1. கிராமி அவார்டு எனக்கு வேண்டாம்...
ஏன் மேடம்? நான் சிட்டிலயே பிறந்து சிட்டிலயே வளர்ந்தவ,அதனால கிராமத்துல தர்றது எதுக்கு?
---------------------------------
2. சதீஷ், எப்பவும் ரோஜா பூ தருவே, இப்போ ஏன் ரேடியோ பூ தர்றே?
இன்னைக்கு இன்று உலக வானொலி தினம் .ஹி ஹி மேட்சுக்கு மேட்ச்
------------------------------------
3. "என்னைச் சீண்டினால் உண்மைகளைச் சொல்லுவேன்” - விஜயகாந்த். # அப்போ சீண்டாம விட்டுட்டா ரீலா விடுவீங்களா?
---------------------------
4. சீனாவில் சேவல் முட்டையிட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி# அதுக்கு சேவலோட சம்சாரம் கோழிதானே அதிர்ச்சி ஆகனும்?
------------------------------
5. டெயிலி ஆஃபீஸ் வந்ததும் ஃபிரண்ட்சோட கான்ஃபரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிப்பேன்.
மேடம்,நீங்க தான் வெட்டாஃபீஸ், பாவம் அவங்களாவது வேலை செய்யட்டும்
---------------------------------
6. டெயிலி ஆஃபீஸ் வந்ததும் ஃபிரண்ட்சோட கான்ஃபரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிப்பேன்.
மேடம், கான்ஃபரன்ஸ் ஹால்னா வாடகை ஜாஸ்தி ஆகாது?
----------------------------------
7.அணில் கடிச்ச பழம் இனிக்குது, ஆனா அணில் நடிச்ச படம் மட்டும் கடிக்குது, அது ஏன்?
-------------------------------
8. கம்பளியாய் போர்த்தி இருந்தவனை கம்பளி பூச்சி போல் உதறி விடச்செய்து விடுகிறது காதல்
-------------------------
9. கடவுளே! அடுத்த ஜென்மத்துலயும் இவளே என் மனைவி ஆகனும்.
கடவுள் - ஒரு தடவை பட்டும் உனக்கு புத்தி வர்லையா?
------------------------------
10. கேபிள் சங்கர் - நான் இன்று முதல் என் ஹேண்டிலை மாற்றுகிறேன் .
பைபிள் ஷங்கர் - அப்போ நாளை? #FEB 14. யாரை மாத்துவீங்க அண்ணே @ 13.2.12 கேட்ட கேள்வி
-------------------------------
11. டைரக்டர் சார், அந்த நடிகை வீட்டுக்கு வாரா வாரம் போறீங்களே,ஏன்?
நான் அறிமுகம் செஞ்ச ”படத்துல” அவரை சரியா பயன்படுத்தலைன்னு சொன்னாங்க
---------------------------------
12.டியர், உனக்கு தாடி கெட்டப் சூப்பர், பிரபுதேவா மாதிரியே இருக்கே!
நயன் தாரா மாதிரி கழட்டி விடப்போறே-னு நாசூக்கா சொல்றியா?#FEB 14
----------------------------------
13. பிச்சைக்காரர்கள் = ஈகைக்குணம் வளர்ப்பவர்கள், இரந்து வாழ்பவர்கள் என கண்ணியமாக அழையுங்கள்
விலைமாது-கட்டண சேவையில் மோகம் தீர்ப்பவர் என் கவுரவமாக அழைக்கலாம்
----------------------------------------
14. மேனேஜர் சார், நாளை எனக்கு லீவ் வேணும்,வேடிக்கை பார்க்க பார்க் போகனும்..
அது சரி, நானும் அங்கே தான் போறேன், அப்புறம் ஆஃபீசை யார் பார்த்துப்பா?
---------------------------------
15. DR,தேங்காய் எண்ணெய் யூஸ் செஞ்சா உடம்புக்கு நல்லதா?
விளக்கெண்ணெய் போல் பேசாதீங்க, கொழுப்பு ஆல்ரெடி ஜாஸ்தி,இந்த லட்சணத்துல தே எ ?நாஸ்தி
-------------------------------------
16. உங்க படத்துக்கு ஜான்சன் -னு டைட்டில் வெச்சீங்களே, ஏன் மாத்தீட்டீங்க?
ஆட்சி மாறிடுச்சு, அதான் ஜான்”ஜெயா”-ன்னு மாத்திட்டேன்
---------------------------------
17. கேப்டன் நடிக்கும் அடுத்த பட டைட்டில் - சட்டசபையில் சலம்புவது எப்படி?
-----------------------------
18. மேடம், காதலர் தினத்துக்கு உங்க படம் 2 ரிலீஸ் ஆகுது போல..?
ஆமா, எந்தப்படம் ஹிட் ஆகுதோ அந்த பட ஹீரோவை சின்சியரா லவ்வலாம்னு இருக்கேன்
--------------------------------------------
19. அத்தான், என் டிரஸ்ஸிங்க் சென்ஸ் பற்றி என்ன நினைக்கறீங்க?
என்னது? உனக்கு சென்ஸ் இருக்கா?
------------------------------------
20. ராகுல் சொல்றதை எல்லாம் நம்பறது நாட்டுக்கும்கூகுள் சொல்றதைஎல்லாம் நம்பறது வீட்டுக்கும் நல்லதல்ல
----------------------------------
8 comments:
வணக்கம்
சிறப்பு - சிரிப்பு
கரண்ட (பவர்) இருக்கு போல (!!!)
ஜோக்குங்க நல்லாருக்கு!தலைப்புக்கு சம்பந்தமா ஒன்னும் காணமே?ஒ!சினிமாவே தலைப்பு சம்பந்தமில்லாம தானே வருதுங்கிறீங்களா?சரிதான்!!!!!!
4.சீனாவுல சேவல் முட்டையிட்டது ஒரு அதிசியமா? நான் நாலாவது படிக்கையில எங்க வாத்தியார் தினமும் முட்டை போடுவாரு...ஹிஹி
வீடு K.S.சுரேஸ்குமார் said...
4.சீனாவுல சேவல் முட்டையிட்டது ஒரு அதிசியமா? நான் நாலாவது படிக்கையில எங்க வாத்தியார் தினமும் முட்டை போடுவாரு...ஹிஹி!///அப்போ வூட்டுத் தேவைக்கு முட்டை காசு குடுத்து வாங்கமாட்டாங்க,இல்லியா?????ஹி!ஹி!!!
ஒரே நகைச்சுவை தான் போங்க
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html
Post a Comment