Monday, March 05, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 5

இந்த உலகத்துல நல்ல பேர் எடுக்கறதுங்கறது பசுமாட்டிடம் தினமும் ஒரு சொம்பு பால் கறந்து  ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கற மாதிரி.. கெட்ட பேர் எடுக்கறதுங்கறது பால் கண்ட்டெயினர்ல  ஒரு துளி விஷம் படற மாதிரி.. ரொம்ப நாளா சம்பாதிச்சு வெச்சிருக்கற நல்ல பேரை ஒரு சின்னத்தவறால இழக்க வேண்டிய சூழல் அல்லது ஒரு மாற்று குறைவான மதிப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலை எல்லா மனிதர்களோட வாழ்க்கைலயும் ஒரு முறையாவது நிகழும்.. என் வாழ்க்கைல, அதாவது பத்திரிக்கை உலக வாழ்க்கைலயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது..

பத்திரிக்கை உலகில் படைப்புகள் அனுப்புவோர்க்கு ஒரு எழுதப்படாத விதி உண்டு.. அதாவது எந்த படைப்பை அனுப்பினாலும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் அதிக பட்சம் 6 மாதங்கள் வரை அந்த படைப்பை மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது.. 

ஆர்வக்கோளாறில் சில சமயம்  சிலர் ஒரே படைப்பை இரண்டு வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்பி துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் ஒரே நேரத்தில் பிரசுரம் ஆவது உண்டு..

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வந்த ஒரு பாட்டை கிண்டல் பண்ணி ஒரு ஜோக் எழுதினேன்.. 

தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

 தையா தையா  தையா அப்டின்னா என்ன? அப்டினு  ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம்


 இந்த ஜோக்கை பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் உல்லாச ஊஞ்சல் என்ற இதழுக்கு அனுப்பினேன்..அது ஒரு மாத இதழ்.படைப்பு அனுப்பி 2 மாதம் வரை வர வில்லை.. பிறகு கல்கி வார இதழுக்கு அனுப்பினேன். 3 வாரங்கள் வர்லை.. அதன் பின் தினகரன் வசந்தம் வார இதழுக்கு அனுப்பினேன்..

இந்த இடத்தில் நான் படைப்புகளை அனுப்பும் முறை குறித்து சொல்லிடறேன்.. நான் வழக்கமா போஸ்ட் கார்டில் ஜோக்ஸ் எழுதி அனுப்புவேன்.. ஒரு புத்தகத்திற்கு 20 ஜோக்ஸ் அனுப்பினால்  அந்த இதழ் பெயர், அனுப்பிய தேதி, ஜோக்ஸ் இவற்றை  டைரியில் குறித்து  வைத்துக்கொள்வேன்.. 3 மாதங்கள் கழித்து  எந்தந்த படைப்புகள் பிரசுரம் ஆனதோ அதை அடிச்சுட்டு பிரசுரம் ஆகாத படைப்பை வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்புவேன்.

அப்படி அனுப்பற ஜோக்ஸ் பொதுவானதாக இருக்கும்.. அதாவது டாக்டர்-நர்ஸ்-பேஷண்ட்ஸ் ஜோக்ஸ், கோர்ட் கபாலி ஜோக்ஸ், அரசியல்வாதிகள் ஜோக்ஸ்,இந்த மாதிரி டாபிக்ல அனுப்புவேன்.. அந்த ஜோக்ஸ் எப்போ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்.. ஆனா டாப்பிக்கல் ஜோக்ஸ் எனப்படுபவை அந்தந்த கால கட்டத்தில் படிச்சாத்தான் நல்லாருக்கும், புரியும்.. 

உதாரணமா இப்போ நயன் தாரா பச்சை குத்தினதை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போறதை கிண்டல் பண்ணி எழுதுன ஜோக்ஸை , அல்லது பிரபு தேவாவுக்கு அல்வா குடுத்த ஜோக்கை இன்னும் 6 மாசம் கழிச்சு எழுதுனா புரியாது, மேட்சா இருக்காது.. அதுக்குள்ள அவங்க அடுத்த பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க ஆ:ளை மாத்தும்போது நாம ஜோக் லைனை மாத்திடனும்..

