Tuesday, March 13, 2012

கும்தலக்கடி கும்மாவா? குஷ்பூன்னா சும்மாவா? கல(ழ)கத்துக்கே அம்மாவா? காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0uLC40ruDMNWZk6t8BCg_28tggMjW8aV4FDsCZRqL15O2flhZmzwDY7xPEYYMWznxg_JvilpIB10pLIBKNAitnhKWB-h9Zu96dKyjQczLvvNZv_ZYdhFWFQ5pXb7nUYodlEiWAbK3kTY/s640/actress_kushboo_Hot_photos+(1).jpg 

குஷ்பூ பற்றி அறிமுகம் எதுக்கு? இருந்தாலும் ஃபார்மாலிட்டின்னு 1 இருக்கே.. வருஷம் 16 , தர்மத்தின் தலைவன் வந்தப்ப எல்லாம் யாரும் அவர் இவ்ளவ் ஹிட் அடிப்பார்னு எதிர்பார்க்கலை.. சின்னத்தம்பி படம் வந்து ஒரு தூக்கு தூக்குச்சு ... இந்தியா டுடே பத்திரிக்கைல கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து சொல்லி அகில உலக ஃபேமஸ் ஆனார்.. ஷூட்டிங்க் ஸ்பாட்ல அம்மன் சிலை முன் கால் மேல் கால் போட்டு உக்காந்து பெண்ணியவாதி அலட்சியவாதி பெயர் எடுத்தார்.. ஜெயா டி வி யில் பிரம்மாண்டமான யு நெக் ஜாக்கெட் கலாச்சார புரட்சியை தோற்றுவித்தவர்.. அவரோட ஜாக்கெட் டிசைனை பார்க்க பெண்களும், 70 எம் எம் முதுகை பார்க்க ஆண்களும் போட்டி போட்டு பார்க்க நிகழ்ச்சி செம ஹிட்.. அவரது பிரம்மாஸ்திரம் தி முக வில் இணைந்து கலைஞர், ஸ்டாலின், அழகிரி என மூவரிடமும் நல்ல பெயர் எடுத்தது.. இனி ஆண்ட்டியின் கேள்வி பதில்கள்



1. கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' 


சி.பி - இந்தாளுக்கு ஓவர் குசும்புய்யா.. கேள்விலயே  கார்த்திக் தான் முதல்ல அப்டிங்கற அர்த்தம் வர்ற மாதிரி கேட்டிருக்காரே? பிரபுவுக்கு கோபம் வராது?
 
''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு.

சி.பி - ஓஹோ அப்போத்தான் பாடுன பாட்டா? நீயும் மெண்ட்டல், நானும் மெண்ட்டல்.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மெண்ட்டல்..

 ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். 


சி.பி - ஹா ஹா இதுதாங்க செம காமெடி.. குடும்ப நண்பரா? அதாவது குடும்பத்தோட நீங்க இருந்தாக்கூட வந்து ஜாலியா பேசிட்டு இருப்பாரா? ரைட் ரைட்?

அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன் நான்!''

http://www.extramirchi.com/gallery/albums/south/marriage/Prabhu_daughter_Aishwarya_wedding/normal_Prabhu_daughter_Aishwarya_wedding_(7).jpg

சி.பி - அதாவது மச்சினர்.. கொழுந்தனார் ஹி ஹி ரைட்டு.. கேட்கவே கிளு கிளுப்பா இருக்கு.. ஆமா கார்த்திக்  உங்க குழந்தைகளுக்கு பெரியப்பா முறைன்னா பிரபு பெரியப்பாண்ணன் முறையா? ஹி ஹி 

2. ''நீங்கள் சொன்னால் சரியாக இருக் கும்... தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?'' 


சி.பி - தமிழ் நாட்டின் ஒரே ஊழல்வாதி கலைஞர் தான்.. தமிழ்நாட்டுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிதான்

''கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் யாருமே இல்லை. எப்பவும் அவர்தான்... அவர் மட்டுமேதான் சூப்பர் ஸ்டார்!

