Monday, March 12, 2012

அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி பை வம்புமணி


மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சி.பி - ஹா ஹா , இப்போ மக்கள் போன்னு துரத்துனா போய்டுவீங்களா? அடங்கோ...

அதிரடியான பேச்சுக்களால் அரசியல் அரங்கத்தை அதிரவைக்கிறார் அன்புமணி ராமதாஸ். ''திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவருமே தமிழர்களே இல்லை. தமிழர் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்'' என்பது இவரது புது குண்டு! 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கைஎன்பது இவரது புது முழக்கம். என்ன திட்டத்தில் இருக்கிறது பா..? மனம் திறக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  

சி.பி - ஆனா அதிமுக மடம், ஆகாட்டி திமுக மடம்னு 2 குட்டைலயும் மாறி மாறி விழுந்து சேறு பூசிக்கிட்டு இப்போ 2 பக்கமும் துரத்தி விட்டதும் பேச்சை பாரு.. ஹா ஹா 



1. ''அது என்ன 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’?''
''கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன்கள். போதும்... திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா..-வுக்கு இருக்கின்றன;


சி.பி - அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்.. ஆனா ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே.. அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடறது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு.. சி எம் ஆகிட்டா  அவ்ளவ் தான்.. தமிழகம் 2 ஆகிடும்


 எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா..-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’. இனி, எங்கள் அரசியல் 'சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியலாக இருக்கும்; 'மைக்ரோ பிளானிங்அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!''



சி.பி -  மைக்ரோ பிளானிங்அரசியல்னா யார் கண்ணுக்கும் தெரியாத அலவு நுணுக்கமா ஊழல் பண்றதா?சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியல்னா உங்களை எதிர்க்கறவங்க முகத்துல ஆசிட் ஊற்றுவதா?



2. ''நவீன யுகத்துக்கான அரசியல் என்கிறீர்கள்... ஆனால், உங்களுடைய சாதிய அரசியல் சரிதானா?''

''சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா..-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் சாதிரீதி யாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால், சீர்திருத்தத்தை அங்கே இருந்துதான் தொடங்க வேண்டும்.''
''இடையில் கொஞ்ச நாட்கள் பா..-வைச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. பா... குழப்பத்தில் இருக்கிறதா?''
''அப்படி எல்லாம் இல்லை. அடிப் படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா... தமிழகத்திலேயே அதிகக் குடிசை கள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட் டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். அவர்களுக்காகப் போராடுவது சாதி அரசியல் ஆகாது. அதைச் சமூக நீதி அரசியல் என்றே கொள்ள வேண்டும்!''



சி.பி - ஆல் ஓவர் தமிழ்நாடு உங்க செல்வாக்கு 4 தொகுதில மட்டும் தான்.. அதனால அடக்கி வாசிங்க..  

3. ''பிற கட்சிகளை நீங்கள் குறை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியும் அதே வாரிசு அரசியல் பாதையில்தானே பயணிக்கிறது?''
''என் அப்பா கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடு, மாடு மேய்த்து, சாணி பொறுக்கி, மூட்டை தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போது என் கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே எனக்குத் தெரியாது.ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு, வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகளே புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும்
ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் 'பசுமைத் தாயகம்அதற்குப் போதுமான தாக இருந்தது. ஆனால், லட்சோப லட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது... என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!''



சி.பி - அண்ணன் கட்சி உறுப்பினர்களைத்தான் மக்கள்னு சொல்றார் போல.. ஹி ஹி 
4. ''அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - ஆமா, அவங்க மானமுள்ள கட்சிக்காரங்க, மக்கள் போ அப்டினு டெபாசிட்டை பிடுங்கி துரத்தி விட்டுட்டா சத்தம் போடாம வந்துடுவாங்க.. 

''ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம்
கேட்டேன், 'இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ '' (கண் கலங்குகிறார்).

