Saturday, February 25, 2012

பொங்கி எழுந்த சாரு - என்னை எழுத வேண்டாம் என்று சொல்ல ஞாநி யார்? - காமெடி கும்மி

http://www.sahodari.org/images/With_Charu.jpgஎக்ஸைல் விமர்சனக் கூட்டத்தில் ஞாநி ஒரு வருஷ காலத்துக்கு இணையதளத்தில் என்னை எழுதாமல் இருக்கும்படி ஆலோசனை கூறினார். 


 சி.பி - அப்புறம் என்ன ? எழுதத்தானே கூடாதுன்னார்? சேட்டிங்க் கூடாதுன்னு சொல்லலையே?


 ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் எனக்கு இணைய தளத்தை விட்டால் எழுதுவதற்கு இடம் ஏது?  எந்தப் பத்திரிகை என் எழுத்தை வெளியிடத் தயாராக உள்ளது?  ராஸ லீலா என்ற எனது 700 பக்கத் தமிழ் நாவலை நான் கலா கௌமுதி என்ற மலையாளப் பத்திரிகையில்தானே வாரா வாரம் எழுதினேன்?  அது மட்டும் அல்ல; கலா கௌமுதியில் வந்து கொண்டிருந்த போதே அது சாரு ஆன்லைன் இணைய தளத்திலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 



சி.பி - என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க? திரைச்சித்ரா, விருந்து எல்லாம் எதுக்கு இருக்கு?

 

 காமரூப கதைகள் நாவலையும் சாருஆன்லைன் இணையதளத்தில்தான் எழுதினேன்.  மற்றபடி விகடன் இணையதளத்தில் ஓரிரு ஆண்டுகள் கோணல் பக்கங்கள் என்ற பிரசித்தி பெற்ற பத்தியை எழுதினேன்.  அது அப்படியே விகடன் இதழிலும் வரும் என்று எதிர்பார்த்தேன்.  எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சி.பி - ஒண்ணும் கவலைப்படாதீங்க, டாக்டர் விகடனை தொடர்ந்து நர்ஸ் விகடன், அல்லது கில்மா விகடன் வருதாம் அதுல சான்ஸ் உண்டு.. 
 


 பிறகு, குமுதத்தில் ஒன்பதே வாரங்கள் கோணல் பக்கங்கள் தொடர்ந்தது.  பிறகு அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது.  உடனே விகடனில் வாய்ப்புக் கேட்டேன்.  வாய்ப்பு கிடைக்கவில்லை.  நான் 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  இதுவரை குமுதத்தில் 9 ஒன்பது வாரமும், விகடனில் 24 வாரமும் மட்டுமே (துக்ளக்கில் 6 மாதம் எழுதியது தனிக்கதை) எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியே கிடைத்தாலும், இப்பத்திரிகைகளில் எழுதும் உற்சாகத்தையும் மன எழுச்சியையும் நான் இழந்து விட்டேன். அதற்கு ஒரே காரணம்தான்.  இனிமேல் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவதை விட ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதே எனக்கு நல்லது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்.   ரொம்ப காலத்துக்கு செவியில்லாதவர்களின் தேசத்தில் இசைக் கலைஞனாக வாழ முடியாது.  அலுப்பாக இருக்கிறது.


 சி.பி - ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்???

ஆனால் நான் எழுதுவதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இடமான இணைய தளத்திலும் எழுதாதே என்று சொன்னால், ஒரு மனிதனைப் பார்த்து மூச்சு விடாதே என்று சொல்வதற்குச் சமம் என்று ஞாநி உணர்கிறாரா?


சி.பி - அவர் ஏதோ ஒரு  பேச்சுக்கு சொன்னதுக்கு ஏண்ணே இப்படி பொழியறீங்க?

 
ஞாநி எத்தனை ஆண்டுகள் விகடனில் எழுதி இருக்கிறார்?  30 ஆண்டுகளா, அதற்கும் மேலா?  அதிலும் ஒரு கட்டத்தில் விகடனில் ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கள்!  உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் இப்படிப்பட்ட லக்கி ப்ரைஸ் அடித்ததில்லை. 

