கோடம்பாக்கம் முதல் ஜப்பான் வரை எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படம் 'கோச்சடையான்’. ரஜினி, ஷோபனா, ஜாக்கி ஷெரஃப், சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ருக்மணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
சி.பி - ரஜினியே ஒரு பட்டாளத்துக்கு சமம் தான், அவர் நடிக்கற படத்துல மற்ற நட்சத்திர பட்டாளத்தை யார் கண்டுக்கறா?
கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சி.பி - எனக்கு இன்னா தோணுதுன்னா , செளந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செஞ்ச சுல்தான் த வாரியர் அனிமேஷன் படம்கறதால போணீ ஆகலை, அதனால கே.எஸ்.ரவிக்குமார் பேரை யூஸ் பண்ணி அதே படத்தை கொஞ்சம் ஆல்டர் பண்ணி மார்க்கெட் பண்றாங்களோன்னு தோணுது..
சில சுவாரஸ்யமான தகவல்கள் :
* நின்றுபோனதாக அறிவிக்கப்பட்ட 'ராணா’ படத்தின் முதல் பாகம்தான், 'கோச்சடையான்’.
சி.பி - ராணா தான் டைட்டிலை மட்டும் மாத்தி ஷூட் பண்றோம்னு சொல்லி இருக்கலாம், கொஞ்சம் நம்பி இருப்பாங்க..
* 'எந்திரன்’ படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் ரஜினி.
சி.பி - அப்பா கேரக்டர் தான் சரித்திரப்படமான அனிமேஷன் படத்துல வர்ற கேரக்டர்.. மகன் கேரக்டர் தான் இப்போ புதுசா ஷூட் பண்ணி டிங்கரிங்க் ஒர்க்ல வர்ற கேரக்டர்..
* தந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.
சி.பி - நடிகை மீனாவுக்கு குழந்தை பிறந்திருக்கே.. இன்னும் 10 வருஷம் கழிச்சு அவங்க கூடவும் ஜோடி சேர்ந்துடுங்க தலை.. அப்புறம் தீபிகா படுகோன். பேரே சரி இல்லை.. படம் படுத்துக்கும்னு கமல் ரசிகர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.. ஆளை மாத்துங்க.
* தங்கை கேரக்டரில் நடிக்க சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடையில் என்ன நடந்ததோ, இப்போது 'பொம்மலாட்டம்’ ருக்மணி வருகிறார். ருக்குவுக்கு ஜோடி... ஆதி.
சி.பி - இடையிலயும் எதும் நடக்கலை... இடுப்புலயும் எதும் நடக்கலை.. சிநேகாவுக்கு கால்ஷீட் டேட்ஸ் அவங்க கேட்ட தேதில இல்லை.. அவ்லவ் தான்.. விட்டா நாக் ரவி, பிரசன்னா தான் காரணம்னு சொல்லிடுவாங்க போல././
* இறந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால், நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன், 'காதலிக்க நேரமில்லை’ ஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் 'பஞ்சதந்திரம்’ நாகேஷூம் நடிக்கிறார்கள்.
சி.பி - இது மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா ஆளாளுக்கு இதே டெக்னிக்கை வெச்சு படம் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஆனா இந்தியன் படத்துல கமல் நேதாஜி கிட்டே விருது வாங்கற சீன் மாதிரி அது அவ்ளவ் எடுபடாதுன்னு தோணுது..
* வில்லன் ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி ஷெராஃப்.
சி.பி - அய்யய்யோ, அவரா ? இப்போத்தான் ஒரு படத்துல முதல் பாவம் அபிலாஷா ரேஞ்சுக்கு நடிச்சாரு.. பார்த்து அவரை கண்ட்ரோல் பண்ணி வைங்க..
* சரித்திர வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார். டயலாக் டெலிவரி சரியாக வருமா என்பதில் ரஜினிக்குக் குழப்பம். அதனால், டப்பிங் ஸ்டுடியோ வந்த ரஜினி, வரலாற்று வசனங்களை பல்வேறு மாடலில் பேசிக்காட்டி, திருப்தியான ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.
சி.பி - தலைவா! நீங்க எப்படி பேசுனாலும் அது ஸ்டைலாத்தான் இருக்கும்.. கலக்குங்க..
* மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
* மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சி.பி - தலை.. நீங்க ஃபாரீன் போறப்ப மாப்ளையையும் கூடவே கூட்டிட்டு போயிடுங்க ஹி ஹி
6 comments:
படிச்சுட்டு வரேன்
மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சி.பி - தலை.. நீங்க ஃபாரீன்போறப்ப மாப்ளையையும் கூடவேகூட்டிட்டு போயிடுங்க ஹி ஹி
ஆமா நீங்க மாப்ளைன்னு சொன்னதுதான் தனுஷைத்தானே ஹி ஹி
ஆரம்பிச்சாச்சா...
இனிமேல் கோச்சடையான் தலைப்பு வச்சி நிறைய பதிவுகள் வரும்...
கலக்குங்க..
கோச்சடையான் பற்றி நிறைய சுவாரசியமான தகவல்கள் தொகுத்து கொடுத்திருக்கீங்க!!
//சி.பி - தலை.. நீங்க ஃபாரீன் போறப்ப மாப்ளையையும் கூடவே கூட்டிட்டு போயிடுங்க ஹி ஹி //
ஏன் ரஜினி, கமல் பொண்ணுங்க பத்தாதா? லண்டன் போய் வேற பொண்ணு பாக்க வைக்கணுமா?
கல கல பதிவு அருமை வாழ்த்துகள்
Post a Comment