சி.பி - என்னது? காருக்கு முத்தம் இட்டாங்களா? நல்லா விசாரிங்க.. கார் அவங்களுதா இருக்கும்னு நினைக்கறேன்.. அடமானத்துக்கு வந்ததை உங்கப்பா ஆட்டையை போட்டுட்டாரோ என்னவோ?
5. ''உங்கள் தந்தை, 'என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்என்று அறிவித்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு எப்படிச் சம்மதித்தார்?''


சி.பி - ஒரு வேளை அன்புமணி தத்துப்பிள்ளையோ என்னவோ?ஏன் சொல்றேன்னா எங்கண்ணன் ராம்தாஸ் அய்யா மானஸ்தர்.. ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு நாக்கு அவருக்கு.. கலைஞர் மோசம்னு ஒரு தடவை சொல்லிட்டா மறுபடி அந்த பக்கமே போக மாட்டார். ஜெவை திட்டுனார்னா போயஸ் பக்கமே தல வெச்சு படுக்க மாட்டார்.. 
''ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் 'தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள்என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8el8_QO5KvcX_krHs8Rg7G9_SFx7BLRkRRQ198pXmOLmSygEr2K_DcsvfZaosDm_csuANZcnwaO7wNe6XxCyeADC4MscEtedZYLxfzcERTdCHNB1ZRiXKzLf6hWdfIDpBOQ7SAC9iAp39/s1600/resize_20111011204443.jpg


சி.பி - அடங்கப்பா சாமி.. இது உலக மகா நடிப்புடா.. வெட்கம் இல்லாம பதவிக்காக அதுவும் பையன் எம் பி ஆகனும்கறதுக்காக நாய் மாதிரி அலைஞ்சது எல்லாம்  எங்களுக்குத்தெரியாமயா இருக்கு?
இந்தியாவிலேயே 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா.


சி.பி - அவ்ளவ் யோக்கியமா இருக்கறவர் ஏன் உங்களை களம் இறக்கனும்? ஊர்ல அநாதைகளுக்கா பஞ்சம்? ஒரு தலித் இளைஞரை களம் இறக்கி இருக்கலாமே? நான் என்ன சொல்றேன்னா அட்டூழியம் பண்ணுங்க, அராஜகம் பண்ணுங்க தப்பில்லை, ஏன்னா எல்லாரும் அதைத்தான் பண்றாங்க, ஆனா வெளீல நான் நெம்ப நெம்ப நல்லவன், உலகமகா யோக்கியன்னு சொல்லிட்டு அராஜகம் பண்ணாதீங்க..


 தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.''


சி.பி - அண்ணன் கட்சிக்காக உயிரையே கொடுப்பாரு.. ஆனா பாருங்க யாராவது அவரை எதிர்த்து பேசுனா கட்சியை விட்டுத்தூக்கிடுவாரு.. 
6. ''மது, புகைப் பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல்... இவை எல்லாம் தமிழகத்தின் 'கலாசாரக் காவலர்களாக உங்களைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?''
''அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, 'அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்என்று. அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனு மதிக்க மாட்டோம்.''

சி.பி - பா ம கவுக்கு கொள்கைன்னு 1 இருந்தா அது இது மட்டும்தான்,, இதை வரவேற்கிறோம்.. 
7. ''உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?''
''ம்ஹூம்... தொட்டதே இல்லை.''

சி.பி - ஆமா, அண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லை.. ஆனா .. ஹி ஹி 

8. ''தமிழர் என்ற சொல்லுக்கு, பா... புதிய வரையறை வகுக்கிறதா?''
''ஆமாம். தமிழ் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? கிடையாது. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத் தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம், இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சி யில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர் கள் இல்லை என்பதுதான்.''


சி.பி - தமிழனை 2 வகையா பிரிக்கலாம் 1. யார் என்ன சொன்னாலும் அதை நம்பிடறவன் 2. காலச்சுழற்சியில் அரசியல்வியாதிகள் செய்யும் ஊழலை, அக்கிரமங்களை மறந்துடறவன்
9. ''அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?''

சி.பி - யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்டீங்க, எல்லா எலெக்‌ஷன்லயும் அவங்க டெபாசிட் வாங்கியாச்சு.. 