ரஜினி சார் சினிமாவுக்கு வந்தப்ப, 'இவர்தான் சூப்பர் ஸ்டாரா வருவார்’னு யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்... அவரே நினைச்சிருக்க மாட்டார். ரஜினி சாரே சினிமாவில் வளர்ந்த பிறகு,  அப்ப யாராவது, 'இவர் சிவாஜி சார் இடத்தைப் பிடிப்பாரா? எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பாரா?’னு கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க இடத்தையா ரஜினி சார் பிடிச்சிருக்கார்? இங்கே யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. இன்னும் 20 வருஷத்துக்குப் பிறகு, 'அஜீத், விஜய், சூர்யா இடத்தை யார் பிடிப்பாங்க?’னு கேட்கலாம். இது ஓர் ஓட்டம். ஒவ்வொருத்தர் நடிப்பு, உழைப்பைப் பொறுத்து அவரவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அவ்வளவுதான்!''


3. ''உங்களை இயக்கியதில் உங்களைக் கவர்ந்தவர் யார்? யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?'' 

சி.பி - ராஸ்கல்.. என்னாய்யா கேள்வி இது டபுள் மீனிங்க்ல ? 

 ''நான் எப்பவும் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர்னு மூணு பேரின் ஃபேன். இவங்களோட படங்களை முடிஞ்சா முதல் நாள் முதல் ஷோவே பார்த்துடுவேன். ஆனா, என்னை இயக்கிய இயக்குநர்களில் எனக்குப் பிடித்தவர் பி.வாசு சார். அவர் என்னை வெச்சு கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியிருக்கார். இப்போதைய இயக்குநர் களில் நான் நடிக்க விரும்புவது கௌதம் மேனன், வசந்தபாலன்னு பெரிய லிஸ்ட்டே இருக்கே!''


சி.பி - என்னது? வாசு அண்ணன் உங்களை வெச்சு 15 பண்ணிட்டாரா? அடங்கொன்னியா.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJEbQEyRa-BfuBjJ8_EgNQD-gTnsODVV6_2oGlG2MTIXIMrQXlqDV7FmC0N5oufGSGL79L6fNFL859X61_maATKuT4hUwbf5Pgu2CfX7zzrhYnGaI0PvK4UdpFPZD_V-uBLCGqyq_yUt8/s1600/kushoob%252Bsunder%252Bhot%252Bactress.jpg

4.'' 'சின்ன குஷ்பு’ என்று யாருக்காவது பட்டம் கொடுக்கச் சொன்னால், இப்போதைய கதாநாயகிகளில் யாருக்குக் கொடுப்பீர்கள்?'' 


சி.பி - ஆமா, இப்போ ரொம்ப குண்டாகிட்டதால இவங்க பெரிய குஷ்பூ,, ஒரு காலத்துல பாலாம்பிகா அப்டினு ஒரு நடிகை , சிவரஞ்சனி-அவங்க தான் சின்ன குஷ்பூவா இருந்தாங்க.. என் கண்ணோட்டத்துல கொழுக் மொழுக் அழகி ஹன்சிகா மோத்வானி சின்ன குஷ்பூஅப்டினு சொல்லலாம்.. 

''யாருக்கும் கிடையாது! அவங்க ஏன் சின்ன குஷ்புவா, சின்ன சிம்ரனா, சின்ன ஜோதிகாவா இருக்கணும்? அவங்க அவங்களாவே இருக்கட்டுமே. என்னை யாரும் சின்ன நதியா, சின்ன ராதான்னு கூப்பிடலையே. குஷ்புவாக மட்டும் பார்த்ததுதானே எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ் அவங்களுக்கும் கிடைக்கட்டுமே!'

