பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மழலை முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் வழி , போகும் பாதை சரியானது தானா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.. சமூகத்தில் உள்ள கல்வி போதிக்கும் முறை குறித்தும்,பெற்றோர்- வாரிசுகளின் தவறான புரிதல்கள் ( MISSUNDERSTANDING) குறித்தும் தீர்க்கமாக அலசும் ஒரு ஆரோக்யமான தமிழ் சினிமா தான் தோனி..
மனைவியை இழந்த, 2 மழலைகளை வளர்க்க வேண்டிய பொறுப்புள்ள ஒரு அரசு அலுவலரான பிரகாஷ் ராஜ் தன் மகன் கிரிக்கெட் வீரனாகும் ஆசையை உதறித்தள்ள சொல்லி விட்டு வலுக்கட்டாயமாக கல்வியை திணிக்கிறார். பையனுக்கு படிப்புல ஆர்வம் இல்ல.. அவன் கவனம் பூராவும் கிரிக்கெட்லயே இருக்குது.. இதை கண்டிக்கும் விதமான ஒரு அசம்பாவிதமான அறையில் ( பளார்) பையன் தலைல அடிபட்டு கோமாவுக்கு போயிடறான்..
பையன் நல்லா இருந்த வரை அவனை கரிச்சு கொட்டிட்டு இருந்த அப்பா அவன் கோமாவுக்கு போனதும் பையன் பிழைச்சா போதும்கற நிலைமைக்கு வந்துடறார்.. தன் பையனை மக்கு ஆக்கியதில் கல்வி அமைப்புக்கும் பங்கு உண்டு, கல்வி முறை மாறனும்னு சி எம் கிட்டே க்ளைமாக்ஸ்ல வாதாடி ஜெயிக்கிறார்.. பையனும் குணம் ஆகி கிரிக்கெட் வீரன் ஆகறான்.. இது தான் கத..
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் என்ற லேபிளை விட தமிழ் நாட்டிலேயே ஆரோக்யமான சினிமா தரும் ஆர்வலர் என்ற தயாரிப்பு முகத்தை பெற்ற பிரகாஷ்ராஜைத்தான் எல்லாரும் ரசிக்கறாங்க.. மொழி, பயணம்,அபியும் நானும் போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத்தந்தவர் இயக்கி இருக்கும் முதல் படம் இது.
மகாநதி படத்தில் கமல் கையாண்ட திரைக்கதை உத்தியை இவரும் கையில் எடுத்துக்கொண்டு மிகத்தெளிவான திரைக்கதையில் சொல்ல வந்த கருத்தை நச்சென்று சொல்லி இருக்கார்.. இயக்குநரா அவர் சபாஷ் வாங்கற இடங்கள் பல..
வெறும் நடிகரா இருக்கும்போதே சில இடங்களில் வேண்டும் என்றே ஓவர் ஆக்டிங்க் பண்றவர் இதுல டைரக்டர், கம் புரொடியூசர் என்பதால் சில இடங்களில் அடக்கி வாசித்தும், சில இடங்களில் ஆர்ப்பாட்டமான நடிப்பையும் வழங்கி இருக்கார்..
ராதிகா ஆப்தே தான் ஹீரோயின் .. பனை மரத்தில் இருந்து இறக்கப்பட்ட பத நீரை வாழை இலையில் ஊற்றி சூரியன் வெளிச்சத்தில் வைத்தது போல் மிக தெளிவான , அழகான, அமைதியான முகம்.. மிதமான ஒப்பனையில், கண்ணியமான தோற்றத்தில், நளினமான ஆடை வடிவமைப்பில் அசத்துகிறார்..