 சி.பி - இல்லையே , ஹாய் மதன்  3 தொடர் ஒரே சமயத்தில் எழுதி இருக்காரே?


 ஆனானப்பட்ட சுஜாதா கூட ஒரே பத்திரிகையில் இரண்டு பத்திகள் எழுதியதில்லை.  ஒரு சுபதினத்தில் திடீரென்று ஞாநியின் இரண்டு கட்டுரைகளும் விகடனில் நிறுத்தப்பட்டன.  என்ன நடந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம்.  ஆனால் உடனே என்ன நடந்தது?  விகடனில் ஞாநியின் இரண்டு பத்திகளும் நிறுத்தப்பட்ட மக்யா நாளே குமுதத்தில் ஞாநியின் பத்தி தொடர்ந்தது.  ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டேன்.  ஞாநி குமுதத்தில் எழுத ஆரம்பித்ததும் குமுதத்தின் விற்பனை அதிகரித்தது.


சி.பி - ஆமா, குமுதத்தின் சேல்ஸ் 3,75,887 ல இருந்து  3,75,898 ஆக உயர்ந்தது.. எக்ஸ்ட்ரா பிரதிகள் வாங்குனது ஞாநி சார் ஃபேமிலிதான் ஹி ஹி


  இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்.  ஆனால் முன்னாள் ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால் ஞாநியின் தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டது.  இது குமுதம் என்ற இதழுக்கு நேர்ந்த அவமானம்.  இதுதான் குமுதத்துக்கும் விகடனுக்கும் உள்ள வித்தியாசம்.  விகடன் ஆசிரியர் யாரோ வரைந்த கருத்துப் படத்துக்காக சிறைக்கும் சென்று வந்தார்.

சி.பி - அண்ணே, அதுக்குப்பேரு கருத்துப்படம் இல்லீங்கோ, ஜோக்குங்கோ..  படுதலம் சுகுமாரன் எழுதுனது , அட்டைப்படத்துல வந்தது.. 

மேடைல உக்காந்திருக்கரவங்கள்\ல யார் எம் எல் ஏ, யார் எம் பி?

 திருடன் மாதிரி இருக்கறது எம் எல் ஏ, முக மூடிக்கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறது  எம் பி 

 ஜோக் வந்தப்ப எம் ஜி ஆர் சி எம்.. 



  ஆனால் குமுதமோ கருணாநிதிக்கு பயந்து கொண்டு ஞாநியின் தொடரை நிறுத்தியது.  அந்தச் சமயத்தில் குமுதத்தைக் கண்டித்து எழுதிய ஒரே எழுத்தாளன் நான் தான்.  இது ஞாநிக்கு ஞாபகம் இருக்கலாம்.  குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டதும் அதற்கு மக்யா நாளே ஞாநி கல்கியில் எழுதத் தொடங்கினார்.  அப்போதும் நான் ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்றே ஆச்சரியப்பட்டேன்.


சி.பி - மக்கா நாளெல்லாம்  இல்ல அண்ணே, சும்மா ரீலா விடாதீங்க.. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்ட அடுத்த வாரம் கல்கியில் விளம்பரம் வந்து அதற்கு அடுத்த வாரம் தான் வந்தது.. இடைப்பட்ட நாட்கள் 14.



குமுதத்தில் என் தொடர் வந்த போது “சாண்டில்யனுக்குப் பிறகு குமுதத்தில் இப்படி ஒரு தொடர் வருவது இப்போதுதான்” என்று என்னிடம் சொன்னவர்கள் ஒருவர் இருவர் அல்ல… ஓராயிரம் பேர் சொன்னார்கள்.  ஆனால் தொடர் ஒன்பதே வாரத்தில் திடுதிப்பென்று நிறுத்தப்பட்டதும் எனக்கு எங்கேயும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஞாநிக்கு இருக்கும் luxury எனக்கு இல்லை.  என்னுடைய ஒரே இயங்கு தளம் இணைய தளம்தான்.  கடந்த பத்தாண்டுகளாக நான் இணைய தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.  (ஒரு பத்திரிகையில் நான் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள் மட்டுமே விதிவிலக்கு). 

