Thursday, March 15, 2012

தி முக , அதிமுக எது எனக்கு அதிக யூஸ்? குஷ்பூ அதிரடி பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0IiRw1YZiqYYyHlLBSBDJBUAuPeNZGYk5IdMi_Xv5rSoOGZg8disNJHgwCTQnQsWyRylLt0noatIfqifQNEP9_kfRqu2KCmcKIvKRXzkBNLAW5lstyk1_YCJUkY8RbmDBTHo-u6O9N7k/s400/kushboo2.jpg 

1. ''ஒரு பக்கம் உங்கள் ரோல் மாடல் ஜெயலலிதா... இன்னொரு பக்கம் உங்கள் திரையுலக நண்பர் விஜயகாந்த்... இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது உங்க ளுக்குக் கஷ்டமாக இல்லையா?'' 

சி.பி - இது நல்ல கேள்வி .. ஆனா நான் நிருபரா இருந்தா இன்னா கேட்டிருப்பேன்னா ஒரு பக்கம் ஆத்ம நண்பர் பிரபு, இன்னொரு பக்கம் குடும்ப நண்பர் கார்த்திக், உங்க பக்கம் தாராள மனப்பான்மை கொண்ட சுந்தர் சி இவங்க எல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்கறீங்களே, எப்படி?
 
 ''சரவணன்... ஜெயலலிதா என் ரோல் மாடல்னு நான் எப்ப சொன்னேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். 'என் ரோல் மாடல் இவங்கதான்’னு இது வரை நான் யாரையுமே சொன்னது இல்லை.


சி.பி - ஹலோ மேடம் மேடம், ஜெயா டி வி ல ஜாக் பாட் நிகழ்ச்சில நீங்க முதன் முதலா  அப்பாய்ண்ட் ஆனப்ப குமுதம் வார இதழ்ல ஒரு பேட்டி குடுத்தீங்க.. அதுல முதல் கேள்வியே ஜெ பற்றி என்ன நினைக்கறீங்கன்னு தான், அப்போ நீங்க ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அபாரம்னு அள்ளி விட்டீங்க, நினைவில்லையா? செலக்டிவ் அம்னீஷியா அம்மா கிட்டே இருந்து உங்க கிட்டேயும் தொத்திக்கிச்சா?

 ஒரு பெண் என்ற வகையில் ஜெயலலிதாம்மாவை எனக் குப் பிடிக்கும். ஆனா, அவங்க தலைமை யிலான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு சிரமப்படுறாங்கனு பார்க்கும்போது, வருத்தமா இருக்கு. 

சி.பி - ஆமாமா, நீங்க சொல்றதும்  கரெக்ட் தான், வீட்டை நிர்வாகம் செய்யும்போது பெண்கள் காட்டும் கெடுபிடி,நிர்வாகசீர் எல்லாமே நாட்டை நிர்வாகம் பண்ணும்போது காணாமப்போயிடுது.. யார் பேச்சையும் கேட்காம சித்தன் போக்கு சிவன் போக்கு , நாம நினைச்சதுதான் சரின்னு ஒரு எதேச்சாதிகாரம் வந்துடுது..


மே 13-ம் தேதி காலை 10 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வந்துட்டு இருக்கும்போதே, 'தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்காங்கனு அடுத்த அஞ்சு வருஷத்தில் தெரிஞ்சுக்குவாங்க’னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்ப 10 மாசத் திலேயே நாம செஞ்சது தப்புனு மக்கள் புரிஞ்சுட்டு இருப்பாங்க.


சி.பி - இந்த தமிழக மக்கள் எப்பவும் இப்படித்தாங்க ஒரே தப்பை 5 வருஷத்துக்கு ஒரு டைம் மாத்தி மாத்தி  பண்ணுவாங்க.. அதாவது முதல்ல தி முக , அடுத்து அதிமுக அப்படி மாத்தி மாத்தி குத்தி  நம்பி ஏமாந்துடறாங்க.. அவங்களுக்கு வேற சாய்ஸ் இல்லையே பாவம்.. 


விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கேன். ஆனால்,அவரோட அரசியல் செயல்பாடுகள்பற்றி இது வரை நான் விமர்சித்தது இல்லை. அவருடைய அரசியலைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!''


சி.பி - வெரிகுட் மேடம். பக்குவமான பதில்.. கேப்டன் எதிர்க்கட்சி என்பதால் தரக்குறைவா பேசாம அடக்கி வாசிக்கறீங்க.. ஐ திங்க் இது கட்சி மேலிட உத்தரவாக்கூட இருக்கலாம்.. கேப்டனை ஓவரா தாக்க வேண்டாம்.. அவர் கூட கூட்டணி வைக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.. அப்டினு.. 


http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/kushboo-sundar-latest-photos-gallery-images-07.jpg


2. ''உண்மையைச் சொல்லுங்கள்... உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?'' 


சி.பி -இதென்ன கேள்வி அண்னாமலை, பாண்டியன்ல நடிக்கறப்ப சினிமா எக்ஸ் பிரஸ் இதழ்ல எனக்குப்பிடித்த ஒரே நடிகர் அது ரஜினிதான்னு தீபாவளி மலர்ல பேட்டி குடுத்தாங்க.. சிங்கார வேலன் ஷூட்டிங்க் டைம்ல  இதயம் பேசுகிறது இதழ்ல என் கனவு கமல் கூட  நடிக்கனும்கறதுதான் அப்படின்னு பிட்டை போட்டாங்க.. நாக்கில்லாத நரம்பு மாத்தி மாத்தி பேசும்.. தப்பில்லை./. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்

''யோசிக்கவே வேண்டாம்.... கமல்ஹாசன்தான். ஏன்னா, 'ரஜினி சார் என் ஃப்ரெண்ட்’னு சொல்ல முடியாது. ஆனா, கமல் சாரை என் ஃப்ரெண்ட்னு சொல்ல முடியும். ரஜினி சார் ரொம்ப தூரத்தில் இருக்கார். 'ஆ’னு அண்ணாந்து ஆச்சர்யமா பார்க்கிற உச்சியில இருக்கார்.

 கமல் சார் ஒரு ஃப்ரெண்டா இருக்கார். எப்ப வேணும்னாலும் அவருக்கு போன் பண்ணிப் பேசலாம். என் குடும்ப விழாக்கள்ல கமல் - கௌதமி கலந்துப்பாங்க. அவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் நானும் கலந்துப்பேன். என் குழந்தைகளும் அவங்க குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். இப்படி நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸா இருப்பதால், கமல் சாரை அதிகமாப் பிடிக்கும்.


சமீபத்தில், அவரோட 'விஸ்வரூபம்’ படப்பிடிப்புக்காக பிரபல கதக் டான்ஸர் பண்டிட் பிர்ஜு மகராஜ் சென்னைக்கு வந்திருந்தார். எனக்கு கதக் தெரியும். அதுவும் பிர்ஜு மகராஜை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு கமல் சாருக்குத் தெரியும். 'பிர்ஜு இங்கே இருக்கார். வந்து பார்க்குறியா?’னு அவரே போன் பண்ணி எனக்குத் தகவல் சொன்னார். உடனே, நான் ஓடிப்போய் லொகேஷன்ல அவரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு எனக்குத் தெரிஞ்சதைவிட கமல் சாருக்கு அதிகமாத் தெரியும்!''


சி.பி - என்னது? உங்களுக்கு கதக் தெரியுமா? அப்போ உங்க இயற்பெயரான நக்கத் இனி நக்கதக்?


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6b9x4V25INdS5AuZ4foBEe8zIyhF-TJHpA3I37OZ3hgXLfoZmYTfAl_ZR6nleA92GADT0NdI65ySVqFbUVLlQEKcqiH-2DSdwQOnWwOGexdJSKTStUIKvAPwBE7RCVKFxaa86jDV4xME/s1600/Actress-Kushboo-Hot-Photos-0k034.bmp

3. '' 'வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்ற கோஷத்தை முன்வைத்துத் தொடங்கப்பட்டது தி.மு.க. அதில் நீங்கள் எப்படி..?'' 


