1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது... எந்த ஒரு குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்ற உயரிய கருத்தை பதிவு செய்த வகையில் ஜி வசந்த பாலன் அண்ட் டீம்க்கு இது ஒரு முக்கியமான படம்.. தூக்குக்கயிற்றை எதிர் நோக்கி காத்திருக்கும் பல உயிர்களின் சார்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்..
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்து விட்டது.. ஆனால் இன்னும் உலகில் உள்ள 83 நாடுகள் அதை அமலில் வைத்திருக்கிறது ,( இந்தியா உட்பட) ஏன்? என்ற கேள்வியுடன் படத்தை முடிக்கையில் வெல்டன் டைரக்டர் என்று சொல்லத்தோன்றுகிறது..
படத்தோட கதை என்ன? பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும் ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் நெல் தர்றாங்க..
மகாராணியோட வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா 6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்..
அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..
ஆதி ஆரம்பத்துல தன்னை அநாதைன்னு சொல்லிக்கறார்.. ஆனா ஒரு கட்டத்துல அவருக்கு குடும்பம் இருக்கு.. அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு தெரிய வருது.. இடை வேளை..
ஃபிளாஸ் பேக் கதை.. ஆதியோட ஊர்ல யாரோ ஒரு டெட் பாடியை கொண்டு வந்து போட்டுடறாங்க.. அசலூர்க்காரனோட டெட் பாடியை அடையாளம் கண்டுக்க அக்கம் பக்கம் ஊர்க்கெல்லாம் ஆள் அனுப்பி காட்டறாங்க/.. அந்த டெட் பாடி பரத்.. அவரோட அண்ணன்க்கும் ஆதியோட ஊர்க்கும் ஆல்ரெடி தகறாரு.. இரண்டு ஊர்க்கும் பயங்கர கை கலப்பு வர்ற சூழல்.. பரத்தோட அண்ணன் வேணும்னே என் தம்பியை ஊர் மக்கள் கூடி கொன்னுட்டீங்கன்னு சொல்றார்.. பழிக்கு பழி எடுக்கனும்கறார்.
ராஜா ( கதை நடக்கற கால கட்டம் 18ஆம் நூற்றாண்டு) என்ன தீர்ப்பு சொல்றார்ன்னா ஆனது ஆகிடுச்சு.. ஆதியோட ஊர்க்காரங்க இறந்து போன பரத்க்கு ஈடாக அதே வயசுள்ள ஒரு இளைஞனை பலி கொடுக்கனும்கறார்.
5 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அதுல இருந்து ஆதியை பலி ஆள் ஆக்க முடிவு பண்றாங்க.. ஆதிக்கும், ஹீரோயினுக்கும் ஆல்ரெடி லவ்,.,. பலி ஆக இன்னும் 30 நாள் டைம் இருக்கு.. அதுக்குள்ள மேரேஜ் பண்ணி அட்லீஸ்ட் 30 நாளாவது. வாழ்ந்திடனும்னு நினைக்கறாங்க.. மேரேஜ் ஆகுது..
இனிமே கதை பி கே பி நாவல் மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்ல போகுது.. ஆதி உண்மையான கொலையாளீயை தேடி போறார்.. பரத்தும், அஞ்சலியும் லவ்வர்ஸ்.. அது அஞ்சலியோட அப்பாவுக்கு பிடிக்கலை.. அவர் கொன்னிருப்பாரா?ன்னு பார்த்தா அவர் இல்லை..
தொடர்ந்த விசாரணைல பரத் அரண்மனைக்கு போனது தெரிய வருது.. வாசனைத்திரவியம் விற்கும் வியாபாரியா போய் சின்ன மகாராணியை சந்திச்சிருக்கார்.. சின்ன மகாராணிக்கு மன்னர் மேல ஆல்ரெடி செம காண்டு.. அதாவது அவரது காதலனை முடிச்சுட்டு பலவந்தமா கூட்டிட்டு வந்தாரு.. ஆனாலும் கில்மா நடக்கலை..
மகாராணி மன்னரை பழி வாங்க பரத் கூட கில்மா பண்ணிடறார்.. இந்த மேட்டர் மன்னனுக்கு தெரிய வருது.. அவர் தானே போய் பரத்தை கொலை செஞ்சுடறார்..
