ஹீரோ ஒரு பொறுக்கி.. ஹீரோயின் ஒரு கிறுக்கி.. பின்னே பொறுக்கியை லவ் பண்ற சிறுக்கியை எப்படி கூப்பிட? ஹீரோவை ஹீரோயின் எதனால லவ் பண்றா-ன்னு டைரக்டர் காட்டறப்ப ஆல் ஆடியன்ஸ் கிளாப்ஸ்.. அது இன்னான்னா ஹீரோ பல் துலக்கறப்ப பிரஷ் யூஸ் பண்ணாம கை விரலாலயே பல் துலக்கறாரு.. ஈரோடு மாவட்டத்துல பாதிப்பேரு அப்படித்தான் துலக்கறாங்க.. ஆனா பாருங்க பாப்பா அதை பார்த்து எஸ் வி சேகர் நாடகம் பார்த்த எஃபக்ட்ல சிரியோ சிரின்னு சிரிக்குது.. லவ் ஸ்டார்ட் ஆகுது..
எங்க ஏரியாவுல விடியாமுகரைன்னு சொல்வாங்க. அதாவது எப்போ பாரு முகத்தை உம்முன்னு வெச்சிருப்பான்.. குளிக்கவே மாட்டான்.. தாடியோட இருப்பான்.. அவனை பார்த்துட்டு போனா எந்த காரியமும் விளங்காது.. அந்த விடியா முகரை மாதிரி தான் ஹீரோ இருக்காரு .. ஹி ஹி
ஹீரோ லோக்கல் ரவுடி.. 2 தாதாக்கள் மோதல்ல ஒரு தாதாவை போட்டுத்தள்ள நியமிக்கப்படறாரு.. அவர் எஸ் ஆகி எதிராளியை போட்டு தள்ள வர்றப்ப ஹீரோயின், அவங்கம்மா, அவங்க தம்பி... எல்லாரையும் க்ளோஸ்...
கடைசில எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலைகள்.. 113 வெட்டு குத்து
ஹீரோ பேரு ஹேமச்சந்திரனாம்.. நாமச்சந்திரன்னு வைக்கலாம்.. தேறவே மாட்டார்.
ஹீரோயின் மேக்னா. ஆல்ரெடி பாணா காத்தாடில நடிச்சவர் தான்.. மெழுகு பொம்மை மாதிரி மொழு மொழுன்னு இருக்கார். ஒரு சீன்ல ஹீரோ துரத்தும்போது ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றப்ப ஹி ஹி ஹி
. மனதில் நின்ற வசனங்கள்
1. எவ்ளவ் படிச்சிருக்கீங்க?
எம் பி ஏ படிக்கனும்னு நினைச்சேன்.. ஆனா அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சேன்.. நீங்க?
மீ சிக்ஸ்த்.
பேக் எல்லாம் வெச்சிருக்கீங்க.. பெரிய படிப்பு படிச்சு இருப்பிங்கன்னு நினைச்சேன்.
2. புனித யாத்திரை போறீங்களா?
அது பொழப்பத்தவங்க செய்யறது
3. காட்டிக்கொடுக்கிறவன்களுக்கும், கூட்டிக்கொடுக்கிறவங்களுக்கும் ஒரு மைனஸ் பாயிண்ட் கண்டிப்பா இருக்கும்.. அவன் மைனஸ் என்ன?
சரக்கு அடிக்கும்போதும், பொண்ணோட இருக்கறப்பவும் தனியா தான் இருப்பான்.
4. பொண்ணுங்க தலை வாரி பூச்சூடி இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனா ஆம்பளை தலை சீவி பவுடர் அடிச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு ஒரே அர்த்தம் தான்..
5. பசங்க புது டிரஸ் போடறதே பொண்ணுங்க பார்க்கத்தானே?
6. கடவுள் எனக்காக என்னங்க செஞ்சாரு?அம்மா இறந்தாச்சு.. அப்பா என்னை துரத்தி விட்டாரு..