 சி.பி - எது? காலச்சுவடு என்ற இலக்கிய இதழ் லைப்ரரில இருக்குமே அந்த புக் தானே?

 


 ”இதிலிருந்தும் நீ விலகி விடு” என்று 5 லட்சம் சர்க்குலேஷன் கொண்ட ஒரு பத்திரிகையில் முப்பது ஆண்டுகளாக எழுதி வந்த ஒருவர் – அதிலும் அதே பத்திரிகையில் இரண்டு பத்திகள் – சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?  நான் மட்டும்தான் வாழ வேண்டும்; நீ செத்து ஒழி என்றுதானே அர்த்தம்?



சி.பி -  இதுக்கெல்லாம் நீங்க கவலைப்படலாமா? தமனா சொல்லி அனுஷ்கா விலகுவாரா? நீர் அடித்து நீர் விலகுமா? நீங்க எழுதுங்கண்ணே, உங்க சேவை நாட்டுக்கு தேவை..( எங்களுக்கும் பொழுது போகனும் ஹி ஹி )



 
”காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்று நான் எழுதியிருந்தது பற்றி 19-2-2012 அன்று ஞாநி எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்:


 சி.பி - அவர் எழுதுன லெட்டர்ஸ் படிக்கவெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா? அப்புறம் எப்போண்ணே சேட் பண்ணுவீங்க?



”அப்புறம் எதுக்காக என்னை கூப்பிடணும்? வந்து பேசினா போதும். உங்க மனசுல படறதைப் பேசலாம்னு எதுக்கு சொல்லி அழைக்கணும்? பேசினதுக்காக உங்க வாசகர்கள் எதுக்கு என்னை திட்டணும்? நான் பாட்டுக்கு என் வேலையைப் பாத்துகிட்டு இருந்தேன். தேவையா இது எனக்கு?”


ஞாநி


தப்புதான்.  இனிமேல் விஐபிகள் யாரையும் என் கூட்டத்துக்குப் பேச அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். 


சி.பி - நீங்க கூட ஒரு வி ஐ பி தான்.. அப்போ நீங்களும் பேச மாட்டீங்களா?

 
 ஆனால் ஞாநி எக்ஸைல் பற்றிப் பேசுவார் என்றே நினைத்தோம்.  ஆனால் அவர் “நீ மூச்சு விடாதே, செத்து ஒழி” என்று பேசுவார் என்று எதிர்பார்க்காதது எங்களுடைய தவறுதான்.  அதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.



சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நான் கடந்த பத்து ஆண்டுகளாக இணைய தளத்தில் எழுதி வருவதால்தான் என்னால் ஒரு பரந்து பட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க முடிந்தது.  ஒரு புத்தக வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் நடத்துகிறேன் அல்லவா?  1800 பேர் கொண்ட அரங்கில் 1500 பேரை என் பெயரை மட்டுமே சொல்லி என்னால் கூட்ட முடிகிறது அல்லவா? 


சி.பி - இதெல்லாம் பெரிய சாதனையா அண்ணே? திருமயம்கற ஊர்ல தமிழச்சி தங்க பாண்டியன் மேடம் கூட்டிய இலக்கியக்கூட்டத்துக்கு 18, 300 பேர் வந்திருந்தாங்க.. அப்போ அவங்க பெரிய எழுத்தாளரா? 



 இது என்னுடைய 10 ஆண்டுகளின் உழைப்பு அன்றி வேறென்ன? கடந்த பத்தாண்டுகளில் தமிழில் இலக்கிய வாசிப்பு அதிகரித்து இருக்கிறது என்றால் அதற்கு என்னுடைய பங்களிப்பும் ஒரு முக்கியமான காரணம்.  இதற்காக நான் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்தக் கலாச்சார மாற்றத்துக்குக் காரணமான நிறுவனங்கள் என்று விகடன், உயிர்மை, கிழக்கு போன்றவற்றைச் சொல்லலாம்.

சி.பி - சரோஜா தேவியை விட்டுட்டீங்களே?

