1. அன்பே! உன் இன்மை உணர்ந்தேன்
ஒரு மண்ணும் புரியலை..
டியர், ஐ மிஸ் யூ!
அப்டி புரியற மாதிரி பேசு
-------------------------------------------------
2. லோக்பாலை எங்களால்கொண்டு வர முடியவில்லை என்பது உண்மை தான் ,ஆனால் அதற்கு பிராயசித்தமாக அமலா பாலை கொண்டு வந்தோம் என்பதை மறந்து விடாதீர்
-----------------------------------
3. ஊழல் வாதிகளை கட்சியவிட்டு நீக்கப்போறோம்னு அறிக்கை விட்டது தப்பா போச்சு...
ஏன் தலைவரே?
கட்சில இருக்கற ஒரு லட்சம் பேரும் "என்னை நீக்கியாச்சா?"னு கேட்கறாங்க
----------------------------------------
4. டியர், செல்லமா கொஞ்ச நேரம் சண்டை போடலாமா?
நாம லவ்வர்ஸ் தான், புருஷன் பொண்டாட்டி இல்ல, மைண்ட் இட்
------------------------
5. டாக் ஷோ ( TALK SHOW) காம்ப்பியரிங்க் இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன் சார்..
குட், எங்கே கத்தி பேசுங்க பார்க்கலாம்
---------------------------------
6. என் ஆளு சவரி முடிக்காரின்னு நினைக்கறேன்..ஓ! எப்டி சொல்றே?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல, பின்னுவதெல்லாம் ஜடை அல்ல-ங்கறாளே?
------------------------------------
7. ராவணன் - யுவர் ஆனர், எனக்குஜாமீன் வேனும்
ஜட்ஜ் - இன்று போய் நாளை வா
--------------------------------------
8,. டியர், உன் கன்னம் வெட்கத்துல சிவக்குதா? கோபத்துலசிவக்குதான்னு எப்படி கண்டுபிடிக்க?
என் கன்னம்சிவந்தா நான் வெட்கத்துல,உன் கன்னம்சிவந்தா நான் கோபத்துல
-------------------------------------
9. பெப்ஸி பற்றி தலைவர் கிட்டே கருத்து கேட்டது தப்பா போச்சு
ஏன்>?
அவர் பாட்டுக்கு டி ஆர் போல " திருவாரூர்னா தேரோட்டம்,ஆறுன்னா நீரோட்டம் ,பெப்ஸின்னா போராட்டம்" அப்டிங்கறாரே?
----------------------------------------
10. லவ் பண்றப்ப அவளுக்கு பூக்களால் அழகு செஞ்சேன், மேரேஜ் ஆன பிறகு டெயிலி அவ எனக்கு பூஜை பண்றா..
விடு, விடு.. பூ செய் என்துதானே பூஜை?
--------------------------------
11. உங்கப்பாவுக்கு மொத்தம் 3 பசங்க தானே?
ஆமா, நான் அவரோட ஒரே 3 வதுபையன்ஹி ஹி
----------------------------------------
12. தலைவரே, மேட்டூர் டேம்ல எப்ப பாரு லவ்வர்ஸ் கூட்டமா இருக்கு
டாமிட்
--------------------------------
13. இந்தவாழ்க்கை நிலை இல்லாததுன்னு சொல்றாரே, அவர் ஞானியா?
ம்ஹூம்,ஆளுங்கட்சி மினிஸ்டர்
----------------------------------------
14. எங்கண்ணன் ஓவரா சரக்கு அடிச்சுட்டான்
அடடா, அப்புறம்?
விண்ணத்தாண்டிலவ்வரோடலாஞ்ச் ஆகவேண்டியவன் மண்ணைத்தோண்டி மடடை ஆகிட்டான்
---------------------------------------
15. யூ ஆர் அப்பாயிண்டட்
ஸாரி சார், மீ மம்மி செல்லம்
அதுக்காக அம்மாயிணமெண்ட்-னு சொல்ல முடியுமா?
----------------------------------
16. எங்க வீட்ல மெகா டி வி இருககு
பொய், அது 21 இஞ்ச் தானே?
எங்க வீட்ல மெகா டி வி சேனல் இருககனு சொல்ல வநதேன்
---------------------------------------
17. ரேவதி நட்சத்திரத்துல குழந்தை பிறந்ததால ரேவதினுபேர் வைங்க..
ஓக்கே, ஜோசியரே,மிருக சீசர நட்சத்திரத்துல பிறந்தா?
---------------------------------
18. தலைவரே,உங்க பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்..
அழகிரி - போதாது, பால்கனில பாஸ் பண்ற வரை இம்பரூவ்மெண்ட் எழுதட்டும்
-----------------------------------
19. தலைவருக்கு 6 சின்ன வீடு இருக்கு..
ஓஹோ, அறுபடை வீடு கொண்ட கில்மாதலைவரா?
-----------------------------------
20. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?
ஆமா, மேரேஜ்க்குப்பிறகு என் மனைவி சமையல்ல நாக்கு செத்துடுச்சு,அடக்கம் பண்ணிட்டேன்
--------------------------------------
8 comments:
அது இருக்கட்டும்...
உமக்கு அடிக்கடி கன்னம் சிவக்குதே அதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சிக்கலாமா..?
மறைக்ககூடாது அன்னாத்தே....
அம்மா செல்லம், விண்ணைத்தாண்டிய ஜோக் ரெண்டும் ஹா... ஹா....
அத்தனை துணுக்குகளும் அருமை நண்பரே...
ட்வீட்டுலாம் கலக்கல் ரகம்
ராவணன் - ஜட்ஜ் பதில் (இன்று போய் நாளை வா) சூப்பர்! ஜட்ஜ் பெயர் ராமனாக இருந்திருந்தால் இன்னும் விசேஷமாயிருந்திருக்கும்!
அது “மிருக சீரிஷம்” நக்ஷத்திரம்!
-ஜெ.
ராவணன் - ஜட்ஜ் பதில் (இன்று போய் நாளை வா) சூப்பர்! ஜட்ஜ் பெயர் ராமனாக இருந்திருந்தால் இன்னும் விசேஷமாயிருந்திருக்கும்!
அது “மிருக சீரிஷம்” நக்ஷத்திரம்!
-ஜெ.
எல்லா ஜோக்குகளும் அருமை சி.பி. நன்றி.
ரசித்து சிரித்தேன். நன்றி
Post a Comment