செய்வார் செய்வார்.. வெயிட்
முதல்ல அவர் செய்யட்டும். அப்புறமா கோயில்க்கு வர்றேன்..
7. நம்மளை மாதிரி அரசியல் வாதிங்க சினிமா, ரசிகர் மன்றம் இதை எல்லாம் கைக்குள்ள போட்டு வெச்சுக்கனும்.. யூஸ் ஆகும்..
8. லவ் பண்ற எல்லாரும் ஒரு நாள் சரக்கு அடிச்சு மட்டை ஆகியே தீரனும்..
9. அரசியல் பண்றது ஈசி.. ரவுடியிசம் பண்றது தான் கஷ்டம்.. எப்போ எங்கே இருந்து எதிரிங்க வருவாங்கன்னு தெரியாது.. யார் எதிரியா மாறுவாங்கன்னும் தெரியாது
இயக்குநரிடம் சில கேள்விகள் ரிலேட்டிங்க் லாஜிக் சொதப்பல்கள்
1. ஹீரோ தன் அப்பாவைப்பற்றி குறை சொல்றப்ப< “ எங்கம்மாவை நீ தான் கொன்னேன்னு எனக்கு தெரியும்கறாரு.. சித்தி கிட்டே நீ எங்கப்பாவை மயக்கி எங்கம்மாவை துரத்துனே அப்டிங்கறார்.. ஆனா ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குடிப்பழக்கம் பற்றி சண்டை வருது.. அதுல மண்ணெண்ணெய் ஊற்றி அம்மா தற்கொலை.. அதுக்குப்பின் தான் சித்தி வருகை..
2. ஹீரோயின் சரவ சாதாரணமா வர்றாங்க. ஹீரோயின் கூட வர்ற தோழி ( கல்லூரி படத்துல தமனா கூட தோழியா வருமே அந்த ஃபிகரு) படத்துல வர்ற 19 சீன்ல 13 சீன்ல மல்லிகைப்பூ சரம் சரமா வெச்சுட்டு வருது..
3. ஹீரோ வில்லனை ஒரு சேரி ஏரியாவுக்கு கூட்டிட்டு வர்றான்.. அங்கே 2 கிமீ நடக்கறாங்க.. ஏன் கார்ல போகலை? வில்லனோட ஆளுங்களை விலைக்கு வாங்குன ஹீரோ ஏன் வில்லன் இடத்துல போடலை? மெனக்கெட்டு அவ்ளவ் தூரம் ஏன் வரனும்?
4. ஹீரோயின் எங்கே குடி இருக்காளோ அதே இடத்துல எந்த மாங்கா மடையனாவது வந்து கொலை செஞ்சு ஹீரோயின் கிட்டே மாட்டுவானா? இத்தனைக்கும் அது ஆத்திரமா செய்யற கொலை அல்ல. பிளான் பண்ணி பண்ற கொலை..
5. காலேஜ்ல டிகிரி படிச்ச ஹீரோயின் தம்பி அடிக்கடி “ நான் கூலி வேலை செஞ்சாவது.... அப்டினு ஏன் டயலாக் பேசனும்? படிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க..
6. ஹீரோ - ஹீரோயின் ஊடல் டைம்ல தோழி கிட்டே ஹீரோ ஹீரோயின் ஏன் ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்கு வர்லை?ன்னு கேட்கறார்.. அதுக்கு தோழி தெரியாதுங்கறா.. அப்புறம் ஒரு சீன்ல ஹீரோயின் அந்த தோழி கிட்டே ஹீரோவை பார்த்தியா?ன்னு கேட்கறப்ப “ உன்னைத்தான் கேட்டாரு”ன்னு சொல்லலை.. நான் அவரைப்பார்க்க;லைன்னு சொல்றாரு ( ஒரு வேளை அந்த தோழி.. ஹீரோவை கரெக்ட் பண்ண பிளான் போட்டு அந்த கிளைக்கதை எடிட்டிங்க்ல கட்டோ?)