இந்த மேட்டர் தெரிஞ்சதும் ஆதி மன்னரை கட்டி கூட்டிட்டு வர்ற வழில ஒரு விபத்து.. அருவில குதிச்சு மன்னர் தற்கொலை.. ஆதிக்கு கால்ல அடிபட்டு நடக்க முடியாத சூழல்..
பலி ஆள் தேடி ஆள் வந்தாச்சு , ஆனா பலி ஆள் காணோம்.. அதனால ஆல்டர்ந்நேட்டிவ்வா வேற ஒரு ஆளை பலி குடுக்கறாங்க..
ஆதி கிராமம் வர்றார்.. உண்மை தெரிஞ்சதும் ஆதியோட மாமனார் நடந்தது நடந்துடுச்சு நீங்க 10 வருஷங்கள் எங்காவது தலைமறைவா இருங்க.. கிராம வ்ழக்கப்படி 10 வருஷம் கழிச்சு பலி ஆள் வந்தா மன்னிச்சுடுவாங்க அப்டிங்கறார்..
அதுக்காகத்தான் ஆதி தலை மறைவா வாழ்றார்.. ஃபிளாஸ் பேக் முடியுது..
ஆனா 9 வது வருஷத்துலயே ஆதியை கண்டு பிடிச்சிடறாங்க.. என்ன நடக்குது? அப்டிங்கறதை மனதைத்தொடும் விதத்தில் படமாக்கி இருக்காங்க
படத்தில் முதல்ல பாராட்ட வேண்டியது ஆர்ட் டைரக்ஷன்.. 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களீன் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாம் நேர்த்தி..
இசை புது முகம் என்பது நம்ப முடியவில்லை.. செம 4 பாடல்கள் எல்லாமே கேட்கற மாதிரி இருக்கு..
ஒளிப்பதிவு அருமை.. களவு செய்ய ஆட்கள் போறப்ப கூடவே நாமும் போற மாதிரி ஃபீலிங்க்..
நடிப்பு செக்ஷன்ல ஆதி முதல் இடம்.. சிக்ஸ் பேக் பாடி.. அசால்ட்டான நடிப்பு.. என மனிதர் கலக்கிட்டார்.. ஆல்ரெடி மிருகம், ஈரம்ல கலக்கினவர் தானே?
பசுபதி சொல்லவே வேணாம்.. வெயில் அளவு சான்ஸ் இல்லைன்னாலும் இடைவேளை வரை இவர் தான் ஹீரோவா? என்று கேட்கும் அளவு பின்னிட்டார்..
ஹீரோயின் தன்ஷிகா உடல் வாகு, கண்கள், பார்வை என மனதில் தங்கும் பெண்னாகிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு..
சீரியசான கதையில் சிங்கம்புலியின் கொளுந்தியா , மச்சினி காமெடி கலகலப்பான பார்ட்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. களவு செய்யும் விதத்தை ரொம்ப விஸ்தீரணமாக காட்டுவது செம.. இருட்டில் வீட்டில் கதவு தாழ்ப்பாளுக்கு ஆயில் விடுவது, சாவியை களாவட செய்யும் தந்திரம்.. அந்த காட்சிகளீல் எல்லாம் இசையை கட் பண்ணி சைலண்ட் மோடில் படத்தை கொண்டு செல்வது செம..
2. பொக்கிஷ பெட்டியை இடிக்க வேண்டிய சூழலில் பாட்டியை துக்கம் கெட வைத்து பாக்கு இடிக்க வைத்து அந்த சத்தத்தில் இடிக்கும் சீன் அப்ளாஸ் அள்ளுது
3. நிலா நிலா பாடல் காட்சியில் ஆதி எம்பிக்குதித்து நிலாவையே தள்ளி விடும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சீன் ரசிக்க வைத்தது..
4. ஆட்டு மந்தைகளை ஏரியல் வியூவில் காட்டும் சீனிலும், ஆதி பசுபதியை காப்பாற்ற எருமை, மாடுகள் சகிதம் வரும் காட்சியில் கேமரா கலக்கல் ( அந்த சீனில் அந்நியன் நினைவு வந்தாலும்)
5. பாடல்கள் நா முத்துகுமார்.. ,விவேக்.. ஊரே என்னை பெத்த ஊரே, நிலா நிலா போகுதே நில்லாமலே, சூரியன் சூரியன் சட்டுனு , உன்னை கொல்லப்போறேன் என 4 பாடல்களும் இதம்..