''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.''


சி.பி - இது எப்படி இருக்குன்னா ஒரு பணக்காரப்பெண்ணை கல்யாணம் பண்ணீக்கிட்டு எல்லா சொத்துக்களையும் அனுபவிச்சுட்டு அந்த பொண்ணுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம போனதும் நைஸா ஓடி போற மாதிரி இருக்கு.. 
10. ''இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?''
''சத்தியமாக!''

சி.பி - சின்ன வயசுல நாங்களும் இப்படித்தாண்ணே.. எதுக்கெடுத்தாலும் சத்தியம் பண்ணுவோம், அப்போ மனசுக்குள்ளே அ அப்படின்னு நினைச்சுக்குவோம் .. அதாவது அசத்தியமா ஹி ஹி . நீங்க வேணா பாருங்க உங்கப்பா கலைஞர் கால்லயோ ஜெ கால்லயோ போய் விழுந்து நாங்கள் இணைவது காலத்தின் கட்டாயம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை அப்டின்னு வெட்கமில்லாம சொல்லிட்டு நரி மாதிரி நயவஞ்சக சிரிப்போட பேப்பர்ல நியூசா வருவார் பாருங்க.. அப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னா நான் கில்மா படம் பார்க்கறதையே விட்டுடறேன். இது நயன் தாராவோட உண்மைக்காதல் மீது சத்தியம் ஹி ஹி 


டிஸ்கி - கேள்விகள் பச்சை நிறத்தில் இருப்பது எதேச்சையானது, பச்சோந்தி கட்சி என்று எங்களை கிண்டல் பண்றாங்க என யாராவது குதித்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல.. அடச்சே பொறுப்பல்ல.. 

17 comments:

Unknown said...

அண்ணே வணக்கம்...பச்ச கலரு கட்சீகாரங்கோ இன்னும் இங்கன வரலியா!

ராஜி said...

விக்கியுலகம் said...

அண்ணே வணக்கம்...பச்ச கலரு கட்சீகாரங்கோ இன்னும் இங்கன வரலியா?
>>
சுமோல வந்துக்கிட்டே இருக்காங்க விக்கியண்ணா

Unknown said...

விக்கிக்கு எவ்ளோ சந்தோஷம்

முத்தரசு said...

சித்தப்பு, பின்னி பெடல் எடுக்கிரிகளே


பி கேர் புல்.

KANA VARO said...

நல்லாச் சொல்றாங்கையா டீட்டைலு

ARUN said...

www.thepmk.in

ARUN said...
This comment has been removed by the author.
prabhu said...

dei, pmk'va kindal panradhuna odanae vandhudunga. idhu per jathi veri illama vera enna? poi eppavum pola jathi pesi 1 telungana illana kannadana mudhalvar akkunga

இருதயம் said...

பா ம க தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டு என ஐயா அறிவித்துள்ளார் . அதனால் காகாமக , பாபீகாக , ரீரீகாக , மககாக , நீதமாக போன்ற பல கட்சிகள் பெயரை பதிவு செய்துள்ளதாம் . அதற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று மாத்திரம் கேட்காதீர்கள் . ..

ஹி ....ஹி,.....

அருள் said...

படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீம்புக்காக ஓடவில்லை. அது சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். பாபா திரைப்படத்தில் ரஜினி புகைபிடிக்கிறார் என்பதற்காக நடத்தப்பட்டது

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஆகும்.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் 52 % இளைஞர்கள் புகைபிடிக்கின்றனர் என்பது புகழ்பெற்ற லான்செட் இதழில் வெளியான கட்டுரை. அதனை இங்கே காண்க:

Effect of viewing smoking in movies on adolescent smoking initiation: a cohort study

http://image.thelancet.com/extras/03art1353web.pdf

அருள் said...

