மார்ச் மாசம்னா ஃபைனான்ஸ் ஃபீல்டுல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி, பேங்க், ஆடிட்டிங்க், அக்கவுண்ட்ஸ் செக்சன்ல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி செம டைட் ஒர்க்கா இருக்கும்.. லீவே கிடைக்காது.. ஆனா மிக எதிர்பார்ப்புடன் வரும் படங்கள் இந்த மாதம் நிறைய ரிலீஸ் ஆகுது. அதுவும் இன்னைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்ல அரவான் ரொம்ப முக்கியமான படம்.. பீரியட் ஃபிலிம்
1.அரவான் - அங்காடித்தொரு படத்தின் வெற்றியைத் தொடந்து வசந்தபாலன் இயக்கத்தில் வேகமாக வளர்ந்துவரும் படம் ‘அரவான்’. இந்தப் படம் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையாகும். இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலை மையமாகக் கொண்டு இயக்கிவருகிறார் வசந்தபாலன்.
ஆதி, பசுபதி, தன்ஷிகா, அஞ்சலி என முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.
பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரியாதை கலந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
"இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமானது. வரிப்புலி என்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பின்னோக்கிப் போய், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்", என்று கூறியுள்ளார் படத்தின் ஹீரோவான ஆதி.
இந்தப்படம் ஈரோடு அபிராமி,ஸ்ரீ லட்சுமில ரிலீஸ்
2. யார் - தமிழ் சினிமாவுக்கு இப்போது த்ரில்லர் காலம் போலும். காஞ்சனா, அம்புலி போன்ற படங்களை தொடர்ந்து அடுத்து மிரட்ட வரும் த்ரில்லர் படம் யார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில், ரவி இயக்கத்தில், பூமிகா, சினேகா நடிப்பில் வெளிவந்த படம் அமரவாதி.
த்ரில்லர் படமான, இந்தப்படம் இப்போது டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து 10நாட்கள் ரீ-சூட்டிங் நடத்தி விரைவில் வெளியிட உள்ளனர். தமிழில் இப்படத்தை வெளியிடப்போகும் தயாரிப்பாளர் சதீஷ் கூறுகையில், யார் படம் வெளிவந்த பிறகு, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய டிரெண்ட் செட்டாகும்
3.கொண்டான் கொடுத்தான் - பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "வரவு எட்டணா செலவு பத்தணா", "காலம் மாறிப்போச்சு", "விரலுக்கேத்த வீக்கம்" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஜி.ராஜேந்திரன் "கொண்டான் கொடுத்தான்" எனும் படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். கூடவே படத்திற்கு கதை, வசனம், ஒளிப்பதிவும் செய்கிறார்.
தலைமுறைகளாக பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டான் கொடுத்தானாக இருக்கும் 2 குடும்பங்களுக்கு இடையில் நடைபெறும் பாசப்போராட்டமே இந்த படத்தின் கதை. உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உடன்பிறந்த அக்காள்-தங்கைகளை கண்ணீர் விட வைக்கக்கூடாது. உறவுகளுக்கு இடையே திருமணம் செய்வது சிறப்பானது போன்ற கருத்துகள் இந்த படத்தில் இருக்கிறது.
வெளுத்துக்கட்டு ஹீரோ கதிர் நாயகனாகவும், அழகர்சாமியின் குதிரை பட நாயகி அத்வைதா ஹீரோயினாகவும் நடிக்க இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், எல்.ராஜா, சுலக்ஷனா, லட்சுமி ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பி.பாரதி-மாஸ்டர் ஸ்ரீராம் வழங்க, அய்யப்பா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் பி.அய்யப்பா தயாரிக்கிறார். தேவா இசையமைக்கிறார். காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடந்தது.