 



இணைய தளத்தில் இவ்வளவு தீவிரமாக நான் இயங்கி இருக்காவிட்டால் என்னுடைய வாசகர்கள் என்று அறியப்படும் ஒரு 20,000 பேர் இன்று நல்லபடியாக வீடு கட்டி, குழந்தை பெற்று தங்கள் சமூகத் தொண்டை ஆற்றியிருப்பார்கள்.   ஆனால் என்னுடைய எழுத்தைப் படித்துத் தொலைத்து விட்டதால் என்னவெல்லாம் ஆகி இருக்கிறது என்று பாருங்கள். 


 1990-ஆம் ஆண்டில் நான் மீட்சி என்ற பத்திரிகையில் “the joker was here” என்ற ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.  அந்தக் கதை வந்த சமயத்தில் அதைப் படித்துப் பாராட்டியவர்கள் என் நண்பர்களான எம்.டி.எம்., நாகார்ச்சுனன் மற்றும் மீட்சியின் ஆசிரியர் பிரம்மராஜன்.  (நான் அப்படிப் பாராட்டவே இல்லை என்று எம்டிஎம் இப்போது சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  அப்படிச் சொன்னால் என்னுடைய பிழையான ஞாபக சக்திக்காக எம்டிஎம்மிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 


 சி.பி - மீட்சி பத்திரிக்கைல உங்க கதையை படிச்சு எல்லாரும் மிரட்சி ஆகி இருப்பாங்களே?

 


  ஆனால் இந்த மூவரைத் தவிர இந்தக் கதை பற்றி வேறு சத்தமே இல்லை.  யாருக்குமே கதை புரியவில்லை.  யாராலுமே இதை ஒரு கதை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. ”நம்ம புதுமைப் பித்தன்லாம் என்னமா எளுதியிருக்கார்… இவன் யாரு ஏதோ பைத்தியக்காரனைப் போல் உளறுகிறான்” என்றே அவர்கள் நினைத்தார்கள்.  காரணம், அவர்களுடைய வாசிப்பு நவீனத்துவத்தோடு நின்று போய் இருந்தது.  காஃப்கா, ஆல்பெர் கம்யு போன்றவர்களோடு அவர்கள் முடிந்து போய் இருந்தார்கள்.  அவர்களுக்கு William Burroughs, Donald Barthelme, Kurt Vonnegut, Georges Perec, Ronald Sukenik போன்றவர்களின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை. 


 மற்றபடி, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பதைப் போல் ஒரு பரந்து பட்ட வாசகர் வட்டம் இருக்கவில்லை.  அப்போதெல்லாம் எழுத்தாளரே வாசகர்; வாசகரே எழுத்தாளர்.  அதன் காரணமாக, the joker was here என்பது போன்ற என்னுடைய கதைகள் யாருமே சீந்திவாரற்றுத்தான் கிடந்தன.  நான் மேலே குறிப்பிட்ட எம்டிஎம் கூட தனிப்பட்ட முறையில் என் சிறுகதைகளை சிலாகித்தாரே தவிர, அது பற்றியெல்லாம் அவர் ஒரு வரி கூட எழுதியதில்லை.  இப்போதுதான் அதற்கு எனக்குக் காரணம் புரிகிறது; அவருடைய பாராட்டு உள்ளத்தில் இருந்து வந்ததல்ல. 


 ஏதோ உபசார வார்த்தைகள் அவை.  அதை நான் தான் பாராட்டு என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு விட்டேன் போலும்.  ஏனென்றால், எம்டிஎம்  என்னதான் பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் படித்தாலும் அவரால் புதுமைப்பித்தன் அண்ணாச்சி, வண்ணதாசன் அண்ணாச்சி, விக்ரமாதித்யன் அண்ணாச்சி ஆகியோரைத் தாண்டி அவரால் வர முடியவில்லை. 


 ஸாரி, வண்ணாதாசன் அண்ணாச்சியின் டாடியான தி.க.சி. அப்புச்சியைப் பற்றியும் எம்டிஎம்மின் கட்டுரைகள் வந்திருக்கலாம்.  படிக்கவில்லை.  (ஏற்கனவே உத்தமத் தமிழ் எழுத்தாளன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களைப் பகைத்துக் கொண்டிருக்கும் நான் இப்போது அவர்களையெல்லாம் விட அறிவில் சிறந்தவரான எம்டிஎம்மையும் பகைத்துக் கொள்கிறேன்.