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிகம் திரைப்படம் பார்க்காத சிறுவர்களை விட அதிகம் திரைப்படம் பார்க்கும் சிறுவர்கள் இருமடங்கு அதிகமாக புகைபிடிக்க கற்றுக்கொள்வது தெரியவந்தது.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் எப்படி சீரழிக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவாக விளக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில், திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன எனவும் அதிகம் சினிமா பார்க்கும் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாகின்றனர் என்றும் தெளிவாக சுடிக்காட்டியது. அதனை இங்கே காண்க:

Smoke-free movies: From evidence to action

http://whqlibdoc.who.int/publications/2009/9789241597937_eng.pdf

இந்திய சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் எவ்வாறு திணிக்கப்படுகின்றன என்பதையும் "பாலிவுட்: நண்பனா, வில்லனா?" எனும் அறிக்கையில் விரிவாக விளக்கியது உலக சுகாதார நிறுவனம். அதுமட்டுமல்லாமல், சினிமாக்காரர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர் என்பதையும் அந்த அறிக்கை தெளிவு படுத்தியது. அதனை இங்கே காண்க:

Bollywood’: Victim or Ally?

http://www.who.int/entity/tobacco/wntd/2003/en/bollywood-exesum.pdf

அருள் said...

இந்தி திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுவது குறித்த காணொளியை இங்கே காண்க:

Documentary on Tobacco in Indian Movies

http://youtu.be/s1rFQfIOnhA

இத்தனை ஆதாரங்கள் உள்ள, ஒரு உயிர் காக்கும் போராட்டம் உங்களுக்கு "படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார்" என்று கேலி பேசும் விஷயமாகிவிட்டதா?

மருத்துவர் இராமதாசு அவர்களின் தொடர் பிரச்சாரத்தால் தமிழ் சினிமா கதாநாயகர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளை கைவிட்டுள்ளனர். 2002 வாக்கில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களும் திரைப்படத்தில் புகைபிடித்தனர்.

ஆனால், இப்போது ரஜினி, கமல், சூர்யா, விஜய், விகரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் திரைப்படத்தில் புகைபிடிப்பது இல்லை. ஏவிஎம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

ஆனாலும். இன்னமும் சிகரெட் நிறுவனங்களின் மரண விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் சிகரெட் கம்பெனிகளிடம் பணம் பெற்று புகைபிடிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அருள் said...

இந்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விளம்பரங்கள் மறைமுகமாகவும் திருட்டுத்தனமாகவும் சினிமா மூலம் திணிக்கப்படுவதை மருத்துவர் இராமதாசு எதிர்க்கிறார். எதிர்கால தலைமுறையினரின் வாழ்வைக் காக்கும் இந்த போராட்டம் உங்களுக்கு காமடியாகத் தெரிகிறதா?

kamaraj jayankondam said...

ஒரு சமுதாய விடியலுக்காக போராடும் வெட்டப்பட்ட மரங்களை இன்று கூட கூப்பாடு போடும் உங்களுக்கு, இருபத்தொரு மனித உயிர்களை தமிழர் அல்லாத தமிழக அரசு சுட்டு கொன்றதையும் நினைவு கூறுங்கள்..

இரு திராவிட கட்சிகளின் தனிப்பட்ட மனிதருக்காக மூன்று மூன்று உயிர்கள் எரித்து கொல்லப்பட்டதை விட, 108 இனத்தின் விடியலுக்காக வெட்டப்பட்ட சில மரங்களை பற்றி பேசும் உங்களுக்கு, பசுமை தாயகம் மூலம் பல்வேறு மரங்கள் நடப்பட்ட செய்தி தெரியவில்ல போலும்..

Unknown said...

அரசியல் என்பதே சாக்கடை அதில் சாதிரீதியாக அரசியல் செய்பவர்கள் அதில் நெளியும் புளுக்கள்...இவர்களால் மற்ற சாதியினருக்கு ஏதாவது நன்மை நடந்திருக்கிறதா....இவர்கள் உலகை திருத்த போகிறார்களா?

Unknown said...

அண்ணே சிபி அண்ணே வளச்சு வளச்சு ஒருத்தரு உங்கள வம்புக்கு இழுக்குறாரு ஏதாச்சும் பதில் சொல்லுங்கண்ணே

sayanapuram manigandan said...

neenga dalita c.p sir