கந்து வட்டி கனிம்பாயாக வரும் முரளி ஷர்மா வில்லன் மாதிரி முதலில் வந்து பின் நண்பனாகும் ஆச்சரிய கேரக்டர்.. எல்லோரும் நல்லோரே என்ற ராதாமோகன் ஃபார்முலாவில் உருவானவர் போல ..அவருக்கான டப்பிங்க் வாய்ஸ் குடுத்த சமுத்திரக்கனிக்கு ஒரு ஷொட்டு

பிரகாஷ்ராஜின் மகனாக வரும் ஆகாஷ் சுமாரான நடிப்பு.. சமாளிக்கிறார்.. க்ளைமாக்ஸ்சில் ஆதார காட்சியான கிரிக்கெட் வீரர் தோரணையில் பாடி லேங்குவேஜ் பத்தாது..
மகளாக வரும் ஸ்ரிதேஜா இன்னொரு குட்டி பேபி ஷாலினி. பல ஆச்சரிய முக பாவனை மாற்றங்களில் அசத்துகிறார்.. ருதுவாகி ஹீரோயின் வீட்டில் அமர்ந்திருக்கும் போது வெட்கம் கலந்த குழந்தைத்தன முக பாவனை அற்புதம்..
மேனேஜராக வரும் பிரம்மானந்தம் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு.. கச்சிதம்.. கோச்சராக வரும் நாசர் கம்பீர நடிப்பு.. ஓ சி செல்ஃபோன் பேசும் சாம்ஸ் கல கல நடிப்பு.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. பிரகாஷ் ராஜ் ஒரு பெரிய மனிதரை பார்க்கப்போன இடத்தில் ஹீரோயினை கட்டண சேவையில் மோகம் தீர்ப்பவர் (விலைமாது) வடிவில் பார்க்கும்போது காட்டும் அதிர்ச்சி.. அதே சமயம் ஹீரோயின் முகத்தில் காட்டப்படும் உணர்ச்சி அற்புதம்.. இந்த இடத்தில் இளையராஜாவின் பின்னணி இசை கன கச்சிதம்
2. மேற் சொன்ன சம்பவம் நடந்த பின் இருவரும் பேச பீச்சில் சந்திக்கும்போது கேமரா கோணம் அழகு.. ஹீரோயின் சிறியவராகவும், ஹீரோ உயர்ந்தும் இருப்பது போல் காட்டியது டைரக்ஷன் டச்,.
3. 17ஆம் வாய்ப்பாடு மனனம் செய்ய முடியாமல் பொடியன் தடுமாறுவதும், அக்கா அவனை அதட்டும்போது நான் ஒண்ணும் முட்டாள் இல்ல என்று சொல்லி அவன் கேப்டன் ரேஞ்சில் கிரிக்கெட் பற்றிய புள்ளி விபரம் கொடுப்பது அசத்தல்.. (காதல் கொண்டேன் தனுஷ் பாட சாலை வகுப்பில் மேத்ஸ் பிராப்ளம் சால்வ் பண்ணுவதற்கு ஒப்பான இந்த காட்சி ஏனோ ரசிகர் வரவேற்பை பெற வில்லை)
4. கந்து வட்டிக்காரர் ஹீரோவின் பையன் ஹாஸ்பிடலில் கோமா ஸ்டேஜில் அட்மிட் ஆனதும் வந்து பார்க்கும் சீனில் அவர் நடிப்பு, அதற்கு பிரகாஷ் காட்டும் ரி ஆக்ஷன் அற்புதம்..
5. ஸ்கூல் மிஸ்ஸை சில கேள்விகள் கேட்டு அதற்கு பதில் தராமல் அவர் தடுமாறும்போது பெஞ்ச் மேல் ஏறி நில்லுங்க என்று அதட்டுவது கிளாசிக் நடிப்பு.
6. வாங்கும் பணத்துக்கும், வாழற வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை பாட்டும்,விளையாடும் பருவம் தான் பாடலும் இளையரஜாவின் இசையில் இதம். ஆனால் இன்னும் ராசா மெனக்கெட்டிருக்கலாம்..
