1. உங்க பாடல்கள் எல்லாமே செம ஹாட்டா இருக்கு. அது எப்படி?
பல ஆல்வங்கள்ல இருந்து ‘சுட்டு’ தர்றேனே... அதான்.
----------------------------------------
2. இளைய தலை முறைக்கு வழி விடுவோம்-னு தலைவர் சொல்றாரே?
அவரோட பேரன் ரெடி ஆகிட்டான்-னு அர்த்தம்.
---------------------------------------
3. மாதர் சங்கத்த் தலைவியை மேரேஜ் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு
ஏன்?
ஆண் குழந்தை எனக்கு பிடிக்கு-னு சொன்னாக் கூட ஆணாதிக்கவாதியா!-னு கேட்கறா!
-----------------------------------------
4. தலைவர் எட்டாத உயரத்தை அடையப் போறார்-னு எப்படி சொல்றே?
பொதுக்குழு நடக்கறது 8-வது மாடில. இப்போ அவரு 7-வது மாடி போயிட்டாரு. அடுத்து 8-வது தானே?
----------------------------------------
5. தலைவருக்கு பிடிச்சது இந்திய நாடா? வெளிநாடா?
எந்த நாடா இருந்தாலும் தலைவர் கை போகும் திசை அந்த நாட்டுப் பெண்ணின் சுடிதார் நாடா.
----------------------------------------
6. தலைவர் டயட்-ல இருக்கறது வேஸ்ட்.
ஏன்?
வாரத்துக்கு 6 நாள் டயட்ல இருக்காரு. எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு சண்டே செம கட்டு கட்டிடறாரே?
--------------------------------------
7. என் ஆளுக்கு ‘ஆண்’ என்றாலே அலர்ஜி.
நிஜமாவா?
ஆமா! பயத்துல, வலி-ல கத்தறப்பக்கூட ‘ஆ’-னு கத்தமாட்டா! ‘பெ’, ‘பே’-னு தான் கத்துவா!
-------------------------------------
8. மோசமான படைப்புகளை நாம குப்பைல போடனும்.
சார். எங்கெங்கிருந்தோ எழுத்தாளர்கள் எழுதுவாங்க! அதை இங்கே இருக்கற நாம எப்படி குப்பைல போடறது?
-------------------------------------
9. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.
ஆனா இதுக்காக எல்லாம் கேல் ரத்னா விருது எதிரிபார்த்தா எப்பிடி?
----------------------------------
10. கட்சிக்காக எதை வேணும்னாலும் தியாகம் செய்வேன்னு சொன்னது உண்மைதான். அதுக்காக அடிப்படை உறுப்பினர் பதவி வரை தியாகம் செய்யச் சொன்னா எப்படி தலைவரே?
--------------------------------------
11. ஆத்துல குளிச்சா 10 நிமிஷத்துல வெளில வந்துடுவேன்.
ஏன்?
அரை மணி நேரம் இருந்தா, வெளில வந்ததும் “உடம்பு ஊறிடுச்சு போல”-னு யாராவது கேட்டுட்டா?
----------------------------------------
12. உன் சம்சாரம் சமையல்ல வீக்கா?
எப்படி தெரியும்?
சம்சாரம் என்பது வீணை! சமையல் செய்யறது எல்லாம் வீணே!-னு பாடறீங்களே?
--------------------------------------
13. சம்பளம் உயர்த்தப்பட்ட மேட்டரை யார் கிட்டயும் சொல்லலையே, ஏன்?
ஃபிரண்ட்ஸ் கிட்டே சொன்னா பார்ட்டி கேப்பாங்க. மனைவிட்ட சொன்னா நகை கேப்பா. ஹவுஸ் ஓனர்ட்ட சொன்னா வாடகை ஏத்திடுவாரு.
--------------------------------------
14. தலைவர் பலி கெடா ஆகிட்டார்.
அடடா! வழக்கமா அவர் பழிவாங்கற கெடாவாத்தானே இருப்பாரு?
---------------------------------------
15. ஆண்கள் 3 வகையா? எப்படி?
1. திருமணம் ஆனவங்க
2. திருமணம் ஆகாதவங்க
3. திருமணம் ‘ஆகாத’வங்க (பிடிக்காது-னு சொல்றவங்க)
--------------------------------
`16. உங்க வீட்ல டெய்லி காலைல இட்லி, நைட் உப்புமா... தானா? ஏன்?
காலைல மீந்து போன இட்லியை உப்புமா ஆக்கிடலாம்
------------------------
5 comments:
தலைவரே,
Jokesல இருந்த E பறந்து போயிடுச்சு போல (Joks)?
தமிழ் சினிமா உலகம்
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
ம்ம்...கன நாளைக்கு பிறகு பார்த்தால், நீங்களும் கன நாளைக்கு பிறகு டெம்ப்ளேட் இல கலக்கிறீங்கள்..5 , 6 சூப்பர்..நண்பன் பார்த்து அனுயா ஞாபகம் வந்திட்டுது போல..
ரத்னா விருதுக்கு எப்படி இப்படி விளக்கம் கொடுக்க முடிந்தது?
16. பதில் சொன்னவர் நம்ம சிபி.
:))
Post a Comment