7. வில்லன் அடியாளுங்க மண்டபத்துல ரகளை பண்றப்ப அவனவன் கதறிட்டு ஓட வேணாம்? அவனவன் கைல வெச்சிருந்த பார்சலை பத்திரமா எடுத்திட்டு ஓடிட்டிருக்காங்க.. அவ்வ்வ்வ்
8.ஹீரோ கேரக்டர் சரியா சித்தரிக்கப்படலை ... அதே போல் ஹீரோயின் ஒரு டைம் ஹீரோ ரவுடி என்பதால் வெறுக்கறார்.. இன்னொரு டைம் அது பற்றி எல்லாம் கவலையே படலை..
9. ஹீரோயின் நைட் ஓ டி முடிச்சுட்டு கம்பெனில இருந்து வர்றப்ப என்னை ரவுடிங்க தூக்கிட்டு வந்துட்டாங்க அப்டிங்கறார்.. அப்போ எப்பவும் கூடவே வரும் தோழி எங்கே? 5 ரவுடிங்க சேர்ந்து 2 பேரை தூக்கிட்டு வர முடியாதா? ஏன் தோழியை விட்டுட்டு வந்துட்டாங்க?
10. இந்தப்படத்து மூலமா நீங்க சொல்ல வர்ற கருத்து வன்முறை கூடாது என்பதா? அதுக்கு ஏன் இத்தனை வன்முறை படத்துல?
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35 ( இது ஒரு தெலுங்கு டப்பிங்க் என்பதால் நோ விமர்சனம் இன் விகடன் .. ஒரிஜினல் டைட்டில் நந்தா லவ்ஸ் நந்திதா)
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - டி வி ல போட்டா க்ளிப்பிங்க்ஸை கூட பார்த்துடாதீங்க
இந்த குப்பையை ஸ்ரீ கிருஷ்ணாவில் கூட்டினேன்.. அடச்சே பார்த்தேன்.
.
10 comments:
அடங்கொய்யால...பதிவை படிப்பதை விட இதில் இருக்கும் படம் பார்ப்பவர்கள் சிபியை என்ன நினைப்பார்கள் - இவர் ம்ஹூம்!#####
ஹிஹிஹி..படம் நல்லா இருக்கு....நான் நீங்க போட்டிருந்த படத்த சொன்னேன்ங்க...
//ஈரோடு மாவட்டத்துல பாதி பேரு ....//// நீங்க அந்த பாதில இருக்கீங்களா..?
சித்தப்பு...படம்....ம்ம்
அண்ணா... இந்த மேக்னா நாயுடு தமிழ்ல தமிழ்ல நடிச்ச முதல் படம் பாண காத்தாடில இல்ல.... காதல் சொல்ல வந்தேன் படம்... :-)
இதுக்கு மேல ஒரு ஹீரோவை ஹீரோயினை, கேவலப்படுத்த முடியாது.. ஹி..ஹி...
காதல் சொல்ல வந்தேன் (பெயர் சரியா?) படத்தில் பார்த்ததிலிருந்து மேக்னாவின் பரந்த மனசுக்கு அடிமையாகிவிட்டேன். ம்ம்ம்ம்ம்ம். இப்ப விமர்சனத்தில் போட்டோ ... அய்யய்யோ என்னமோ பண்ணுதே?
எப்படியும் மொக்கைப்படங்கள் பார்ப்பதில்லைன்னு கொள்கை. அதை தூக்கி வீசிவிட்டு இதை பார்க்கணும் ... மேக்னாவுக்காக.
ஸ்டில்ஸுக்கு ஒரு ஷ்பெசல் தாங்க்ஸ்.
அப்ப இந்த வருடம் இன்னும் ஒரு படம் கூட தேறலயா?
கேவலமான ஒரு படத்தைப் பாத்துட்டு, நொந்த அனுபவத்தைக் கூட அழகா ரசிக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க செந்தில்! நீங்க வெச்சிருக்கிற மேக்னா படம்... ப்ளச்... ப்ளச்..! ஹி... ஹி...
Post a Comment