  பகவதி… எனக்கு என்ன ஆகப் போகிறதோ…  அதிலும் உ.த.எ. தன்னுடன் சண்டை போடும் எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிக் கொள்ளும் சக்தி மிக்கவர்.  அவரையே நாக் அவுட்டில் வீழ்த்திக் காட்டியவர் எம்டிஎம்.  நானெல்லாம் எம்மாத்திரம்?  ஆஃப்டர் ஆல், என்னுடைய ப்ரூஃப் ரீடரையே சமாளிக்க முடியாத பலஹீனன்…


மீண்டும் இப்போது ஜோக்கருக்கு வருகிறேன்.  எழுதி 22 ஆண்டுகளாக யாராலும் பேசப்படாத அந்தக் கதையைப் பற்றி இப்போது என் வாசகர் ஒருவர் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளுகிறார்.  நான் கால் நூற்றாண்டுக் காலம் முன்னோக்கிச் சிந்திக்கிறேன் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  நான் ஒரு கதை எழுதி விட்டு, அதை வாசிக்கக் கூடிய ஒருவன் அல்லது ஒருத்திக்காக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 


 ஜோக்கரை எழுதிய போது, இப்போது இதை வரிந்து கட்டிக் கொண்டு விளக்கிக் கொண்டிருக்கும் “பிரியமுடன் துரோகி” என்ற இளைஞரின் வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அல்லது, அப்போது அவர் பிறந்து கூட இல்லாமல் இருக்கலாம்.  ஆக, இன்று நான் எழுதுவது இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவா?  பெருமையாக இருக்கிறது எனக்கு.


ஞாநி சொன்னார்.  எக்ஸைல் நாவலை இன்னும் 30 ஆண்டுகள் கழித்து யாரும் பேச மாட்டார்கள் என்று.  அது என்ன ஜோதிடம்?  எதை வைத்து அப்படிச் சொல்கிறார் ஞாநி?  இதோ ஞாநி சொல்வது தவறு என்று நான் நிரூபித்து விட்டேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதையை – இதுவரை யாருமே வாயே திறக்காத ஒரு சிறுகதையைப் பற்றி – வாசகர் வட்டத்தில் சுமார் 30 பேர் விவாதிக்கிறார்கள். 


 விவாதத்தில் பொறி பறக்கிறது.  பிரியமுடன் துரோகிதான் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்.  ஆக, ஞாநி சொல்வது போல் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எக்ஸைலை யாரும் மறக்க மாட்டார்கள்.  இன்னும் பல நூறு மடங்கு அதை விவாதிப்பார்கள்.  இப்போது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைப் போல் அந்த நாவல் கொண்டாடப்படும்.  20 ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி வந்த போது மாலன் அதை ஒரு பத்திரிகையில் “பீ” என்று எழுதினார்.  சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்தார்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?


இதோ அந்த உரையாடல்:  ஃபில்ம் சேம்பர் வாசலில்.


“என்ன ராமகிருஷ்ணன், ஸீரோ டிகிரி படிச்சிங்களா?”


“ஓ… பார் மகளே பார் தானே படிச்சேன்…”


அதற்கு மேல் நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.


இந்திரா பார்த்தசாரதியைத் தவிர வேறு ஒருவர் கூட ஸீரோ டிகிரி பற்றி ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இப்போது அந்த நாவல் கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் modern asian classic ஆக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளாக எம்.ஏ. மலையாளத்தில் பாடமாக உள்ளது.  இதேதான் எக்ஸைலுக்கும் நடக்கும் என்று ஞாநியிடம் நான் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.


மேலும், ஞாநி சொன்னார்.  “சாருவுக்குப் பிடித்த உதாரணத்தையே சொல்கிறேன்.  ஒரு நாவலைப் படித்து முடிக்கும் போது ஒரு ஸம்போகத்தில் திளைத்தது போல் இருக்க வேண்டும்” என்று.  