சி.பி - அது போன  மாசம், நான் சொல்றது இந்த மாசம்.. வடக்கு ஆல்ரெடி வீழ்ந்துடுச்சு... தெற்கு தேஞ்சுட்டு இருக்கு


''முதல்ல நான் வடக்கில் இருந்து வந்தவள்ங்கிற எண்ணத்தை உங்க மனசுல இருந்து அழிச்சிடுங்க  இந்த 41 வயசுல நான் மும்பையில் வாழ்ந்தது 16 வருஷம். சென்னையில் வாழ்ந்தது 25 வருஷம். கடைசி வரை இங்கேதான் இருக்கப்போறேன். அப்போ நான் தமிழ்ப் பெண்மணிதானே!


சி.பி - என்னது? உங்க வயசு 41? இப்படி உண்மையை சொல்லலாமா?

 என் பாஸ்போர்ட்டில், பிறந்த இடம் எது என்ற கேள்விக்கு மட்டும்தான் மும்பைனு இருக்கும். மத்தபடி மும்பையில் சொந்தம்னு சொல்லிக்க எனக்கு யாருமே இல்லை. நான் சம்பாதிச்சது எல்லாத்தையுமே இங்கே தான் முதலீடு பண்ணியிருக்கேன். 'குஷ்பு மும்பையில் ஒரு வீடு வாங்கிப் போட்டு இருக்கா, இடம் வாங்கிப் போட்டுஇருக்கா’னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். என் சம்பாத்தியம், செலவு எல்லாமே தமிழ்நாட்டில் மட்டுமே!''


சி.பி - அதெப்பிடிங்க சொல்ல முடியும்? நீங்க நக்கத்ங்கற பேர்ல வீடு வாங்கி இருந்தா குஷ்பூ வாங்குனார்னு சொல்ல முடியாதே?


4. '' 'ச்சே... நாம் ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது இவர் நடிக்க வரவில்லையே’ என்று இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பார்த்தால் உங்களுக்குத் தோன்றும்?'' 

சி.பி - இந்த மாதிரி பர்சனல் கேள்விகளை எல்லாம் பப்ளிக்கா கேட்டா எப்படி?

'' 'பருத்தி வீரன்’ கார்த்தியைப் பார்க்கும்போது, லைட்டா அப்படித் தோணுச்சு. அந்த கார்த்திக்குக்கு அப்புறம் அதே துறுதுறு குறுகுறு பெர்சனாலிட்டியை இந்தக் கார்த்தி கிட்ட பார்க்கிறேன். கார்த்தியை நான் 'பையா’னுதான் கூப்பிடுவேன். 'சிறுத்தை’ பார்த்துட்டு 'ரொம்ப நல்லா பண்ணியிருக்க பையா. அந்த ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்’னு கார்த்திகிட்ட சொன்னேன்.


ஆனா, 'ஒரு படம் முழுக்க இவருக்கு ஹீரோயினா நடிக்கலையே’னு நான் வருத்தப்படுற ஒரே ஹீரோ அரவிந்த்சாமி. இந்த வருத்தம் அவருக்கும் தெரியும். அவர்கிட்ட ஒரு ரசிகையா ஆட்டோகிராஃப் வாங்கநான் பட்டபாடு இருக்கேன்... அவர்கிட்ட ஆட்டோ கிராஃப் கேக்குறப்பலாம் நான் ஏதோ கிண்டல் பண்றதா நினைச்சு, போட்டுத் தரவே மாட்டார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நானும் விடாமத் துரத்திட்டே இருந்தேன். அப்போ அவர் பிரியதர்ஷன் படத்தில் நடிச்சிட்டு இருந்தார்.