 ஓக்கே கம் டூ த மேட்டர்.. உயிரே பட பாடல் வெளியீட்டப்ப எழுதி அனுப்பப்பட்ட ஜோக்  3 மாசங்களாக வராததால் கல்கிக்கு அனுப்பினேன்.. கல்கி புக்ல ஒரு வரையறை வெச்சிருந்தாங்க.. 20 நாட்களில் எந்த படைப்பும் பிரசுரம் பண்ணிடுவாங்க.. ஆனா அந்த ஜோக் 20 நாட்கள்ல வராததால் தினகரன் வசந்தத்துக்கு அனுப்பினேன்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=210&height=314&image=/ahtees/admin/customer/content/2009_17_PattukkottaiPrabakar.jpg

உயிரே படம் ரிலீஸ் ஆச்சு.. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. அந்த வார ஞாயிறில் வசந்தம் இதழில், திங்கள் கிழமை கல்கி வார இதழில், அடுத்த வாரம் உல்லாச ஊஞ்சல் மாத இதழில் வெளியாகி விட்டது..


உல்லாச ஊஞ்சல் அந்த இதழில் மொத்தம் என்னுடைய 20 ஜோக்ஸ் ஒரே சமயத்தில் வெளியிட்டது.. தலையங்கத்தில்  என்னை பற்றி பாராட்டி எழுதி இருந்தார்கள்.. அதாவது 200 ஜோக்ஸ், 20 கவிதைகள், 3 கதைகள் என பல்க்காக படைப்புகள் அனுப்பியதாகவும் அவை எல்லாமே வெரைட்டியாக இருந்ததாகவும் சொல்லி இருந்தாங்க..

நம்ம ஜனங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.. அதாவது எவன் எப்போ சறுக்குவான், கை தட்டி வேடிக்கை பார்க்கலாம்னு பார்த்துட்டே இருப்பாங்க.. இந்த ஜோக் மேட்டர் 3 வெவ்வேற இதழ்கள்ல வந்ததும் ஆளாளுக்கு வாசகர் கடிதத்துல இதை குறிப்பிட்டு  கடிதம் எழுதுனாங்க.. சென்னை சென்ற போது ஒரு இதழின் ஆசிரியர் அந்த கடிதங்களை எல்லாம் காட்டினார்.. ( குறை சொல்லி எழுதியவர்களில் அதில் என் நெருங்கிய பத்திரிக்கை நண்பரும் அடக்கம்)

 அடுத்த மாத ஊஞ்சலில்  என்னை பாராட்டி தலையங்கத்தில் எழுதிய அதே உல்லாச ஊஞ்சல் இதழில் என்னை கண்டித்து எழுதியது..  அது வாசகர் வட்டத்தில், பத்திரிக்கை உலகில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.. நம்பகத்தன்மையை குறைத்தது..

அந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் என் படைப்புகள் எதுவும் எந்த இதழ்களிலும் வர வில்லை..  மிகுந்த போராட்டத்துக்குப்பிறகும், பல மன்னிப்புக்கடிதங்கள், தன்னிலை விளக்கக்கடிதங்களுக்குப்பிறகும் தான் மீண்டும் என் படைப்புகள் வர ஆரம்பித்தன..

 அதிலும் ஒரு சோகம் என்னான்னா எந்த படைப்பை அனுப்பினாலும் பத்திரிக்கை எடிட்டோரியல் குழுவில் யாராவது ஃபோன் பண்ணி “ இந்த படைப்பை வேற எந்த இதழுக்கும் அனுப்பிடலையே? என்று கேட்டு உறுதி செய்த பின் தான்  வெளியிட்டார்கள்/.. 

 ஆனால் சம்பவம் ந்டந்து பல வருடங்கள் கழித்து நானே அதை மறந்த நிலையில்  பிளாக் உலகில் வந்த பின்  எனக்கும் ஜாக்கிசேகருக்கும் நடந்த ஒரு மோதலில்  பின்னூட்டம் இட்ட ஒரு  நண்பர் “ பல வருஷங்களுக்கு முன்னால உல்லாச ஊஞ்சல்ல சொம்பு வாங்குனவன் தானே நீ? “ என கேட்டு கமெண்ட் போட்டிருந்தார்.. அப்போதான் எனக்கு உறைத்தது.. நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளைக்கூட காலம் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் என்று.. 

( ஜாக்கி சேகருக்கும் , எனக்கும் நடந்த மோதல் குறித்து பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.. ஆனா அந்த சம்பவத்தில் என் மீதுதான் தவறு இருந்தது)

 இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது..  பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இது போல்  நேர்ந்தது உண்டு.. தமயந்தி என்ற எழுத்தாளர் இதே போல் தேவி வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அதில் வராததால்  குங்குமம் வார இதழுக்கு அனுப்பினார்..  ஒரே வாரத்தில் 2 இதழ்களிலும் வந்தது.. ஆனால் அடுத்த இதழிலேயே அவரது தன்னிலை விளக்கம் பிரசுரிக்கப்பட்டது.. ஆனால் என்னைப்போன்ற ஜோக் எழுத்தாளர்களுக்கு அந்த மாதிரி தன்னிலை விளக்க வாய்ப்பு கம்மி. ( ஏன்னா அவங்களுக்கு 1000 பிரச்சனை இருக்கும், இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது)

 எழுத்து உலகில் இந்த மாதிரி கெட்ட பேர் வாங்குன ஆட்கள் அய்யம்பேட்டை விஜய லட்சுமி, எம் அசோக்ராஜா அரவக்குறிச்சிப்பட்டி.. 

 அவங்க பண்ணுனது  அப்பட்டமான திருட்டு.. ஆனந்த விகடன் இதழில் வந்த முத்திரை சிறுகதையை அப்படியே அட்டக்காப்பி அடிச்சு வைரமுத்து -குங்குமம் இணைந்து வழங்கிய கவிதைப்போட்டிக்கு அனுப்பி மாட்டிட்டாங்க .. குங்குமம் வார இதழில்  அவர் பேரை போட்டு தெளிவா  போஸ்டர் அடிச்சுட்டாங்க.. 

 எம் அசோக்ராஜா என்ன செய்யறார்னா அவர் புக் ஏஜென்சி வெச்சிருக்கார் போல..  பழைய புக்ஸ்ல வந்த ஜோக்சை எல்லாம் காப்பி பண்ணி அனுப்பிட்டு இருந்தார்.. சில புக்ஸ்ல போடவும் செஞ்சாங்க.. ஆனா ஆனந்த விகடன் இதழில் அவர் படைப்பு வருவதே இல்லை.. வாசகர்களிடம் அவருக்கு கெட்ட பேரு.. 

 இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும் வாசகர்கள் கவனமா இருக்கனும் என்பதற்காகத்தான்..

ஆனந்த விகடன் விக்ரம் வாசகர் சந்திப்பு விழாவில்  நானும், என் நண்பர் விஷ்ணுகுமாரும் தேர்வு ஆகி சென்னை போனோம்.. அங்கே சந்தோஷமான நிகழ்வும் , ஒரு சங்கடமான நிகழ்வும் நடந்தது.. அது.....


 தொடரும்.. 


டிஸ்கி -1  மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கு நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html


 இந்த கட்டுரையின் 4 ம் பாகம் -  http://adrasaka.blogspot.in/2012/02/4.html


19 comments:

குரங்குபெடல் said...

"தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

தையா தையா தையா அப்டின்னா என்ன? அப்டினு ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம் "


தம்பி ஏதோ தவறா இருக்கு . . .

அந்த ஜோக் எங்க ?

நல்ல பகிர்வு . .

நன்றி

மதுரை அழகு said...

உங்கள் தன்னம்பிக்கையக் கைவிடாததால் பத்திரிக்கை உலகில் தொடர்ந்து ஜொலிக்கிறீர்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே விஜயனை பார்க்கும் அவசரத்தில் இருக்கேன், அப்புறமா வாரேன்.

Unknown said...

நண்பா இந்த தொடர் மூலம் எனக்கு புரிய வருகிறது.. உன்னோட பொறுமை + சகிப்பு தன்மை + விடா முயற்சி+ எல்லோரயும் அரவணைத்து போகும் தன்மை...இவைகளில் பல என்னிடம் இல்லாதது எனக்கு வருத்தமே...நீ நீதான் நான் நாந்தான் ஹஹா!

ராஜ் said...

