Monday, February 06, 2012

IP MAN 2 -குங்க்ஃபூ மாஸ்டர் ஸ்டோரி (புரூஸ்லீ யின் குரு) -சைனீஷ் சினிமா விமர்சனம்

http://www.moviedeskback.com/wp-content/uploads/2011/01/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Wallpapers-1.jpg

 டைட்டிலை பார்த்துட்டு நம்மூர் வி ஐ பிங்க ஐ பி கொடுத்துட்டு ஓடிடுவாங்களே, அந்த மாதிரி கதையோன்னு யாரும் பயப்பட தேவை இல்லை.. ஆக்‌ஷன் ஃபிலிம் தான்.. ஃபாரீன்ல சூப்பர் ஹிட் ஆன படம்.. ஒரிஜினலா நடந்த கதையாம்

வறுமை தாண்டவமாடும் இடங்களில் கூட திறமை நாட்டியம் ஆடும்.. இயற்கை ஒரு வாசலை மூடும்போது மற்றொரு வாசலை திறந்து விடுகிறது.. 1949.ல் ஹாங்க்காங்க்கில் வாழ்ந்த ஒரு குங்க்ஃபூ மாஸ்டரின் உண்மைக்கதைதான் இது.. 2008-லேயே இதன் முதல் பாகம் வந்தது.. இப்போது (2010) வந்திருப்பது அதே கதை, ஆனால் நடிகர்கள் வேறு.. புரூஸ்லியின் குரு இவர் தான் என்று படம் முடியும்போது சில க்ளிப்பிங்க்ஸ் காட்றாங்க..

படத்தோட கதை என்ன?ஹாங்க்காங்க்கில் ஒரு புது ஊருக்கு பிழைப்பு தேடி தன் நிறைமாத கர்ப்பிணி, மகனுடன்  வர்றார் ஹீரோ.. அவருக்கு குங்க் ஃபூ மட்டும் தான் தெரியும்.. தற்காப்புக்கலை , மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் நடத்த முடிவு பண்றார்.. கொஞ்சம் கொஞ்சமா பசங்க சேர்றாங்க.. டியூஷன் மாதிரி எடுக்கறார்.. அப்போ தான் மதுரை அழகிரி மாதிரி லோக்கல் தாதா சோமோ ஹங்க் இடஞ்சலா வர்றார்.. 

ஜாக்கிசானின் படங்களில் எல்லாம் குண்டா ஒருத்தர் வருவாரே ( ஸ்பானிஷ் கனெக்‌ஷன் ) அவர்தான்.. அவரும் ஒரு மாஸ்டரே.. அவர் ஒரு கண்டிஷன் போடறார்.. இங்கே இருக்கற மாஸ்டர் கூட ஃபைட் போட்டு ஜெயிச்சா ஸ்கூல் நடத்தலாம்னு.. ஃபைட்டுக்கு ஃபைட்டும் ஆச்சு.. திரைக்கதையை விறு விறுப்பா நகர்த்துன மாதிரியும் ஆச்சு.. 

ஹீரோ ஜெயிச்சுடறார்.. அழகிரியையும் ஜெயிக்கிறார்.. இப்போ அவர் ஸ்கூல் நடத்த பர்மிஷன் கிடைச்சுடுது.. இப்போ அழகிரி அண்ணனுக்கு ஸ்டாலின் மாதிரி ஒரு இடைஞ்சல் வருது.. அதாவது வேற ஒரு குத்துச்சண்டை சாம்பியன். அவர் ஒரு மேடைல பப்ளிக்கா சவால் விடறாரு...

ஜெ கேப்டன் கிட்டே திராணி இருந்தா தனியா நி ந்னு சங்கர மடம்ல ஜெயிச்சு காட்டுங்கன்னு சொன்னாரே அந்த மாதிரி அந்த சாம்ப்பியன் சவுண்ட் குடுக்கறார்.. 

விறு விறுப்பான ஃபைட்டில் சாமோ ஹங்க் காலி ஆகிடறார்.. சாம்ப்பியன் அறை கூவல், ஹால் கூவல், போர்ட்டிகோ கூவல் எல்லாம் விடறார்.. நம்ம ஹீரோ அந்த சவாலை ஏற்று க்ளைமாக்ஸ் ஃபைட்ல ஜெயிக்கிறார்.. அவ்ளவ் தான் சண்டை  அடச்சே அவ்ளவ் தான் கதை..

