Saturday, February 18, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - ஈகோ கோ கோ - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/17-02-12/Kadhalil-Sodhapuvathu-Eppadi-Movie-Review.jpg 

ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு ஒரு பூங்கொத்துடன் இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்.

கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு  சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்.. 

சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை.. 

தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. 

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=19422&option=com_joomgallery&Itemid=77

அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில்  ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு  கழுத்து ஒண்ட.. ஹி ஹி )

குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 

 அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்

ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்.. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/12000259159.jpg

இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1.   அண்ணா என்று தன்னை அழைத்த பெண்ணை கடைசி வரை விடாமல் துரத்தி லவ் பண்ண வைத்த காதல் எப்பிசோடு இளமை.. 

2.  என் ஆளுக்கு ஃபோன் பண்ணப்ப  ஒரு பெண்ணோட இருமல் சத்தம் கேட்டுது, வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கும் போல என ஒரு பெண் சொல்லும்போது அவள் அருகில் இருக்கும் பெண் இருமவது.... டைரக்‌ஷன் டச்.. 

3.  பாண்டிச்சேரியில் நடக்கும் கேர்ல்ஸ் கச்சேரி நீட்.. அந்த குழுவில் இடம் பெற்ற 3 ஃபிகர்களும் இளமை, இனிமை.. 

4. ஹீரோயினின் ஸ்கூல் ஃபிரண்ட் மலையாளியுடன் பேசுவதை பார்த்து ஹீரோ  சந்தேகப்படும் சீன்  ஓக்கே 

5. தன் மனைவிக்கு காதல் கடிதத்தை தன் மகள் மூலம் கொடுக்கும் சுரேஷின் நடிப்பு துள்ளல், அதை படித்து அவர் மனைவி காட்டும் ரீ ஆக்‌ஷன் டாப்.. 

6. ஒவ்வொரு ஊடல் முடிந்த பின்னும் ஹீரோ ஹீரோயினிடம் ஐ லவ் யூ சொல்லும்போது “இதுக்கு இத்தனை நாள் ஆச்சா? என ஹீரோயின் கண் கலங்கி கேட்கும் இடம்.. 

7.  டேய் விழுங்கடா க்ளாஸ்க்கு போய், விழுந்தேன் நான் 2 பாடல்களும் இதம் , இசையில் பாடல் வரிகளில்.. 



இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. நியூ இயரா இருந்தாலும் சரி, பிறந்த நாளாக இருந்தாலும் சரி காதலர்கள் கண் விழித்து முதல் ஆளாக வாழ்த்து பரிமாறுவதுதான் 1990-ல் இருந்து 2011 வரை நடைமுறையில் இருக்கும் யூத் ட்ரெண்ட்.. ஆனால் அமலா பால் தன் ஆள் சித்தார்த்தின் பிறந்த நாளை காலை 8 மணிக்கு செல்லில் அலாரம் வைத்திருப்பது எப்படி? ( படத்தில் மிக முக்கிய திருப்பமே அன்று ஹீரோயின் வாழ்த்து சொல்லாமல் போவதில் தான் ஸ்டார்ட் ஆகுது)

2. ஒரு சீனில் ஹீரோ பாட்டி வீட்டுக்கு குடும்பத்தோட போறார், செல்லை வீட்டில் மறந்து வெச்சுட்டு போயிடறார்.. அன்று மாலை முழுவதும் காதலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்.. அமலா பால்க்க்கு செம கோபம்,,. இந்த சீனில் லாஜிக் இடிக்குதே.. ஹீரோவோட அம்மா, அப்பா, அல்லது அங்கே பாட்டி வீட்டில் உள்ள யாராவது சொந்தக்காரர் ஃபோன் வாங்கியோ, அட்லீஸ்ட் ஒன் ருப்பி காயின் பூத்திலோ காதலிக்கு ஃபோன் பண்ணி “ இந்த மாதிரி ஃபோனை வெச்சுட்டு  வந்துட்டேன் “ என சொல்லி இருக்க முடியாதா?

3. ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா டேய் ஃபேஸ் புக்ல ரிக்குவஸ்ட் கொடுத்திருக்கேன், அப்புறம் ஆன் லைன் வந்தா அக்செப்ட் பண்ணிடு என்கிறார்.. அடுத்த செகண்டே “ என்னடா, உன் ஃபேஸ் புக்ல ஒரு பொண்ணோட படம் யாரு? என்கிறார்.. எப்படி அதற்குள் ஃபோட்டோ தெரிந்திருக்கும்?

4.  ஹீரோ - ஹீரோயின் தங்கள் காதலை வெளிப்படுத்தும் முன் சந்திக்கும் 4 காட்சிகளில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வண்ண ஆடை அணிவது எப்படி?