 அந்தப் படத்தின் காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி கூட ஒருநாள் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். 'அரவிந்த், உன்னோட மிகப் பெரிய ரசிகை வந்திருக்காங்க. அவங்க ஒரு ஆட்டோ கிராஃப் கேக்குறாங்க. போட்டுக் கொடுத்துருங்க’னு சொல்லி அரவிந்தை வெளியே அழைச்சிட்டு வந்தார் அனு. என்னைப் பார்த்த அரவிந்த், 'ஐயோ குஷ்... நீயா?’னு சிரிச்சுட்டார். 'ரெண்டு வருஷமாத் தொரத் திட்டு இருக்காங்களாமே... போட்டுக் கொடுப்பா’னு அனு ரெகமண்ட் பண்ண பிறகுதான், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார் அரவிந்த்!''


சி.பி - நல்ல வேளை, அவரோட இப்போதைய தோற்றத்தை நீங்க பார்க்கலையே, ஒரு காலத்துல அர்விந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொன்ன ஃபிகருங்க எல்லாம் இப்போ அவரையே கிண்டல் பண்றாங்க.. ஆண்களூக்கு வழுக்கை ஒரு சாபம்.. பெண்களுக்கு வழுக்கை இல்லாதது ஒரு வரம்.. ( 0.12 % பெண்களுக்கு வழுக்கை வருவது உண்டு)
 http://s4.hubimg.com/u/1127503_f520.jpg

5.''குஷ்பு இட்லி, குஷ்புவுக்குக் கோயில் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

சி.பி - கொஞ்சம் என்ன நிறையவே மிதப்பா இருக்கும்.. மார்க்கெட் இருந்த கால கட்டத்துல இந்த மாதிரி சென்சேஷனல் மேட்டர் எல்லாம் சம்பளம் கூட்டிக்கேட்க உதவியா  இருக்கும்


''பெருமையா இருக்கு. அதே சமயம், இந்த அளவுக்கு அன்பு, நம்பிக்கைவெச்சுப் பாசம் செலுத்துறாங்களே... அதை அவங் களுக்கு நாம எப்படித் திரும்பச் செலுத்தப் போறோம்னு யோசிக்கும்போது கொஞ்சம் பயமாவும் இருக்கு!''


சி.பி - ஒண்ணும் வேண்டாம் மேடம், கடலூர் ஏரியாவுல ஒரு கிராமத்தை தத்து எடுத்து உங்களால் ஆன உதவி செய்ங்க போதும்


6. ''முதலமைச்சர் ஆகும் ஆசை இருக் கிறதா? அப்படியானால், தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் தருவீர்கள்?'' 

சி.பி - இந்த கேள்வி எல்லாம்  தி மு க வட்டாரத்துல பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும், அங்கேயே இன்னும் வாரிசு பிரச்சனை முடியலை.. அதுக்குள்ள இவங்களூமா?

''அப்படி எல்லாம் பகல் கனவு காணும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது கட்சிக்காக நிறைய உழைக்கணும். என் உழைப்பு, அனுபவத்துக்கு ஏற்ற வளர்ச்சி இருந்தால் அதுவே போதும் எனக்கு!''


சி.பி - உங்கள் அபரிதமான  வளர்ச்சி தமிழ் நாட்டின் மட்டற்ற  மகிழ்ச்சி ஹி ஹி 



7. ''வெயிட் போட்டுட்டே போறீங்க... உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலையா அல்லது முடியவில்லையா?'' 

சி.பி - ரேஷன் கடை ஊழியரா ஒரு கேரக்டர்ல நடிங்க.. தன்னால உடல் எடை குறையும்

 ''சான்ஸே இல்லை... நான் வெயிட் போட்டிருக்கேனா இல்லையானு என் வீட்டுக்காரர்கிட்டதான் கேட்பேன். அஞ்சு வருஷமா ஒரே வெயிட்லதான் இருக்கேன். இதுவே பெரிய சாதனை!''