ஜீன் கிளாடு வாண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட் படத்துலயே இதெல்லாம்  பார்த்தாச்சு என்றாலும் ஹீரோவா நடிச்சவரோட தோரணை, பாடி லேங்குவாஜ், ஃபைட் பண்ணும்போது அமைதியான லாவகம் செம,.. 

புரூஸ்லீ, எம் ஜி ஆர்  வரிசையில் சண்டைக்காட்சியில் கூட அமைதியான புன்னகையில் நிதானமான வேகம் காட்டும் அவரது அணுகு முறை அழகு.. 

சாமோ ஹங்க் ஆள் வயசானாலும் கலக்கறார்.. அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர் வரும் காட்சிகளில் க்ளாப்பிங்க் .. 

http://www.differentvideos.info/wp-content/uploads/2010/12/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Teaser-Official.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் எந்த பில்டப்பும் இல்லாமல் மிக சாதராணமாக, எளிமையாக இருந்தது பாராட்ட வைத்தது

2. வில்லனின் பாத்திரத்தேர்வும், சாமோஹங்க்கின் கேரக்டரைசேஷனும் செம.. 


3. ஒளிப்பதிவு எந்த ஜால வித்தையும் புரியாமல் மிக சாதாரணமாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தந்தது..

4. வசனங்கள் பல இடங்களில் தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் எழுதி, குடும்பத்துடன் பார்க்கும்படி மிக கண்ணியமாக இயக்கியது.. 

http://www.betalevel.com/images/ip_man_2.jpg
லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. மிக ஏழ்மையாக வாடகையே கொடுக்க முடியாத சூழலில் இருக்கும் ஹீரோ ஏன் அவ்ளவ் ஆடம்பரமான வீட்டில் குடி வந்தார்? சாதாரணமான வீட்டில் ஏன் குடி போகலை?

2. கிட்டத்தட்ட 27 மாணவர்கள் அவரிடம் பயில்கிறார்கள்.. அவர்கள் ஃபீஸ் குடுத்தும் ( அதுல 3 பேர் மட்டும் தர்லை) அது வாடகைக்கே போதலை.. அப்போ பூவாவுக்கு அவர் என்ன செய்வார்? ஹவுஸ் ஒயிஃப்.. இவருக்கும் வேற தொழில் தெரியாது.. 

3. க்ளைமாக்ஸ்சில் ஹீரோ ஜெயிக்கும் சூழல் வந்ததும் நடுவர் குழு அவரிடம் இனி காலால் உதைக்கக்கூடாது ஒன்லி கை தான் யூஸ் பண்ணனும்னு சொல்றாங்களே, அது பாக்ஸிங்க் ரூல்ஸ் தானே.. அது எப்படி அது வரை ஹீரோ காலால் உதைக்கிறார்? 

4. க்ளைமாக்ஸ் ஃபைட் பயிற்சிக்காக வீட்டில் பயிற்சி எடுக்கும்போது எழும் சத்தங்கள்  நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு இடஞ்சலாக இருக்கக்கூடாது என அவரை ஹவுஸ் ஓனர் வீட்டில் விட்டுட்டு வந்து ஹீரோ பயிற்சி எடுக்கறாரே.அது எப்படி? வாடகையும் தர்லை.. இவர் சம்சாரத்தையும், மகனையும் பார்த்துக்க ஹவுஸ் ஓனர் என்ன  காப்பகமா வெச்சு நடத்தறார்?. 

5.  ஒரு ரவுண்ட் டேபிள், அதுல ஹீரோவும், சோமோ ஹங்க்கும் ஃபைட் போடறாங்க,யார் அந்த டேபிளை விட்டு விலகறாங்களோ அதாவது கீழே விழறாங்களோ அவங்க ஜெயிச்சவங்க, ஒரு இடத்துல அந்த டேபிள் ரெண்டா உடையுது.. அது மேலே போய் ரெண்டா பிரிஞ்சு வருது.. இவங்க 2 பேரும் பறந்து போய்  ஆளுக்கு ஒரு அரை வட்டப்பலகையை பிடிச்சு அதுல காலை வெச்சு ஸ்டெடியா நிக்கறாங்களே.. உஷ் அப்பா முடில.. செம காமெடி சீன் .. 

http://f.imagehost.org/0933/ip_man_2small.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1.  மாஸ்டர்.. யாராவது ஸ்டூடண்ட்ஸ் இப்போ இங்கே வருவாங்களா?