5. படத்தின் பின்னணி இசையில் அந்தக்கால டாம் & ஜெர்ரி கார்ட்டூன் இசை போல் வருவது படத்தின் சீரியஸ் தன்மையை பாதிக்கிறது.. 

6. காலேஜ் செமினாரில் ஆன்சர் பேப்பர் கொடுக்கும் சீனில் 12 ம் வகுப்பு கணக்கு பாடம் இருக்கு.. மார்ஜின் இல்லாமல்..

7. பொதுவா காதலர்கள் பலர் முன் சண்டை போட்டுக்குவாங்க, ஆனா மன்னிப்பு கேட்பது,ஊடல் முடிந்து சந்தோஷமாக கட்டிப்பிடிப்பது இதை எல்லாம் படத்துல ஹீரோ ஹீரொயின் பப்ளிக்கா பலரது முன்னிலையில் செய்ய்றாங்க.. அதுவும் க்ளைமாக்ஸில் இருவரும் சேரும்போது டோட்டல் காலேஜே கூடி கிளாப்ஸ் பண்ணுவது ,வேடிக்கை பார்ப்பது ஏதோ டிராமா பார்ப்பது போல் உள்ளது.. 

இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..

 யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஃபிலிம்.. 

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

இந்தப்படத்தில் வரும் கலக்கலான காதல் பொங்கும் வசனங்கள் ( 50 )அடுத்து வரும் புதன் கிழமை பதிவில்

25 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

கோவை நேரம் said...

நேத்தே ரெண்டு படமும் பார்த்தாச்சா..?

கோவை நேரம் said...

உங்க ஊர் தியேட்டர் ல படம் ஓடும் போது கரண்ட் கட் ஆகுதா....?

கோவை நேரம் said...

அமலாபால் ஐ ரொம்ப உன்னிப்பா கவனிச்சி இருக்கீங்க போல....

கோவை நேரம் said...

இத்தனை லாஜிக் மிஸ்டேக் இருக்கா,...சிபிய ஏமாத்த முடியுமா...?

கோவை நேரம் said...

அம்புலி எப்போ போறீங்க......இல்லே அதையும் நைட் செகண்ட் ஷோ பார்த்தாச்சா...?

sutha said...

good review - i hope the directors get to read your feedback comments about their films. looks like the film is a "can see" ......thanx

Astrologer sathishkumar Erode said...

கூரையை எல்லாம் பூதக் கண்ணாடி வெச்சி பார்த்துட்ட மாதிரி இருக்கு.அதை குறைச்சிக்குங்க..படத்துல எண்டெர்டையின்மெண்ட் இருந்தா போதும்..தலைப்பு க்காகவே படம் பார்க்க தூண்டுதே!!

Enathu Ennangal said...

//3 //

Hello Boss unga facebook photo & friends list friend illathavanga kooda pakalam....

commentil sothapuvathu ippadi...

Unknown said...

படத்துக்கு செமயா வாஷ்தா பண்ணுறீங்க, என்ன நடக்குது இங்கே...

Sakthikodu said...
This comment has been removed by the author.
Sakthikodu said...

லாஜிக் மிஸ்டேக் என்கிற பேர்ல நீங்க வர வர பண்ற அலப்பரைகள் தாங்க முடியல அண்ணாச்சி.

மிஸ்டேக் 2 : நீங்க காதலியோட செல் நம்பரை மனப்பாடம் பண்ணி வைக்கலாம், அல்லது மனசிலையாவது எழுதி வைக்கலாம். அதுக்காக எல்லாரும் அப்படி செய்யணும் எண்டு எதிர்பார்க்காதீங்க. போன்ல சேவ் செய்து வைப்பதால் நம்பரை பாடமாக்கும் தன்மை பலரிடம் குறைவு. எனக்கு யார் நம்பரும் பாடமில்லை. போனை நம்பித்தான் இருக்கிறேன். அண்மையில் கூட போனைத் தொலைத்துவிட்டு எந்தவொரு நம்பரும் இல்லாமல் திண்டாடி. கடைசில பேஸ்புக் மூலம் தேவையான நம்பர் எல்லாம் எடுத்தாச்சு. என்னைப்போல ஒரு ஆளா ஏன் சித்தார்த் இருக்க கூடாது?