இயக்குநர் சறுக்கிய இடங்கள்
1. படத்தின் மாபெரும் மைனஸ் கில்மா செஞ்ச மகாராணி தானே மன்னரிடம் எகத்தாளமா சொல்லி மாட்டிக்கொள்வதுதான்.. உடனே ராஜா ராணியை கொலை செஞ்சுடறார்.. எந்தப்பெண்னாவது அப்படி ஓபனா சொல்வாளா? எல்லாம் பிளான் பண்ணி பண்றவ ராஜாவோட கடைசி காலத்துல, அல்லது நோய் வாய்ப்பட்ட தருணத்துல சொல்லிக்காட்டி இருந்தா ஓக்கே. தவளை ஏன் தன் வாயால கெட்டுச்சு? அந்த சீனில் கில்மா மேட்டர் ராசாவுக்கே எப்படியோ வேற விதமா தெரிஞ்ச மாதிரி எடுத்திருக்கலாம்/..
2. பிரமாதமான களவுத்திறமை உள்ள ஆதி ஏன் வாலண்ட்ரியா பசுபதிக்கு வைர நகையை தரனும்? அவர் பாட்டுக்கு இருக்க வேண்டியதுதானே?
3. படத்தின் மிக முக்கிய திருப்பக்காட்சியாக வரும் ஜல்லிக்கட்டு சீனில் கூட்டத்தின் ஆரவாரம் பின்னணியில் பலமாக ஒலிக்கிறது.. ஆனால் காட்சி அமைப்பில் மக்கள் ஆரவாரம் செய்யவே இல்லை.. தனியா ரெக்கார்டு பண்ணி சேர்த்திருக்காங்க.. லாங்க் ஷாட்டிலும் சரி, க்ளோசப் காட்சிகளிலும் சரி மக்களின் ஆரவாரத்தை காட்டி இருக்கனும் காட்சி ரீதியா
4. பசு பதிக்கு ஆதி அவ்ளவ் பெரிய தியாகம் செய்ய தேவை என்ன? அது அவ்ளவ் அழுத்தமா காட்டப்படலை..
பீரியட் ஃபிலிமில் தமிழுக்கு இது ஒரு முக்கியமான படம்.. டோண்ட் மிஸ் இட்..
உழவுத்தொழில் போல் களவுத்தொழிலும் மனிதன் வாழ்வில் அந்தஸ்தை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்தை பிஞ்சு மனசில் நஞ்சாக பதியும் அபாயம் இருப்பதால் பள்ளி மாணவ் மாணவிகள் மட்டும் இந்த படத்தை பார்பதை தவிர்ப்பது நல்லது..
மற்றபடி நல்ல சினிமா ரசிகர்கள், மாறுதலான படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய நல்ல படம் இது..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 50
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று
சி.பி கமெண்ட் - சல்யூட் டூ வசந்த பாலன் அண்ட் டீம்..
டிஸ்கி 1 - படத்தின் பிரமாதமான வசனத்தொகுப்பு நாளை தனிப்பதிவு ( வசனம் - வெங்கடேசன்)
டிஸ்கி 2 - துல்லியமான, தொலை நோக்குப்பார்வை உள்ள யூத்ங்க கவனமா படம் பார்த்தா நொடியில் மின்னி மறையும் கண்ணியமான சில கிளாமர் காட்சிகள் காணலாம்
31 comments:
மாலை வணக்கம்
Interesting review! Thank you
Super Fast
Rajmohan
நீங்களே சொல்லிட்டீங்க படம் நல்லாயிருக்குதுன்னு. அப்ப பார்த்துடவேண்டியதுதான்!
செம ரிவியூ....... கண்டிப்பா பாக்கணும்..... நன்றி சிபி
நிச்சயம் பாக்கணும் தல,ட்ரைலர் பாக்கும் போதே படக்குழுவின் அபார உழைப்பு தெரிகிறது.