'
5.''பொதுவாக, ரஜினியைப் புகழ்ந்து பாடும் பாடல்கள்தான் ஹிட் ஆகும். ஆனால், ரஜினியே உங்களைப் பற்றிப் பாடுவதுபோல அமைந்த 'கூடையில் என்ன பூ... குஷ்பு’ பாடலுக்கு அவருடன் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

சி.பி - ஹா ஹா தமிழன்கள் பைத்தியக்காரனுங்க, இந்த போதையை வெச்சே 10 வருஷம் காலம் தள்ளிடலாம்னு நினைச்சிருப்பாங்க.. 

 '' 'அண்ணாமலை’ படத்துல அந்தப் பாட்டு இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு காமெடி சண்டைக் காட்சி எடுத்துட்டு இருந்தப்ப, 'உன் பேர்ல படத்துல ஒரு பாட்டு இருக்கு... தெரியுமா குஷ்?’னு ரஜினி சார் கேட்டார். நான் நம்பலை. ஆனா, ஒலிப்பதிவாகி வந்த பாட்டை நாகராவில் கேட்டுட்டு, 'சார், இது பயங்கர காமெடியா இருக்கு. இந்தப் பாட்டை யார் கேப்பாங்க?’னு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனா, அவரோ, 'டெஃபனிட்டா இந்தப் பாட்டு ஹிட்டாகும் குஷ்’னு சொன்னாரு. 


அந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போதுகூட லொகேஷன்ல நான் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தேன். ஆனா, தியேட்டர்ல பார்த்தப்பதான் அந்தப் பாட்டோட ரீச் புரிஞ்சது. 21 வருஷத்துக்கு அப்புறமும் அந்தப் பாட்டை டி.வி-யில் பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்கள், சிங்கப்பூர் ஷோ போனபோது நானும் ரஜினி சாரும் அந்தப் பாட்டுக்கு சேர்ந்து டான்ஸ் பண்ணினதுனு நிறைய விஷயங்கள் ஞாபகத் துக்கு வரும். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் பிடிச்ச பாட்டு, 'அண்ணாமலை அண்ணாமலை ஆசைப்பட்டேன் அண்ணாமலை’தான்!

அப்புறம் அந்தப் படம் பத்தி இன்னொரு ரகசியம் சொல்லவா? ஆக்ச்சுவலா 'அண்ணாமலை’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப, படத்திலும் என் கேரக்டர் பேர் குஷ்புதான். நடிக்கும்போது ரஜினி சார் ஒவ்வொரு முறை, 'குஷ்பு... குஷ்பு...’னு கூப்பிடும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அதனால, கிட்டத்தட்ட பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு என் கேரக்டர் பேரை 'சுப்பு’னு மாத்திட்டாங்க. இப்பவும் படம் பார்க்கும்போது நல்லாக் கவனிச்சா, படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரஜினி சார் உட்பட எல்லாரும் என்னைக் கூப்பிடும்போது 'குஷ்பு... குஷ்பு’னுதான் உதடு அசையும்!''

 சி.பி - குஷ்பூ 3 எழுத்து , தி மு க 3 எழுத்து..  ஆனா கலைஞர், ஸ்டாலின், அழகிரி எல்லாம் 4 எழுத்து எதுவும் செட் ஆகலையே.. ஆனா பிரபு 3 எழுத்து ஹி ஹி 

http://tamilcinemanews.hosuronline.com/pictures/kushboo_Chepel_God.jpg

6. ''உங்களைக் கவர்ந்த திராவிட இயக்க முன்னோடி யார்?'' 


''அதிலென்ன சந்தேகம்... தலைவர் கலைஞர்தான்! நான் 25 வருஷமா தமிழ்நாட்டில் இருக்கேன். இத்தனை வருஷத்துல நான் பார்த்த வரை பயம் இல்லாமல், தைரியமாகக் கருத்து சொல்லக்கூடியவர். ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர்ங்கிற ஈகோ, கர்வம் அவர்கிட்ட கிடையாது. பிறந்த நாள், திருமண நாள்னு நான் கட்சியில் சேர்வதற்கு முன்னாடியே ஆசீர்வாதம் வாங்க அனுமதி கேட்டா, 'உடனே வரச் சொல்லுங்க’னு என்னை வரவேற்றவர்.