.  ஞாநி சொல்வது நூற்றுக்கு நூறு சரி.  இதைத்தான் ரொலான் பார்த் pleasure of the text என்று சொல்கிறார்.  ஆனால் ஒரு பெண்ணைத் தொடும் போது ஆணுக்கு premature ejaculation ஆகி விட்டால் என்ன செய்வது?  சிலருக்கு எழுச்சியே ஏற்படுவதில்லை.  சிலருக்கு ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுச்சி அடங்காது.  இந்த இரண்டுமே erectile dysfunction தான்.  இரண்டாவதில் இன்பம் உத்தரவாதம்.  முதலாவதில் மன உளைச்சல் தான் உண்டாகும்.  பெண்ணை ஸ்பர்ஸிக்கும் போது எழுச்சியே ஆகவில்லையானால் எப்படி இன்பம் துய்ப்பது?


உலகத்திலேயே பேரழகியான ஒருத்தி இருந்தாள்.  அவளிடம் போய் விட்டு வந்த ஒருத்தன் “ம்ஹும்… வேஸ்ட்…” என்றான்.  என்ன பிரச்சினை என்றால், அவளை ஸம்போகிக்கும் போது அவன் தன் மனைவியை நினைத்துக் கொண்டு தொட்டிருக்கிறான்.  எப்படிக் கிடைக்கும் இன்பம்?


அடுத்து ஞாநி கேட்டார்.  செக்ஸை எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அதில் vision இருக்க வேண்டாமா?
சரி, நான் கேட்கிறேன்.  அந்த விஷன் உள்ள ஒரு சில தமிழ் நாவல்களை ஞாநியால் சொல்ல முடியுமா?  சமீபத்தில் ஜி. நாகராஜனின் நாளை மற்றொரு நாளே என்ற நாவலைப் படித்தேன்.  30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உணர்வைக் கொடுத்ததோ அதே உணர்வைத்தான் இப்போதும் அது கொடுத்தது.  பார்த்திபனின் புதிய பாதையைப் போல்தான் இருந்தது அந்த நாவல். 


நாளை மற்றுமொரு நாளேயில் எல்லாமே அசட்டு உணர்வுகள்.   பாரதிராஜா படங்களில் பாடல் காட்சிகளில் நாம் பார்க்கும் பூக்களைப் போல் இருக்கிறார்கள் ஜி.நாகராஜனின் விபச்சாரிகள்.  கொடுமை.  கொடுமை.

 நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.  படித்த அத்தனை பேரும் கொண்டாடிய, ”ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி” என்ற என்னுடைய கதையை இன்று ஜூனியர் விகடன் நிருபர் கூட எழுதி விட முடியும்.  ஆனால் என்னுடைய மிகச் சிறந்த கதைகளான ”கர்னாடக முரசுவும், நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் பின்நவீனத்துவ ஆய்வும்”, the joker was here, நேநோ, ”பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” போன்ற சிறுகதைகளை தமிழில் என்னைத் தவிர வேறு யாருமே எழுதியிருக்க முடியாது.  உலக அளவிலும் இது போன்ற சிறுகதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்


 சி.பி - மொத்தத்துல நீங்க ஒலக ஃபேமஸ் ரைட்டர்னு சொல்றீங்க? அதானே? அதே தான்.. 

 

7 comments:

Senthil said...

Ha Ha Ha!!!!!!!!!

senthil, doha

Senthil said...

Sooper Nakkals!!!!!!!!!!

Thanks

Senthil, Doha

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்றைய அடுத்த பதிவு எப்போ?

சசிகுமார் said...

மாப்ள எப்பொழுதும் போல....

மாலதி said...

சிறப்பான உமக்கே உரிய அலசல் பாராட்டுகளும் நன்றிகளும் தொடருங்கள் உங்களின் இனிய பயணத்தை .....

இரா .லட்சுமணன் said...

அண்ணே சாருவ கலாய்க்க என் சொந்த ஊர் திருமயத்த ஏன்னே இழுக்குறீங்க , இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்
ஹி ஹி

குரங்குபெடல் said...

attahasamana

comedy

Thanks Thambi