7. வசனங்கள் பல இடங்களில் கலக்கல்ஸ். சமூக அக்கறை தெறிக்கும் அற்புதமான வசனங்களை எழுதிய ஞானவேல்க்கு ஒரு ஷொட்டு ( 41 வசனங்கள் தனிப்பதிவு)
8. கதையின் போக்கு திசை மாறும் என்பதற்காக டூயட், ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸை தவிர்த்ததற்கு ஒரு ஷொட்டு
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், மற்றும் அவரிடம் சில கேள்விகள்
1. வங்காள மொழியில் வந்த படத்தின் ரீ மேக் என்பதற்காக அந்தப்பட ஹீரோ பயன் படுத்திய அதே மாடல் ஹெல்மெட்டையே யூஸ் பண்ணனுமா? அந்த மாடல் தமிழகத்தில் யார் யூஸ் பண்றாங்க? அதுவும் இல்லாமல், ஆஃபீஸ், ஹாஸ்பிடல் என போகும் இடங்களெல்லாம் ஹெல்மெட்டை கழட்டாமல் ஹீரோ அலைவது தனியாக உறுத்துகிறது..
2. படத்தோட முதல் சீன்ல ஸ்கூல் ஹெச் எம் சொல்லிடறார் ஹீரோவோட பையன் 9 வது படிப்பதாகவும், அடுத்த வருடம் 10வது எனவும், அதற்கு அடுத்த காட்சியிலேயே பிரகாஷ் ராஜ் டியூஷன் எடுக்கும் டீச்சரிடம் பையன் பப்ளிக் எக்ஸாம் எழுதனும், பார்த்து படிக்க வைங்க என்கிறார்.. அதுவும் இல்லாமல் எல்லா சப்ஜெக்ட் டீச்சர்ஸ் கிட்டயும் ஓவரா குழையறார் ஏன்?
3. ஸ்கூட்டர் எரிந்து போனதும் ஹீரோ ரொம்ப ஓவராக கவலைப்படறார்.. இன்சூரன்ஸ் இருக்கில்ல?
4. நீயா? நானா? புரோகிராம்ல ஹீரோ ஒரு டயலாக் பேசிடறார்.. அதன் பின் அவர் ஏரியாவில் ஃபேமஸ் ஆகிறார் என்பது வரை ஓக்கே, ஆனால் அந்த நிகழ்ச்சியில் முகம் காட்டி விட்டால் மோட்சம் கிடைச்சுடும் என்பது மாதிரி பல காட்சிகள் அமைத்திருப்பது ஓவர்.. வாரா வாரம் பலர் அதில் முத்திரைப்பேச்சை வழங்கறாங்க, அந்தந்த வாரம் பர பரப்பா பேசப்படுவாங்க,, அவ்ளவ் தான் ( விஜய் டி வி ல காசு வாங்கிட்டாங்களா?)
5. ஹீரோ சைடு பிஸ்னெஸா ஊறுகாய் விற்கறார், ஓக்கே , ஆனா எந்த கவர்மெண்ட் ஆஃபீஸ்ல ஆஃபீஸ் பீரோல ஃபைல் எல்லாம் எடுத்துட்டு அதுல ஊறுகாய் பாட்டிலை வைக்க அனுமதிப்பாங்க? மேனேஜரே அதை பார்த்துட்டு காமெடி பண்ணிட்டு போறார்.. அடப்பாவமே..
6. எந்த கவர்மெண்ட் ஆஃபீசர் ராமராஜன் மாதிரி பூ போட்ட சட்டை எல்லாம் ஜிகு ஜிகு கலர்ல போடறாங்க? ( பிரம்மானந்தம் & சாம்ஸ்)
7. ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிடு வந்து பையனுக்கு தர்றார்.. பொதுவா செப்பல், ஷூ எல்லாம் அவங்கவங்களை கூட்டிட்டு போய் தான் வாங்கனும், அப்போதான் சைஸ் செட் ஆகும்.., சாக்ஸ் வாங்காம வந்துடறார்.. மறதி இல்லை, தெரியலை, அப்புறம் பையன் சொன்ன பின் அடுத்த நாள் வாங்கறார்.. கடைல ஷூ வாங்கறப்பவே கடைக்காரர் சார் ஷூ சாக்ஸ் வாங்கலையா?ன்னு கேட்பாரே?