ஈரோடு ஆனூர், அன்னபூரணி ரிலீஸ்
4. சங்கர் ஊர் ராஜபாளையம் -நாசிகா பிலிம்ஸ் நிறுவனத்துடன் கோல்டன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் “சங்கர்’. கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார். இவர்களுடன் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வீரா இயக்குகிறார். வீ.தஷி இசையமைப்பில் உருவாகி இருக்கு
படம் பற்றி இயக்குநர் வீரா பேசுகையில், “முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது. அந்த காதல் நிறைவேறியதா என்பதை இப்போதுள்ள டிரண்டுக்கு ஏற்ப படமாக்கி இருக்கிறோம்.
தினம் தினம் எத்தனையோ பெண்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் மீது மட்டும் காதல் ஏற்படுகிறது. இதே மாதிரிதான் பெண்களும். ஆண்களைப் போல்தான் எல்லா உணர்வுகளும் பெண்களுக்கும் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் வெளிக்காட்டி விடுகிறார்கள். பெண்களால் அது முடியவில்லை. இதை மையமாக வைத்தும் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைந்திருக்கிறது.
காதல்தான் களம் என்றாலும், அதை வேறொரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் படம். புதுமையான யுக்தியில் இதை படமாக்கி வருகிறேன்.
ஹீரோ கந்தேஷ், ஹீரோயின் ஹாசிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். படத்தின் சம்பவங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜபாளையம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம். மேற்கு தொடர்ச்சி மலைபகுதியான சேத்தூர் கிராமத்தில் வில்லன் அருணுடன் ஹீரோ மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். நிறைய படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் வீ.தஷி, இந்தப் படத்திற்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். அதை நிறைவாக செய்து கொடுத்திருக்கிறார். பாடல்களும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. கவிஞர் முத்துலிங்கத்துடன் புதுமுக கவிஞர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர். ரமேஷ் ரெட்டி நடனம் அமைத்திருக்கிறார். படத்தோட வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம்…” என்றார்.
இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
5. MUMMY VS SINBAD - ஃபாரீன்ல ஆல்ரெடி ரிலீஸ் ஆகி அங்கே ஃபெயிலியர் ஆன படம். ஆனா தமிழ்ல டப் பண்ணி பிரம்மாண்டமான போஸ்டர்ஸ் எல்லாம் ஒட்டி ஓவர் பில்டப்போட இந்தப்படம் வருது.. Cast: Manu Bennett, Holly Brisley and Steven Grives; Director: Karl Zwicky; அங்கே 2011லயே ரிலீஸ் ஆகிடுச்சு
இந்தப்படத்தோட உண்மையான டைட்டில் 'Sinbad and the Minotaur.. நம்மாளுங்க மம்மி பேரை போட்டா பழைய ஹிட் பட மம்மி பாகம் 2ன்னு நினைச்சு கொஞ்சம் பேரும், அம்மா ஆதரவாளர்கள் பயந்துக்கிட்டு கொஞ்சம் பேரும் வருவாங்கன்னு நம்பி டைட்டில் மாற்றி இருக்காங்க.
அரேபியன் நைட்ஸ், 1001 இரவுகள் படம் மாதிரி ட்ரை பண்ணி இருப்பாங்க போல.. என்ன காமெடின்னா காட்டுவாசிகள் போல் காட்ட வேண்டிய பெண்களை பியூட்டி பார்லர் மாடர்ன் கேர்ள் போல காட்டியதுதான்.. ஹய்யோ அய்யோ ..

6 comments:
முத வெள்ளிக்கிழம.....
படத்திக்கு போயாச்சா.....?
அரவான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்....
உங்க கிட்ட கேட்கணூமெண்டு நினைச்சேன் யார் படம் நம்ம ஊரிலும் போட்டிருக்காங்க, அப்போ நம்பி போகலாம், கடைசி படம் இங்கிலீஸ் வேர்சன் இப்போ டவுண்லோட் லிங்க் தேடிகிட்டிருக்கேன்..நன்றி தகவல்களுக்கு
Raittu.............
தகவலுக்கு நன்றி.
Post a Comment