சாரு -எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர். அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:
சி.பி - என்னது? உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா? பேடு பாய்ஸ்.. சரியா புரிய வெச்சிடலாம்
1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு நான் யார்? இது ஒரு ஜனநாயக நாடு. எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்? துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார். எப்படி? பார்வையாளர்களில் ஒருவராக. ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி? அது பற்றியே என்னுடைய கேள்விகள்.
சி.பி - விழாவில் கலந்து கொள்வது எல்லாம் அவங்கவங்க விருப்பம்.. அதுல எல்லாம் நொட்டு சொல்லிட்டு இருந்தா எப்படி?
அழைப்பிதழிலேயே தகராறு. ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள். இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி. நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?
சி.பி - யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கோ அவங்க ஃபோட்டோவை, பேரை பெருசா போஸ்டர்ல போட்டா இன்னா தப்பு?போஸ்டரை பார்க்கற ஜனங்களுக்கு ரஜினி வர்றது தெரிஞ்சா போதும், விழாவுக்கு வந்து பார்த்து எழுத்தாளரை தெரிஞ்சுட்டுப்போறாங்க..
தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி. அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு.
சி.பி - பாவம், ரஜினி , ஆளாளுக்கு அவரை ஒப்புமைப்படுத்தறாங்க அவ்வ்வ் இன்னும் கொஞ்ச நாள் போனா வி சாரதி டேச்சு ஆனந்த விகடன்ல எழுதுன கடி ஜோக் போல ஆகிடும்
நானும் ரஜினியும் ஒரே இலைல தான் சாப்பிட்டோம்
அடடே.. அவ்ளவ் நெருக்கமா?
ச்சே. ச்சே.. அவரும் வாழை இலைல தான் சாப்பிட்டார், நானும் வாழை இலைல தான் சாப்பிட்டேன்.
என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர். மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர். மற்றும் இமயமலைப் பயணம். அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை. பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி.
சி.பி - சாரு ரஜினியை பாராட்ற ,மாதிரி ஏதோ ஒரு எழுத்தாளரை தாக்கறாரு.. இதான்யா தமிழன் பண்பாடு.. அடுத்தவனை தாக்காம ,மாற்றான் தோட்டத்து மல்லிகையை நோக்காம தமிழனால இருந்துட முடியாதே?
அவர் நடிப்பது திரையில் மட்டுமே. ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.
பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா? அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?
சி.பி - சரி ஒரு வாதத்துக்காக கேட்கறேன், உங்க புத்தக வெளீயீட்டு விழாவுல ரஜினி பேச ஒத்துக்கறார், இப்போ சொன்ன அதே கண்டிஷன்ஸை நீங்க ரஜினிக்குப்போடுவீங்களா? அல்லது அவர் வந்தாலே போதும்னு நினைப்பீங்களா? விழாவுக்கு அவரைப்போல் வி ஐ பிங்களை அழைப்பதன் நோக்கம் மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்கத்தானே, அதுல என்ன தப்பு இருக்கு?
எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்? அதுதானே நடைமுறை? அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்?
சி.பி - சார்.. உலக நடப்பு தெரியாம, தமிழனை பற்றி சரியா புரியாம பேசக்கூடாது.. ரஜினி பேசிட்டா எல்லாரும் கிளம்பிடுவாங்க.. கூட்டமே இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்துவீங்க?
சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன். இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா? உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா? இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள். அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள். ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும். அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.
சி.பி - அட, நீங்களும் அதுதான் சொல்றீங்களா? சரி.. அதுல என்ன தப்பு இருக்கு?
இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும். எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும். ஏன் அவர் இதைச் சொல்லவில்லை? துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்? அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா? எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?
சி.பி - இந்த மாதிரி வம்புகள் வரும்னு தான் அஜித் மாதிரி சிலர் பொது நிகழ்ச்சிகளுக்கு வர்றதையே அவாய்டு பண்றாங்க போல.. எது செஞ்சாலும் அதுல ஒரு குத்தம் கண்டு பிடிச்சுட்டு..
தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி. அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன? அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்? மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா? ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?
சி.பி - இலக்கிய வாசிப்பு தமிழனிடம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, அறவே இல்லைன்னு சொல்லாதீங்க.. வருடா வருடம் புத்தகத்திருவிழாவில் புக்ஸ் விக்குதே?
புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள். ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே? மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது? சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது? தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது? இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?
சி.பி - ரஜினி ஒண்ணும் ஆன்மீகம் மட்டும் படிங்கன்னு மேடைல சொல்லலையே? அவருக்குத்தெரிஞ்சதை அவர் சொன்னார்.. அதுல என்ன தப்பு? நீங்க எழுதுன ஃபேன்சி பனியன் நாவல்ல கில்மா எதுக்கு? தவிர்க்கவும்னா நீங்க கேப்பீங்களா? அவங்கவங்க எதுல டேலண்ட்டோ அதுல பேச்சு, பழக்க வழக்கம் வெளிப்படறது சகஜம் தானே?
மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி: இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா? கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா? இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன். இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா? சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார். உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?
சி.பி - மேடை நாகரிகம் கருதி ஏதோ பேசிட்டார்.. அதுல போய் குறை சொல்றீங்களே? சக எழுத்தாளர் மேல அப்படி என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு?
நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும். உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது. பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது. இதேபோல்தான் ஏஷியன் மேன் புக்கர் விருதும். ஆசியாவிலிருந்து வெளிவந்த நாவல்களிலிருந்து (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. முதலில் long list… பிறகு short list. கடைசியில் ஒரே ஒரு நாவல். அதற்குப் பெயர் கூட சர்வதேச விருது அல்ல; Asian Man Booker… அது ஒரு ஆசிய விருது. அவ்வளவுதான். எனவே இயல் விருது என்பது நம்முடைய கலைமாமணி விருதுக்கு சமமான ஒரு விருது என்பதே உண்மை.
சி.பி- குஷ்பூ கூட கலைமாமணி தான், போற போக்கை பார்த்தா அங்காடித்தெரு அஞ்சலி,ஆடுகளம் டாப்ஸினு ஆளாளுக்கு கலைமாமணி விருது வாங்கிடுவாங்க போல
இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ”ரஜினி மிகப் பெரிய எழுத்தாளர்” என்று ராமகிருஷ்ணன் சொன்னதுதான். இதையாவது நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா? கண்டித்திருந்தால் உங்கள் மதிப்பு கூடுமே ஒழிய குறைந்திருக்காதே? அரசியலில் இப்படிப்பட்ட வீண் முகஸ்துதிகளை நீங்களே விரும்பியதில்லையே? அப்படியிருக்க, உங்களை ஒரு ஒருவர் “மிகப் பெரிய எழுத்தாளர்” என்று சொன்னபோது உங்களுக்குக் கூச்சமாக இல்லையா? நல்லவேளை, நீங்கள் பதிலுக்கு எஸ். ராமகிருஷ்ணனை “மிகப் பெரிய நடிகர்” என்று புகழவில்லை. அப்படிப் புகழ்ந்திருந்தால் அது புகழ்ச்சிக்குப் பதிலாக வேறு விதமாக அர்த்தமாகி இருக்கும்…
பாவம், தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டியதில்லை.
சி.பி - உங்களைக்கூட நிறைய பேரு நல்ல கண்ணியமான எழுத்தாளர்னு சொல்றாங்க.. அதை யாராவது தட்டிக்கேட்டாங்களா? சார்.. மேடைல கொஞ்சம் உயர்வு நவிற்சியா ஏதாவது சொல்றதுதான்.. அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும். மோர் சாப்பிடுங்க லைஃப் நல்லாருக்கும்..வயிறு எரியாது
18 comments:
சார் டைரக்டர் ஆயாச்சு போல ? :) ரீல் தெரியுது....
உண்மைய சொல்லனும்னா... இவர் மனம் கொத்தினு ஆவில ஒரு தொடர் எழுதினாரு அத படிச்சா அது மனச கொத்தாமா பெரும்பாலும் என் மூளைய கொத்து பரோட்டா போட்ட மாதிரி தான் இருந்துது (ஒன்னு ரெண்டு நல்லா இருந்ததுன்னு தான் சொல்லணும்). அவ்வளவு தலைவலி எனக்கு.
அது என்னாபா அது இலக்கியம் எனக்கு ஒன்னும் புரியலையே யாராவது சொல்லுங்களேன்.
அண்ணே வணக்கம்...இந்த பதிவு மூலமா நீங்க சாருவ தாக்குரீங்களா..ஆதரிக்கறீங்களா...என்னா நீங்களும் ஒரு எழுத்தாளர் ஆச்சே..அதான் கேட்டேன்..ஆங்!
சி.பி. இன்றைக்கு ஹாட் டாபிக் இதான் சாரு நிவேதிதா பற்றி எழுதினால் ஹிட்ஸ் அள்ளுது பாஸ்.
ஹல்லோ....யாரு அது சாரு?
மோர் சாப்பிடுங்க லைஃப் நல்லாருக்கும்..
>>
இந்த தகவல் புதுசா இருக்கே..., எங்கேயிருந்து கண்டுபிடிச்சிங்க சிபி சார் இதை
சித்தப்பூ வணக்கமுங்கோ,
சூப்பர், டூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க
பாஸ். சாரு சந்தர்ப்பம் பார்த்து தன்னை பரபரப்பாக்க ரஜினி மேல எகிறுறார் என்று நினைக்கிறேன்.
பின்னீட்டீங்க....சாருவுக்கு இது தேவை தான்...
மோர் சாப்பிடுங்க லைப் நல்லாருக்கும்!//என்ன கருமாந்திரம்டா இது?லவ் பண்ணுங்க,லைப் நல்லாருக்கும்னு தானே சொன்னாங்க?!
சாருவுக்கு இது தேவை தான்.
எப்பவும் போல....
அவங்க கலய்த்ததோட,கமெண்ட் ல நீங்க கலாய்த்திருக்கீங்களே அது நன்றாக இருக்கு.
எல்லாம் ஒரு பப்ளிகுட்டி தான் பாஸ். ஆளுக்கு எக்ஸைல் சேல்ஸ் பத்தல போல.
சாருவ பிழிஞ்சா சாறு !
சாநிய கலாய்க்கிறதுல எல்லாருக்கும் ஒரு தனி சுகம்தான்! சாநியும் வாய வெச்சுட்டு சும்மாவே இருக்கிறதில்ல!
சம கலாசல்.
கடைசி வரி படிச்சி முடிச்ச உடனே ஒரு 10 நிமிஷம் தொடர்ந்து சிரித்தேன்.
/////////////////மொரு சாப்பிடுங்க லைப் நல்ல இருக்கும்//////////////.
ஹி..ஹி..ஹி....................................
charu ?? Adhu Yaaru ?? Rajiniyai kalaikiravanga Yaaraga Irundhalum, Adhu Publicitykaga dhan.. chaar-u kudinga more-u
irukkira pirachaniyil unga pirachanai vera
Post a Comment