8. ஒரு நாட்டின் சி எம்மை நடு ரோட்டில் நிற்க வெச்சு 20 நிமிஷம் வசனம் பேசறது எல்லாம் பார்க்க நல்லாருக்கு சாத்தியமே இல்லை..
9. ஸ்கூல் டீச்சர்ஸை, ஹெச்செம்மை தாக்கி ஸ்கூலில் பேசும் வசனங்கள் உணர்ச்சிப்பூர்வமா இருக்கு.. ஆனா முழுக்க முழுக்க ஸ்கூல் நிர்வாகம் மேலேயே தப்பு சொல்றது ஏன்? பெற்றோர் மேலயும் தப்பு இருக்கே? பையன் மக்குன்னு ஸ்கூல்ல சொன்னா நாம ஏன் நம்பனும்? அதுவும் இல்லாம ஓவர் ஃபீஸ் வாங்கறாங்கன்னா அரசு பள்ளியில் படிக்க வைக்கலாமே?
10. ஹீரோவின் மகன் கோமா ஸ்டேஜில் விழுந்ததுமே படம் ஸ்லோ ஆகிடுது.. திரைக்கதை தடுமாறுது.. அடுத்த 20 நிமிஷம் டெட் ஸ்லோ..
11. படத்தோட டைட்டில், போஸ்டர் டிசைன் எல்லாம் பார்க்கறப்ப இது ஏதோ ஒரு கிரிக்கெட் வீரரின் கதை என்பது போல் இருக்கு.. அது மகா மைனஸ்.. கிரிக்கெட் சம்பந்தப்பட காட்சிகள் படத்துல 12 நிமிஷம் தான் வருது.. நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் இயக்குநர் அப்படி டைட்டில் அமைத்திருக்கலாம்.. அது மாபெரும் மிஸ்கால்குலேஷன்ஸ்..
இந்தப்படம் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஜாலியான படம் தான்.. அதில் சந்தேகமே இல்லை.. இந்தப்படம் விருதுகளை அள்ளும்.. வசூலையும் அள்ளினால் அது ஆரோக்யமான சினிமாவுக்கான ஆரம்பமாக இருக்கும்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று
சி.பி கமெண்ட் - நல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கண்ணியமான படம்
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

13 comments:
பொதுவாகவே நடிகர் பிரகாஷ்ராஜின் நடிப்பு
தெளிந்த நீரோடை போல இருக்கும்.
இயக்கமும் திரைக்கதையும் சரியாக இருந்தால்
நடிப்பில் பன்முகம் காட்டுவார்.
அருமையான விமர்சனம்.
படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சரி சொல்லிடிகே பார்த்துருவோம்
Padathula vara
school
PONDY ADITHIYA SCHOOL.....
படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன்... நன்றி மாப்ள சீக்கிரம் பார்க்கணும்...
சிபி பார்க்க வேண்டிய கண்னியமான படம்னு சொல்லிட்டாஅப்பீலே கிடையாது!
பிரகாஷ் ராஜுக்கு இணையான உழைப்பு இளையராஜாவுடையது. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த மாதிரி பாடல்களை, பின்னணி இசையை தமிழ் சினிமாவில் கேட்க முடிந்தது. எந்தப் பாடலுமே உறுத்தவில்லை. வெகு இயல்பாக படத்தோடு இயைந்த காட்சிகளாகவே கடந்து போகின்றன.
பாடல்களுக்கான சூழல்களைப் பாருங்கள்…
பொருளாதார கஷ்டம். ஆனால் பருவம் காத்திருக்குமா… தாயில்லாத மகள் வயசுக்கு வந்துவிடுகிறாள். தந்தைக்கு அவசரமாக தகவல் போகிறது பக்கத்து வீட்டிலிருந்து. விஷயம் தெரியாமல் அரக்கப் பரக்க வரும் அப்பாவுக்கு விஷயத்தைச் சொல்கிறார்கள். பெரும் தவிப்பு, கவலை, பாசத்துடன் கதவோரமாய் எட்டிப் பார்க்கிறார்… வெள்ளந்தியான ஒரு பூ மாதிரி உட்கார்ந்திருக்கும் மகள் மீது அவர் பார்வை பதிய… ஒரு இசைமேகம் மெதுவாக பொழிய ஆரம்பிக்கிறது… மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்கிறது நம் கண்களில்… அதுவே ‘வெளையாட்டா படகோட்டி…’ என பருவமடைந்த மகளுக்கான தாலாட்டாய் நீள்கிறது. ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் நிச்சயம் இதற்கும் இடமுண்டு!
நினைவின்றி வீல்சேரில் மகன்… அய்யோ மகனைப் புரிந்து கொள்ளாமல் அடித்துவிட்டோமே என்ற ஆற்றாமை… காயப்பட்ட ஒரு நெஞ்சுக்கு ஆறுதலாய்… ‘தாவித் தாவி போகும் மேகம்…’ என இசைஞானி பாட, மனம் எல்லையற்ற பரவசத்தில் தளும்புகிறது.
இசையிலிருந்து எந்தக் காட்சியையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவு அப்படி நெய்திருக்கிறார் பின்னணி இசையை. படிக்க மறுத்த மகனை திட்டும்போது வேக வேகமாக உச்சத்துக்குப்போகும் இசை, அவன் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கும்போது, கதறுகிறது… கண்ணீர் வடிக்கிறது. இந்த காட்சிகளில் ஒரு சின்ன வார்த்தை கூட கிடையாது. இயக்குநர், வசனகர்த்தா என அத்தனை பேரையும் ‘கொஞ்சம் சும்மா இருங்க’ என சொல்லிவிட்டு இசை ஆட்சி செய்கிறது!
2012-ம் ஆண்டின் துவக்கம் மிக மிக அருமையாய் அமைந்திருக்கிறது தமிழ் சினிமா இசைக்கு
சீக்கிரமா இந்த படத்தை பார்த்துடனும்...விமர்சனத்துக்கு நன்றி!!
ஹீரோயின் பற்றிய வர்ணனை வெகு அற்புதம் - இயக்குனருக்காக நிறைய கேள்விகளை வைத்துள்ளீர்கள் - இதை தயவு செய்து பிரகாஷ்ராஜ் அவர்களுடன் பகிரவும். நன்றி.
விமர்சனம் அருமையாக இருக்கு. பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர்.
உங்கள் விமர்சனத்திற்கு தான் வெயிட்டிங். நீங்க தான் நல்லாயிருக்குன்னு சர்ட்டிபிக்கேட் கொடுத்திட்டீங்களே? இனிக் கிளம்பிடுவோம்.
கண்டிப்பா மிஸ் பண்ணாம பார்த்திடுவோம்...!
நீங்க எழுதின பல விமர்சனங்களை படிச்சிருக்கிறோம், உங்களுடைய தெளிவான, ஆழமான பார்வை ஆச்சர்ய படுத்தியிருக்கிறது. ஆனால் சில நேரங்களில் (இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், மற்றும் அவரிடம் சில கேள்விகள்) பகுதி கொஞ்சம் அதிகமோன்னு தோணுது.
அருமையான விமர்சனம். ஒரிஜினல் படம் மராத்தி வங்காளம் அல்ல
Post a Comment