சூப்பர். படம் பார்க்கும் ஆவலை தூண்டுது.
பார்க்க வேண்டிய படம் என்று முத்திரை குத்தி விட்டீர்கள்...
"கண்ணியமான சில கிளாமர் காட்சிகள "
யோவ் டுபாக்ஸ் . . .
என்னய்யா கண்ணிய கிளாமர் காட்சிகள . . . .
Thanks
பதிவு ரொம்ப சூடா இருக்கே. இதுதான் சுட சுட விமர்சனமா?!
சுடச்சுட வந்த உங்க விமர்சனம் சூப்பர் செந்தில். அவசியம் பாத்துடறேன்.
அரவான் சினிம விமர்சனம் வழக்கத்தை விட உங்கள் எழுத்தில் மெச்சூரிட்டியாக இருக்கு...படிக்க அலுப்பில்லாமல் இருக்கு.
சுட சுட உங்க விமர்சனம் மிக மிக அருமை CD வரட்டும் பாத்திடலாம்
இந்த முறை விமர்சனமும் கலக்கல் ... டிவிடி வரட்டும். பார்க்கலாம்.
சீக்கிரமே ஒருமுறை ஈரம் சீடி எடுத்துப் பார்க்கவேண்டும்.
கலக்கல் விமர்சனம்... தொடரட்டும் உங்கள் பணி
விமர்சனம் புது எழுத்து நடைல இருக்கு
விமர்சனம் அருமை.நீங்க அபாரம் அப்படீன்னு சொல்லியிருப்பதால் படத்தை பார்க்கலாம்.
படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டீர்கள். [ஒரு விமர்சகர் அப்படிச் செய்யக் கூடாது; செய்தால் அவர் மற்றவர்களுக்கு அந்தக் கலையை ரசிக்கவிடாமல் முதலிலேயே அம்பலப் (expose)படுத்துகிறார் என்று அர்த்தம்.]
இது ஏற்கெனவே புத்தகமாக வெளிவந்துவிட்ட "காவல்கோட்டம்" நாவலின் ஒரு கிளைக்கதை என்பதால், இப்படித் திறந்து சொன்னதில் பாதிப்பு இருக்கப் போவதில்லை. இருந்தாலும் நாவலாசிரியர் சொல்லாத முடிச்சு, முடிவு இதில் உள்ளதால், நீங்கள் திறந்து சொல்லாமல் இருந்திருந்தால் நான்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
கொலை செய்யப்பட்டவன் (பரத்) நாயகனின் ஊரில் வைத்துத்தான் கொலைசெய்யப் படுகிறான். நாவலில் கொலைக்கான காரணம் பூடகமாகச் சொல்லப்படுகிறது. படத்தில் அதற்கென்று ஒரு கிளைக்கதை சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஆதி, பசுபதி மீது பாசமாய் இருப்பத்ற்குக் காரணம் தன் தாய் பிறந்த ஊர்க்காரன் பசுபதி என்பதும், தொழிலில் தனக்கு குரு ஸ்தானத்தில் உள்ளவன் என்பதும்.
களவுத் தொழிலை glorify பண்ணிவிட்டார் என்று நாவலாசிரியரை அவர் கட்சியைச் (CPM) சேர்ந்தவர்களே விமர்சித்துவிட்டார்கள். வசந்தபாலன் மரண தண்டனைக்கு எதிராக எழுத்துப் போட்டுக் காட்டி அந்தப் பழி தன் மீதும் வந்துவிடாத வழி தேடி இருக்கிறார்.
வழக்கமான உங்கள் விமர்சனங்களில் வருகிற வசன விவரணை (அவ்வளவையும் எப்படித்தான் மனப்பாடம் செய்கிறீர்களோ!) இரண்டாம் பாகத்தில் வரும் என்று சொல்லிவிட்டீர்கள். காத்திருக்கிறோம்.
எந்த இடத்திலும் சுவைஆர்வம் தளர்ந்துவிடாத அளவுக்குப் படமாக்கி இருக்கிறார். வசந்தபாலனைப் பாராட்ட வேண்டும்.
பார்க்க வேண்டிய படம்...சுடசுட விமர்சனம் அருமை...
