Friday, February 24, 2012

டாக்டர் ஜெ ஜெ -சில குறிப்புகள், பல சிரிப்புகள் - பிறந்த நாள் காமெடி கும்மி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவும், தமிழக போலீசாரும் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சசிகலா தெரிவித்தார்.


முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் நேற்று இரண்டாவது நாளாக கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் கேட்பது துவங்கியது,


"ஜெயா பப்ளிகேஷனுக்கு, ஜப்பானிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷின் வாங்கியது உண்மையா. அதற்கு பணம் எங்கிருந்து வந்தது' என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்வி கேட்டார்.


 அதற்கு சசிகலா, "மிஷின் வாங்கியது உண்மை தான். அது புது மிஷின் அல்ல; பழைய மிஷின். ஜெயா பப்ளிகேஷன் வருமானத்தில் தான் வாங்கப்பட்டது' என, நீண்ட விளக்கம் அளித்தார். (சசிகலாவின் "வாய்ஸ்' மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்திருந்ததை பார்த்து, பார்த்து பதிலளித்தார்.)

 சி.பி - பாவம், ரொம்ப ஏழைங்க , புதுசு வாங்கக்கூட காசில்லாத ஏழைங்க.. ( மை டியர் மார்த்தண்டன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

 அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, "நான் சென்னையில் படித்தவன். தமிழில் பேசினால், என்னால் புரிந்து கொள்ள முடியும். சசிகலா கூறும் பதில் எனக்கு கேட்கவில்லை. அவரது பேச்சு சத்தம் குறைவாக உள்ளது. முன்வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டுமாவது அவரது பதில் கேட்க வேண்டும். அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தேவையற்ற நீண்ட விளக்கம் அளிக்கிறார். நீண்ட விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்கலாம். ஜெயலலிதா அப்படித்தான் செய்தார். சசிகலா எழுதி வைத்து பதிலளிக்கிறார். குற்றவாளிகள் அவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.


சி.பி - அக்கா சொந்தமா சொன்னா அப்படியே சொல்லலாம், பொய் சாட்சின்னா எழுதிக்கொடுத்ததைத்தான் படிச்சு ஒப்பிக்க முடியும்..



சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கூறுகையில், ""உடல் நலக்குறைவால் சசிகலாவால், அதிக சத்தமாக பேச முடிவதில்லை. சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது. சில நம்பர்களை குறித்து வைத்து பார்த்து கூறுகிறார்,'' என்றார்.

சி.பி - அதென்னமோ எல்லா அரசியல்வாதிகளும் பொதி எருது மாதிரிதான் இருக்காங்க, ஆனா போலீஸ் , கேஸ்னு வந்துட்டா ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கறாங்க..




இதைத் தொடர்ந்து, ""சென்னை ஈக்காடுதாங்களில் நீங்கள் வாங்கிய இடம், கட்டடத்துக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா, பணம் எங்கிருந்து வந்தது,'' என, நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு சசிகலா கூறுகையில், ""ஆஞ்சனேயா எண்டர்பிரைசஸ் கம்பெனி மூலம் அந்த இடம் வாங்கப்பட்டது. அதற்கு கணக்கு உள்ளது,'' என்றார். சசிகலா மெதுவாக பேசியதால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுந்து வெளியே சென்று விட்டார். ""சென்னையில், கிரீன் பார்ம் ஹவுசுக்கு, 600 சதுர அடியிலான, 20, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்களா,'' என, நீதிபதி கேட்டார். சசிகலா பதிலளிக்கையில், "அந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒருவரான ஜெகதீஷ்ராஜு குறுக்கு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மிரட்டி எங்களுக்கு எதிராக கூறச் சொன்னார் என, வாக்குமூலம் அளித்துள்ளார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் விசாரணை போலீசார் மிரட்டி எங்களுக்கு எதிராக கூற வைத்துள்ளனர். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு. போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

 சி.பி - அக்கா, ஜட்ஜ் அய்யா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம பானை, சோறு, சாம்பார்னு ஏன் மழுப்பறீங்க? 

மொழிபெயர்ப்பாளருக்கு சசிகலா கூறிய பழமொழியின் அர்த்தம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

 சி.பி -  FOR ONE POT RICE, SINGLE MEAL IS QUALITY  -இப்போ புரியுதுங்களா?





 வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்து அர்த்தம் கூறினார். பின்னர் நீதிபதி, அந்த பழமொழி எல்லாம் தேவையற்றது, என்றார். மதியம், 3 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரை, சசிகலாவிடம் மொத்தம், எட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாகவே, மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன.

 சி.பி - அக்காவிடம் கேட்ட கேள்விகள் எட்டு, அஷ்டமத்துல சனி...


 ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளிக்க, அதிக நேரம் எடுத்துக் கொண்டார்; நீண்ட விளக்கம் அளித்தார். இதனால், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ""கேள்விகளுக்கு, "ஆம், இல்லை' என்று பதிலளித்தால் போதுமானது. நீண்ட விளக்கம் தேவையில்லை. அவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அறிக்கையாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது,'


 சி.பி- அக்கா, நடக்கறது அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் பேப்பர் எக்ஸாம், எஸ் ஆர் நோ சொல்லனும், சும்மா கதை விடக்கூடாதுங்கக்கோவ்

' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். சசிகலாவிடம் இதுவரை மொத்தம், 63 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை இன்று தொடருவதால், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.

நன்றி - தினமலர்



சி.பி - மொத்தம் 63 கேள்விகளா? கூட்டுத்தொகை 9 , ஐ ஜாலி ஜெ எஸ் ஆகிடுவாங்க


1.மேடம், பிறந்த நாள் பரிசா மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுங்க .


 ஜெ- ”ஷாக்”சர்ப்பரைஸா  ஆல்ரெடி கொடுத்தாச்சே,இன்னுமா?


--------------------------------------


2. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை


-----------------------------------

 3. புரட்சித்தலைவி புதிய சாதனை- தினத்தந்தியில் 18 தனி பக்கங்கள் பிறந்த நாள் விளம்பரங்கள்


-------------------------------


4. ஓ பி எஸ் - மேடம், உங்க பர்த்டேவை கொண்டாட பிரம்மாண்டமான கேக் கட் பண்ணிடலாமா? 


ஜெ- வேணாம், கரண்ட் கட் பண்ணிடலாம்

------------------------------------

5. அதிமுக தொண்டர்கள் ஜெ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.. சாமான்யர்கள் மின் வெட்டால் திண்டாட்டம்.மின்துறை கள்ளாட்டம்

-----------------------------------


6.ops- ஏன் கோபமா இருக்கீங்க?

 ஜெ-சுப்ரீம் கோர்ட் ஜட்ஜூம், கலைஞரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லவே இல்லையே?

-------------------------------------

7. கோட்டையில் புரட்சித்தலைவி, பெங்களூர் கோர்ட்டில் புரட்டுத்தலைவி, தமிழகம் வந்தால் இருட்டு, தலைவி!!


--------------------------------------

8. ஜெ- எதுக்காக கொள்ளையர்களை சுட்டீங்க?

கமிஷ்னர் - கேள்வி கேட்டோம், அவங்க பாஷை எனக்கு புரியலை,வெளில தெரிஞ்சா கேவலம்னு சூட்டட்,ஹி ஹி

-------------------------------------

9. துப்பாக்கியில் விஜய் என்'கவுண்டர்' ஸ்பெசலிஸ்ட்  # அப்போ கதையும் சுட்டதாத்தான் இருக்கும்

-----------------------------------




6 comments:

Anonymous said...

ஆஹா என்னமா translate பன்னரிங்க, நல்ல நயாண்டிதான்

ராமகிருஷ்ணன் said...

superrr anaithum nalla irukku athilum ungal comment super

RAMA RAVI (RAMVI) said...

டிவிட்-2--ஹாஹா.. என்ன கண்டுபிடிப்பு!!

ராஜி said...

. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை
>>>>
நீங்க பி.எஸ்.சி மேத்ஸ்ன்னு இதிலிருந்து நல்லா தெரியுது

இருதயம் said...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ...?

Anonymous said...

ராஜி said...
. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை
>>>>
நீங்க பி.எஸ்.சி மேத்ஸ்ன்னு இதிலிருந்து நல்லா தெரியுது

One down...1000 to go...