 சி.பி -உடம்பு வெயிட் வந்தா குறைச்சிடலாம்.. ஆனா ஹெட் வெயிட் தான் வரக்கூடாது.. 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxVDBUiCI499zXBvj0URMoxpj68nq52DSITAtm8GsUFkAtl5XcgK7Yc9gNOS_AGoaGKx4BvyI4w3zim26wrQkmgW5YtA2nyVudBc33xkRqk33rtn-8Ar3Ej-Bu7GjX92C58-R5wNI10oio/s1600/661543_f520.jpg


8. ''சினிமாவில் ஹீரோயின் கேரக்டர் கள் குறைந்தபோது, உங்களை ஜெயா டி.வி. 'ஜாக்பாட்’ நிகழ்ச்சிதான் லைம் லைட்டில் வைத்திருந்தது. நீங்கள் 'கற்பு’ பிரச்னையில் சிக்கித் தவித்தபோது தி.மு.க. அரசு உங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. அப்புறமும் ஏன் அ.தி.மு.க-வுக்குச் செல்லாமல் தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்? இது நன்றி மறந்த செயல் ஆகாதா?'' 


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் இல்லை, உண்மை என்னான்னா  அதி முக-ல சேர்ந்தா குஷ்பூக்கு வளர்ச்சி இல்லை.. ஏன்னா ஒரு நடிகை கட்சில சேர்ந்து செல்வாக்கு அடைஞ்சா எந்த மாதிரி டாமினேஷன் இருக்கும்னு ஒரு முன்னாள் நடிகையான ஜெவுக்கு நல்லாவே தெரியும்.. அதனால அங்கே போக வாய்ப்பு இல்லை.. தி முக வுக்கு ஒரு கிளாமர் சினிமா ஸ்டார் ஆதரவு தேவைப்பட்டுது.. கவர்ச்சிக்கு குஷ்பூ, காமெடிக்கு வடிவேல்னு யூச் பண்ணிக்கிட்ட்டாங்க.. 

''2000-ல் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. 2001-ல் ஜாக்பாட் பண்ண ஆரம்பிச்சேன். அதனால், வளர்ச்சி கம்மியானதும்தான் ஜாக்பாட் பண்ண வந்தேன்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன். ஆனால், 'ஜாக்பாட்’ என்னை லைம் லைட்டில் வெச்சிருந்தது என்பது மறக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. அது அருமையான நிகழ்ச்சி. 

அதே சமயம், நான் தொழில்ரீதியாகத்தான் ஜெயா டி.வி-யுடன் இணைந்திருந்தேனே தவிர, அ.தி.மு.க-வின் தொண்டராக நான் ஜெயா டி.வி-யில் வேலை பார்க்கலை.


அதேபோல், அந்த என் அஞ்சு வருஷப் போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகளில் சேர எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. எந்தக் கட்சியிலும் அப்போதே நான் சேர்ந்து இருக்கலாம். அப்படிச் செஞ்சிருந் தால், 'குஷ்பு அந்தக் கட்சியோட உதவி யாலதான் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்தாங்க’னு சொல்லியிருப் பாங்க. ஆனா, அந்தப் பிரச்னை என் தனிப் பட்ட போராட்டம். தனி மனுஷியா யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் போராடித்தான் அதில் ஜெயிச்சேன். ஆனால், பொது வாழ்க்கைக்கு வரணும்னு எப்போ முடிவு பண்ணேனோ... அப்பவே தி.மு.க-வில்தான் சேரணும்கிறதில் உறுதியா இருந்தேன்!''



''தி.மு.க-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?'' 


''பிரபுதேவா - நயன்தாரா இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''   
\
''இப்போதும் கற்பு குறித்த உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?'' 


- நிறைய பேசலாம்...

 தொடரும்

http://i497.photobucket.com/albums/rr336/hotpicszone4/Kushboo%20Came%20in%20Tight%20TShirt/engarasinallarasiaudio_039.jpga


டிஸ்கி  - இதன் முதல் பாகம் -   http://www.adrasaka.com/2012/03/blog-post_8166.html

0 comments: