1. கந்தா -
கரண் நடித்துள்ள புதிய படம் கந்தா. பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார். இதில் காமெடி வேடத்தில் விவேக் நடித்துள்ளார். நில அபகரிப்புகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரித்துள்ளவர்களுடன் கதாநாயகன் மோதுவதுபோல் கதை சித்தரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வடிவேலு, சிங்கமுத்துவின் நில அபகரிப்பு சர்ச்சைகளும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வடிவேலு மீது கோர்ட்டில் நில அபகரிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இருவரையும் விவேக் கேலி செய்வதுபோல் காட்சிகள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்சினையை வைத்து காமெடி செய்து இருப்பது உண்மைதான். ஆனால் வடிவேலு, சிங்கமுத்து தகராறுக்கு முன்பே இப்படம் முடிந்துவிட்டது. காமெடி சீன்கள் படமான பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கும் படத்தில் இடம் பெறும் காமெடிக்கும் சம்பந்தம் இல்லை. இதை வடிவேலுவிடமும் விளக்கி விட்டேன்.
இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்திடம் கேட்டபோது
படத்தில் விவேக் நிலங்களை விலைக்கு வாங்குபவராகவும் அவரிடம் மற்றவரின் நிலங்களை ஏமாற்றி விற்கும் டுபாக்கூர் புரோக்கராக செல்முருகனும், நடித்துள்ளனர். இவை வடிவேலு, சிங்கமுத்து நில பிரச்சினை போன்று இருக்கலாம். ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதுபோல் காமெடியை எடுக்கவில்லை. போலீசின் என்கவுண்டரே படத்தின் பிரதான கதையாகும்.
இந்தப்[படம் ஈரோடு அபிராமி , ஆனூர் 2 தியேட்டரில் ரிலீஸ்
2. ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி -
பத்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியிருக்கிற சண்முகராஜ் இயக்கியுள்ள படம் 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 5 காட்சிகள் இடம்பெறுகின்றன. முழு படத்தையும் ஒரு முறை எடுத்துமுடித்து அதில் காணப்பட்ட தவறுகளை எல்லாம் திருத்தி மறுமுறையும் முழு படத்தை எடுத்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் புதுமுகங்களை தங்கவைத்து 367 நாட்கள் நடிப்புப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் சண்முகராஜ், "இதுவரையில் வெளிவந்த படங்களின் கதைகளைவிட இது வேறுபட்டது. இயக்குநர் சேரன் படத்தைப் பார்த்துவிட்ட புதிய அலைவரிசைப் படம் என்று பாராட்டினார். பாடல்களிலும் சில புதுமைகளைச் செய்திருக்கிறோம். பாலோடு தேன் சேர என்று தொடங்கும் பாடலில் காமத்துப்பாலின் 16 குறள்கள் இருக்கின்றன.
இசையமைப்பாளர் தாஜ்நூரின் முதல் படம் இதுதான். ஏ.ஆர். ரகுமானிடம் பணியாற்றியபோது என்னுடைய கதையைக் கேட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார். இப்போது இது அவரது மூன்றாவது படமாக வெளிவருகிறது" என்றார். தாஜ்நூர், "மற்றப் படங்களைவிட இந்தப் படத்தின் பின்னணி இசை பேசப்படும். கூடுதலான நாட்கள் அதற்காக செலவழித்திருக்கிறேன். ஏழு பாடல்கள். ஒவ்வொரு வகையாக இருக்கும்" என்றார்.ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்
3. நந்தா நந்திதா -வன்முறையும், காதலும் என்றுமே ஒன்று சேராது, உண்மை காதல் ஒரு போது தோற்காது - இதுதான் நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. புதுமுக இயக்குநர் ராம்சரண் இயக்கத்தில் ஹேமச்சந்திரன், மேக்னா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் படம் நந்தா நந்திதா.
ஆட்டோ ஓட்டுனர் மகனாக வரும் படத்தின் நாயகன், நந்தா எனும் கேரக்டரில் வருகிறார். கல்வி, பாசம் போன்றவையெல்லாம் தனக்கு கிடைக்காமல் போக, அதை எல்லாத்தையும் தீர்க்க வைக்க வருகிறார் நந்திதாவாக வரும் மேக்னா.
நந்திதா மூலம் நல்ல வாழ்க்கை கிடைக்க ஒரே ஒருமுறை வன்முறையை கையில் எடுத்து, பின் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்த நந்தாவின் வாழ்க்கை என்னவாகிறது, அவனுக்கு சமுதாயம் கொடுக்கும் தண்டனை என்ன என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம்சரண்.
இது தெலுங்கு டப்பிங்க் படம் போல..ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்
4. காதல் பிசாசே -ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ரத்தின சிவலிங்கம், ரவி குணசிங்கம் தயாரிக்கும் படம் காதல் பிசாசே. இதில் நாயகனாக அரவிந்த் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக மிதுனா, அனிதா ரெட்டி நடிக்கின்றனர். சந்தானம், கொட்டாச்சி, கூடல் சுரேஷ், ஈஸ்டர், சந்தான பாரதி, வனிதா, புவனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
லட்சிய வாதியான மாண வனை அதே லட்சியம் கொண்ட மாணவி காதலிக்கிறாள்.
ஆனால் காலம் அவனை தாதாவுடன் மோதவைக்கிறது. படிக்க வேண்டியவன் உயிரை காப்பாற்ற ஆயுதம் தூக்கு கிறான். இதனால் வாழ்க்கை திசைமாறுகிறது. அவனை காதலி ஏற்றுக் கொண்டாளா என்பது கதை. காதல், மோதல், சென்டி மென்ட் காமெடி என கமர்சியல் படமாக தயாராகிறது.
பெரும்பகுதி காட்சிகள் கனடாவில் படமாயுள்ளது. சென்னை, புதுவையிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாகிறது.
ஒளிப்பதிவு: லிவிங்ஸ்டன், இசை: சபேஷ் முரளி, கதை, திரைக்கதை வசனம்: தங்கவேல்.ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்
5. காதலிச்சு பார் - மீண்டும் ஒரு தலைக்காதல் கதை.. அதாவது ஒரு இசைக்கலைஞன் தான் ஹீரோ... ஹீரோயின் ரசித்தது தன் இசையைத்தான் தன்னை அல்ல அப்டின்னு ஹீரோவுக்கு இடைவேளை வந்த பின் தான் தெரியுது. அவன் வாழ்க்கைல லட்சியத்துல ஜெயிக்கிறான்.. காதல்ல? படம் பார்த்தாதான் தெரியும்.. டைரக்சன் கே எஸ் விஜய பாலன்.. இது ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்
6. AGENT VINOD -ஜேம்ஸ் பாண்ட் பாணில எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம் போல.. படத்துல கிளாமருக்கு கரீனா கபூர் இருக்காங்க.. அதனால ரசிகர்கள் எக்ஸ்ட்ரா கர்ச்சீஃப் உடன் செல்லவும் ஹி ஹி ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்
அ
7. ஆக்டோபஸ் சுறா - -இது ஒரு இங்கிலீஷ் டப்பிங்க் படம்.ஆக்டோபஸ்சுறா-ன்னு இங்கிலீஸ் படத்துக்கு இவங்களா டைட்டில் கொடுத்துடறாங்க.ஒரிஜினல் டைட்டில் கண்டுப்பிடிக்கறதுக்குள்ள 9 தாரா பாட்டி ஆகிடும்
அ
7. ஆக்டோபஸ் சுறா - -இது ஒரு இங்கிலீஷ் டப்பிங்க் படம்.ஆக்டோபஸ்சுறா-ன்னு இங்கிலீஸ் படத்துக்கு இவங்களா டைட்டில் கொடுத்துடறாங்க.ஒரிஜினல் டைட்டில் கண்டுப்பிடிக்கறதுக்குள்ள 9 தாரா பாட்டி ஆகிடும்
8. வெங்காயம் - சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்... 'வெங்காயம்!’ ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். முதல் படத்திலேயே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகச் சாட்டையடி கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமாருக்கு வாழ்த்துக்கள். 'ரமணா’, 'சிட்டிசன்’, 'சாமுராய்’ எனத் தமிழ் சினிமா பார்த்துப் பழகி, அலுத்துச் சலித்த கடத்தல் சமாசாரம்தான்.
ஆனால், மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்தான் கடத்தல்காரர்கள் என்பதும், அவர்களுக்கு சாமியார்கள் மேல் என்ன கோபம் என்று விவரிப்பதும் திரைக்கதையைப் புதிய ரூட்டில் கூட்டிச் செல்கிறது. படத்தில் பிரசாரம் குறைவாகவும் கிளைக் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருப்பது ஆறுதல் அம்சம். நாயகனாக அலெக்ஸாண்டர். ஊருக்குப் பயந்து ஒதுக்குப்புறத்தில் காதலிக்கும் கிராமத்து போலீஸ் வேடத்தை யதார்த்தமாகப் பிரதிபலித்து இருக்கிறார்..ஈரோடு ஸ்ரீஇ லட்சுமியில் ரிலீஸ்
இந்தப்பட விமர்சனத்துக்கு http://www.adrasaka.com/2011/08/blog-post_24.html
ஆனால், மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்தான் கடத்தல்காரர்கள் என்பதும், அவர்களுக்கு சாமியார்கள் மேல் என்ன கோபம் என்று விவரிப்பதும் திரைக்கதையைப் புதிய ரூட்டில் கூட்டிச் செல்கிறது. படத்தில் பிரசாரம் குறைவாகவும் கிளைக் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருப்பது ஆறுதல் அம்சம். நாயகனாக அலெக்ஸாண்டர். ஊருக்குப் பயந்து ஒதுக்குப்புறத்தில் காதலிக்கும் கிராமத்து போலீஸ் வேடத்தை யதார்த்தமாகப் பிரதிபலித்து இருக்கிறார்..ஈரோடு ஸ்ரீஇ லட்சுமியில் ரிலீஸ்
இந்தப்பட விமர்சனத்துக்கு http://www.adrasaka.com/2011/08/blog-post_24.html
9 comments:
சார் வணக்கம்
வென்னே ச்சே ச்சீ அண்ணே வணக்கம்...
ராஸ்கல் வெள்ளிகிழமை உனக்கு லீவா அண்ணே இம்புட்டு படம் பாக்குறே...?
ராஸ்கல் வெள்ளிகிழமை உனக்கு லீவா அண்ணே இம்புட்டு படம் பாக்குறே...?
டேய் அண்ணே உன் பிளாக் ஒட்டு படையெல்லாம் ச்சீ பட்டை எல்லாம் எங்கேடா அண்ணா...?
வணக்கம் சி.பி சார்!நல்லா விபச்சாரி,ச்சீ விபரிச்சிருக்கீங்க,ச்சீ விமர்சிச்சிருக்கீங்க!
வெங்காயம் திரும்பவும் ரிலீஸ்?
இன்று என் blog இல் --- http://scenecreator.blogspot.in/2012/03/blog-post_23.html
இந்த வருட படங்கள் பற்றி சில வார்த்தைகள்
ஆ.மு.தேன்மொழி மட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
All of them films waiting for your reviews . I am interesting film is agent vinod
Post a Comment