 சி.பி - ஹி ஹி ஹி ஹி ஹி

 அதுக்குக் காரணம், சினிமா மேல் அவருக்கு இருந்த பிரியம். எனக்குத் தெரிஞ்சு அவரை மாதிரி படிச்சவர், படிக்கிறவர் யாரும் கிடையாது. வெற்றி, தோல்வினு எவ்வளவோ விஷயங்களைப் பார்த்தவர். எனக்கு மட்டும் இல்லை... வாழ்க்கையில் முன்னேற நினைக்கிற யாருக்குமே அவர்தான் முன்னோடியா இருக்கணும்!''


7. ''உங்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?'' 

சி.பி - கையில காசு வாயில தோசை.. எந்த கேரக்டரா இருந்தா என்ன? 


 ''அவங்க தாத்தாவா நடிச்சா, நான் பாட்டியா நடிக்கத் தயார். 'வீரம் விளைஞ்ச மண்ணு’ படத்துல நான் விஜயகாந்த்துக்கு அம்மாவா நடிச்சேன். ஆனா, படத்துல அப்பா விஜயகாந்த்துக்கு நான் ஜோடி. இடைவேளைக்கு அப்புறம் மகன் விஜயகாந்த்துக்கு அம்மாவாகிடுவேன். ஆனா, அந்த அம்மா-மகன் காம்பினேஷன் சீன் ஒரே ஒரு இடத் தில்தான் வரும். இந்த மாதிரிக் கதைகள்னா ஓ.கே. ஆனா, அதுக்கு வாய்ப்பு இல்லைனு தான் எனக்குத் தோணுது!''


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/01/kushboo-joins-dmk-party_008.jpg

8. ''நீங்கள் 'குஷ்பு இட்லி’ சாப்பிட்டு இருக்கிறீர்களா?'' 


''ஓ... சாப்பிட்டு இருக்கேனே! மதுரைனு நினைக்கிறேன். அங்கே ஷூட்டிங்கில் இருக்கும்போது கொடுத்த இட்லி வழக் கத்தைவிட வெள்ளையா, புஸ்புஸ்னு ரொம்பவே சாஃப்ட்டா இருந்துச்சு. 'இட்லி புதுசா இருக்கே... என்ன ஸ்பெஷல்?’னு கேட்டேன். 'இதுதான் குஷ்பு இட்லி’ன்னாங்க. அடப்பாவிங்களானு சொல்லிச் சிரிச்சுட்டே சாப்பிட்டேன்!''  


சி.பி - அது ஒண்ணுமில்லை மேடம்.. வெந்தயம் நல்லா ஊறவெச்சு சோடா மாவு சேர்த்து போட்டு ஆட்டுனா அது குஷ்பூ இட்லி.. இப்போ அதையே ஹன்சிகா இட்லின்னு சொல்றாங்க 


9. ''கலைஞரிடம் பிடிக்காதது, ஜெயலலிதாவிடம் பிடிச்சது என்ன?'' 


 சி.பி - கட்சில இன்னும் பெரிய பொறுப்பு தர்லை, அது கலைஞர்ட்ட பிடிக்கலை
, ஜெயா  டி வி ல ஜாக் பாட் மூலம் டி ஆர் பி ரேட்டிங்க் ஏத்திக்கொடுத்தும் ஜெ என்னை கண்டுக்கலை.. பாம்பின் கால் பாம்பறியும்கற மாதிரி ஒரு நடிகையை கட்சில சேர்த்தா எத்தனை ஆபத்துன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. ஏன்னா அதிமுகவுக்கு ஒரு நடிகையால தானே ஆப்பு வந்துச்சு? 