நோ, ஏன் கேட்கறீங்க?மேடம்


இல்ல, காலியா இருக்கற இடத்துல துணி காயப்போட..  ( தக்காளி , எந்த நாட்டுக்கு போனாலும் பொண்ணுங்க புத்தி!!!!!!!!)

2.  ஆளைப்பார்த்தா லாண்ட்ரி மாஸ்டர் மாதிரி இருக்காரு? இவரா ஃபைட் மாஸ்டர்? புரோட்டா மாஸ்டரோ?

3.  ஒரு ஃபைட்டருக்குத்தேவையானது - தாக்கறதுல வேகம் இருக்கனும், தடுக்கறதுல விவேகம் இருக்கனும்

4.  மாஸ்டர். ஒரே சமயத்துல 10 பேரை அடிப்பீங்களாமே?


ஆமா.. 

அவங்க ஆயுதங்களோட வந்தாலுமா?

வரட்டும், பார்க்கலாம்.. 

5.  மாஸ்டர். அப்பாடா, 10 பேரை ஈஸியா அடிச்சுட்டீங்க. 

ஹூம், இதனால தான் பிரச்சனை.. அவங்க ஆளுங்க 80 பேர் வந்திருக்காங்க.. 

6.  உங்க பணம் ரொம்ப பேடு ஸ்மெல் அடிக்குது, பட் ஐ லைக் இட் 

7. ஹிப்மேன், உங்க கூட அவர் தாக்கு பிடிப்பாரா?

இப்படி உசுப்பேத்தி வம்புல மாட்டி விடறதே  உங்களுக்கு பிழைப்பா போச்சு

8.  மாஸ்டர்.. அவர் கூப்பிடறாரு. நீங்க போங்க.. ஃபைட் போடுங்க./. 

இரப்பா.. யாராவது போறாங்களா?ன்னு பார்ப்போம், நாமளா ஏன் வலுவுல போய் மாட்டனும்?

9. சரி.. இப்போ நான் போறேன்

போங்க போங்க, போய் வாங்கி கட்டிக்குங்க.. 

10.  டேபிள்  ரொம்ப வழுக்குது.. இல்லைன்னா இன்னும் கொஞ்ச நேரம் நான் தாக்குப்பிடிச்சிருப்பேன் ஹி ஹி 

11.  உங்க சுய லாபத்துக்காக ஃபீஸ் கேட்டா நான் கட்ட மாட்டேன், ஆனா அதே சமயம் யாராவது சவால் விட்டா அதை ஏத்துக்க தயாரா இருக்கேன் ( சைனீஷ்லயும் பஞ்ச் டயலாக் பேசலாம் போல )

12.  எல்லாருக்கும்  முதுமைன்னு ஒண்ணு வரும்.. அதனால  நெம்பர் -ஒன் என யாரும் நிரந்தரம்  கிடையாது ( ஹி ஹி , சைனாக்காரங்க கூட நம்மை தாக்க ஆரம்பிச்சாச்சா? அவ்வ்)

13. வெள்ளைக்காரனுக்குக்கூட வேப்பிலை அடிக்க ஒருத்தன் வராமலா போவான் ( வேலாயுதம் எஃபக்ட்?0

14. ஜெயிச்சவன் தோத்தவன் கிட்டே மன்னிப்பு கேட்கனும்னா நான் டெய்லி ஒரு ஆள்ட்ட மன்னிப்பு கேட்கனும்


15.   சீஃப் எதிரே நிக்கறியே.. யாரு நீ? உனக்கு என்ன பிரச்சனை?