நல்ல விமர்சனம், நிறை குறை இரண்டையும் சொல்லியுள்ளீர்கள்! நல்ல இலக்கிய படைப்பு எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! என்னுடன் படம் பார்த்த சில நண்பர்கள் சொன்ன விசயம், வசந்தபாலனின் டைரக்டர் டச்(நம் மனம் கலக்கவைக்கும் இடம்) இந்த படத்தில் மிக குறைவு! இசை பலவீனம்!
இந்த மாதிரி எதிர்பார்க்கும் படங்களின் முழுகதையும் விமர்சனத்தில் சொல்லுவது படம் பார்க்கும் போது சரிவருவதில்லை.....பிளீஸ் தவிர்க்கவும்
விமர்சனம் அருமை
நொடியில் மின்னி மறையும்.............................!சி.டி யில பாக்கமுடியாதா????
படத்தைப் பற்றி ரெண்டு விதமான கருத்துகள் வந்து கொண்டு இருக்கின்றன பதிவுலகத்தில்.பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.காவல கோடட்டும் படிக்க முடிவு பண்ணிட்டேன்
சிறந்த விமர்சனம் நண்பரே...
அரவான் - நாகரிக உலகத்திற்கான கேள்வி
மிக அருமையான படம். 18ம் நூற்றாண்டில் தென் தமிழத்தில் வாழ்ந்த ஒரு பிரிவு மக்களின் வாழ்கையை அப்படியே கண் முன்னே காட்டுகிறது.
வசந்தபாலன் மறுபடியும் ஒரு உணர்வு பூர்வமான கதையை காட்சி படுத்தி இருக்கிறார்.
அன்றைய மக்கள் களவு செய்தாலும் ஒரு நேர்மையை பின்பற்றினர் . களவில் இருந்து தான் காவல் பிறக்கிறது.களவில் உள்ள நேர்மையையும் புத்திசாலித்தனம் யும் காட்டுகிறது. கன்னம் வைத்து பாம்பு போல் உள்ளே செல்வது. u can compare that plots with this century stories like ayan and catch me if u can
நடிகர்கள் அனைவரும் கதபாத்திரமவே வாழ்ந்து இருக்கின்றனர்.
மகாபாரத கேரக்டர் அரவான் பாரத போருக்காக பலி கொடுக்கபடுவன்
தன் ஊருக்காக பலி ஆள் ஆன ஆதி முடிவில் அரவனை போன்று பலி கொடுக்க படுகிறான்.
அன்றைய மக்களின் நரபலி, உயிருக்கு உயிர் என்ற காட்டுமிரண்டிதனமான சித்தாந்தங்கள் இன்றைய நாகரிக சமூகத்திலும் தொடர்கின்றன என்பதோடு படம் முடிவடைகிறது.
வரலாற்று படத்தை அந்த கால வரலாற்றோடு தன் பார்க்க வேண்டும்.
A worthable movie to watch.
இயக்குனர் சறுக்கிய இடங்கள்
சின்ன ராணி ஏற்கனவே ராஜாவிடம் காண்டு உடன் வாழ்ந்து வருபவள்.
வெட்டி தான் சாய்க்கனும் என்று அல்ல.விதைத்தும் சாய்க்கலாம் என்று ராணி சொல்வதிலேயே அர்த்தம் இருக்கிறது.
எனக்கு என்னமோ இயக்குனர் அங்கு சறுக்கியதாக தெரியவில்லை.
தாங்கள் தான் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தொலைநோக்கு பார்வையால் சின்ன ராணியிடம்(கில்மா ராணி ) சறுக்கி விட்டேர்கள் போல இருக்கு.just for fun
இதுபோல முயற்சிகள் வெற்றி அடையவேண்டும்..
அப்போதுதான் புதிய நல்ல முயற்சிகளுக்கு
வித்திட்டதாய் அமையும்..
அருமையான விமர்சனம் நண்பரே.
விமர்சனமே மிக சிற்பாக உள்ளது
நுணுக்கமா படத்தைப் பார்த்திரிருக்றீர்கள்!
புலவர் சா இராமாநுசம்
நல்ல விமர்சனம்....படத்தை பார்க்க தூண்டி விட்டர்கள் .......
Post a Comment