''தலைவரிடம் பிடிக்காதது... யாரையும் ரொம்ப சீக்கிரம் நம்பிடுவார். அழுதுட்டே ஒரு விஷயத்தைச் சொன்னால், உடனே மனம் இரங்கிடுவார். அவரோட இயல்பு அது. ரொம்ப இளகிய மனம் உள்ளவர்.  

 சி.பி - இலங்கைல லட்சக்கணக்கான தமிழன் அழுதப்ப இரங்காதவர், இறங்கி வராதவர் பதவிக்காக டெல்லி வரை செல்பவர்..  இளகிய மனம் உள்ளவரா? அவ்வ்வ்வ்


ஜெயலலிதாவிடம் பிடிச்சது இப்போதைக்கு எதுவுமே கிடையாது. அவங்களிடம் எனக்கு முன்னாடி பிடிச்சது தைரியம். இப்ப அது அகம்பாவமா மாறியிருக்கு. இருந்தாலும் ஒரு பெண்ணாக, அவங்களை நான் மதிக்கிறேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDsrfurZtfmGYwg34W0VcChK4Q0w6ZNiGn3O33d96S3IdrPArZgU7JYYOSNK2f-xfnDVr-bTSd1mhkiOu_KKPuq-7_LpnYRI2eJdI5Rxh84HV-Ngxt37UVDxUcyRTV07RB-X1Ivprs8CT-/s400/actress_kushboo_0003.jpg

10. ''2016 தமிழகப் பொதுத் தேர்தலில் குஷ்பு எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்?'' 

சி.பி - திருச்சில தான் போட்டி இடனும்.. ஏன்னா அங்கே தான் தீவிர பக்தர்கள் இருக்காங்க.. குஷ்பூக்கு கோயில் கட்டுன இடமும் அதுதானே?



 ''2016 தேர்தலில் நான் போட்டியிடுவேனான்னு இப்பவே யோசிப்பது முட்டாள்தனம். கட்சியில் இப்பதான் நான் சேர்ந்திருக்கேன். என்னைவிட மூத்தவர்கள், முன்னோடிகள் கட்சியில் எத்தனையோ பேர் இருக்காங்க. இப்போதைக்கு நான் கட்சியின் அடிப்படைத் தொண்டர். அவ்வளவுதான். தேர்தல் போட்டி, பிரசாரம் எல்லாத்தையும் தலைவர்தான் முடிவு செய்வார். இப்பவே இதுபத்தி யோசிக்காம நம்ம வேலை எதுவோ அதை மட்டும் செஞ்சுட்டுப் போயிட்டே இருப்போம்!''

சி.பி - வாய் அப்படி சொன்னாலும் மனசு என்ன சொல்லுதோ?


http://www.cinesouth.com/images/kushboo-23.jpg

10 comments:

Unknown said...

கும்பிடப் போன கற்பு குறுக்க வந்த குஸ்பு !

Unknown said...

ஹிஹி அய்யோ அய்யோ...இந்த வாரம் நீதான்யா மணத்துல(!) பார்ச்ட்டு விடு!

காங்கேயம் P.நந்தகுமார் said...

எங்கள் தலைவரையும், எங்கள் மகளிர் அணித் தலைவியையும் நையாண்டி பண்ணுன உங்களை எனது சார்பாகவும் எங்கள் கட்சி சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஷ்புவை பற்றி தொடர்ந்து பதிவு எழுதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அண்ணன் சிபி வாழ்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே இன்னொரு முக்கியமான குஷ்பூ போட்டோவ விட்டுட்டீங்கண்ணே...

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

முத்தரசு said...

தஸ்ஸு புஸ்சு புஸ்சு ச்சே.. குஷ்பூ

வருங்கால முதல்வர்!!!!

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

ADAM said...

SUPER

Anonymous said...

அவங்கதான் கல்யாணத்துக்கு முன்ன கற்பு தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்களே. பிறகு ஏன் பிரபு,கார்த்திக்னு எல்லாத்தையும் நோண்டிக்கிட்டு...