நீ தான் பிரச்சனை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKe9D18gPbZ6IgBbh070Qon1cOyir52823viz4Z-QoCVZVb0R8ktvivzFI7bWWGGN0dY5aFqOZUEkoaq_38mCUakwLfr5RHG7CMnnM1aRJYA1kojsHjRK07k8mG10P8mmL4noO0m4qVsMr/s1600/ip+man+2+bj+presscon+donnie+huang+lynn.jpg



சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், குங்க் ஃபூ பட விரும்பிகள், சாமோ ஹங்க் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களூம் பார்க்கலாம்.. டீசண்ட்டான டைரக்‌ஷன்.. தலை வலி தராத சண்டைக்காட்சிகள்.. போர் அடிக்காத விறு விறுப்பான திரைக்கதை..

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்




17 comments:

கடம்பவன குயில் said...

என்னோட அடிதான் முதல் அடியா?? (குங்ஃபூ)

கடம்பவன குயில் said...

நல்லவேளை பெண்களும் பார்க்கலாம்னு சிபியே சொல்லிட்டார். உங்க பதிவில நீங்க போடற படங்களை விட டீசண்டான படம்னு நீங்களே சர்ட்டிஃபிகேட் கொடுத்தபின் பார்க்கவேண்டியதுதான்.

Astrologer sathishkumar Erode said...

நல்லாருக்கு விமர்சனம்..முதல் இரண்டு பத்தி படிக்க சுவாரஸ்யமா இல்ல

Yoga.S. said...

அருமையான விமர்சனம்!அப்படியே நம்மூரு அரசியலையும் கலந்துகட்டி அடிச்சு,சூப்பர் சென்னிமல!!!!!!

ஹேமா said...

எத்தனை அனுபவங்கள்.நினைவில் வைத்துத் தொகுக்கும் விதமும் அருமை.
அருமையான பொக்கிஷம் சிபி !

ஹேமா said...

ஒரு படமும் மிச்சம் விடுறதில்லையாக்கும் சிபி !

ராஜி said...

படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்களா?

விஸ்வநாத் said...

There's a story of ஏனாதிநாத நாயனார். Pl ref http://www.shaivam.org/naeenaat.html.In this story a good guy ஏனாதிநாதர் teaching fighting to the king's soldiers and a bad guy, another teacher who wish to take the rights of teaching fighting to king's people.

I guess the concept in our Sivapuranam is copied by Chinese in this film. hehehe

Marc said...

மனம் கவர்ந்த பக்குவமான திரைவிமர்சனம்.படம் பார்க்க தூண்டுகிறது.வாழ்த்துகள்

K.s.s.Rajh said...

நல்ல விமர்சனம் பாஸ்
படம் பாக்கலாம் போல

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம் பாஸ். இரண்டு படமும் எடுத்து வைத்தும் நேரமின்றி பார்க்காமல் இருக்கிறேன். அவ்வ்வ்வ்

நாய் நக்ஸ் said...

Ping....ping...ping.....

Apaada...thayarippaalar
ungakitta irunthu
thapichittaar.....

sarav said...

ayiram padam pathalum asaratha thalaivarae. ipman part 1 mudiyara idathil irundhu part 2 thodangugirathu. Selva seemanaga irundhavar ipman ukkandhu sapidra alavukku sothu irundhathal vera velai theriyadhu China meethu japan padai eduthathala sothu sugam izhakkarar ithu first partla varum . 2nd part hongkong la nadakkathu ithula English ekathipathiyam local politics itha vechu kathai poguthu
ipman use panra style wingchun atha kandupidichuthu oru lady appadinnu solvanga athanla antha style yarum use panna mattanga genral kungfu vanthu wushu appadinnu solvanga
ipman varavar Donnie yen. Jackie chan nadicha shanghai knights la climax la boatla jackie kooda sanda poduvar!

thani pathivu mathiri agiduchila ?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நானும் வந்துட்டேன்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, காலியா இருக்குற இடத்துல பொண்ணுங்க துணி காயப்போட கண்டிப்பா வருவாயிங்க ஹா ஹா ஹா இது கூட புரியலையா உனக்கு கொய்யால...

உலக சினிமா ரசிகன் said...

சிபி...
சீனாப்படத்துக்கு தமிழக அரசியலை கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க...
என்னா தைரியம்!!!!!!!!

Anonymous said...

படம் பாக்கலாம் போல...Haiyuming Hao..-:)