மிஸ்டேக் 3 : பேஸ்புக்கில் ஒரு நபரைத் தேடும்போது, அவரது ப்ரோபைல் படத்துடன் அவரது விபரங்களை (அவர்களது ப்ரைவேஸி செற்றிங்கிற்கு அமைவாக) காட்டும். அந்நேரத்தில் தான் ‘சென்ட் ரிக்குவஸ்ட்’ கொடுக்க வேண்டும். அப்போது அந்த பெண்ணின் உருவத்தைப் அப்பா பார்த்திருக்கலாம் அல்லவா? இதற்கு அக்செப்ட் பண்ண வேண்டிய அவசியமே இல்லையே?

மிஸ்டேக் 4 : காதலர்கள் மட்டுமல்ல நண்பர்கள் கூட ஒரே மாதிரியான ட்ரெஸ் போடுவது எதேச்சையாக நடக்கக்கூடிய ஒண்டு. இது காதலர்களுக்குள் அடிக்கடி நடக்கும் ஒரு விடயம். 64 கலரிலும் எல்லோரும் ட்ரெஸ் வைத்திருக்க மாட்டார்கள். சிவப்பு, நீலம், பச்சை என ஒரு சில கலர்களிலேயே பொதுவாக பலரும் ட்ரெஸ் எடுப்பார்கள். அப்படியிருக்கும் போது எதேச்சையாக அடிக்கடி இந்த மாதிரியான நிகழ்வுகள் காதலர்களுக்குள் நடப்பதுண்டு. நீங்கள் காதலித்திருக்கவில்லையா?

உங்களுக்குப்படும் குறைகளை இயக்குனரின் லாஜிக் மிஸ்டேக் எனும் பெயரில் எழுதுவதை தயவுசெய்து தவிருங்கள்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.

அப்ப மத்த காட்சிகளில் அசிங்கமா தெரியறாங்களா?
78 சீன்களில் ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும்போனா போகுதுன்னு துப்பட்டாஇருக்கு கழுத்து ஒண்ட.. ஹி ஹி )

ஒத்துக்கிறோம் நீங்க கணக்குல புலி ங்கிறத

ஹாலிவுட்ரசிகன் said...

படத்தை எத்தனை முறை பார்த்தீங்க சி.பி ???? இல்ல ... இவ்வளவு விஷயம் நோட் பண்ணியிருக்கீங்களே. அதான்.

படம் பார்த்துவிடுகிறேன்.

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை அண்ணே. 'கூடிய விரைவில்' டவுன்லோட் பண்ணிடுவேன்.

சேகர் said...

விமர்சனத்திற்கு நன்றி..விரைவில் படத்தை பார்த்து விடுகிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிஸ்டேக் நம்பர் 4: ஹீரோ ஹீரோயின் ஒரே ட்ரெஸ் போடுறதெல்லாம் ரொமான்ஸ்ல அடிக்கடி நடக்கும்ணே.... காலேஜ்ல அதெல்லாம் ஒரு தனி சுகம்...........

Admin said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ...படம் ஓகே தான் போலிருக்கிறதே...

ஜி.ராஜ்மோகன் said...

super review

muralee said...

காதலில் சொதப்புவது எப்படி
நல்ல பொழுது போக்கு சித்திரம்
காதலிக்க போகிறவருக்கு- நல்ல அனுபவம்
காதலிகிறவர்க்கு- சமகால சம்பவங்கள்
காதலிதவர்க்கு- மலரும் நினைவுகள்

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் மிக அருமை.முதல் பத்தி(வரி??) மிக சிறப்பாக இருக்கு.

Menaga Sathia said...

படம் பேரே இதனா?? நீங்ககூட காமெடி செய்றீங்கன்னு நினைத்தேன்...நேரமிருக்கும் போது பார்ப்போம்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//மிஸ்டேக் நம்பர் 4: ஹீரோ ஹீரோயின் ஒரே ட்ரெஸ் போடுறதெல்லாம் ரொமான்ஸ்ல அடிக்கடி நடக்கும்ணே.... காலேஜ்ல அதெல்லாம் ஒரு தனி சுகம்...........//

அண்ணன் ரொம்பத்தான் பீல் பண்றாரு... ஒத்துக்கறோம்ண்ணே, நீங்க இன்னும் யூத்து தான்...

Anonymous said...

இப்பதான் அவரோட சோர்ட் பிலிம் டவுன்லோட் பண்றன். படம் பாக்கலாம்னு தோணுது
பேஸ்புக் லாஜிக், போட்டோ பாக்கலாம்

Anonymous said...

வர வர லாஜிக் மிஸ்டேக்ஸ்ங்குற பேர்ல சிபி நல்லாவே பல்பு வாங்குறாரே.. மத்த படங்கள விடுங்க, இந்த படத்துக்கு நீங்க போட்ட அத்தன லாஜிக் மிஸ்டேக்சும் சொதப்பல்தான்... பெட்டர் லக் நெஸ்ட் டைம்....