங்களூக்கு முன்னால மகாராஜா ஒரு தங்க முத்திரை உள்ள தங்கத்தலையை எங்கேயோ புதைச்சு வெச்சுட்டு அது பற்றின குறிப்பை எழுதி வைக்கறாராம்.. அந்த குறிப்பு 1000 வருஷமா எதுவும் ஆகாம ஃபிரிட்ஜ்ல வெச்ச தக்காளி மாதிரி ஃபிரஸா இருக்காம்.. அட போங்கப்பா.. காது குத்தி இருக்கு எங்களுக்கு..
ஹீரோ ஆள் பார்க்க ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி பாடியோடதான் இருக்காரு.. ஆனா அவர் முகம் ராமராஜன் முகம் மாதிரி எந்த விதமான உணர்சியையும் காட்டாம தேமேன்னு இருக்கு.. அட்லீஸ்ட் 2 ஜிகிடிங்க கூட ஏதாவது ரொமான்ஸ் பண்றாரா?ன்னா அதுவும் இல்லை.. சிடு சிடுன்னு முகத்தை வெச்சுட்டு இருக்காரு.. நாங்க எல்லாம் 20 நிமிஷம் டவுன் பஸ்ல போற குட்டி பயணத்துலயே குட்டி கூட ஏ 4 ஷீட்ல 23 பக்கம் பேசி முடிச்சுட்டு அடிஷனல் சீட்க்காக தேடுவோம்.. இவர் என்னடான்னா யாருமே இல்லாத பாலை வனத்துல அவ்ளவ் சின்சியரா வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்கறாரு..
மனதில் நின்ற வசனங்கள்
1. ஒரு வாரத்துக்குத்தேவையான உணவு கிடைச்சுடுச்சு டோய்..
இதுவா? இது ஜஸ்ட் ஒரு வேளைக்குத்தான் பத்தும்
2. பொண்ணு பார்க்கறதுக்கு நல்லா தான் இருக்கு.. ஆனா சமையலுக்கு ஒத்து வருமா?ன்னு தெரியலையே? ( மையலுக்காவது ஒத்துவருதா?ன்னு பாருங்க )
3. இந்த சுந்தரி வந்த பிறகு உன் சுறுசுறுப்பு கூடி இருக்கே எப்படி?
4. ஹீரோ - இந்த தீவுல ஸ்பெஷல் என்ன ?
ஹீரோயின் ( லைக் கவுதமி,கவுசல்யா டைப்) பார்க்க பெருசா எதுவும் இல்லை
ஹீரோ - ஹூம்... பார்த்தாலே தெரியுது.. எல்லாம் சிறுசுதான்
5. ஜெயிச்சதுக்காக இந்த வெற்றியை கொண்டாடலை.. உயிரை தியாகம் செஞ்சவங்களுக்காக
6. புதையல் கிடைச்சதும் ராஜா மாதிரி வாழனும்..
உன்னை யார் ராஜாவா ஏத்துப்பாங்க
ஐ மீன் ராஜா மாதிரின்னா ராஜாவா இல்லை.. ராஜா மாதிரி இஷ்டப்படி...
என்னமோ செஞ்சு தொலை
அப்போ ஏதாவது தொலையறப்ப உங்களை கூப்பிடறேன்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், லாஜிக் சொதப்பல்கள், யார் எல்லாம் இந்தபப்டம் பார்க்கலாம் என்பதற்கு எல்லாம் இடமே இல்லை.. ஏன்னா அந்த அலவு இந்தப்படம் ஒர்த் இல்லை.. சுருக்கமா சொன்னா இது அதுக்கு சரிப்பட்டு வராது..
இந்த டப்பா படத்தை ஈரோடு ராயல் தியேட்டர்ல பார்த்தேன்.
ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை போன்ற அனைத்து தொழில் நுட்பங்களும் சராசரிக்கு கீழே
சி.பி கமெண்ட் - எஸ் ஆகிடுங்க
5 comments:
ithu australian padam B-Movie athavathu dabba padam
ana ithayum vidama parthu athukku vimarsanatha podu annan CBR n ore mana thairiyathai paratti intha padathila tara ngra characterla nadicha holly brisley use panna soap dubba companyar sarbil parisualikirom
டப்பாபடமா..படங்கள் நல்லாயிருக்கே..ஹிஹிஹி
டப்பா படத்துக்கும் விமர்சனம் எழுதுற நீங்க நல்லாயிருக்கனும்...
நீங்களே டப்பா படம் என்று சொன்ன பிறகு எஸ் ஆகிடுவோம் சிக்குவோமா
சீ வேணாம் ... இந்தப் பழ(ட)ம் புளிக்கும்.
Post a Comment