Sunday, March 11, 2012

அரவான் கலைஞர் குடும்பக்கதையா? ஜெ பதில்

1.ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதியினர் கைது # அந்த 64 ஜோடில ஒரு ஜோடியா இருக்கும், அதுக்குள்ள டைவர்சா?


--------------------

 2. மகளிர் தினத்துக்கு ஜெவுக்கோ, கவர்னருக்கோ வாழ்த்து சொல்லாம கலைஞர் குஷ்புவுக்கும் கலா மாஸ்டருக்கும் சொல்றாரு, அடங்கோ

------------------------------------

3. வள்ளுவர் - என் கிட்டே 133 அதிகாரம் இருக்கே ஹே ஹே ஹே !

 வாசுகி - சும்மா ஆடாதய்யா ,அடுப்பை பற்ற வெச்சு உலைல அரிசியை போடு

-----------------------------

4. .பெற்றோரின் பாதங்களை வணங்காதவன் எவரெஸ்ட் உச்சி தொட்டாலும் பயன் என்ன?


--------------------------------

5. பாலு -என் பாதம்பட்டு புனிதப்படவே, கோலம் போட்டு வச்சிருக்கு, எதிர்வீட்டு ஃபிகரு.

 மாலு - அடப்பாவி, அப்போ செப்பல் கூட இல்லையா? அவ்வ்


---------------------------------

6.எல்லோர் வீட்டிலும் அம்மா, அப்பா இருவரில் ஒருவர் அன்பாகவும் , மற்றொருவர் கண்டிப்பாகவும் குழந்தைகளிடம் நடந்துகொள்கின்றனர் #அவதானிப்பு


---------------------------


7.நாம் தினமும் மனதார வணங்க வேண்டியவர்கள் பெற்றோர்,உழவர்கள்,இயற்கை அன்னை




----------------------------------


8. கபில் சிபில் - என்னய்யா இது? டைம் லைன் ஃபுல்லா சேட் லைனா மாறி இருக்கு?

 ட்விட்டர் ஓனர் - நல்ல வேளை , நீங்க DM பார்க்கலை!


---------------------------------------


9. அம்மாவின் அன்பு மழை பொழிவது  போல இயற்கையானது,உண்மையானது,காதலியின் அன்பு வானவில்லை தொலை தூரத்தில் பார்ப்பது போல


--------------------------------------


10. சோகங்கள்,வருத்தங்கள்,வலிகள் நம்மை ஆக்ரமிக்கும்போது கண்ணீர் விட்டுக்கதறி அழுது விட்டால் மனசு லேசாகி விடுகிறது




---------------------------------


11. தனக்குத்தெரிந்த எல்லா நல்ல விஷயங்களையும் பெற்றோர் நமக்கு கற்றுத்தருகின்றனர்,நமக்குத்தெரிய வரும் நவீன விஷயங்களை நாம்  சொல்லித்தருவதில்லை


----------------------------------


12. மே 11-ல் சினேகா - பிரசன்னா திருமணம்! # ஆரம்பத்துல அண்ணானு கூப்பிட்டவர் இப்போ பிரஸ்னு கூப்பிடறாராம்


---------------------------------


13. முத்தக்காட்சியில் நடித்து ,முகம் சுழிக்கும் வகையிலான படங்களில் நான் நடிக்க மாட்டேன் - சிவ கார்த்திகேயன் # உதட்டை சுளிச்சா போதுமே?




------------------------------


14. ஆன்ட்ரியா ரோலை விடஅதிக வெயிட் உள்ள ரோலை எனக்குத்தரனும் - திவ்யா ஸ்பந்தனா # அவங்க சாதா லேடி, நீங்க பிரக்னண்ட் லேடி, ஓக்கேவா மேடம்?


-------------------------------


15. புத்துணர்வு அளிப்பதில், ஆறுதல் தருவதில் இசை பெரும் பங்கு வகிக்கிறது




-------------------------------


16. நம் பெற்றோர் அனுபவிக்காத வசதிகளை காலம்,விஞ்ஞானம் நமக்குத்தந்த போதும் ஒரு வித குற்ற உணர்வோடே, அரைகுறையாக  நாம் அதை அனுபவிக்க முடிகிறது


---------------------------------------


17. நம் மனம் சரி இல்லை என்றால் நம் முகத்தை பார்த்தே நம் அகத்தை உணர்வதில் அம்மாவுக்கே என்றும் முதல் இடம்


---------------------------


18.நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் # ஓஹோ, விடுதில ஒரு சினிமா நட்சத்திரம் தங்குனா அது நட்சத்திர விடுதியா?


--------------------------------------------

19. அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்''-அழகிரி # தமிழன் என்ன அவ்வளவு கேணையா?


------------------------------

 20. ஓ பி எஸ் -மேடம்,அரவான் படம் டிவிடி இருக்கு பார்க்கறீங்களா?


 ஜெ- தேவை இல்லை, கலைஞர் குடும்பக்கதையைத்தான் பல வருஷமா பார்த்துட்டு இருக்கேனே?


--------------------------------------------------

4 comments:

R. Jagannathan said...

வள்ளுவர்: சும்மா கூவாதம்மே, ஜகடையில குடம் தொங்குது பாரு, தண்ணி சேந்திட்டு சீக்கிரம் வாம்மே!


ஸ்னேஹா: நான் ‘Pras..'ன்னு தான் ப்ரியமா கூப்பிட்டேன், அதுக்காக உடனே வந்து ‘press' பண்ணனுமா?

-ஜெ.

Yoga.S. said...

நாம் தினமும் வணங்க வேண்டியவர்கள்.........................அருமை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இருக்கு!?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இருக்கு!?