15 Mar (1 day ago) | ||||
|
டைட்டில், போஸ்டர் டிசைன், ட்ரெயிலர், படம் வெளியாகும் முன்பே சூப்பர் ஹிட் ஆன 2 பாடல்கள் இவை எல்லாம் ரொம்பவே வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர் பார்க்க வைத்தது.. ஆனால் கதைக்களம் மட்டுமே புதுசு, மற்றபடி எப்பவும் சொல்ற அதே காதல் கதை தான்..
ஹீரோ கிருஷ்ணா,கருணாஸ், தம்பி ராமையா,இன்னும் ஒரு ஆள் இவங்க 4 பேரும் ஒரு குரூப். இவங்க தொழில் என்னன்னா மலை உச்சில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கற காதல் ஜோடி பிணங்களை பள்ளத்தாக்குல போய் இறங்கி எடுத்துட்டு வந்து ஒப்படைச்சு பணம் வாங்கறவங்க. ஹீரோயினோட அக்கா அவ லவ்வரோட குதிச்சு செத்துடறா.. அக்கா டெட் பாடியை எடுத்து தர்ற ஹீரோ பார்த்து ஹீரோயின்க்கு லவ் வந்துடுது.
ஹீரோயின் கண் எதிரே நடக்கற ஒரு விபத்துல ஹீரோ அடிப்பட்டார்னு பதட்டத்துல ஹீரோயின் ஹாஸ்பிடல் போய் பார்க்கறப்ப ஹீரோவுக்கு லேசா தான் அடி. ஹீரோயின் பதட்டம் பார்த்து ஹீரோவுக்கும் லவ் வந்துடுது.. இண்டர்வல்.
இதுக்குப்பிறகு திரைக்கதையை எப்படிக்கொண்டு போலாம்னு டைரக்டருக்கு ஒரே கன்ஃபியூஷன். அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்கிட்டே விவாதம் பண்றார். ஒரு வில்லனை உருவாக்கிறார். அவன் கள்ளக்கடத்தல் பண்றப்ப குறுக்க வந்த போலீஸ் ஆஃபீசருங்களை போட்டுத்தள்ளறார்..அந்த ஆஃபீசருங்களை பள்ளத்தாக்குல வீசிட்டு ஹீரோ அண்ட் கோ விடம் பாடி கிடைச்சா புதைச்சுட்டு பாடி சிக்கலைன்னு சொல்லிடுங்க அப்டிங்கறான்.
ஹீரோ அண்ட் கோ என்ன பண்ணுச்சு, க்ளைமாக்ஸ் என்ன? என்பதை வெண் திரையில் காண்க..
அலாவுதீன், கற்றது களவு என்ற 2 வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களில் நடித்த கிருஷ்ணா இந்தப்படத்திலும் ஓரளவு புதிய கதா பாத்திரத்தில் தான் நடிச்சு இருக்கார்.. செகண்ட் ஆஃப் ஸ்க்ரீன்ப்ளே தான் காலை வாரிடுச்சு.. நடிப்பை பொறுத்தவரை ஓக்கே.. பாதி நேரம் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது என்றே ஹீரோ அண்ட் கோ டைம் பாஸ் பண்றாங்க.
மா இலை போல் அழகிய வதனம் உள்ள பிந்து மாதவி தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் எழில்..அவரது ஒப்பனை இல்லாத உதட்டழகும். , களங்கம் இல்லாத கண்ணழகும் பெரிய பிளஸ்.. ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் என்றதும் அவர் பதறித்துடித்து ஓடி வந்து துடிப்பது செம நடிப்பு.. படம் முழுக்கவே குறை சொல்ல முடியாத நடிப்பு..
தம்பி ராமையா வழக்கம் போல் யதார்த்த நடிப்பு.. ஆனால் அவர் லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பது எரிச்சல்.. கருணாஸ் அங்கங்கே கமெண்ட் அடித்து கொஞ்சம் கல கலப்பு ஏற்றுகிறார்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. டெட்பாடியை எடுத்து வரும் ஆட்கள் பற்றிய முதல் தமிழ்ப்பட பதிவு என்ற வகையில் இயக்குநருக்கு ஒரு சபாஷ்..
2. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் அவசரம்,காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்போதும் போதை ஆகும் நிலவரம் என்னும் பாடல் காட்சி நடன அமைப்பு, இசை, பாடல் வரிகள் எல்லாம் செம.. தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது.. ( அந்த பாடலில் ஒரே ஒரு சீனில் ஆடும் 18 வயசு ஃபிகர் ஹீரோயினை விட அழகு)
3. ஆத்தாடி மனசு தான், காதலை சொல்லு ஆகிய 2 பாடல்களும் ஓக்கே ரகம்..
4. லொக்கேஷன்கள், ஒளிப்பதிவு இரண்டும் அருமை.. ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்..
5. இடைவேளை வரை படம் எந்த இடத்திலும் தொய்வு இன்றி பரபரப்பாக செல்வது படத்தின் பிளஸ்..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தன் அக்கா இறந்த அடுத்த 5 வது நாளே ஹீரோயினுக்கு காதல் வருதே எப்படி? அதுவும் அக்கா இறந்தது காதல் தோல்வியால்.. அப்போ காதல் மீதே ஹீரோயினுக்கு வெறுப்பு வந்திருக்க வேண்டாமா?
2. ஹீரோயினின் அக்கா பிணத்தை ஹீரோ பணம் வாங்கி எடுத்துத்தர்றார்.. அந்த டெட் பாடில இருந்து அவர் அபேஸ் செஞ்ச நகையை திருப்பி தர்றார்.. கூலி 3000 ரூபாய்ல ரூ 1000 குறைச்சுக்கறார். இந்த 3 காரணங்கள் தான் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் லவ் வரக்காரணம் .. இந்தியன் டயலாக் தான் நினைவு வருது.. ஹீரோ அவன் செய்யவேண்டிய கடமையைத்தானே செய்தான்.. இதில் என்ன தியாகம் இருக்கு?
3. போலீஸ் ஆஃபீசர்ஸ் ஸை வில்லன் அடிச்சு போட்டிருக்கான்.. அது விபத்து அல்ல என்ற முக்கியமான விஷயத்தை ஹீரோ அண்ட் கோ போலீஸ்ட்ட சொல்றாங்க.. அப்பா அவங்க கிட்டே ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்காமயே அவங்களை இன்ஸ்பெக்டர் அனுப்பிடறாரே, அது எப்படி?
4. வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷ் எதைக்கடத்தறார் என்பது தெளிவாக இல்லை.. அவர் ஏதோ டீத்தூள் கம்பெனி வெச்சிருக்கார் என்பது மட்டும் தான் தெரியுது.. ஹீரோ அண்ட் கோவிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ் வில்லனிடம் மட்டும் லஞ்சம் வாங்காமல் மாள்வது ஏன்?
மனதில் நின்ற வசனங்கள்
1. யோவ்.. இங்கே யார்யா தற்கொலையை பார்த்தது?
நான் தான் அய்யா..
எங்கே விழுந்து காண்பி..
2. கள்ளக்காதல் ஜோடிங்க தான் நிறைய விழுந்து சாகுதுங்க.. நாம யார் கிட்டே போய் காசை வாங்கறது?
3. கோபப்பட்டாலும் சரி நீ அதிகம் கோபப்படறே.. சிரிச்சாலும் நீ அதிகமா சிரிக்கறே..
4. விழுந்து சாகனும்னு முடிவு பண்ணுனவன் பக்கமா விழுந்து சாகக்கூடாது? இவ்வளவு தூரம் வந்தா சாவாங்க?
5. தற்கொலை செஞ்சு மலை உச்சில இருந்து விழும் ஜோடிகள் கைல எப்படி இலைகள்?
சாவு பயத்துல கடைசி கட்டமா நாம தப்பிட மாட்டோமா?ன்ன கைக்கு கிடைக்கற கிளைகள், இலைகளை பிடிப்பாங்க :(
6. நிறைய பணம் சம்பாதிக்கற கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருக்கறவனை எவளும் வேணாம்னு ஒதுக்கறது இல்லை.. நிறைய கம்ப்யூட்டர் கம்ப்பெனிகளை மூடுனா ஏகப்பட்ட லவ் ஜோடிகள் தற்கொலை செஞ்சுக்குவாங்கன்னு தோணுது
7. வேண்டப்பட்டவங்க சாகறப்பதான் சாவோட வலி மனுஷனுக்கு தெரியுது
8. சரக்கு அடிக்கறவரை நீ நம்பியாரு.. அடிச்சுட்டா எம்ஜியாரா? தத்துவம் பொழியறே?
9. டாஸ்மாக் வர்றவங்க பாதி பேர் லவ் ஃபெயிலிய்ர்ல தான் வர்றாங்க
10. ஏட்டய்யா, எனக்கு மட்டும் 7 அடி அடிச்சீங்க, என் ஃபிரஃண்ட்ஸ் 3 பேருக்கும் 2 அடிதானா? ஏன்?
அடேய்.. எல்லாருக்கும் ஒரே மாதிரி அடி கொடுக்க இது என்ன சமத்துவபுரமா? லாக்கப்./..
11. செயின் புதுசா இருக்கே..
பரம்பரை செயின்னு இவர் தான் சொன்னாரு
அட திருட்டுப்பயலே
12 .டீ விக்கறவன் கிட்டேயும் சரி, டிக்கெட் விக்கறவன் கிட்டேயும் சரி இந்த போலீஸ் கட்டிங்க்கை கரெக்ட்டா வாங்கிடும்.
13. இப்பவெல்லாம் யார் நகையை போட்டுக்கிட்டு சாகறாங்க? ஊரை விட்டு ஓடி வந்ததும் லாட்ஜ்ல ரூம் போடறாங்க, அப்புறம் மேட்டரை முடிக்கறாங்க, வாடகைக்கு கூட பணம் பத்தாம நகையை வித்து செட்டில் பண்றாங்க.
14. அக்கா.. உன் கிட்டே பேசனும்..
அதைத்தாண்டி. தினமும் செஞ்சுட்டு இருக்கே..?
அய்யோ, ஒரு முக்கிய விசயம் பேசனும்..
15. அடியேய்.. பொண்டாட்டி விடற நீலிக்கண்ணீருக்கு அவளூங்க புருஷங்க வேணா பயப்படலாம், இரக்கப்படலாம்.. மத்தவங்க கிட்டே உங்க பப்பு வேகாது..
16. நாளைக்கு என்ன டே?
சண்டே..
அப்போ அவ வீட்ல தான் இருப்பா..
அது உனக்கு எப்படி தெரியும்?
டேய்.. சண்டேன்னா எல்லாரும் வீட்ல தாண்டா இருப்பாங்க.. என் வெண்ணெய்....
படத்தில் தேவை அற்ற டூயட், ஃபைட் சீன்கள் இல்லாதது ஒரு பிளஸ்.. வில்லனுக்கும் , ஹீரோயினுக்கும் வேறு ஏதாவது விரோதம் இருந்ததாக தனிக்கிளைக்கதை அமைத்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.. ஓக்கே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - இடைவேளை வரை பார்த்துட்டு ரிட்டர்ன் வரலாம்னு நினைக்கறவங்க தியேட்டரிலும், மத்தவங்க டி வி லயும் பார்க்கலாம்.. எல்லாரும் பார்க்கற மாதிரி தான் படம் இருக்கு.. நோ வல்காரிட்டிஸ் ( சரக்கு அடிக்கற சீன், தம் அடிக்கற சீன் அதிகம்.. அதை விரும்பாத பெண்கள் தவிர்ப்பது நல்லது )
ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்
ஆல் செண்ட்டர் 20 நாட்கள் சராசரியா ஓடும்

6 comments:
Comment moderation எடுங்க...சித்தப்பு! எலிக்கு பயந்தெல்லாம் வீட்டை கொளுத்தக்கூடாது..ஆங்!
ஹீரோயின் போஸ் எல்லாம் சூப்பர். இதற்காகவே பார்க்கலாம் போல.
இந்த விமர்சனமே போதுங்க. படமெல்லாம் பாக்க வேணாம் Thanks a lot
ஹீரோயின் முகமெல்லாம் வல்ல லட்டு மாதிரி இருக்கு, ஆனா அந்த கடைசி படத்தில் காலை பாக்கும் போது தான் பயமாயிருக்கு. அந்த படத்தில் காலை மட்டும் ஒட்டு வீளை செஞ்சி ஓட்ட வச்ச மாதிரி இருக்கு. ஏங்க இந்த கொலைவெறி. விமர்சனம் அருமை. ஒரேடியாக எதிர்மறையான விமர்சனம் கொடுக்காம ரசித்த நல்ல விசயத்தையும் சொன்ன விதம் அழகு. எனக்கும் இந்த படம் ஓகே ரகம் தான்.
Anne...
Hero nadicha muthal padam "ALIBABA" and not "ALAVUDDIN". Please edit it.
"ஒரே அடியாக எதிர்மறையான விமர்சனம் கொடுக்காம" - அப்டீன்னு நீங்க சொல்றதுலேந்தே எதிர்மறையான விமர்சனம் தான் எதிர்பாத்தீங்கன்னு தெரியுது !
கழுகு - தி பிணம் தின்னி !!
மூவி ஒர்த் பார் எ குட் ஸ்லீப் !!
Post a Comment