ஜாக்கி சேகருக்கும் உங்களுக்கும் நடந்த மனஸ்தாபம் காரணமாக தான் உங்க ப்ளாக் முகவரி மற்றும் ஜாக்கி சேகர்ரோட ப்ளாக் முகவரி எனக்கு கிடைச்சது. அப்ப தான் எனக்கு தமிழ் பதிவுலகம் பற்றிய அறிமுகமும் கிடைச்சது.
அது ஒரு முடிச்சு போன கதை, கிட்ட தட்ட ரெண்டு வருஷம் மேல ஆச்சு. அதை பற்றி எழுத வேண்டாம் என்பது என் கருத்து. இப்ப நீங்க எங்கயோ இருக்கேங்க. அவரு எங்கயோ இருக்காரு.
அந்த பிரச்சனை வந்தப்ப வந்த பின்னூடங்களை இப்ப படிச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வரும். நீங்க நிறைய விளக்கம் வேற குடுத்துட்டேங்க. போதும்.

Unknown said...

போன கமன்டில் இருந்த உள் குத்து தெரியாமல் விழித்து இருப்பாய் என்று நம்புவதால் இன்னொரு கமன்ட் போடுறேன்..ஹிஹி..

“வஞ்சப் புகழ்ச்சி” சில இடங்களில் மட்டும் சகிக்க ஹஹா!

தமிழ் உதயம் said...

சி.பி.செந்தில்குமார், உங்கள் பத்திரிகை உலக அனுபவங்களை வாசித்து வருகிறேன். வாசிக்க, வாசிக்க சாவியில் நீங்கள் எழுதிய ஜோக்ஸ் ஞாபகத்தில் வந்தன. நானும் ஒரு சிறுகதை எழுத்தாளர் (யோகி) என்பதால் - உங்களுக்கு நேர்ந்த அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது. பிரசுரமானது இருநூறு சிறுகதைகள். ஒரே ஒரு முறை அப்படி நிகழ்ந்துவிட்டது. கல்கியில் வந்த சிறுகதை தினமணிகதிரிலும் வந்து விட்டது. ஆனால் இருவருமே மன்னித்துவிட்டார்கள். அது அவர்களின் பெருந்தன்மை. சிலர் அசிங்கப்படுத்தி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்


avvvvvvvvvv

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜ்

ஓக்கே டன்

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ் உதயம்

வணக்கம் சார், தங்களை எனக்கு முன்பே தெரியும். மகிழ்ச்சி

முத்தரசு said...

அது என்ன சித்தப்பு சங்கடம் சந்தோஷமான நிகழ்வு....தொடருங்கள் தொடர்கிறேன்

Anonymous said...

ஓ! தொடர் அனுபவம் எழுதறீங்களா!...நிச்சயமாக மாலையில் வந்து முழுவதையம் (முந்தியது) வாசிப்பேன் வாழ்த்துகள். என் வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும்.
வேதா. இலங்காதிலகம்.

Best Business Brands said...

"தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

தையா தையா தையா அப்டின்னா என்ன? அப்டினு ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம் "


தம்பி ஏதோ தவறா இருக்கு . . .

அந்த ஜோக் எங்க ?

நல்ல பகிர்வு . .

நன்றி

Unknown said...

அனுபவம் (பத்திரிக்கை) மிகவும்
சுவையா உள்ளது, மேலும் அறிய
ஆவல்!

புலவர் சா இராமாநுசம்

vetha (kovaikkavi) said...

ஒ!.கே 5ம் வாசித்திட்டேன்.மிக்க நன்றி. கெட்ட பேர் வராமல் நாங்களும் பார்க்க வேண்டும். இது ரெம்பச் சங்கடமான விடயம். எழுதி வைத்து எதை எங்கே அனுப்பியது. என்று. சரி பார்ப்போம்.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

காட்டான் said...

அருமையான அனுபவ பகிர்வுக்கு நன்றி!!

ப.கந்தசாமி said...

நல்ல அனுபவங்கள்.

தனிமரம் said...

பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தைக் காட்டுகின்ற அனுபவப்பகிர்வு மூலம் உங்களின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளமுடிகின்றது சி.பி அண்ணா.

ஸ்ரீநிவாஸ் பிரபு said...

தொடர் படித்தேன் ஊஞ்சல் அனுபவம் பற்றி சொல்லி இருந்தீர்கள், குட்!
ஒரே படைப்பை பல பத்திரிக்கைக்கும் அனுப்பினால் இந்த சிக்கல் வரத் தானே செய்யும்?
காலம் தான் அதற்கு பதில் சொல்லும் சிபி
ஸ்ரீநிவாஸ் பிரபு