உடல் மண்ணில் புதையும் வரை ஒரே ஒரு உயிரின் நினைவுகளை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழும் உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துகள்..
டீன் ஏஜில் நான் எழுதிய சில மொக்கை கவிதைகள்
பெண்ணே! நீ சிரித்தாய்!
பெண்டாட்டி தாசர்களுக்கு முல்லையும் மல்லிகையும் வாங்காத
நினைவு வந்தது..
பிரம்மச்சாரிகள் பத்து பேர் பைத்தியம் ஆனார்கள்..
பஸ் ஸ்டேண்டில் பஸ் ஆக்சிடெண்ட்..
கன்னிப்பெண்களுக்கு
உன் சிரிப்பிற்கு ஈடான முத்து மாலை வாங்கி விட வேண்டும் என்ற
அழுத்தமான அபிப்ராயம்..
தூக்குத்தண்டனைக்கைதிகளுக்கு
கடைசி ஆசையாய்
உன் சிரிப்பைக்காண வேண்டும் என்ற
அடக்க முடியாத ஆர்வத்துடிப்பு..
நந்தியா வட்டைப்பூ உன் புன்னகை கண்டு பொறாமையில்
ஒரு மாற்று கருத்தது!!
------------------------------------
கண்மணி! உன்
கண்களைத்திற! வீட்டில்
கரண்ட் கட்
----------------------------------------
வீட்டில் விளக்கு அணைந்து விட்டது ,
கொஞ்சம் சிரி பெண்ணே!
தீப்பெட்டி தேட வேண்டும்!
-------------------------------------------
ஈருடல் ஓர் உயிர் ஆகினர்.
. மீண்டும் ஓரு உயிர்!
---------------------------------------
கண்ணே!
நான் எனது கண்களைக்கூட சிமிட்டுவதில்லை.....
உன் பார்வைப்பரிமாறல்களை
இழந்து விடக்கூடாது என்பதற்காக..
ஆனால் நீயோ உன்
கண்களுக்குத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறாய்..
ஓவியப்போட்டிக்கு உன்னை வரைந்து அனுப்பினேன்..
விலாசம் மாறி விட்டது என்று கவிதைப்போட்டிக்கு
அதை அனுப்பி விட்டனர்..
கவிதையாய் இருந்த நீ
கல்லாய் மாறிய மர்மம் என்ன?
16 comments:
வணக்கம்
நல்லாத்தாம்யா இருக்கு
மொக்கை போஸ்ட். ரொம்ப எதிர்பார்த்தது எனது தவறாக கூட இருக்கலாம்
டீனேஜ்ல நிறையா காதலிசிருபீங்க போல....
கவித கவித கலக்கல்....
மொக்கைக் கவிதைன்னு ஏன் சொல்லனு?
எங்களுக்குத் தெரியாதா செந்தில் பத்தி.
// டீன் ஏஜ்ல எழுதுனது
போன வருஷம் எழுதுனதுன்னு சொல்லுங்க
good ones
போட்டு தாக்கிருக்கீங்க !
என்ன பாஸ்! பழைய ஞாபகத்தில பின்னுறீங்க!
ம்..கவிதை நன்றாகத்தான் இருக்கிறது தோழரே..அவ்வப்போது கவிதைகள் எழுதலாமே.
நண்பா! மீண்டும் காதலிக்க ஆரம்பியுங்கள்! கவிதைகள் நன்று!
ஆஹா .. அண்ணன் அருட்பெருங்கோ-விற்கு போட்டியா இன்னொரு ஆள் கிளம்பியாச்சு ...!
சிறப்பாக இருக்கு,கவிதைகள்.ஹைக்கூ கவிதைகள் அருமை.
தொடர்ந்து கவிதை எழுதுங்க.
உங்க ஆட்டோகிராப எடுத்து உடுங்கண்ணே...
அருமையான கவிதைகள் சிபி.இப்போதான் பார்த்தேன் !
Kavithai lam eluthuvingala? Kalakkunga!
TM 8.
Post a Comment